Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalinga Mohini
Kalinga Mohini
Kalinga Mohini
Ebook201 pages1 hour

Kalinga Mohini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலிங்க மோகினி - கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் துவங்கி, நிகழ்கிறது இந்த நவீனத்தின் சம்பவங்கள்

பாண்டிய ஆட்சி உச்சத்திலிருந்த போது, இலங்கையில் இரு அரச மரபுகள் இருந்தன. ஒன்று தென்னிலங்கை; மற்றொன்று வட இலங்கை. இனத்தால் ஒன்றுதான் எனினும் இவர்களுக்குள் போரும், பூசலும் நிறைய உண்டு. குறிப்பாக மன்னார்க்குடாக் கடலில் முத்துச் சலாப் உரிமை குறித்து அடிக்கடி தகராறு மூண்டது. இந்த நிலையில் பாண்டிய சேனையும் படையெடுப்பு நிகழ்த்தியது.

மதிதுங்கன் தனிநின்று வென்றான் பெருமாள்தான் இந்த நாவலின் நாயகன். இதோ அவனுடைய வெற்றி வரலாறு துவங்குகிறது

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580102010859
Kalinga Mohini

Read more from Gauthama Neelambaran

Related to Kalinga Mohini

Related ebooks

Related categories

Reviews for Kalinga Mohini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalinga Mohini - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கலிங்க மோகினி

    Kalinga Mohini

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    கதைக் களம்

    1. மாற நித்திலம்

    2. கலிங்க மோகினி மூட்டிய கனல்

    3. பதுமலேகா...

    4. வெற்றி விழா!

    5. குறுவாள் வீசியது யார்?

    6. பாண்டிய ஜீவரட்சகன்!

    7. அரசியாரின் அங்கதப் பேச்சு!

    8. பாண்டியகுமாரியின் ஆதங்கம்!

    9. யார் அந்த விதூஷகன்?

    10. கயிற்றரவு!

    11. மரகத புத்தர்

    12. கொட்டாரத்தில் விபரீதம்

    13. கொம்பன் யானையின் கோபம்!

    14. உபவன தேவதை!

    15. விமலதம்மனின் வேண்டுகோள்!

    16. கலிங்கமோகினியின் காதல் உலா!

    17. கள்ளர் குடிச் சிறப்பு!

    18. பதுமலேகாவின் பரிந்துரை!

    19. விமலதம்மனின் அரண்மனை விஜயம்

    20. கல்தாமரை மலர்ந்தது!

    21. விமலதம்மன் பெற்ற அனுமதி...

    22. பொக்கிஷ சாலையில்...

    வாழ்த்துரை

    கதைவல்ல கௌதம நீலாம்பரன் தமிழக வரலாற்றுப் பேழையிலிருந்து எடுத்த பாண்டி முத்துக்களைப் பாங்குறக் கோத்து அழகிய ஆரமாக்கிக் ‘கலிங்க மோகினி’ என்று நம் கைகளில் கொடுத்துள்ளார். முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (கி.பி. 1268-1311) காலமும் களமும், பாத்திரங்களில் சம்பவங்களில் பரபரப்போடு இயங்குவதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறது.

    ‘எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகரபாண்டியன்’ என்று கல்வெட்டுகளால் வருணிக்கப்படும் இவன், தன் அமைச்சனும், அரும்படைத் தலைவனுமான மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளாகிய ஆரியச் சக்கரவர்த்தியின் தலைமையில் தனது படையை ஈழத்தின்மேல் ஏவிவிட்டான். ஈழத்தில் புவனேக பாகுவின் ஆட்சி முடிவுரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நாள்களில் நடந்த அப்போரில், ஆரியச் சக்கரவர்த்தி அந்நாட்டின் பகுதிகள் பலவற்றைப் பாழ்படுத்தி நகரங்களைக் கொள்ளையிட்டுச் சூறையாடி, சுபகிரி என்னும் நகரிலிருந்த கோட்டையையும் கைப்பற்றினான். சுபம் இழந்த சுபகிரியிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் ஏராளமான பொருள்களை வாரிக் கொண்டு மதிதுங்கன் வெற்றிக்கப்பல் ஏறினான். அப்படி அவன் கைப்பற்றி வந்த பெரும் பொருள்களில், அரும்பொருளாக இருந்தது புத்ததேவனின் பல்!

    பலப்பல இழந்த ஈழத்திற்குப் புத்தரின் பல்லை இழந்தது, தீராத வேதனையைத் தந்தது. ஆறாத அவமானக் காயமாக இருந்து இரத்தம் கசிந்தது. ஆயினும் வேறு வழியின்றி, ஈழநாட்டு மூன்றாம் பராக்கிரமபாகு, குலசேகர பாண்டியனைப் பணிந்து - அப்பல்லைப் பெற்றுச் சென்றான் என்று இலங்கை வரலாறாகிய மகாவம்சமும் சொல்கிறது. தமிழக வரலாற்றுப் பேராசிரியர் வை. சதாசிவப் பண்டாரத்தாரின் ‘பாண்டியர் வரலாறும்’ எடுத்தோதுகிறது.

    இப்பின்னணியை வைத்துப் பின்னப்பட்ட ‘கலிங்க மோகினி’யில் கௌதம நீலாம்பரனின் கதையாக்கும் திறம் சுடர் விட்டொளிர்கிறது. வரலாற்றுக் கதைகளுக்கே உரிய எடுப்பும் மிடுக்குமான கம்பீரமான தமிழ்நடை - இதனுள் பாத்திரங்களாக வரும் அரசர்களின் நடைக்கு எதிராக அறைகூவல் விட்டு, வெற்றிக்கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

    வரம்பு கடவாமல், தனது வார்த்தைகளை, பதும் லேகையையும், சித்திரலேகையையும் வருணிக்க விட்டிருப்பதும் - திருப்பங்கள் வரும் இடங்களில் வாக்கியங்களின் இயக்கத்தை - கவனமாகக் கண்காணித்து நிறுத்தியிருப்பதும், கெளதம நீலாம்பரனின் கதையாளுமைக்குக் கட்டியம் கூறுகின்றன. இவருடைய கற்பனை வளத்திற்கு வெற்றிவிழாவாக ஈழத்திலிருந்து மீண்ட பாண்டியப்படையின் வெற்றி விழா நடக்கிறது. மாவலி வாணராயர் (வாணாதிராயர்) சுந்தரபாண்டியன் ஆகிய படைப்புகளில் குணச்சித்திர வெளிப்பாடு அழுத்தமாக அமைந்திருக்கிறது.

    இக்கதையைப் படிக்கும் போது எனக்கு ஏற்படுகிற உணர்வு; வரலாற்றிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பாத்திரங்களுக்கு இன்னும் கூடுதலான வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் என்பதோடு, கற்பனையாய்ப் படைக்கப்பட்டவர்களுக்கும் இன்னும் கொஞ்சம் காதலிக்கவும், போரிடவும் கதையின் எல்லைகளை விரிவு படுத்திக் கனம் ஏற்றிக் கெளதம நீலாம்பரன் இடம் கொடுத்திருக்கலாமே என்பதும் தான்.

    நாகரிகப் பண்பாட்டு வரம்புக்குள் - வரலாற்று அடிப்படையிலான கற்பனையைச் சுவை சொட்டும் கதைக்குள் - சொக்க வைக்கும் நடையில் சொல்லியிருப்பதன் மூலம் ‘கலிங்க மோகினி’யில் கௌதம நீலாம்பரன் கல்கியின் கான் முளைகளில் ஒருவராகவே முகம் காட்டுகிறார்.

    - தமிழன்பன்

    என்னுரை

    ‘கலிங்க மோகினி’க்குப் பின்புலத்தில் ஒரு முன்கதை உண்டு. இந்த நவீனத்தைப் படிக்கும்போது, அப்படியொரு உத்தியை நான் மையமாக வைத்துக் கையாண்டிருப்பது உங்களுக்கே புலப்படும். ஆனால் இங்கே குறிப்பிடுவது அதையல்ல; இதன் நாயகனான மதிதுங்கன் தனி நின்று வென்றான் - அழகன் பெருமாளைப் பற்றியது அது.

    அமரர் திரு. சாண்டில்யன் அவர்களின் ‘கடல் புறா’ நவீன நாயகன் கருணாகரத் தொண்டைமானுக்கு இணையானவன் நமது மதிதுங்கன். பாராண்ட பல்லவ குலத் தோன்றலான கருணாகரன், கால மாறுபாட்டால் சோழ நாட்டின் படைத்தலைவனாகப் பணியாற்றிய கதை அதுவெனில், மதிதுங்கன் கதை சற்று வித்தியாசமானது. பாண்டிய நாட்டில் படைத் தலைவனாகப் பணிபுரிந்த இவன், பின்னொரு நாளில் இலங்கையின் அரச மரபொன்றைத் தோற்றுவித்த குல முதல்வனாகத் திகழ்கிறான்.

    நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்றொரு வரலாற்று நாடகம் எழுதினேன். அதை அமரர் திரு. மணியன் அவர்கள் மேடையில் அரங்கேற்ற சகல ஏற்பாடுகளும் செய்தார். புகழ்பெற்ற ஒரு நாடகக் குழுவினரால் ஒத்திகை பார்க்கப்பட்டு, அரங்கேற்றத் தேதியும் அரங்கமும் கூடத் தீர்மானித்தாயிற்று. அப்போதைய தமிழக முதல்வர் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் - இலங்கைத் தமிழர் தலைவர் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் முன்னிலையில் மேடையேறவிருந்த அந்த நாடகம் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. காரணம், அப்போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்சினை கடுமையாகிக் கொண்டிருந்த நேரம். இந்த நாடகம் மூலம் இங்கேயும் கொந்தளிப்பு உருவாகலாம் என்று கருதி, எம் ஜி ஆர். அவர்கள் மணியனை அழைத்து, ‘நாடகம் அரங்கேற்றம் இப்போது வேண்டாம். முதலில் அதைப் பத்திரிகையில் வெளியிடுங்கள். பிறகு பார்க்கலாம்’ என்று கட்டளையிட்டு விட்டார். அதன்படி ‘இதயம் பேசுகிறது’ வார இதழில் அந்த நாடகம் தொடராக வெளியானது. பிறகு அது மேடையேற்றம் காணவுமில்லை; நானும் அங்கு பணியிலிருந்து விலகி வந்து விட்டேன் என்பது வேறு விஷயம்.

    ‘ஈழவேந்தன் சங்கிலி’ நாடக அரங்கேற்றத்திற்கு அழைக்க திரு. அமிர்தலிங்கம் அவர்களைச் சந்தித்து உரையாடிய போது, அவர் சில வரலாற்றுத் தகவல்களை என்னிடம் கூறி, இந்த ஆதாரங்களையெல்லாம் பரிசீலித்து, அவை சரிதானா என்று எனக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு நான் அவரைச் சந்திக்க வாய்ப்பில்லாமலே போய் விடினும், அவர் கூறியிருந்த தகவல்களை மனதில் வைத்து வரலாற்று நூல்களைப் புரட்டித் துழாவியதில் கிடைத்த பாத்திரம் தான் இந்த மதிதுங்கன் தனி நின்று வென்றான் - அழகன் பெருமாள். பதின் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இவன் பாண்டியப் பிரதிநிதியாய் இலங்கை சென்று தங்க, பின்னாளில் இவன் மரபு அரச மரபாகி, அதில் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றி ஈழம் ஆண்டவன்தான் சங்கிலி மன்னன்.

    நெடிய பாரம்பர்யம் ஒன்றைத் தோற்றுவித்து வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த மதிதுங்கனை வைத்துத் தமிழில் வரலாற்று நாவல்கள் எதுவும் இதுவரை புனையப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே ‘கலிங்க மோகினி’யை நான் எழுத முயன்றேன். தினமலர் - வார மலரில் 24 வாரங்கள் தொடராக வெளிவந்த இந்தப் புதினம் புத்தக உருவெடுக்கும் போது, அதற்கு ஒரு கம்பீரமான அறிமுகமாக - ஆசீர்வாதமாக இருக்கட்டுமென முன்னுரை கேட்டுக் கலைமாமணி ஈரோடு தமிழன்பன் அவர்களை அணுகினேன்.

    பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரைப் பாவலரான திரு. தமிழன்பன் அவர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து விட்டான் மதிதுங்கன். முன்னுரைக்காக இதை அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை நண்பர் ஒருவர், ரூபவாகினி தொலைக்காட்சிக்கு ஒரு தொடர் எழுதித் தரவேண்டுமென்று திரு. தமிழன்பனிடம் கேட்க, இவரோ தனக்கு வந்த நல் வாய்ப்பை எனக்களித்து, ‘கலிங்க மோகினி’ கதையைப் பரிந்துரை செய்துவிட்டார். மிகப் பிரம்மாண்டமான தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கத் திட்டமிட்டார்கள். பிறகு பல்வேறு காரணங்களால் அது இயலாமல் போயிற்று. என்றேனும் ஒருநாள் மதிதுங்கன் தனி நின்று வென்றான் சின்னத்திரையில் ஒளி உலா நிகழ்த்துவானோ இல்லையோ எனக்கு தெரியாது. இதோ உங்கள் மனங்களில் விஜயம் செய்யத் துவங்கி விட்டான்.

    - கௌதம நீலாம்பரன்

    கதைக் களம்

    கலிங்க மோகினி - கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் துவங்கி, நிகழ்கிறது இந்த நவீனத்தின் சம்பவங்கள்...

    வெனிஸ் நகரத்திலிருந்து வந்த பயணியான புகழ் பெற்ற மார்க்கோபோலோ, சீனத்திலிருந்து வந்த ராஜதூதுவன் யாங்-திங்-பீ, அரபு அறிஞன் அப்ருல்லா வாஸப் போன்றோரால் புகழ்ந்துரைக்கப்படும் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன், சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தான்.

    இந்தக் குலசேகரனின் பிள்ளைகளான வீரபாண்டியனும், சுந்தரபாண்டியனும் ஆட்சி பீடம் ஏற அடித்து நிற்கையில்தான் மாலிக்காபூர் வந்து பாண்டிய நாட்டையே பாழடித்துச் சென்றான்.

    ஆனால், இந்த நாவல் அந்த சம்பவங்களை விவரிப்பதல்ல.

    பாண்டிய ஆட்சி உச்சத்திலிருந்த போது, இலங்கையில் இரு அரச மரபுகள் இருந்தன. ஒன்று தென்னிலங்கை; மற்றொன்று வட இலங்கை. இனத்தால் ஒன்றுதான் எனினும் இவர்களுக்குள் போரும், பூசலும் நிறைய உண்டு. குறிப்பாக மன்னார்க்குடாக் கடலில் முத்துச் சலாப் உரிமை குறித்து அடிக்கடி தகராறு மூண்டது. இந்த நிலையில் பாண்டிய சேனையும் படையெடுப்பு நிகழ்த்தியது.

    மதிதுங்கன் தனிநின்று வென்றான் பெருமாள் என்னும் தளபதி இப்போருக்குத் தலைமை ஏற்றான்.

    இவனுடைய வெற்றி வரலாறு மகத்தானது. பின்னாளில், ஈழத்தை ஆண்ட அரச மரபு ஒன்று இவனிலிருந்தே துவக்கம்.

    அதில் 400 வருடம் கழித்து வந்த ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்பானே ஈழத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் என்றும் வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

    மதிதுங்கன் தனிநின்று வென்றான் பெருமாள்தான் இந்த நாவலின் நாயகன்.

    இதோ அவனுடைய வெற்றி வரலாறு துவங்குகிறது...

    1. மாற நித்திலம்

    பரந்து விரிந்த நீலக்கடலில், ஒரு பெரிய வெள்ளைத் தாமரை மலர் பூத்து மிதப்பது போலவும் - வெண்ணிறக் கடல்நாரை ஒன்று நீர் மட்டத்துக்கு மேலாகத் தாழப் பறந்து செல்வது போலவும் தோன்றுகிறதே, அதுதான் பாண்டிய மரக்கலம்.

    அதன் பெயர்தான் மாற நித்திலம்.

    பெயருக்கேற்ப அதன் பக்கப் பலகைகளில் பெரிய கடல் முத்துக்கள் பல வரிசையாகப் பாதிக்கப்பட்டிருப்பது போல செதுக்குச் சிற்பங்கள்... சின்னச் சின்ன முத்து மாலைகள் ஆங்காங்கு தொங்குவது போன்ற அலங்கரிப்புகள் காணப்படுகின்றன.

    கொக்கிறகு போன்ற வெண்ணிறப் பாய்கள் காற்றில் விரிந்து புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், ‘கடல் தாமரை’ என்னும் பெயர் அந்த மரக்கலத்திற்கு மிகவும் பொருந்தும் போல் தோன்றுகிறது. ஆனால், பாண்டிய மன்னரே மிகவும் விரும்பி, ‘மாற நித்திலம்’ என்று பெயர் சூட்டியிருந்தார். அவருக்கென்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக மரக்கலம் அது.

    பாண்டிய மன்னரே நேரடியாகப் பங்கு பெற்ற சேர நாட்டுப் போர்கள் பலவற்றிலும் பயன்பட்ட மரக்கலம் அது. ‘மிகவும் அதிர்ஷ்டகரமானது - ஆகி வந்தது - அதில் புறப்பட்டால், வெற்றியோடு திரும்புவது சர்வ நிச்சயம்’ என்றெல்லாம் பல முறை பாண்டிய மன்னர் சிலாகித்ததுண்டு.

    இலங்கைப் படையெடுப்பிற்காகப் பாண்டியசேனை புறப்பட்ட தருணத்தில் கூட, ‘நான் உடன் வரவில்லையே என்ற குறை யாருக்கும் எழக் கூடாது. அதற்காகத்தான் ராஜ மரக்கலத்தை உங்களுடன் அனுப்புகிறேன். அது நானே வருவதற்குச் சமம். மாற நித்திலத்தை மகத்தான வெற்றிச் செய்தியுடன் திரும்பக் கொண்டு வாருங்கள்’ என்று கூறி, வழியனுப்பியிருந்தார் பாண்டிய மன்னர்.

    அதோ மாற நித்திலம் மகத்தான வெற்றிச் செய்தியுடன் திரும்பிக் கொண்டிருக்கிறது

    அதன் மேல் தளத்தில் – ‘ஆர்கலிக் கடல்’ என சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டதும், ‘தென் கடல்’ ‘குமரிக் கடல்’ என்றெல்லாம் தென் பாண்டி நாட்டுப் பரதவர்களால் அழைக்கப்படுவதும், மன்னார் ‘குடாக் கடல்’ என ஈழ நாட்டினரால் கூறப்படுவதும், ‘பரவை’ ‘பெளவம்’ என்ற பெயர்களைத் தாங்கியதுமான நெடிய கடற்பரப்பின் மீது ஒரே மூச்சில் தாண்டிச் செல்ல, ராம தூதனான அஞ்சனா புத்திரனுக்கிருந்த ஆற்றல்

    Enjoying the preview?
    Page 1 of 1