Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Atho! Avan Thaan!
Atho! Avan Thaan!
Atho! Avan Thaan!
Ebook109 pages42 minutes

Atho! Avan Thaan!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருளானந்தம் என்பவன் காதலித்து திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு, அவர்களைப் பிரிந்து செல்கிறான். பெற்றோருக்காக உறவினர் பெண்ணான வேதவல்லியை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறான். வேதவல்லியின் சகோதரர்கள் அருளானந்தத்தை ஏன் கொலை செய்ய திட்டம் தீட்டினர்? கண்ணன் தனது தந்தை அருளானந்தத்தை கண்டுபிடித்து வேதவல்லியிடம் ஒப்படைத்தானா? கண்ணன் – பாலி உறவு என்ன?

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580152008274
Atho! Avan Thaan!

Read more from Punithan

Related authors

Related to Atho! Avan Thaan!

Related ebooks

Reviews for Atho! Avan Thaan!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Atho! Avan Thaan! - Punithan

    http://www.pustaka.co.in

    அதோ! அவன்தான்!

    Atho! Avan Thaan!

    Author :

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் ஐதராபாத் பயணம்

    1. இன்னும் பத்தே நாள்

    2. இன்னும் ஒன்பதே நாள்

    3. இன்னும் எட்டே நாள்

    4. இன்னும் ஆறே நாள்

    5. இன்னும் ஐந்தே நாள்

    6. இன்னும் நாலே நாள்

    7. இன்னும் மூன்றே நாள்

    8. இன்னும் இரண்டே நாள்

    9. இன்னும் ஒரே நாள்

    ஓர் ஐதராபாத் பயணம்

    ஐதராபாத்தில் நாகார்ஜுன சாகர் அணைக்கட்டு எழும்பிக்கொண்டிருந்த காலம்.

    என் பள்ளித் தோழர் சிகாமணி, அந்த அணைக் கட்டு வேலையில் ஈடுபட்டிருந்த எத்தனையோ இஞ்சினீயர்களுள் ஒருவராய்ப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழைப்பு விட்டுக்கொண்டிருக்க, ஒருமுறை துணிந்து என் குடும்பத்துடன் ஐதராபாத்தில், அந்த அணைக்கட்டுப் பகுதியில், கிட்டதட்ட ஒருவாரம் அவரது குவார்ட்டர்ஸில் முகாமிட்டிருந்தேன்.

    வித்தியாசமான சூழல், வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள்!

    தெரியாத்தனமாய் ஆசிரியர் அவர்கள், ‘ஐதராபாத் எப்படியிருக்கிறது’ என்று ஒரு கேள்வி கேட்டாலும் கேட்டார், கிடைத்தது வாய்ப்பு. எனக்குப் புதுமையாய்த் தோன்றிய லம்பாடிகளைப் பற்றி, அந்த இடத்தைப் பற்றி, அந்த வட்டாரத்துப் பழக்கங்களைப் பற்றியெல்லாம் மணிக்கணக்காய் விவரித்தேன்.

    பொறுமையாய்க் கேட்டுவிட்டு, எங்கே, இதுவரைக்கும் நீங்கள் சொன்னதைப் பத்திரிகைக்குப் பயன்படுத்த முடியுமா பாருங்கள். வரப்போகும் தீபாவளி மலருக்கு ஒரு குறுநாவல். மர்மக் கதையாக இருந்தால் நல்லது. நாளைக்குச் சுருக்கம் கொண்டுவருகிறீர்கள். என்று தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டினார். அதோ, அவன் தான்! உருவாயிற்று.

    அப்படி ஓர் ஆசிரியர் இனி கிடைப்பாரா தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு எனது படைப்புகள் பலவும் உருவாகக் காரணமாய் இருந்த அமரர் எஸ்.ஏ.பி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    எனது பத்திரிகை எழுத்துகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்துவரும் அண்ணன் அமரர் தமிழ்வாணன் வாரிசுகளுக்கு என் நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக!

    சென்னை -10

    அன்பு,

    புனிதன்

    1. இன்னும் பத்தே நாள்

    காம்பவுண்டைத் தாண்டி முன்னிருந்த பூங்கா வரை வந்து விட்டான் அந்த வாலிபன்.

    பக்கவாட்டிலிருந்த ‘போர்ட்டிகோ’வில் பளபளப்பான கார் உறங்கிக் கிடந்தது. அவனைத் தடுக்கவோ அவன் வரவைத் தெரிவிக்கவோ ஒரு நாய், ஒரு தர்வான், ஒரு தோட்டக்காரன், ஒரு டிரைவர், ஓர் ஆத்மா இருக்க வேண்டுமே? ஊஹூம்.

    இடம் தவறி வந்து விட்டோமோ? இல்லையே? வாயிலில் கருங்குழி விழுந்து மின்னிக் கொண்டிருந்த பித்தளைத் தகடு, ‘குமரி பதம்’ என்று சரியான முகவரியைத்தானே காட்டிற்று?

    உள்ளே, கூடத்தில் யாரோ நடமாடுவதைப் போலிருந்தது. மெள்ள எட்டிப்பார்த்தான். யாரையாவது கூப்பிடலாமா? வேண்டாம். நாக்கை மடித்துக் கொண்டான். கூடத்தில் அடிபட்ட பேச்சு தெளிவாகக் கேட்டது. காது கூர்மையாகியது. உடல், சுவர் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது.

    மூன்று மாதமாய்ப் பொறுத்தாயிற்று. அருளானந்தத்திடமிருந்து ஒரு தகவலுமில்லையே? கண்ணியமான ஆண்குரல்.

    எப்படித் தகவல் வரும்? இதோ நான். என் தம்பி, மானேஜர் அருணாசலம் இத்தனை பேரும் கண்ணால் பார்த்தோமே அந்தக் கண்ணராவியை! குற்றாலத்தில் தேனருவிப் பக்கம் போன மனிதர், கால் சறுக்கி உருண்டு விழுந்த கோரத்தை இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறதே! கூடவே பாய்ந்திருப்பேன் நானும். இந்த இரண்டு பேரும் பிடித்து நிறுத்தித் தடுத்துத் தொலைத்தார்கள். இல்லாவிட்டால், அந்த மாதிரிக் கண்ணராவிகளையெல்லாம் பார்க்காமல் அப்போதே போய்ச் சேர்ந்திருக்க மாட்டேனா? கரகரப்பான இந்த ஆண் குரலில் சோகம் இழையோடிற்று.

    வாயிலில் நின்ற வாலிபன், நெஞ்சுத் துடிப்பை அடக்க முயன்றான்; மார்பை இறுகப் பற்றிக்கொண்டான்.

    தொடர்ந்து ஓர் இளம் ஆண் குரல் பேசிற்று. அத்தனை நாள் அவரை விட்டு இந்தண்டை அந்தண்டை அசையாமல் இருந்தவர்கள், அந்த ஒருவேளை பார்த்துக் கோட்டை விட்டோமே! ஹும் மூன்று நாட்கள் கழித்துக் கிடைத்தது உடல் எப்படி இங்கே கொண்டு வருவது? அக்காவை அங்கே வரவழைக்கவும் அவகாசமில்லை. ஏதோ அவர் நினைவு மறக்காமலிருக்க அந்தச் சட்டை வேட்டியாவது கிடைத்ததே, அதைச் சொல்லுங்கள்.

    வாசலில் வாலிபன் மோவாயைத் தடவியபடி நின்றிருந்தான்.

    நீ என்னம்மா சொல்லுகிறாய்? உன் கணவனிடம் உனக்கிருந்த அன்பும் ஆசையும் எங்களுக்குத் தெரியாததா? நீ உறுதி சொன்னதுபோல் இதுவரை அவரிடமிருந்து ஒரு வகையான தகவலுமில்லை. அவர் இருந்திருந்தால் இத்தனை காலம் உன்னைப் பிரிந்திருக்க மனம் வருமா? எப்படியாவது வந்திருக்க மாட்டாரா? எதுவானாலும், இப்போது நாலுபேர் நாலு விதமாகப்பேச இடம் கொடுக்கக் கூடாது. அதுதான் முக்கியம். ஊர் கூடியபோது போன தடவை உன் வீட்டு விவகாரத்தைப் பற்றிப் பலர் கேட்டார்கள், நீ தவணை கேட்டபடி மூன்று மாதமும் ஆகிவிட்டது. இது முதலில் பேசிய கண்ணியமான குரல்.

    இல்லை காரியக்காரரே, இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது.

    வாசலில் காத்திருந்த வாலிபனுக்கு உடல் புல்லரித்தது. இது பெண் குரல். குரலை வைத்து மதிப்பிடுவதென்றால், இன்னும் இளமை தேயாத பருவம்தான்.

    பெரியவரே, பொறுத்ததுதான் பொறுத்தீர்கள். இன்னும் பத்து நாள் தானே! ஐயாவிடம் உயிரையே வைத்துக் கொண்டிருந்தார்கள் அம்மா. கல்யாணமாகி எட்டு வருஷமாகியும், ஒரு குழந்தைகூட இல்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம். போன கணவன் திரும்பி வரமாட்டான் என்பதை அத்தனை எளிதில் எந்தப் பெண்தான் ஒப்புக்கொள்வாள்? கேட்கிறவர்களிடம் சொல்லுங்கள். அம்மாவின் பூரண சம்மதம் கிடைத்த பிறகுதான் முதலாளி ஐயாவுக்கு எல்லாச் சடங்குகளையும் செய்யலாம், என்றது பரிவு நிறைந்த ஒரு புதுக்குரல்.

    "நான் கேட்ட தவணையை எனக்குக் கொடுத்தால் போதும். வேறொன்றும் வேண்டாம். இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1