Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

27 Adi + Azhagi
27 Adi + Azhagi
27 Adi + Azhagi
Ebook154 pages47 minutes

27 Adi + Azhagi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயிரோட்டம் கதையில் மட்டடுமல்ல; நடையில் மட்டுமல்ல; தலைப்பிலும் தான் வாருங்கள் வாசித்து தெரிந்துகொள்வோம்

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580152008272
27 Adi + Azhagi

Read more from Punithan

Related authors

Related to 27 Adi + Azhagi

Related ebooks

Reviews for 27 Adi + Azhagi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    27 Adi + Azhagi - Punithan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    27 அடி + அழகி

    27 Adi + Azhagi

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    முன்னுரை

    இது இரவல் நடை

    தமிழ் இலக்கியத்தில் ஆரம்பகால நாவல்கள் எல்லாம் அடுப்படிக்குத்தான் குடியேறின. ஆண் வர்க்கத்தைப் படிக்க வைத்த நாவல்கள் என்றால், ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், ரங்கராஜ் போன்றோர் படைத்த மர்ம, துப்பறியும் நாவல்களைத்தான் சொல்லலாம். அப்புறம் வரலாற்று, சமுதாய, செக்ஸ் கதைகள் திசை திருப்பின.

    எந்த நிலையிலும் மர்மக் கதைகளுக்குள்ள மவுசு குறையாது என்பதை அறுபதுகளில் மீண்டும் தூக்கி நிறுத்தியவர் ‘மர்மக் கதை மன்னன்’ தமிழ்வாணன்தான் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை என்று நேர்மையான இலக்கிய விமரிசகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்.

    அதனால் அவரது உதவியாளனாய் அவர் எதிரே அமர்ந்து சுவாசித்ததில், எனக்கும் அந்த மர்மக்கதை வித்தை கைவரப் பெற்றிருக்கலாம் என்று குமுதத்துக்கு நான் வந்த பிறகு ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை எனக்கும் ஏற்படுத்தினார்கள்.

    இணையாசிரியர் ரா.கி. ரங்கராஜன் அவர்களிடம் ஏதாவதொரு மர்மக் கதைக்கான தலைப்புச் சொல்லும்படி ஆசிரியர் அவர்கள் கேட்டார்கள். தலைப்புச் சூட்டுவதில் மன்னர் அவர். எனது நாவல்கள் பலவற்றுக்குத் தலைப்பு - அவரது உபயம்தான்.

    27 அடி + அழகி = ஒரு கொலை. அவர் சூட்டிய தலைப்புத்தான்! ‘27 அடி + அழகி’யோடு புத்தகத் தலைப்பை நிறுத்திக்கொள்ளலாம். படித்துப் பார்த்து விடையை வாசகர்கள் தெரிந்து கொள்ளட்டும்,’ என்று அதன் ஆசிரியர் வானதி திருநாவுக்கரசு அவர்கள் எடுத்துரைக்க, ஏற்றுக்கொண்டேன்.

    இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்த நாவலுக்குத் தலைப்புப் பிறந்த பிறகுதான் அதையொட்டிக் கதை உருவாயிற்று. அதிலே நான் மூச்சுத் திணறிய போதெல்லாம் கைகொடுத்த எங்கள் ஆசிரியரை என்னால் எப்படி மறக்க முடியும்? வாசகனாக இருந்து இப்போது இந்தக் கதையைப் படித்துப் பார்க்கும்போது, இதுபோல் இன்னொரு கதை என்னால் தனியாக உருவாக்க முடியுமா என்று ஒருவித அச்சம் கலந்த பிரமிப்புத் தட்டுகிறது.

    உயிரோட்டம் கதையில் மட்டுமல்ல, நடையில், இந்த நடை என் முதல் குருவான தமிழ்வாணனிடமிருந்து ஒற்றி எடுத்தது என்பதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை நிச்சயம் இந்தக் கதை உங்களை நிலைகுத்த வைக்கும் என்பதில் ஐயமில்லை.

    மர்மக் கதை உணர்வையும் தூண்டி அதிலே ஒரு வனப்பையும் வடித்துக் கொடுத்திருக்கும் வண்ணப் புகைப்படம் எடுத்து வழங்கிய புகைப்பட நிபுணர் ராஜா பொன்சிங்கு-கு எனது பாராட்டுக்கள்.

    சென்னை -10.

    அன்பு,

    புனிதன்

    1

    மழை!

    பேய் மழை.

    சூறைக் காற்றினால் சொடுக்கி விடப்பட்ட வெள்ளிக் கம்பிகள் போல் இறங்கிக்கொண்டிருந்தது. சாலையோரத்துப் புளியமரங்கள் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடின.

    எங்காவது ஒரு மனிதக் குஞ்சு தெரியாத்தனமாய் வெளியே வந்திருந்தால் மழைக் கீற்று சவுக்கடியாய்ச் சாடியிருக்கும். தொலைவில் எங்கோ ஊளைச் சத்தம். காற்றுக்கும் மழைக்கும் பலியாகிக்கொண்டிருக்கும் உயிரின் அவலக் குரல். நரி போலும்.

    இருண்ட கானகத்தில் தெரியும் பயங்கர மிருகத்தின் தீ விழிகளோ? ஒரு ஜோடி விளக்குகள் ஒளி கக்கிக்கொண்டு சீறிவந்தன.

    இல்லை. காரின் விளக்குகள். குடிகாரனைப்போல் இப்படியும் அப்படியும் தள்ளாடிக்கொண்டு ஆனால் வேகமாக முன்னேறிக்கொண்டு வந்தன. எந்த வினாடியில் எந்த மரத்தை முத்தமிடவோ அந்த முன்னேற்றம் காரின் நடுக்கம், கார் ஓட்டுபவரின் மனத்தைத்தான் பிரதிபலித்ததா!

    இருக்கலாம். ஒரு பெண். ஒரே ஒரு அழகி. காரை அவள்தான் ஓட்டிக்கொண்டு வந்தாள்.

    அந்த வெளிர் மஞ்சள் பட்டுச் சேலைக்கு எடுப்பான கறுப்பு நிறச் சோளி, ரோஜாச் சாந்து பூசினாற்போன்ற அந்த மேனிக்கு இன்னும் பொருத்தம். பதினெட்டு வயதுக்கு மேலிராது அவளுக்கு. எடுப்பான நாசி, பதவிசான அதரங்கள். ஆனால் அவளது முகத்திலே படிந்திருந்த அந்தக் கலவரம்... அவளது முகத்திலே அப்புறம் இப்புறம் திரும்புவதும் மீளுவதுமாய் தடுமாறும் நிலை... ஒன்று, யாராவது அவளைத் துரத்தி வரவேண்டும். அல்லது பேராபத்திலிருந்து அவள் மீண்டு வந்திருக்க வேண்டும். ஒருவேளை... அவளே ஏதாவது தவறு செய்து விட்டாளோ?

    அவள் காதிலே மாட்டியிருந்த நூதனக் காதணியில் பொடிச் சங்கிலிகள் கூட நிலைகொள்ளாமல் அசைகின்றனவே அடிக்கடி தமது நடுங்கும் கரத்தால் இறுக்கமாய்த்தான் பற்றிக்கொள்கிறாள் ஸ்டயரிங்கை, காரோட்டத்தை நேராக்க அவற்றால் முடியவில்லை. மென்மையான அவளது உதடுகளின் உதறலை முத்துப்பற்களால் கட்டுப்படுத்த முயல்கிறாள். பலிக்கவில்லை. கண்ணாடிக்கு உள்புறம் படிந்த ஈரக் கசிவைத்தான் அவள் தன் கரத்தினால் துடைக்க முயலவில்லை என்றால்... முத்துமுத்தாக அரும்பியிருக்கும் வியர்வையைக்கூடவா அவளாள் துடைக்க முடியவில்லை.

    காரின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. கார் நின்றே போயிற்று.

    அந்த அழகி ஒரு முறை தன் முகத்தை அழுந்த மூடிக் கொண்டாள். மூடிய முகத்தைத் தாங்கிக்கொண்டு இரண்டு நிமிடம் வரை அந்த ஸ்டீயரிங் அவளது முகத்தை ஏந்திக் கொண்டது. அவள் இப்போது நிமிர்ந்தாள்.

    உதடுகளின் நடுக்கம் ஓய்ந்திருந்தது. நெற்றித் திலகத்தைப்பற்றிக் கவலை கொள்ளாமல் சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான், ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றினாள்.

    ஏன் கார் திரும்புகிறது? ஏன் வந்த வழியிலேயே போகிறது மறுபடியும்.

    கார் ஓட்டும் அந்தக் கன்னியின் கண்ணிரண்டிலும் மட்டும் இனம் தெரியாத மருட்சி.

    மழையை வென்று வெறும் காற்று இப்போது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. கருநாகங்களால் வேய்ந்தாற்போல நெடுஞ்சாலை தோலுரித்துக்கொண்டு பளபளத்து நீண்டு ஓடியது. சாலையின் வலப்புறமாகவே அவள் பார்வை சென்று சென்று மீண்டது.

    கார் தாமதித்து நின்றது. சாலையோரத்திலிருந்த புதரை - ஈச்சம் புதர் அது, வெறித்து நோக்கினாள். மீண்டும் கார் புறப்பட்டது. இங்கே இல்லை.

    தார் சாலையில் பள்ளம் பறித்திருந்தார்கள் போலும். ஒரு குலுக்கலோடு கார் இறங்கி ஏறி நின்றது. அந்த அழகி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். தலையை ஒருமுறை உலுக்கிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு ஸ்டார்ட் செய்தாள். இந்த இடமும் அல்ல.

    முதன்முறை பள்ளி செல்லும் குழந்தை போல் கார் ஊர்ந்துகொண்டிருந்தது.

    அதோ மொட்டைக் கோபுரம்! காரின் வேகம் தணிந்தது.

    சற்றுமுன் அடங்கிய மழை, செவ்வண்ணக் குழம்பாகச் சாலையோரத்து வாய்க்காலில் அருவிப்பெருக்காகச் சலசலத்துக் கொண்டிருந்தது.

    கார் நின்றது.

    நடுக்கத்தோடு காரின் முன் விளக்கை நிறுத்தினாள். இருளோடு இருளாக ஒன்றிப் போயிருந்தாள் சற்று நேரம். தயங்கியவாறு மீண்டும் விளக்கைப் போட்டாள். பீதி படர்ந்த தன் விழிகளை நிமிர்த்தினாள். அந்த விளக்கொளியில் சாலையின் ஓரமாய் ஏதோ ஒன்று மூட்டைமாதிரிச் சுருண்டு கிடந்தது. அதைப் பார்க்கவே நடுங்கியவளைப் போல் அடிக்கண்ணால் நோக்கினாள். விளக்கொளியில் அதைப் பார்ப்பதைக் காட்டிலும், இருளில் மூழ்கித் தன்னை மறைத்துக்கொள்வது மேல் என்றுதான் நினைத்தாளோ? முன்புபோல் மீண்டும் ஒருமுறை விளக்கை அணைத்தாள்.

    மீண்டும் அவள் விளக்கை ஏற்றியபோது, அந்த உருவம், அதே இடத்தில் அதே நிலையில், அப்படியே ஆடாமல் அசையாமல் கிடந்தது. இரு கைகளையும் பிசைந்துகொண்டவள் தன் இருக்கையைவிட்டுச் சற்று அசைந்தாள். கார் விளக்கு எரிந்துகொண்டு தான் இருந்தது.

    காரின் கதவைத் தள்ளிவிட்டபோது அது எழுப்பிய ஓசையில் அவளே துள்ளி விழுந்தாள். திடீர் திடீரென்று வெறி பிடித்தாற்போல் காற்று சீறியது. அவள் உடலே மரத்துப்போய் விட்டதா? உயர்ந்த மேட்டிலே காலை வைப்பது போல் அவளது நடையில் அப்படி ஓர் உரசல்.

    அது வெறும் துணி மூட்டை அல்ல. யாரோ ஒரு மனிதன். முள்கம்பிபோல் முகமெல்லாம் தாடி. பரட்டைத் தலை. பாதிக்குமேல் நரை.

    மழைக்காலத் தவளைகளின் கொட்டம் வரவரக் கூடிக் கொண்டே போயிற்று. அவன் மேல் அப்பியிருந்த கறை செம்மண் சேறுதானா? அல்லது...

    என்ன! அசைவது போலிருக்கிறதே!

    அந்த அழகியின் விழிகள் சுருங்கி விரிந்தன. உறைந்து விட்டாற்போல் ஊன்றிப்போயிருந்த அவனது மென்மையான பாதங்களில் லேசான அசைவு. அவள் மெள்ள மெள்ள அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1