Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anicha Malar...! - Part 1
Anicha Malar...! - Part 1
Anicha Malar...! - Part 1
Ebook263 pages2 hours

Anicha Malar...! - Part 1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

யார் அந்தப் பல்லவி...? அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்...? எதுக்காக அவ ஒரு சுமையா உங்க தலைமேல உட்கார்ந்துக்கிட்டு இருக்கா...? நீங்க ஏன் மேரேஜை அவாய்டு பண்ணினீங்க...? பல்லவியைப் பத்தி உங்க வீட்டில சொல்லாம ஏன் மறைக்கறீங்க...? உங்க அப்பாவும் அண்ணனும் ஏன் உங்கமேல கோபமா இருக்கிறாங்க...? என்னோட இத்தனை ‘ஏன், எதுக்கு’களுக்கு நீங்க பதில் சொன்னா... நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி யோசிக்கறேன்...

இதுதான் என் முடிவு என்று அழுத்தமாக அறிவித்து விட்டான் வாசுதேவன்... சுசித்ரா இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறினாளா? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580133810213
Anicha Malar...! - Part 1

Read more from Muthulakshmi Raghavan

Related to Anicha Malar...! - Part 1

Related ebooks

Reviews for Anicha Malar...! - Part 1

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anicha Malar...! - Part 1 - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனிச்சமலர்...! - பாகம் 1

    Anicha Malar...! - Part 1

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    வெண்பளிங்கு நிற அரண்மனை... அதன் முன்புறம் பால் போல நுரை கொப்புளிக்கக் கொட்டிக் கொண்டிருக்கும் அருவி... அருவியின் பக்கத்தில் மலர்ச்செடிகள் அடர்ந்த பாறை... அதன்மீது தேவதை போன்ற பேரழகுடன் ஆடிக் கொண்டிருந்தாள் ஒரு

    பெண்... அவளது அடர்ந்த கூந்தல் விரிந்து நீண்டு முழங்கால்களைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்தது... காதோரம் தொடுத்து வைத்ததைப் போன்ற காட்டுப் பூக்கள்...

    ‘விரித்து விடப்பட்டிருக்கும் கூந்தலில் காட்டுப் பூக்களைச் செருகினால் விழுந்த விடாதா...? அது எப்படி நூல் கொண்டு கோர்த்ததைப் போல வரிசையாக அணி வகுத்து பின் பண்ணியதைப் போல ‘சிக்’கெனச் சொருகி நிற்கிறது...?’செண்பகப் பாண்டியனைப் போல சந்தேகம் வந்தது வாசுதேவனுக்கு...

    செண்பகப் பாண்டியனாவது நனவில் முகர்ந்த மனைவியின் கூந்தலின் நறுமணத்தில் மயங்கிப் போய் ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டா...?’என்ற சந்தேகம் கொண்டான்...

    இந்த இடக்குப் பிடித்த கட்டை பிரம்மச்சாரி... (?) வாசுதேவன் கனவில் கண்ட தேவதையின் கூந்தலில் சொருகப் பட்டிருந்த காட்டுப் பூக்கள் எப்படி கனகச்சிதமாக வரிசை கட்டி அவளது கூந்தலில் செருகியுள்ளன என்று சந்தேகம் கொண்டான்...

    ‘அட முட்டாள் வாசுதேவா...! உனக்கெல்லாம் கனவில் தேவதைப் பெண் காட்சி தருகிறாள்ன்னா ஜொள்ளு விட்டு அவளை ரசிச்சுக்கிட்டேத் தூக்கம் போட்டிரனும்... அத விட்டுட்டுத் தூக்கத்திலும் ஆராய்ச்சி பண்ணக் கிளம்பினேன்னு வைய்யி... இவனுக்கெல்லாம் நாம கனவில வந்து நிக்கனுமான்னு தேவதைப் பொண்ணு ஓடியே போயிருவா... அப்புறம் நீ காஞ்சமாடா கம்மங்கொல்ல எங்கே இருக்கும்ன்னு தேடி அலைய வேண்டியதுதான்...’

    வாசுதேவனைப் போல நிம்மதியாக தூங்க முடியாத எரிச்சலுடன் இருந்த அவனுடைய மனச்சாட்சித் திட்டித் தீர்த்தது...

    ‘ஓகே... ஓகே... கூல், கூல்... நான் டவுட்டத் தூக்கித் தூரப்போட்டுட்டு ஃபிலிம மட்டும் ரசிக்கறேன்... சரியா...’ தூங்கிக் கொண்டே மனச்சாட்சியுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான் வாசுதேவன்...

    ‘நீ கனவில ஃபிகரப் பாக்கறதுக்கு நான் உன்னக் கன்வின்ஸ் பண்ண வேண்டியிருக்கு...’ எகிறியது மனச்சாட்சி...

    ஒருவழியாய் மனச்சாட்சியை அமைதிப்படுத்தி விட்டுக் கனவில் கண்ட தேவதையை ‘சைட்’ அடிக்க ஆரம்பித்தான்...

    ‘கனவில் சைட் மட்டும் தான் அடிக்க முடியும்... ரூட் விட முடியாதே...’ என்ற தத்துவம் வேறு அவன் மனதில் வந்து தொலைத்தது...

    அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினால் மனச்சாட்சி அவனைக் கம்பெடுத்து அடிக்க வந்துவிடும் என்பதினால் தத்துவத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு, இவன் கனவில் வந்த தேவதையைப் பார்வையால் மேயப் போனான்...

    ‘பக்கத்தில போய் கட்டிப்புடிக்க ஆசைதான்... எங்கே... நேத்து வந்த கனவில நான் பக்கத்தில போகப் போக அவ தூரமா ஓடிப் போய் கலைந்து மறைந்துட்டாளே...’

    சேலை கட்டாமல், பாவாடை சட்டையைப் போன்ற அமைப்புடன் கூடிய உடையை அணிந்திருந்தாள்... தோள்களில் தவழ்ந்து காற்றில் பறந்த தாவணி...!

    ‘தாவணியை இடுப்பில் செருகித் தோளைச் சுற்றிப் போட்டுக்கனும்... இவ என்னடான்னா காத்தில பறக்க விடறா...’

    அடிக்கடி வரும் கனவையும், அந்த தேவதைப் பெண்ணையும் பற்றி அவனது நண்பனிடம் விவரித்த போது, அவன்...

    டேய்... இது பாகுபலி பர்ஸ்ட் பார்ட்டில வர்ற சீன் மாதிரி இருக்குடா... தமனா பச்சைக் தீ நீயடான்னு பாட்டுப் பாடும்... அத உல்டா பண்ணிச் சொல்றியோ... என்று மேலும் கீழும் பார்த்து சோதித்து வைத்தான்...

    அதையல்லாம் நீதான் பண்ணுவ... நான் டோட்டலா வேற கேட்டகிரி... வாசுதேவன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்...

    அப்படிங்கிற...? அது எப்படிடா இப்படியாப்பட்ட கனவெல்லாம் உனக்கு மட்டுமே வருது... எனக்கு வர்ற கனவையெல்லாம் சொன்னேன்னு வை... நீ ரத்தம் கக்கி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிருவ...

    சொல்லாதே... உன்னைப் போலதானே உன் கனவும் இருக்கும்...

    ஆமாண்டா... நீ பெரிய மன்மத ராஜா...

    இல்லேங்கிறியா...?

    ஆமாங்கிறேன்... அடங்கறியா...?

    அவனை அடக்கி விட்டு சோகமானான் கருணாகரன்... அப்படி நண்பனை சோகக்கடலில் தள்ளி விட்டப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்ட வாசுதேவனுக்கு கொண்டாட்டமாக இருந்தது... யாருக்கு வரும் இது போன்ற கனவு...?

    பின்புறம் நீலவானம்... அதில் வெந்நிற மேகம்... காலளவு கருங்கூந்தலுடன் தேவதைப் பெண்... என்ன ஒன்று... இவன் கிட்டே போனால் எட்டிப் போய்ப் பறந்து விடுகிறாள்... அதனால் முகத்தை உன்னப்பாக பார்க்க முடியவில்லை... மற்றபடி எல்லாம் ஓகேதான்...

    ‘இது போல ஒரு சினிமா வந்துச்சுல்ல...’

    அந்தத் திரைப்படத்தில் வரும் பெண் முகத்தை... மெல்லிய துணியினால் மூடி ஊஞ்சலில் ஆடுவாள்... அவளுடைய இடுப்பில் ஒரு மச்சம் இருக்கும்...

    ‘நல்லவேளைடா வாசுதேவா... இந்த தேவதைப் பொண்ணு அப்படியாப்பட்ட இடியாப்ப சிக்கலில எல்லாம் உன்னை மாட்டி விடலை... சமத்தா முகத்தைக் காட்டியும் காட்டாம ஏதோ ஃபேசன் ஷோவில கேட்வாக் பண்றதைப் போல, பாறைமேல கேட்வாக் கொடுத்துட்டுப் போயிடறா... இடுப்பில மச்சமும் இல்ல... ஒச்சமும் இல்ல... தப்பிச்சே...’

    இல்லையென்றால் அவன் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்...? கனவில் வந்த தேவதைப் பெண்ணின் முகசாயலில் இருக்கும் பெண்களிடம் எல்லாம் இடுப்பில் மச்சம் இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றும்... கேட்கத் தோன்றும்... இப்படியாகப் பட்டக் கேள்வியை செவி மடுத்தால் மான் போல மருண்ட கண்களுடன் இருக்கும் பெண்கள் கூட வேட்டைப்புலியைப் போல வேட்டையாடக் கிளம்பி விட மாட்டார்களா...?

    கனவு கலைந்து அவன் கண்விழித்த போது பொழுது விடிந்தும் விடியாத கருக்கல்லாக இருந்தது... புரண்டு படுத்தான்...

    ‘அதிகாலைக் கனவு பலிக்கும்பாங்களே...’ சிரித்துக் கொண்டான்...

    வாழ்வு எப்போதும் இனிமை நிறைந்ததாகவே இருக்க வேண்டும் என்று மனித மனம் விரும்புகிறது... கருணாகரன் சொல்வதைப் போன்ற கேட்டாலே ரத்தம் கக்கி விடும் அபாயகர கனவுகள் வந்தால் அவை பலிக்க வேண்டுமென மனித மனம் ஆசைப்படுமா...?

    கசப்புகளை எவர்தான் விரும்புவார்...? காய்களில்கூட கேரட்டையும், பீட்ரூட்டையும் விரும்பும் நாக்கு பாசற்காயை விரும்புவதில்லையே...

    நன்மையே நடக்கட்டும் என்று நாராயணனை வேண்டிக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தான்... அதிகாலைத் தூக்கம் ஓர்வித சுகம்... அதை அனுபவித்து உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தில் நீர்த்துளிகள் சிதறின... ‘ஆஹா’ என்று அவன் ஆனந்தப் பட்டுப் போனான்... தேவதைப் பெண்ணுடன் அருவியில் குளிக்க இறங்கி விட்டானா...?

    பச்சை தீ நீயடா... என்று புலம்பியபடி கண் விழித்தவனிடம்...

    பெட் காபியக் குடிடா... என்று பாடியபடி காபிக் கப்பை நீட்டினாள் வசுமதி... அவனுடைய அக்கா...

    வசுமதியின் வயிறு மேடிட்டு அவள் நிறைமாத கர்ப்பிணி என்பதை அறிவித்தது... அவசரமாக எழுந்து உட்கார்ந்து காபிக் கப்பை வாங்கிக் கொண்ட வாசுதேவன்...

    நீ எதுக்காக அக்கா ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற...? அம்மா எங்கே...? என்று கேட்டான்...

    ‘கோதாவரி’ அப்படின்னு விசு ஸ்டைல்ல கம்மாண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற அப்பாகூட பேசிக்கிட்டு இருக்காங்க... என்றபடி தம்பியின் படுக்கையை சீர் செய்தாள் வசுமதி...

    விட்டிருக்கா... ரூபா பாத்துக்கும்... தடுத்தான் வாசுதேவன்...

    ரூபாதான... அவ பிரச்னை பெரும் பிரச்னை... எல்லா வீடுகள்லயும் வேலைக்கு வர்றவங்க வீட்டு வேலையைச் செய்வாங்கன்னா... இவ தினமும் வீட்டுக்கதையைச் சொல்லி அழுதுகிட்டே வந்து அம்மாவை வேலை வாங்கிக்கிட்டு இருக்கிறா... அலுத்துக் கொண்டாள் வசுமதி...

    என்னவாம்...?

    அவ புருசன் குடிச்சுட்டு வந்து அடிக்கிறானாம்...

    புருசன்னாலே பிரச்னைதான் போல...

    உனக்கு ஜோக்கா இருக்கு... எனக்குத் தலைவேதனையா இருக்கு...

    ஏன்க்கா...?

    என்னத்தடா சொல்றது...? இவளை உட்காரவைத்துக் காபி போட்டுக் கொடுத்து தலைவலித் தைலம் தேய்த்து விட்டுட்டு அம்மா வாஷிங் மெஷினில துணிகளைப் போட்டுக்கிட்டு இருக்காங்க... எனக்கென்னவோ இவ டிரிக் பண்றாளோன்னு தோணுது...

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்... போனவாரம் கூட ரூபாவையும் இது புருசனையும் சேர்த்து பாத்தேனே... சினிமாத் தியேட்டருக்குள்ள போயிக்கிட்டு இருந்தாங்க... இது நல்லா பூவும் பொட்டும் புதுச்சேலையுமா சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டே போச்சே... அந்தாளு என்னவோ உலகமே அவன் பொண்டாட்டியத்தான் ரூட்டு விட அலைகிறதைப் போலக் கழுத்தைச் சுத்திக் கைபோட்டு இறுக்கிப் பிடிச்சுக் கூப்பிட்டுக்கிட்டுப் போனானே...

    நான் நினைச்சது சரியாப் போச்சு...

    இதுக்கு ஒரு வழி பண்ணலாம்க்கா... மாமா போன் பண்ணினாரா...?

    அதெல்லாம் காலையில கண் விழிச்சதுமே பண்ணிட்டார்...

    அதுக்குள்ள எழுந்திரிச்சுட்டாரா...?

    அவர் இப்ப ஆபிசுக்கேப் போயிருப்பார்... உன்னைப் போலன்னு நினைச்சியா...? தூங்குமூஞ்சி...

    செல்லமாகத் தம்பியைத் திட்டினாள் வசுமதி... பிறந்த வீட்டில் சீராடிக் கொண்டிருக்கும் நிம்மதியும், பூரிப்பும் அவள் முகத்தில் தவழ்ந்தன...

    ம்மா... ஓடி வந்து கட்டிக் கொண்ட மூன்று வயது நிஷாவின் தலை அவளது வயிற்றில் முட்டியதில்...

    ஏய்ய்... ஏய்ய்... நிஷாக்குட்டி... பார்த்து... அம்மா வயித்தில உன் தம்பி இருக்கானில்ல... என்று விலக்கித் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டான் வாசுதேவன்...

    நிஷா குளித்து உடை மாற்றி ஜம்மென்று வாசனையுடன் இருந்தது...

    ம்ஹா... என்று வாசுதேவன் வாசம் பிடித்ததில்...

    விடுங்க மாமா... உங்க அழுக்கு ஒட்டிக்கும்... என்று முகத்தைச் சுளித்து நழுவி இறங்கியது...

    இதுக்கு இருக்கிற வாயைப் பாரேன்... வாசுதேவன் வியப்புடன் சொன்னான்...

    அப்படியாச்சும் திருந்துடா... குளிக்க ஓடு... தம்பியை விரட்டினாள் வசுமதி...

    இருக்கா... நம்ம வீட்டுக் குடும்பத் தலைவருக்கும், குடும்பத்தலைவிக்கும் குட்மார்னிங் சொல்லிட்டு வந்து குளிக்கறேன்...

    இது ஒரு சாக்கு... அத்தச் சோம்பேறிடா நீ...

    அத்தையை எதுக்கு வம்புக்கு இழுக்கற...? அப்பா காதில விழுந்துட்டா ஆபத்து... உடனே, கோதாவரி... இந்த வீட்டுக்கு மத்தியில கோட்டைக் கிழின்னு ‘விசு’ வரூபம் எடுத்திருவாரு...

    வாசுதேவன் உதடுகளில் விரலை வைத்து எச்சரிக்க, அந்தக்காட்சியை மனதுக்குள் கற்பனை பண்ணிப் பார்த்த வசுமதி கலகலத்துச் சிரித்தாள்...

    டேய்... சும்மா இருடா... அப்பா காதில விழுந்துரப் போகுது... படவா... அப்பாவைக் கேலி செய்கிறதுன்னா உனக்கு வெல்லக்கட்டியைச் சாப்பிட்டதைப் போல இருக்கமே...

    தம்பியின் முடி கோதி செல்லமாக அதட்டல் போட்டாள் வசுமதி... தம்பியின் மீதான பாசமும், பிரியமும் அவளது விழிகளில் தெரிந்தது... உடன் பிறந்தோரின் பாசம் அற்புதமானது... பகை, நட்பு என்ற இரண்டும் கலந்த கலவை அது... சிரிப்பும், அழுகையும் சேர்ந்து பரிமளிக்கும் சொந்தம் அது...

    வசுமதியும் வாசுதேவனும் சிறுவயதில் அடித்துப் பிடித்துக் குடுமிப்பிடி சண்டை போட்டு உருளுவார்கள்... விலக்கி விட கோதாவரி வர மாட்டாள்... ஏன் என்று கேட்டால்...

    நீங்க வேற... இதுக பஞ்சாயத்துக்குப் போனா... நாமதான் கேணைப் பட்டம் வாங்கனும்... அஞ்சே நிமிசத்தில ஒன்னு கூடிக்கிட்டு நம்மளக் கலாய்க்க வந்துருவாங்க... யாராவது ஒருத்தருக்கு நியாயம் சொல்லிட்டு வில்லியா மாறி நிக்கனும்... தேவையா...? என்று பதிலுக்குக் கேட்பாள்...

    திண்பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் போதே அன்றாட நிகழ்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அந்த அக்கா, தம்பியின் பாசம் நிறைந்த நட்பில் ஒர்நாள் பிரிவு வந்தது... அப்போது வாசுதேவன் இன்ஜினியரிங் படிப்பின் இறுதியாண்டில் இருந்தான்... காலேஜ் விட்டு வீடு வந்தவனிடம் கோதாவரி...

    உன் அக்காவைப் பெண் பார்க்க வருகிறாங்கடா... என்றாள்...

    எதுக்கு...? வாசுதேவன் அபத்தமாகக் கேட்டு வைத்தான்...

    நீயெல்லாம் பர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்றவன்னு சொல்லிக்காத... கல்யாண வயசில இருக்கிற பெண்ணை எதுக்குடா பார்க்க வருவாங்க...? முட்டாள்தனமாக் கேள்வி கேக்கிறான் பாரு... மாப்பிள்ளை வீட்டில இருந்து வருகிற நேரமாச்சு... நீ சட்டுப்புட்டுன்னு பிரஷ் ஆகி டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிட்டு வா... கோதாவரி விரட்டினாள்...

    இன்னதென்று சொல்ல முடியாத கோபம் மனதை ஆக்ரமிக்க வாசுதேவன் சுள்ளென்று எரிந்து விழுந்தான்...

    அக்காவைப் பெண் பார்க்க வந்தா நான் ஏன் பிரஷ் ஷாகி டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கனும்...?

    டேய்... நீ அவளோட தம்பிடா... ஒற்றைத் தம்பி...

    அதுக்கு...?

    இன்னைக்கு உனக்கு என்னடா ஆச்சு...? எக்குத் தப்பாவே கேள்வி கேட்கிற...? தம்பியாய் லட்சணமாய் சபையில வந்து உட்கார வேண்டாமா...?

    சபையா...? நம்ம வீட்டில ஏது சபை...?

    விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு வாசுதேவன் சுற்றிலும் பார்வையை ஓட்டினான்... கோதாவரி தலையில் அடித்துக் கொண்டாள்...

    ஏண்டா படுத்தற...? நம்ம வீட்டு ஹாலைத்தான் சபைன்னு சொன்னேன்...

    ஹால் எப்பம்மா சபையாச்சு...?

    இனிமே ஆகும்...

    அது எப்படி...?

    அது அப்படித்தான்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து ஹால் சோபாக்களில் உட்காருவாங்க இல்ல... அப்ப ஹால் சபையா மாறும்... விளக்கம் போதுமா...?

    என்னவோ செய்ங்க... எனக்கு ஒன்னும் சரியாப் படலை...

    இன்னும் மாப்பிள்ளையையும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களையும் நீ கண்ணிலேயே பார்க்கலை... அதுக்குள்ள சரி, தப்பைக் கண்டு பிடிச்சுட்டியா...? அழிச்சாட்டியம் பண்ணாதேடா... போ...

    போ, போன்னா, எப்படிப் போகிறது...? வாசல்ல நுழையும் போதே ஜம்முன்னு நெய்வாசமும், பஜ்ஜி வாசமும் மூக்கைத் துளைச்சுச்சே... டிபன், காபியைக் கொடுங்க... மொக்கிட்டு அப்புறமா பிரஷ்ஷாகப் போறேன்...

    அதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கன்னா...?

    வந்தா வரட்டுமே... என்னையா பார்க்க வர்றாங்க...? அக்காவைத்தான பார்க்க வராங்க...?

    வழக்கடித்தவனுக்கு தமக்கை காபி, பலகாரம் சாப்பிட்டாளா என்ற கரிசனம் வந்துவிட...

    அக்காவுக்கு டிபன், காபி கொடுத்தீங்களா இல்லையா...? என்று அதட்டினான்...

    யாருடா இவன்...

    என்னைப் பெற்ற தாயே...! உங்களுக்கே நான் யாரென்று தெரியவில்லையா...? உங்களின் மணி வயிற்றில் பத்து மாத காலம் வாசம் செய்து உதித்த உத்தம புத்திரனம்மா நான்...

    வாசுதேவன் செந்தமிழிலில் நாடக பாணி வசனம் பேசினான்... கோதாவரி அவனது முதுகில் ஒரு மொத்தை வைத்தாள்...

    உனக்கு முன்னாடியே என் வயிற்றில் வாசம் செய்தவளுக்குத் திருமணம் செய்து பார்க்கும் நேரம் வந்து விட்டதடா எனது அருமை மகனே...! சென்று உன் திருமுகத்தைக் கழுவி ஆடை ஆபரணங்களை மாற்றி வா... இது இந்தத் தாயின் கட்டளை... என் கட்டளையே சாசனம்...

    பேச்சென்று வந்து விட்டால் மகனுக்குச் சளைக்காமல் ஈடு கொடுப்பவள் கோதாவரி... அன்றும் அதைத்தான் செய்தாள்...

    2

    அன்று வாசுதேவன் பண்ணிய அழிச்சாட்டியங் களையெல்லாம் இன்று நினைத்தாலும் வசுமதிக்குச் சிரித்துச் சிரித்துப் புரையேறி விடும்...

    Enjoying the preview?
    Page 1 of 1