Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutty Natchathiram
Kutty Natchathiram
Kutty Natchathiram
Ebook210 pages1 hour

Kutty Natchathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பார்த்திபன், வாசுகி என்ற தம்பதியருக்கு, பாபு என்ற அழகான குழந்தை. வாசுகிக்கு தன் மகனை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்று ஓர் எண்ணம். அதன்படியே அவள் ஒரு விளம்பர பத்திரிக்கையை பார்க்கிறாள். அதில் சினிமாவிற்கு குழந்தை “குட்டி நட்சத்திரம்” தேவை என்று வந்திருந்தது. வாசுகி அதை படித்து இந்த அட்ரஸுக்கு விண்ணப்பிக்க கணவனை நச்சரிக்கிறாள். வாசுகியின் கணவனும் மனைவியின் பேச்சைக் கேட்டு விண்ணப்பம் அனுப்புகிறான். பிறகு ஒரு மாதம் கழித்து கடிதம் வருகிறது உடனே அதை நம்பி வாசுகி தன் மகன் பாபுவை அழைத்துச் செல்கிறாள். அங்கு தன் மகனை நடிக்க சேர்த்து விட்டாரா? இல்லையா? என்று பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580152008271
Kutty Natchathiram

Read more from Punithan

Related authors

Related to Kutty Natchathiram

Related ebooks

Reviews for Kutty Natchathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kutty Natchathiram - Punithan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குட்டி நட்சத்திரம்

    Kutty Natchathiram

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நட்சத்திரத் தேர்வு

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    நட்சத்திரத் தேர்வு

    அறுபது எழுபதுகளில் குமுதத்தில் புகைப்படத் தொடர் என்று ஒன்று வந்துகொண்டிருக்கும். அந்த மாதிரி வந்த தொடர்களுள் ஒன்று, இந்தக் குட்டி நட்சத்திரம்.

    திரையுலகில் குட்டி நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்க அப்போது அடிக்கடி விளம்பரங்கள் வருவதுண்டு. அதே போல் எனது தொடர்கதையில் நடிப்பதற்காகவும் குட்டி நட்சத்திரத் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. நிறையப் பேர் கலந்து கொண்டார்கள். திருச்சி பக்கத்துத் தையல் தொழிலாளி என்று ஞாபகம். அவரது மூன்று - நான்கு வயது மகன் தான் குட்டி நட்சத்திரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

    இப்போது அந்தக் குட்டி நட்சத்திரம் சில குட்டி நட்சத்திரங்களுக்குத் தந்தையாய் இருக்கக்கூடும். நிற்க...

    ஆமாம், இப்படித் திரையுலகினர் குட்டி நட்சத்திரத் தேர்வு நடத்துகிறார்களே, இவர்களைப் படத்தில் நடிக்க வைக்கத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது என்ன நிச்சயம்? வேறு வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லையா? என்று ஆசிரியர் அவர்கள் குதர்க்கமாக ஒரு கொக்கி போட்டார்.

    வேறு எந்தெந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்று கற்பனைச் சிறகடித்துப் பறந்து, வேட்டையாடிக் கொண்டுவந்து சேர்த்தது தான், இந்தக் குட்டி நட்சத்திரம்: குமுதம் தொடர். ‘வேட்டைக்கான இரை அதோ அங்கே, இதோ இங்கே’ என்று என் கூடவே பக்கத்துணை இருந்து சுட்டிக் காட்டிய என் வணக்கத்துக்குரிய எங்கள் எடிட்டர் எஸ்.ஏ.பி.யை எப்படி மறக்க முடியும்? இதோ இந்த எழுத்துக்குள் அவர் இரண்டறக் கலந்திருக்கிறார். நன்றி.

    எடிட்டரை இனம் காட்டி என் உறுதுணையாய் இருந்த அண்ணன் தமிழ்வாணன் அவர்களுக்கு என் குடும்பமே என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

    அன்பு,

    புனிதன்

    சென்னை - 10

    1

    அந்தச் சனிக்கிழமை அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றியமைக்கப் போகிறது என்பது அப்போது வாசுகிக்குத் தெரியாது. கையிலிருந்த பாவாடை லேஸைச் சுருட்டி, அலமாரியில் வைத்தாள், மணையை எடுத்துச் சுவரில் சாய்த்தாள். உலையில் பருப்பு வெந்துவிட்டதா என்று பதம் பார்த்தாள்.

    தெருவில் மிட்டாய்க்காரனின் மணியோசை கேட்டது. பஞ்சு மிட்டாய் அம்மா, காசு குடும்மா, என்று அவளது சேலைத் தலைப்பைப் பிடித்திழுத்தான் பாபு.

    அவனது அடர்ந்து சுருண்ட முடியை ஒரு கையால் கோதிக் கொடுத்தவாறே எழுந்து சென்று கடுகு டப்பாவைத் திறந்து பார்த்தவள், காசு இல்லையேடா கண்ணா. நாளைக்கு ஆகட்டும், என்றாள்.

    போம்மா நீ. எப்போ கேட்டாலும் காசில்லே, காசில்லேங்கிறியே? கைகால்களை உதறிக்கொண்டு சிணுங்கியவன், ஏரோப்ளேனாவது என்று தயங்கினாள் வாசுகி, கத்திக் கப்பல் பண்ணித் தரட்டுமா?

    எனக்கு ஒண்ணும் வேணாம் போ.

    சாப்பாட்டுக்கு அப்பா வரும்போது கேள். உனக்கு எல்லாமே பண்ணிக் கொடுப்பார். அதுவரைக்கும் சமர்த்தாய்ப் போய் வாசவில் விளையாடிக் கொண்டிரு. என்று சமாதானப்படுத்தியவள், அரிவாள்மணையை எடுத்து வைத்துக் கொண்டு முருங்கைக்காயை நறுக்கலானாள்.

    மத்தியானம் பார்த்திபன் வந்தபோது, பாபு மூலையில் உர்ரென்று உட்கார்ந்து கொண்டிருந்தான், பாபுவுக்கு என்ன கோபம்? என்று தன் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டியவாறே கேட்டான் பார்த்திபன்.

    ஏரோப்ளேன் பண்ணித் தா என்றான், எனக்கு என்ன தெரியும் தட்டை எடுத்து வைத்து விட்டுத் தண்ணீர் கொணர்ந்து வைத்தாள் வாசுகி.

    பாபுவுக்கு இல்லாத ஏரோப்ளேனா? உனக்குக் காரவெல் வேண்டுமா, வைகவுண்ட் வேண்டுமா? என்று குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டான் அவன்.

    அடுத்த இரண்டு நிமிடங்களில் விமானமும் உற்பத்தியாகி, ‘உய்ங் - உய்ங்...’ என்று பாபு இரவல் குரல் கொடுக்க அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பறக்கலாயிற்று. பாபு கை கொட்டிச் சிரித்தான், பார்த்திபன் சாப்பாட்டு நினைவுக்கே இடம் கொடுக்கவில்லை

    அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துவிட்டால் அடிக்கிற கொட்டம் தாங்கவில்லையடி அம்மா. எத்தனை குப்பை என்று கொஞ்சலாகக் குறைபட்டுக் கொண்ட வாசுகியின் பார்வையைக் கீழே கிடந்த பத்திரிகைக் கிழிசல் கவர்ந்தது.

    அதைக் கையிலெடுத்துப் படித்தாள். அடங்காத ஆசையொன்று அவளை ஆட்டிவைக்க ஆரம்பித்தது.

    வாசுகி எப்போதும் தனக்காக ஆசைப்படுகிறவள் அல்ல. கண்ணிறைந்த கணவன் இருந்தான். சுமாரான உத்தியோகம், சாப்பாட்டுக்கு ஒன்றும் கஷ்டமில்லை. அவள் ஆசைப்பட்டதெல்லாம் பாபுவுக்காகத்தான். அவனுடைய அழகுக்கும் அறிவுக்கும், பிரமிக்கிற மாதிரி ஒரு பேரதிர்ஷ்டம் வாய்க்காதா என்று அவள் ஏங்குவது வழக்கம்.

    வாசுகி குனிந்து அந்தக் காகிதத்தை எடுத்தாள். அது அவள் நெஞ்சைப் படபடக்க வைத்தது. கட்டம் கட்டிப் போட்டிருந்த விளம்பரத்தை ஆவலோடு மறுபடி படித்தாள்

    குழந்தை நட்சத்திரம் தேவை

    எங்கள் அடுத்த தயாரிப்புக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் தேவை. குழந்தையொன்றையே மையமாக வைத்து நாங்கள் எடுக்கவிருக்கும் பிரம்மாண்டமான வண்ணப் படத்துக்கு அழகும், துறுதுறுப்பும் அமைந்த சூட்டிகையான குழந்தை வேண்டும் வயது ஐந்துக்கு மேல் இருக்கலாகாது. முதலில் புகைப்படம் அனுப்பினால் போதும்...

    அவள் உள்ளத்திலே இனம் தெரியாத பரபரப்பு:

    பாபு, வா சாப்பிடலாம், என்று சொல்லிக் கொண்டே பார்த்திபன் குழந்தையுடன் தட்டின் முன் அமர்ந்தபோது வாசுகி இயந்திரம் போல் பரிமாறினாள்.

    குழந்தை நட்சத்திரக் குழந்தை...

    அந்த விளம்பரத்தை மனத்தினின்று அகற்ற முடியவில்லை.

    பார்த்திபன் பாபுவுக்கு வேடிக்கையாய்க் சொல்ல, இருவரும் ஒரு வழியாய்ச் சாப்பிட்டு முடித்து விட்டுக் கை கழுவ எழுந்துகொண்டார்கள்,

    வாசுகி ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாள், எத்தனை நாளைக்கு முன் வந்த பத்திரிகையோ அது இன்றைக்கே பாபுவின் படத்தை வைத்துச் சென்னைக்கு அனுப்பிவிட வேண்டியது தான். எப்படியும் வெற்றி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை அவளது நெஞ்சின் ஆழத்திலே ஊற்றெடுத்தது.

    இதற்கு முன்னாடி அவள் கட்டிய மனக்கோட்டைகளைப் போன்றதல்ல இது என்று அவளுக்குத் தோன்றிற்று: பாபுவின் கன்னக் கதுப்புக்கும் அலை அலையான முடிக்கும், ரோஜாப் பூக்கொத்துப் போன்ற மேனி வண்ணத்துக்கும் அவன் எங்கோ மாளிகையில் பிறந்திருக்க வேண்டியவன் என்று அவள் பலமுறை நினைத்துப் பெருமூச்சு விட்டதுண்டு. பாபு மாளிகையில் பிறக்காவிட்டாலும், மாளிகையில் குடியேறப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஏதோ ஒன்று அவளுக்குள் இன்று சொல்லிற்று.

    குழாயடியில் முகம் கழுவிக்கொண்டிருந்த கணவனைக் கூடுமானவரை மெள்ள அழைப்பதாகத்தான் நினைத்துக் கொண்டு கூப்பிட்டாள் வாசுகி. ஆனால் குரலில் இருந்த பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    குழந்தையின் முகத்தைத் துடைத்து விட்டவாறே உள்ளே வந்த பார்த்திபன், என்ன, என்ன வாசுகி? என்றான் அமைதியாக.

    இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

    பஞ்சு மிட்டாய்க்குக் காசுப்பா, என்றான் பாபு.

    பாபு, நீ சும்மா இருக்க மாட்டாய்? கடிந்து கொண்டாள் வாசுகி.

    "முதலிலே பாபு. அப்புறம்தான் அம்மா. ஏன் பாபு என்று கொஞ்சியவாறே அவனைத் தூக்கிக்கொண்டு, வாசுகி நீட்டிய காகிதத்தைக் கவனிக்காமல், சில்லறை எடுத்துக் கொடுத்தான் பார்த்திபன்.

    பாபு வெளியில் ஓடியதும் சட்டையை மாட்டிக்கொண்டான் அவன். எனக்கு மணியாகிறது. என்ன போட்டிருக்கிறது பத்திரிகையிலே?

    அவளுக்கிருந்த பரபரப்பில், உரக்கப் படிக்க இயலவில்லை. மேலும், விளம்பரத்தை அவன் படிக்கும் போது அவனது முகத்தில் என்ன மாறுதல் ஏற்படுகிறது என்றும் அவள் கவனிக்க விரும்பினாள்.

    நீங்களே பாருங்களேன், என்று நீட்டினாள்.

    பொதுவாக, பார்த்திபனுக்குச் சினிமா, நாடகம் என்றால் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. ஒன்றுக்குப் பத்துப் பேர் அவனிடம் ஒரு படத்தைப் பற்றிச் சிபாரிசு செய்திருந்து, வாசுகியும் விடாமல் நச்சரித்தால் எப்போதாவது அழைத்துப் போவான். தனக்கு ஏற்பட்ட உற்சாகம் அவனிடம் தொற்றிக் கொள்ளும் என்று அவள் எதிர்பார்க்கவில்லைதான்.

    இருந்தாலும் அந்த விளம்பரத்தை அவன் மேலோட்டமாகப் பார்த்து விட்டு, உம் உம்... இப்போது என்ன இதற்கு? என்று கேட்டபோது அவளுக்கு என்னவோ போலாகிவிட்டது.

    சமாளித்துக்கொண்டு, அழகாய் இருக்க வேண்டுமாம். பாபுவைவிட அழகாய் ஒரு குழந்தை கிடைத்து விடுமா அவர்களுக்கு? என்றாள்.

    பார்த்திபன் சட்டைப் பித்தான்களை மாட்டுவதில் ஈடுபட்டிருந்தான்.

    அவள் தொடர்ந்தாள், துருதுருப்பு... சூட்டிகை... பாபுவுக்கு மிஞ்சியா?

    வாசுகி, முதலிலே நீ போய்ச் சாப்பிடு. நேரம் என்ன ஆயிற்று பார்த்தாய் இல்லையா? என்று கூறியபடி ஆபீசுக்குக் கிளம்பினான் பார்த்திபன்.

    மாலையில் அலுவலகத்திலிருந்து அவன் திரும்பிய போது பாபு ஓடிவந்து, அப்பா, அம்மா மத்தியானம் சாப்பிடவே இல்லேப்பா," என்று புகார் செய்ததைக் கேட்டதும் பார்த்திபனுக்குத் துணுக்கென்று போய்விட்டது.

    என்ன வாசுகி, இது, சாப்பிடவில்லையாமே?

    பசிக்கவில்லை. சுருக்கமாக வந்தது பதில்.

    கோபமா?

    எனக்கென்ன கோபம்?

    என்ன, அந்த விளம்பரத்துக்குப் பாபுவின் படத்தை அனுப்ப வேண்டும். அவ்வளவுதானே? இதோ பார், என்று எழுந்தான் பார்த்திபன்.

    பாபுவின் படம் ஒன்றை எடுத்து, அளவாய் இரண்டு அட்டைகள் வெட்டி, இடையில் படத்தை வைத்துக் கட்டி, வாசுகியே விண்ணப்பித்துக் கொண்டது போல், பையனைப் பற்றிய குறிப்புக்களையும் ஒரு கடிதத்தில் எழுதி, அன்றைய இரவே தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்துவிட்டான்.

    பிறகுதான் வாசுகியின் முகத்தில் பழைய களையைக் காண முடிந்தது.

    மறுநாள் முதற்கொண்டே வாசுகி மனக்கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டாள். தபால்காரர் வரும் நேரத்தில் எப்போதும் அவளை வாசலில் பார்க்கலாம். ஆனால் அவள் எதிர்பார்த்த கடிதத்தைத்தான் காணோம்.

    கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, அவளுக்குத் திடுதிப்பென்று மணியார்டர் ஒன்று வந்தது. கூப்பனில் எழுதியிருந்த செய்தியை வாசித்துப் பூரித்துப் போய்விட்டாள். பாபுவின் தோற்றம் திருப்திகரமாய் இருக்கிறதாம். பையனுக்கு நேரில் சில தேர்வு நடத்தவேண்டியிருப்பதால் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்னை வரவேண்டுமாம்.

    அடே எவ்வளவு பணம்! ஏதும்மா? என்று கேட்ட பாபுவின் கன்னத்தில் முத்தம் சொரிந்தபடி, இதென்னடா பிரமாதம்! நீ சம்பாதிக்கப் போகிற பணத்தில இது எந்த மூலை என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

    கணவனையும் குழந்தையையும் அன்று இரவே சென்னைக்கு அனுப்ப வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்ட வாசுசி. பெட்டியை எடுத்து, அடியில் குழந்தை உடுப்புக்களை வைத்துவிட்டு, மேலாகக் கணவனின் பாண்ட், சட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதபடி பார்த்திபன் வந்து சேர்ந்தான், வாசுகி, அதற்குள் உனக்கு எப்படித் தெரிந்தது விஷயம்? என்று கேட்டபடி.

    அவளுக்கு ஒரே ஆச்சரியம். எனக்கு முன்னால் உங்களுக்குத் தெரிந்துவிட்டதா தனியாக உங்கள் ஆபீஸ் விலாசத்துக்கு ஏதாவது கடிதம் வந்ததா? என்றாள்.

    பார்த்திபனின் நெற்றியில் சுருக்கங்கள் நெளிந்தன. நீ எதைப் பற்றிச் சொல்கிறாய்? என்னை மதுரைக்கு அவசரமாகப் புறப்பட்டுப் போகச் சொல்லியிருக்கிறார்கள் ஆபீஸில், அது தெரிந்து தான் ஏற்பாடு செய்கிறாயாக்கும் என்று நினைத்தேன்.

    கூப்பனை எடுத்துக் குதூகலத்தோடு காண்பித்தாள் வாசுகி.

    விளம்பர விஷயத்தை அவன் எப்போதோ மறந்துவிட்டிருந்தான். இந்த மாதிரி ஓர் அழைப்பு வருமென்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது வியப்பும் மகிழ்ச்சியும் காட்டிக்கொடுத்தன.

    "நீ சொன்னமாதிரி பாபு அதிர்ஷ்டக்காரன்தான் போலிருக்கிறது. ஒன்று செய்யலாம் இன்று மதுரைக்குப் போகிறேன். அனேகமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1