Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohanasthiram
Mohanasthiram
Mohanasthiram
Ebook135 pages48 minutes

Mohanasthiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803432
Mohanasthiram

Read more from Maharishi

Related to Mohanasthiram

Related ebooks

Reviews for Mohanasthiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohanasthiram - Maharishi

    http://www.pustaka.co.in

    மோகனாஸ்திரம்

    Mohanasthiram

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் இரண்டாவது தளத்தில், மீட்டிங் ஹாலில் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், மற்றும் விநியோகஸ்தர்கள் அடங்கிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

    கூட்ட ஆரம்பத்தில் இருந்த ஒருகட்டமைப்பு குலைந்து ஒரு ஏனோதானோ நிலைக்கு வந்துவிட்டது.

    காரணம்,

    கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய பேச்சுகளும்,

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்களும்,

    கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய புதிய நிர்வாகஸ்தர்கள் தேர்வுகளும்,

    அட்டவணையில் எல்லாம் முடிந்துவிட்டது. இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் கட்டமைப்பின் சங்கக் காரியதரிசி சென்ற ஆண்டு தான் வெட்டி முறித்ததை விவரித்துக் கொண்டிருந்தான்.

    மத்திய மந்திரி ஒருவரின் தேதிக்காக காத்திருந்ததால் இக்கூட்டம் இரண்டு மாதம் தாமதமாக நடக்கிறது என்றார்.

    நவீனமயமான பெரிய ஹால். கீழே சிவப்பு கார்பெட். சுவற்றில் அதிக சிவப்பு வண்ணம் கொண்ட சுவர் ஓவிய அட்டைகள். சாப்பிடும் மேஜையில் சிவப்பு நிற மைக்கா!

    கண்ணாடி ஜன்னல்களில்... சிவப்பு வர்ண கர்ட்டன்கள்.

    ரவீந்தரஜே, வடகோடியில் ஒருமேஜைமுன் உட்கார்ந்திருந்தார்.

    அவருடைய பார்வை அடிக்கடி மூடிக்கொண்டிருக்கும் நுழைவாயில்பக்கம் திரும்பிய வண்ணமிருந்தது.

    மெல்லிய முனகலுடன் அது திறக்கும் போது அவர் பார்வையில் ஓர் ஆர்வம். தான் எதிர்பார்க்கிற நபர் இல்லையென்றவுடன் விழிகளில் கோபம், அறையிலிருந்து எழுந்து யாரேனும் வெளியே செல்லக் கதவைத் திறக்கும் போது உண்டாகும் அந்த கணநேர இடைவெளியைப் பார்ப்பார்... அவர் எதிர்பார்க்கும் ஆசாமி தனக்காக வெளியே காத்திருப்பானோ என்கிற படபடப்பு...

    திறந்த கதவு மூடும் வரை தலையைத் தாழ்த்தி வளைத்து, கண்ணெதிரே தெரிகிற கதவின் இடைவெளியை நோட்டம் விட்டு...

    வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, உங்களைப் போன்ற தொழில் அதிபர்களுக்கும் அதிக முக்யத்வம் உண்டு...

    தலைமை வகித்த உள்ளூர் பிரமுகர் சாப்பாட்டு வேளையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்... கூட்டம் தம் ஆரம்ப நேரத்து களையை இழந்து ரொம்ப நேரமாகி விட்டது.

    கதவைத் திறந்து கொண்டு பாண்டியன் நின்றான்.

    அவன் கண்கள் பரபரப்புடன் ரவீந்தரஜேயை தேடின!

    நிதானமாக எழுந்தார்.

    வெளியே வந்தார்.

    அவரைத் தொடர்ந்து அவனும்; மாடியின் இரண்டு தளங்களை மெளனமாகவே ஏறிக்கடந்தார்கள். நான்காவது தளத்தில் அதிக நடமாட்டமில்லை. நீண்ட நடை பாதையும் ரிஸப்ஷன் ஹாலும் வெறிச்சோடியிருந்தது. ஏதோ சில அறைகளில் மட்டும் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. முன்னும் பின்னுமாக நடந்தவர்கள், குறுகலான நடைபாதையைக் கடந்து ஓர் அறையின் முன் வந்து நின்றார்கள். அந்த அறைக்குள் பாண்டியனுடன் தான் நுழைவதை யாரும் பார்க்கவில்லை என்பதை நன்றாக ஊர்ஜிதம் செய்து கொண்டு ரொம்பவும் அவசரமாக கோட்பையில் கையை விட்டு சாவியை எடுத்து அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்துவிட்டார்.

    அவனைப் பார்த்துச் சபலத்துடன் நகைத்தார் ரவீந்தரஜே.

    ஏற்பாடு செய்துட்டேன்.

    வெரிகுட்.

    ரொம்ப புதுசு...

    கஷ்டமாச்சே.

    பழக்கமானதுதான்.

    அப்படியா

    நானே கொண்டு வந்து விட்டுட்டு போறேன். எட்டு மணிக்கு மேலே வரேன். ஆட்டோகாரனை விடியற்காலையில் வந்து அழைச்சுட்டு போக ஏற்பாடு பண்ணிட்டேன். அவனுக்கு அதெல்லாம் தெரியும்... நீங்க அதுக்காக சிரமம் எடுத்துக்க வேண்டாம்...

    கப்போர்டிலிருந்து பர்சை வெளியே எடுத்தார். ஏதோ தொகையை அவனிடம் கொடுத்தார். அவரும் எண்ணவில்லை. அவனும் எண்ணவில்லை. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட நிலையில் புன்னகை மட்டும் செய்து கொண்டனர்.

    அறையைவிட்டு அவன் முதலில் வெளியேறிவிட்டான்.

    சோபாவில் கால்களை நீட்டி பின்னலிட்டுக் கொண்டு சில நிமிஷங்கள் படுத்தார். கைகள் இரண்டும் தலைக்குக் கீழே இருந்தது.

    இரவின் வருகையை எண்ணி அவர் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.

    விநியோகஸ்தர்களின் கட்டமைப்புக் கூட்டம் அங்கே முடிவடைந்துவிட்டது.

    ரவீந்திரஜே மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தபோது வெண்மையான துணி விரிக்கப்பட்ட மேஜை மேல் டின்னர் பரிமாறப்பட்டு எல்லோரும் தங்கள் இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    ரவீந்திரஜேயும் காலி இடத்தில் போய் உட்கார்ந்தார்.

    அவருக்கு டின்னரிலோ, இன்னொரு ஹாலில் நடக்கும் காக்டெயிலிலோ நாட்டமில்லை.

    அங்கிருந்து விடுபட்டால் போறும் என்று தோன்றியது.

    தான் வெளியேறும் வரையில் தன்னுடன் யாரும் பேச வருவதைக்கூட விரும்பாதவராக தனக்குத் தானேயொரு தனிமையை உண்டாக்கிக் கொண்டு மெளனமாக இருந்தார்.

    டின்னர் நடுவில்...

    என்ன ஜே... இப்பவே ஊருக்கா...

    ஆமாம்.

    நைட் ஹால்ட் போட்டா என்ன, ஏற்காடு போய்ட்டு அங்கே போய் ராஜேஷைப் பார்த்துட்டு மெட்ராஸ் கவுன்சில் மீட்டிங்குக்கு தேதி நிர்ணயித்துக் கொண்டு போயிடலாமே-

    நீ போய் பார்த்துவிட்டு தேதியை வாங்கிட்டு வா... எனக்கு வேலை நிறைய இருக்கு.

    நான்காவது தளத்தின் நீண்ட நடைபாதை மெளனித்துக் கிடந்தது. கிராதிச்சுவர் ஓரமாகக் கிடந்த கூடை நாற்காலியில் உட்கார்ந்தார்.

    எதிரே சேலம் நகரின் ஒரு பகுதியும், எல்லை வகுத்துக் கொண்ட மாதிரி மலையும் தெரிந்தன.

    பட்டை பட்டையாக கோடிட்ட இரவு உடை.

    ஏற்கனவே ‘இரண்டு பெக்' உள்ளே போய்விட்டது.

    நெய்யில் வறுத்த காரமுந்திரி தொண்டையை இதப்படுத்திக் கொண்டிருந்தது.

    யாரேனும் ஆள்வரும் சத்தம் கேட்டால் கூட அவருடைய புலன்கள் அடைத்துக் கொண்டன.

    அவன் வந்துவிட்டான்.

    ரொம்பவும் அவசரமில்லாமல், அவளை அறைக்குள் அனுப்பி, கதவை சாத்தி விட்டு அவரிடம் வந்து நின்றான்,

    நான் வரேன்... உங்களை நாளைக்கு காலைல பாக்கறேன்.

    ஓ...கே...

    அவன் போய்விட்டான்.

    ரவீந்திரஜே உள்ளே நுழைந்தார்.

    ஓசையின்றி கதவைசாத்தித் தாழிட்டுக் கொண்டார்...

    உள்ளே அவளை உட்கார வைத்துவிட்டு வெளியே வரும்போது அவன் விளக்கை அணைத்து விட்டுப் போயிருந்தான்.

    விளக்கைப் போட்டு அவளைப் பார்க்கிற வரையில் அவருடைய மனப்பரபரப்பு அடங்கவேயில்லை.

    இம்மாதிரி நேரங்களில் அவர் ஏமாந்து போன நிகழ்ச்சிகளும் உண்டு...

    அசலான கேரளா குட்டி. ஞா பரயோ... என்று கூறிவிட்டு ஒரு நாற்பது வயதுக்காரியை அழைத்துக் கொண்டு வந்து வம்பு பண்ணுவதும்... எதற்குமே சுவைக்காத வெறும் டீனேஜாகவந்து அவர் உள்சுகத்தை வீணடிப்பதும் கூட உண்டு...

    ஆனால் இவர் மனநிலை உணர்ந்து அவருக்கு சப்ளை செய்கிற ஒரே புரோக்கர் இவன்தான். வாங்குகிற காசுக்கு ஒரிரவை உற்சாகமாகக் கழிக்க அவன் ஒருவன்தான் அவருக்கு உண்மையாக இருந்தான்.

    விளக்கைப் போட்டார்!

    அவருக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.

    படுக்கையில் அந்த அழகி

    Enjoying the preview?
    Page 1 of 1