Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammamma.. Keladi Thozhi...! - Part 5
Ammamma.. Keladi Thozhi...! - Part 5
Ammamma.. Keladi Thozhi...! - Part 5
Ebook360 pages3 hours

Ammamma.. Keladi Thozhi...! - Part 5

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முரளி மற்றும் ராதிகாவின் மனதில் இருந்த விடைதெரியாத பல கேள்விகளுக்கு இந்த பாகத்திலாவது விடை கிடைத்ததா? ராதிகாவின் மனமும், காதலும் தன் ஒருவனுக்கே என்பதை முரளி உணர்ந்தானா? இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது என்று ராதிகா நினைக்க காரணம் என்ன? அம்மம்மா.. கேளடி தோழி...! இறுதி பாகத்தை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580133810199
Ammamma.. Keladi Thozhi...! - Part 5

Read more from Muthulakshmi Raghavan

Related to Ammamma.. Keladi Thozhi...! - Part 5

Related ebooks

Reviews for Ammamma.. Keladi Thozhi...! - Part 5

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammamma.. Keladi Thozhi...! - Part 5 - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மம்மா.. கேளடி தோழி...! - பாகம் 5

    Ammamma.. Keladi Thozhi...! - Part 5

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 144

    அத்தியாயம் 145

    அத்தியாயம் 146

    அத்தியாயம் 147

    அத்தியாயம் 148

    அத்தியாயம் 149

    அத்தியாயம் 150

    அத்தியாயம் 151

    அத்தியாயம் 152

    அத்தியாயம் 153

    அத்தியாயம் 154

    அத்தியாயம் 155

    அத்தியாயம் 156

    அத்தியாயம் 157

    அத்தியாயம் 158

    அத்தியாயம் 159

    அத்தியாயம் 160

    அத்தியாயம் 161

    அத்தியாயம் 162

    அத்தியாயம் 163

    அத்தியாயம் 164

    அத்தியாயம் 165

    அத்தியாயம் 166

    அத்தியாயம் 167

    அத்தியாயம் 168

    அத்தியாயம் 169

    அத்தியாயம் 170

    அத்தியாயம் 171

    அத்தியாயம் 172

    அத்தியாயம் 173

    அத்தியாயம் 174

    அத்தியாயம் 175

    அத்தியாயம் 176

    அத்தியாயம் 177

    அத்தியாயம் 178

    அத்தியாயம் 179

    144

    நீ சொன்ன சொல்லுக்காக...

    நின்சரணை நான் ஏற்றேன்...

    அந்த இரவு குளுமை நிறைந்ததாக இருந்தது... மார்கழிப் பனியின் மகிமையை உணர்த்துவதாக இருந்தது... மாடி ஹாலை ஒட்டியிருந்த பெரிய ஜன்னல்களின் வழியாக வந்த ஊசி போன்ற பனிக்காற்று ராதிகாவின் உடலைத் தீண்டி விளையாடியது... அந்த குளிர் காற்றின் உபயத்தினால் ராதிகாவின் உடல் குளிர்வதற்குப் பதிலாக தகிக்க ஆரம்பித்தது...

    ‘என்ன முடிவெடுத்திருப்பான்...?’

    அவளால் அனுமானிக்கவே முடியவில்லை... உனக்கு என்ன வேண்டுமோ கேள் என்றான்... எனக்கு உன் குழந்தைக்கு அம்மாவாகும் பாக்கியம் வேண்டும் என்று அவள் சொன்னாள்... அவள் சொன்னதைக் கேட்டவன் மறுமொழி கூறாமல் வெளியே சென்று விட்டான்... திரும்பி வந்தவனின் இறுகிப் போன முக பாவத்திலிருந்து எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை... அவன் மறுப்பானோ... இல்லை அவளை அணைப்பானோ என்று அறியாதவளாய் படபடக்கும் உள்ளத்தோடு... அவள் அடிமேல் அடியெடுத்து வைத்து... அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்...

    ஏஸியின் இதமான குளிர் அவளுக்கு மார்கழிப் பணிக்காற்றை நினைவூட்டியது... அந்த ஊதக்காற்று உடலைத் துளைத்ததைப் போல... ஏஸியின் குளிர்காற்று... அவள் உடல் தொட்டு விளையாடியதில் அவள் தொய்ந்து போனாள்...

    ‘என்ன வாழ்க்கை இது...!’

    அவள் கண்களின் ஓரமாக கண்ணீர் அரும்பு கட்டியது... ஒரு வருடமா... இல்லை இரண்டு வருடமா...? அவற்றையும் தாண்டி பாலமுரளி தள்ளி நிற்கும் விரதத்தை தீவிரமாக கடைபிடித்து வந்தால் அவளும்தான் என்ன செய்வாள்...?

    குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கலாம்... குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்கலாம்...

    இங்கே அவளும் குற்றம் செய்யவில்லை... அவனும் குற்றம் செய்யவில்லை... இருந்தும் அவளுக்கு தண்டனை கொடுத்துவிட்டு அவனும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறானே... இதை எங்கே போய் சொல்வது...?

    கடவுளிடம்தான் சொல்ல முடியுமென்று அவளும்... இரவு பகலாய் அந்தக் கடவுளின் காலடியில் கதறிவிட்டாள்... ஏனோ தெரியவில்லை... எல்லோரின் குறைகளையும் தீர்க்கும் பரந்தாமனுக்கு... பாலமுரளியின் குறையைத் தீர்க்க மனமில்லை... ராதிகாவின் கதறல் அவன் செவிகளை எட்டவில்லை...

    இதுதான் வாழ்க்கை என்றான பின்னாலே... அதோடு இசைந்து வாழப் பழகிக் கொண்டாள் ராதிகா... இரவு நேரங்களில் அவனது அருகாமையை உணரும் போது... என்றோ ஒரிரு தினங்களில் அவனோடு கூடிய அந்தக் கூடல்களின் நினைவு வந்து அவளை அலைக்கழிக்கும்... அவளது தூக்கத்தைத் தின்று... இரவு முழுவதும் அவளை இமை மூடாமல் செய்துவிடும்...

    அந்த நேரங்களில் அழுது தீர்த்து விடுவாள் ராதிகா... விடிய விடிய அவளின் விசும்பல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும்... அது பாலமுரளியைப் பாதித்ததா... இல்லையா என்று அவள் அறிந்ததில்லை... அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருப்பவன்... அந்த தினங்களில் அவளுக்கு முகம் காட்டாமல் விடியலிலேயே வேலையைக் காரணம் காட்டிப் போய்விடுவான்...

    அடங்க மறுக்கும் உள்ளத்தை... ஆறுதல் படுத்திக் கொள்ள அவளும் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொள்வாள்... இருந்தபோதிலும்... மேகலாவின் வாடிய முகத்தைப் பார்க்கும் போதோ... இல்லை... தங்கத்தைப் போன்றவர்களின் வார்த்தை ஈட்டிகள் அவளை குத்திக் கிழிக்கும் போதோ... அவள் உடைந்து நொறுங்கி விடுவாள்...

    பாலமுரளிக்கு அவள் மீது அதீதமான காதல் இருந்தது... அதை ராதிகா மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்... அவனின் காதல்மீது அவளால் குறைகாண முடியவில்லை... அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய மனிதனாக உலா வருபவன் அவன்... பெண்களின் மத்தியில் கதாநாயகனாகத் திகழ்பவன்... திருமணமான பின்னாலும்... அவனின் மனைவியான ராதிகாவின் முன்னாலேயே அவனிடம் குழைந்து பேசிய பெண்களை அவள் அறிவாள்... யாரிடமும் நின்று அவன் பேசியதில்லை... அவன் பார்வை ராதிகாவை விட்டு அகன்றதில்லை... அப்படிப்பட்ட ஆண்மகனின் மனதைக் கவர்ந்து விட்ட கர்வத்தில் ராதிகாவின் விழிகளில் பெருமிதம் படரும்... அதைப் பொறாமையுடன் பார்க்கும் பெண்களின் மத்தியில் அவன் கை தொட்டு நடப்பதில் அவளுக்குள் ஒரு உற்சாகம் கிளம்புமே... அதற்கு ஈடு இணையென்று எதுவுமே இல்லை...

    அந்த பாலமுரளி... அனைத்து வசதிகளையும் மனைவிக்கு ஏற்படுத்திக் கொடுத்தான்... அவளை வைரங்களாலேயே அலங்கரித்தான்... கண்ணில் படும் உயர்ந்த ரகப் புடவைகளை வாங்கிக் குவித்தான்...

    அதனாலெல்லாம் அவள் முகத்தில் சிரிப்பைக் கொண்டுவர முடியவில்லை... அவள்தான் தெளிவாக ஒரு பாடலில் தன் மனதைப் பிட்டுப்பிட்டு வைத்து விட்டாளே...

    ‘மலரில்லாத தோட்டமா...?

    மகனில்லாத அன்னையா...

    மகனே நீ இல்லையா...’

    என்று அவள் ஏக்கத்துடன் பாடியதைக் கேட்டபோது அவன் உயிர் துடித்ததே... அதை ராதிகா அறிய மாட்டாள்...

    அவள் அறிந்தாளா... மேகலா நோயின் பிடியில் மாட்டுவாள் என்று...? பாலமுரளி பக்கத்தில் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமனுஷியாக... அவனது அன்னையின் உயிரை அவள் காத்துக் கொடுப்பாள் என்று...?

    அது நடந்தது... பரந்தாமனின் செவிகளில் அவளது கதறல்ஒலி கேட்டு விட்டதற்கு அறிகுறியாக பாலமுரளியும் மனைவியிடம் கேட்டான்...

    ‘உனக்கு என்ன வேண்டுமோ... கேள்...’ என்று...

    அவள் அவளுக்கு வேண்டியது எதுவென்பதை கூறிவிட்டாள்... அவன் என்ன செய்வான்...? அவள் கேட்டதைத் தருவானா...?

    மெல்லிய வெளிச்சம்... அறையில் பரவியிருக்க... ராதிகா அறைக் கதவை மூடித் தாழிட்டாள்...

    முதலிரவு அறைக்குள் வந்து விட்ட புதுமணப் பெண்போல அவளின் தொண்டை உலர்ந்தது... நாக்கு வறண்டது... கால்கள் பின்னின... கட்டிலை நெருங்க முடியாமல் அவள் சிரமப்பட்டாள்...

    அவன் திரும்பவில்லை... அசையாமல் படுத்திருந்தான்...

    ‘தூங்கியிருப்பானோ...?’

    அவள் ஏமாற்றமாக உணர்ந்தாள்... ஏனோ தெரியவில்லை... அவளுக்கு தொண்டையில் துக்கப்பந்து வந்து நின்று அடைத்தது...

    அவளை அடித்துச் செல்லும் உணர்வலைகள் அவனை அடித்துச் செல்லவில்லையா...? அவளை உருக்கும் அந்த இதமான இம்சை அவனை நெருங்கவில்லையா...?

    "அலைமேல் துரும்பானேன்...

    அனல்மேல் மெழுகானேன்...

    ஐயன் கை பட்டவுடன்...

    அழகுக்கு அழகானேன்..."

    அவள் மனம் மெல்லப் பாடியது... அவள் அலைமேல் துரும்பாகத்தான் அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்... அனல் மேல் மெழுகாக... உருகிக் கரைந்தோடிக் கொண்டிருந்தாள்... அவன் கை படுவதற்காக காத்திருந்தாள்...

    இந்த உணர்வுகள் அவனைச் சென்றடைய-வில்லையா...? அவளைக் கொன்று தின்னும் இந்த இதமான இன்ப இம்சையின் நிழல்கள் அவன்மீது படியவில்லையா...? அவள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் தயாள குணம் அவனுக்கில்லையா...?

    ராதிகா கட்டிலை அடைந்து விட்டாள்... அதன் விளிம்பின் அருகே சரிந்து படுத்தபோது அவளின் இமையோரம்... ஏமாற்றம் கண்ணீராக வடிந்தோடியது...

    அம்மம்மா... கேளடி தோழி...!

    திடீரென்று அந்த இரவின் அமைதியை கிழித்துக் கொண்டு வெளிப்பட்ட எல்.ஆர் ஈஸ்வரியின் குரலில் அவள் திகைத்துப் போனாள்...

    கண்ணீரைத் துடைக்க மறந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்... அவன் செல்போனில் பாடலை ஒலிக்க வைத்து... அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு... அவளை நிதானமாக நெருங்கினான்...

    அவள் தோள்மீது அவன் கரம் விழுந்ததில் அவள் ஆனந்தப் பிரமிப்பை அடைந்தாள்... அவளது திக்பிரமையை உடைப்பதைப் போல... பாடல் அவளை ஆட்கொண்டது...

    "அம்மம்மா... கேளடி தோழி...!

    சொன்னானே ஆயிரம் சேதி..."

    அவனது விரல்கள் அவள் மேனிமீது பரவிப் படர்ந்து ஆயிரம் சேதிகளைச் சொல்லாமல் சொல்லின... இதமான அந்த இம்சையின் நிகழ்வில் அவள் கிளர்ச்சி கொண்டு கண்மூடிக் கிறங்கினாள்... நினைவில் வந்தவை... நிஜமாவதை நம்ப முடியாதவளாக... அவள் தவித்துப் போனபோது அவன் மீசையின் முடிகள் அவள் முகத்தில் உராய்ந்து... இது கனவில்லை... நனவு என்று அறை கூவி அவளது நம்பிக்கையை உசுப்பி விட்டன...

    "அம்மம்மா... கேளடி தோழி...!

    சொன்னானே ஆயிரம் சேதி...

    கண்ணாலே தந்தது பாதி...

    சொல்லாமல் வந்தது மீதி...

    அம்மம்மா..."

    பாடலின் இனிமை அறையெங்கும் பரவியது... இந்த நேரத்தில்... இந்தப் பாடலை... அவளுக்காகத்தான் அவன் ஒலிக்க விட்டிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது...

    இது அவளுக்குப் பிடித்தமான பாடல் என்பதை அவன் நன்கு அறிவான்... அடிக்கடி அவள் இதை முணுமுணுப்பதை அவன் கேட்டிருக்கிறான்... அதை அவன் செல்போனில் பதிய வைத்திருப்பான் என்று அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை...

    "பிஞ்சாக நானிருந்தேனே...

    பெண்ணாக வளர்த்து விட்டானே...

    அஞ்சாமல் அணைத்து விட்டானே...

    அச்சாரம் கொடுத்து விட்டானே..."

    கண்மூடிக் கிடந்தவளின் முகத்தோடு அவன் முகம் புதைத்த அந்த நொடியில்... அறியாப் பெண்ணாக அவன் கைகளில் அகப்பட்டுக் கொண்ட அந்த நாளின் நினைவு வந்து அவள் நெஞ்சில் சூழ்ந்தது...

    அஞ்சாமல்தான் அன்று அவளை அணைத்தான்... அவனுக்குத்தான் அவள் என்பதை உறுதி செய்து முடித்தான்... அவன் கைகளில் குழைந்த இந்த வேளையில்... அந்த வேளை நினைவுக்கு வந்தபோதும்... அவளுக்கு அந்த நினைவு கசக்கவில்லை... ஏதோ ஒரு வகையில் இனிப்பாகவே இருந்தது...

    ‘நினைத்தாலே இனிக்கும் என்பது இதுதானோ...’ அவள் நினைத்துக் கொண்டாள்... அவனது பின்னந்தலையில் அவளது கை பரவி அவன் முடியை இறுக்கிப் பிடித்ததில் அவன் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை அவள் உணர்ந்தாள்...

    அவள் முகமெங்கும் அவன் தந்த முத்தங்களின் ஈரம் படர்ந்து நனைத்தது... இத்தனை நாளாய் இந்த வித்தைகளை எல்லாம் எங்கே ஒளித்து வைத்திருந்தான் என்று அவள் கண்கள் கசிந்தாள்... தினசரி மலர் படுக்கை போன்ற நுரை மெத்தை மேல் படுத்தாலும்... முள்ளின் மீது உறங்குவதைப் போல அவளைத் திணற வைத்தானே... அவள் மேல் இரக்கம் காட்ட மறுத்தானே... நூலைப்போல் இளைக்க வைத்து... பாலைப் போல் வெளுக்க வைத்து பாடாய் படுத்தி எடுத்தானே...

    அவள் மனம் தேம்புவதை அறிந்ததைப் போல... அவன் முத்தங்களால் அவளை குளிர வைத்தான்... இடைவிடாத முத்தங்களினால் மூச்சுத்திணறிப் போனாள் ராதிகா...

    "முத்தாரம் சரிய வைத்தானே...

    முள்மேலே தூங்க வைத்தானே...

    நூலாக இளைக்க வைத்தானே...

    பாலாக வெளுக்க வைத்தானே..."

    முள் படுக்கையை... மலர் படுக்கையாய் அவன் மாற்றிவிட்ட அந்த நேரத்தில்... எல்.ஆர்.ஈஸ்வரியின் ரகசியக்குரல் அறையெங்கும் நிரம்பியது...

    "தன்னாலே பேச வைத்தானே...

    தண்ணீரை கொதிக்க வைத்தானே...

    தள்ளாடி நடக்க வைத்தானே...

    தானாகச் சிரிக்க வைத்தானே..."

    அவளது கொதித்த மேனியைக் குளிர வைக்கும் விதமாய்... அவன் அவள்மேல் பரவிப் படர்ந்தான்... அவன் கரங்களுக்குள் கண்மூடி அடங்கிக் கிடந்தவளைப் பார்க்கும் போது... அவனுக்குள் ஆண்டுக்கணக்கில் விலகி நின்ற தாபம் கனன்று எரிந்தது...

    அவன் எரிமலையாகி வெடித்துப் பரவினான்... கண்முன் அவளிருந்தும்... சபதம் போட்டு தொடாமலிருந்த காலம் அவன் மனதில் எழுந்தது... கழிந்து போன காலங்களை மீட்டுவிடத் துடிப்பவனைப் போல வேட்கையுடன் அவளை ஆக்ரமித்தான் பாலமுரளி...

    அவன் போட்டிருந்தது பூவேலியல்ல... இரும்பு வேலி... அதைப் பொடிப்பொடியாய் ஒரு சிறு வேண்டுகோளில் நொறுக்கி விட்டிருந்தாள் ராதிகா... அணையுடைந்த வெள்ளமாய் அவர்கள் கலந்தபோது... அந்த இரவுகூட முற்றுப்பெற மறந்து மிக நீண்ட இரவாக நீடித்து நின்றது...

    நடக்குமா என்ற ஏக்கத்திலிருந்த ராதிகாவும்... நடக்காது என்ற வைராக்கியத்துடனிருந்த பாலமுரளியும்... தூக்கத்தை மறந்து பின்னிப் பிணைந்தனர்...

    145

    காற்றோடு கலந்து விட்டேன்...

    கண்ணா...! உன் கைவிரல் பட்டதினால்...

    பூஜையறையிலிருந்து வெளியே வந்த மேகலா... சுவர் கடிகாரத்தை யோசனையுடன் பார்த்தாள்...

    ‘இன்னுமா ராதிகா எழுந்திருக்கல...?’

    அவளுக்கு கவலையாக இருந்தது... சமையலறையிலிருந்து வெளியே வந்த மீனாட்சி... பதவிசாக மேகலாவின் அருகே வந்து நின்று அவள் முகம் பார்த்தாள்... எதையோ கேட்கத் துடிக்கும் துடிப்பு அவள் முகத்தில் தெரிய... புருவங்களை நெரித்தாள் மேகலா...

    என்ன...? கடுமையாக வினவினாள்...

    இல்லம்மா... நேத்து... நம்ம ஐயா கோபமா... கீபமா இருந்து வைச்சாரா...? மீனாட்சி இழுத்தாள்...

    எதுக்குக் கேட்கிற...? மேகலாவுக்கு புரியவில்லை...

    அதில்லம்மா... பொழுது விடிஞ்சு இம்மாந்நேரமாச்சு... இன்னும் நம்ம சின்னம்மா எழுந்திருச்சு வரலையே... மீனாட்சி விளக்கம் சொன்னாள்...

    அதுக்கு...? இன்னமும் மேகலாவுக்கு புரியவில்லை...

    எனக்கென்னவோ... சந்தேகமா இருக்கும்மா... மீனாட்சி மீண்டும் இழுவையாக இழுத்தாள்...

    எதுக்குச் சந்தேகப்படற...? மேகலாவுக்கு சுத்தமாக எந்த விவரமும் பிடிபடவில்லை...

    நம்ம அம்மா காய்ச்சலில் படுத்துட்டாங்களோன்னு...

    மீனாட்சி சொல்லவும்தான்... ஏன் அவள் இத்தனை சுற்றுக் கேள்விகளை கேட்டு வைத்தாள் என்ற விவரமே மேகலாவுக்கு பிடிபட்டது...

    பாலமுரளியின் கோபத்திற்கும்... ராதிகாவின் காய்ச்சலுக்குமிடையே உள்ள கனகச்சிதமான சம்பந்தத்தை... வீட்டு வேலையாள்கள் முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதில் மேகலாவுக்கு காய்ச்சல் வந்து விடும்போல இருந்தது...

    போடி போய் வேலையைப் பாரு... காவேரி... காவேரி...

    மேகலாவின் கோபக்குரல்... சமையல்கட்டை எட்ட... காவேரி கரண்டியுடன் பிரசன்னமானாள்...

    என்னங்கம்மா...

    இவளை சமையல்கட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போயி ஏதாவது வேலையை வாங்கு...

    ஐயையோ... வேண்டாம்மா... இவ என் உயிரை வாங்கிருவா...

    காவேரி கையெடுத்துக் கும்பிடாத குறையாக அலறிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட... மீனாட்சிக்கு கோபம் வந்துவிட்டது...

    அவ பேசறதை கேட்டிங்களாம்மா... என்று மேகலாவிடம் நியாயம் கேட்டாள் அவள்...

    நீயிருக்கிற இடத்தில... மத்தவங்க பேசறதை கேட்க முடியுமா...? மொத்தப் பேச்சையும் நீயே குத்தகைக்கு எடுத்துக்கறியே...

    எதுக்கும்மா இப்புடி சடைச்சுக்கறிங்க...? எனக்கு வேலை சொல்றதுன்னா... நீங்க சொல்லுங்க... ஐயா சொல்லட்டும்... நம்ம சின்னம்மா சொல்லட்டும்... அவ யாரும்மா எனக்கு வேலை சொல்ல...? மீனாட்சி சண்டைக் கோழியாய் சிலிர்த்தாள்...

    எவளைச் சொல்ற...?

    அதான்... அந்தக் காவேரியைச் சொல்றேன்... அவள்ளாம் ஒரு ஆளு... அவ சொல்லி... நான் வேலையைச் செய்யனுமா...?

    அதானே... நீ நாங்க சொன்னாலே நகர மாட்டியே... காவேரி சொன்னாலா கேட்டுக்கப் போற...?

    இந்த மீனாட்சி... சொடக்கு போடற நேரத்தில மயில்வாகனன் போல இந்த உலகத்தைச் சுத்திவர்ற ஆளும்மா... நானா நகர மாட்டேன்...?

    மயல்வாகனனா...? நீ எந்த மயில்வாகனனைச் சொல்ற...? தென்காசியில நம்ம ஜவுளிக்கடைக்குப் பக்கத்தில கடை போட்டிருக்க அந்த மயில்வாகனனையா சொல்ற...? அவனே ஆடி அசைஞ்சு... யானை போல வந்து சேருகிற ஆளு... அவனா சொடக்குப் போடற நேரத்தில உலகத்தைச் சுத்தி வருகிற ஆளு...?

    ஏம்மா... தேனூத்தில இருந்துக்கிட்டு... தென்காசியில இருக்கிற மயில்வாகனனை நான் ஏம்மா இழுக்கப் போறேன்...?

    அடிப்பாவி...! அவன் ஐஞ்சாறு புள்ளயப் பெத்த ஆளுடி... அவனைப் போய் இழுக்கப் போகிறதில இணை கூட்டற...?

    அவனை இழுத்துட்டாழும்...! கழுதையில... விளங்கிப் போயிரும்... அவன்கூடக் குடித்தனம் பண்ணனும்னு அவன் பெண்டாட்டிக்குத்தான் தலைவிதி... பாவம்... அவ வாங்கி வந்த வரம் அப்படி... பேச்சில கூட அவனை இழுக்கனும்னு எனக்கென்னம்மா தலைவிதி...?

    என்னைக் கேட்டா... எனக்கென்னடி தெரியும்...?

    நான் தென்காசி மயில் வாகனனைச் சொல்லலைம்மா... ஆனைமுகனுக்கு தம்பியாப் பொறந்திருக்கிற... முருகக் கடவுளைச் சொன்னேன்... அவர்தானே... மயில்மேல வர்ற மயில் வாகனன்...!

    மீனாட்சி கூறிய விளக்கத்தில் ஆச்சரியப்பட்டுப் போனாள் மேகலா... முகவாயில் கையை ஊன்றி...

    அடிஆத்தி...! உனக்கு இம்புட்டுத் தூரத்துக்கு புராணம் தெரியுமாடி... என்று வியந்து போனாள்...

    பின்ன...? என்ன யாருன்னு நினைச்சீங்க...? அடுப்பங்கரையே கதின்னு கிடக்கிற... அந்த அரை வேக்காட்டு காவேரின்னு நினைச்சீங்களா...?

    மீனாட்சி பெருமையுடன் பீற்றிக் கொண்டு இருந்தபோது... சமையலறைப் பக்கமிருந்து சத்தம் வந்தது...

    இன்னும் கொஞ்ச நேரத்தில வயித்தைப் பசிக்கும்டி... அப்ப கொட்டிக்க எங்கிட்டத்தான் நீ வந்து நிக்கனும்... அப்பப்பாரு... நீ சொன்னதைப் போலவே... வெந்ததும்... வேகாததுமா... அரைவேக்காட்டில ஆக்கி வைச்சு... தட்டில போட்டுத் தர்றேன்...

    மீனாட்சியா அந்த அரட்டலுக்கு பயப்படுவாள்...? அவள் தயங்காமல் அந்த அறை கூவலை எதிர்கொண்டாள்...

    அதுசரி... நீ எந்தக் காலத்தில ஒழுங்காய் ஆக்கிப் போட்ட காவேரி...? நீ ஆக்குறதெல்லாம்... அரை வேக்காடாய்த்தானே இருக்கும்...?

    காவேரியின் கோபம் வார்த்தைகளாக வராமல்... சமையலறையிலிருந்து... பற்பல சப்தங்கள் மூலம் வெளிவர... மேகலா ரசித்துச் சிரித்தாள்...

    காலங்கார்த்தாலேயே... வம்பைக் கட்டி இழுத்துட்டயா...? கொஞ்ச நேரமாவது... வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா...?

    சும்மா இருக்கச் சொன்னா... இருக்கறேன்ம்மா... வாயை மூடிக்கிட்டு மட்டும் இருக்கச் சொல்லாதீங்க... என்னால ஆகிற காரியமில்ல அது...

    அதானே...

    அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது... மெலிதான கொழுசொலி கேட்டது...

    சின்னம்மா வந்துட்டாங்க போல... மீனாட்சி ஆவலுடன் திரும்பிப் பார்த்தாள்...

    ஈரத்தலையில் டவலைச் சுற்றிக் கட்டியிருந்த ராதிகா... என்றுமில்லாத புதுவிதமான சோபையோடு மிளிர்ந்தாள்... அவள் முகத்தில் படர்ந்திருந்த நாணச் சிகப்பும்... கண்களில் மின்னிய மின்னலின் ஒளிர்வும்... மேகலாவின் கவனத்தைக் கவர்ந்தன...

    அப்பாடி... சின்னம்மாவுக்கு காய்ச்சலில்ல... மீனாட்சி சந்தோசப்பட்டுப் போனாள்...

    என்னவாம்...? கொஞ்ச நேரம் அசந்து தூங்கிட்டா... எனக்கு காய்ச்சல் வந்துருச்சுன்னு பெயர் கட்டி விடுவியா...? சிரிக்கும் குரலில் கேட்ட ராதிகா... மாமியாரை நிமிர்ந்து பார்க்கவில்லை...

    அவள் முகத்தின் செம்மை மேகலாவுக்கு எதையோ சொல்லியது... கடந்த காலத்திற்கு அவளை அழைத்துப் போனது... மாணிக்கவாசகம் உயிருடன் இருந்த காலங்களை நினைவு கூர்ந்தாள் மேகலா...

    அப்போது அவள் முகத்திலும் இதே செம்மைதான் படர்ந்திருந்தது என்ற நினைவில் அவள் நெஞ்சம் குளிர்ந்தது...

    கொஞ்சநேரம் அசந்து தூங்கினிங்களா...? ஏம்மா... இதான் கொஞ்ச நேரமா...? வெளியே போயி... அண்ணாந்து வானத்தைப் பாருங்க... சூரியன் உச்சிப் பொழுதுக்கு வந்தாச்சு...

    ராதிகாவுக்கு காய்ச்சலில்லை என்ற மகிழ்வில் மீனாட்சி வாய் வளர்த்துக் கொண்டிருக்க... கேமலா... மீனாட்சியை அதட்டினாள்...

    உச்சிப் பொழுதுக்கு எழுந்திருக்கக் கூடாதுன்னு ஏதும் சட்டம்... கிட்டம் இருக்கா...? அவளுக்கு தூக்கம் வந்திருக்கும்... தூங்கியிருப்பா... இதுக்குப் போயி உனக்கு விளக்கம் சொல்லனுமா...?

    மீனாட்சியும் மாமியாரும் பேச ஆரம்பித்ததுமே... ராதிகா அங்கிருந்து நழுவி சமையலறைக்குப் போய் விட்டாள்...

    என்ன காவேரி...? என்றபடி அவள் காபியைக் கலக்க ஆரம்பித்தபோது...

    எல்லாம் இந்த மீனாட்சியால வர்ற ரோதனைம்மா... என்று காவேரி அவளிடம் வழக்கு வைக்க ஆரம்பித்தாள்...

    அறை வாசலில் நிழலாடியது...

    காவேரி... கண்டிப்புடன் அழைத்தபடி மேகலா அங்கே நின்றிருந்தாள்...

    அம்மா...?

    "முரளிக்கு ராதிகா காபி கொண்டு போகனும்... அவளை விட்டுட்டு உன் வழக்கை எங்கிட்டச் சொல்லு...

    Enjoying the preview?
    Page 1 of 1