Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathaga Paravai..!
Saathaga Paravai..!
Saathaga Paravai..!
Ebook180 pages1 hour

Saathaga Paravai..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பவானி தாய் தந்தையை இழந்தவள். பவானியின் தாத்தா குமரகுரு தன் உறவினரான அன்னவாசல் ஜமீன்தாரர் வீட்டில் கணக்குவழக்கை பார்க்க வேலைக்குச் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் ஜமீன் வீட்டின் சங்கருக்கும் பவானிக்கும் திருமணம் நடந்தது. டாக்டராக இருக்கும் பவானியை சங்கருக்கு ஏன் பிடிக்கவில்லை? அவன் பாசத்திற்காக காத்திருந்த பவானியை அவன் ஏற்றுக்கொண்டானா? மழை வேண்டி தவமிருக்கும் சாதகப்பறவைகளின் தவம் என்றும் பொய்ப்பதில்லை என்று கூறும் இக்கதையை படித்து மகிழ்வோம்...

Languageதமிழ்
Release dateAug 5, 2023
ISBN6580133810088
Saathaga Paravai..!

Read more from Muthulakshmi Raghavan

Related to Saathaga Paravai..!

Related ebooks

Reviews for Saathaga Paravai..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathaga Paravai..! - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாதகப் பறவை..!

    Saathaga Paravai..!

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    ச்க்ச்... ச்க்ச்... கூக்... குக்கூ...

    பறவைகளின் சங்கீதக் குரலோசையில் கண் விழித்தாள் பவானி.. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துப் பார்த்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள். அடுத்த வழக்கமாக படுக்கையறை ஜன்னலை திறந்து பார்த்தான். தோட்டத்தின் பசுமை அவளுக்குப் புத்துணர்வைத் தந்தது. எப்போதும் போல ஒரு இனம் புரியாத சந்தோசமும் குதூகலமும் அவள் மனதை நிறைத்தது. எதனால் அது என்று அவளுக்குத் தெரியவில்லை. பெரிய தோப்புப் போல பரந்து விரிந்திருக்கும் தோட்டத்தின் மத்தியிலிருக்கும் வீட்டில் குடியிருப்பதால் அந்த சந்தோசம் வருகின்றதா? இல்லை. தோட்டத்தைத் தாண்டித் தெரியும் உயர்ந்த அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றத்தைப் பார்க்கும் பிரமிப்பில் அந்த சந்தோசம் வருகின்றதா?

    பவானிக்கு இவற்றையெல்லாம் இனம் பிரித்து யோசித்துப் பார்க்கத் தெரியாது. அவளது உலகம் சிறியது. அந்தப் பிரம்மாண்ட அரண்மனைக்கும், பரந்த தோட்டத்திற்கும் அவளுக்கும் தூரத்து உறவினர் என்பதைத் தவிர யாதொரு சம்பந்தமுமில்லை. தோட்டத்தின் மத்தியிலிருக்கும் வீடு கூட கருணையின் அடிப்படையில் குடியிருக்கத் தரப்பட்டது. அவளுக்குச் சொந்தமானதல்ல.

    பவானியின் தாத்தா குமரகுரு அன்னவாசல் ஜமீன்தாரர் சிவனேசனின் மனைவியான ஜமின்தாரிணி கௌரிக்கு தூரத்து உறவு. பெரியப்பா முறை என்று சொல்வாள். மகன்வழிப் பேத்தியான பவானியை சின்னஞ்சிறு சிறுமியாக கையில் பிடித்துக் கொண்டு யாருமற்றவராக ஆதரவு தேடி குமரகுரு அன்னவாசல் ஜமீன் அரண்மனைக்கு வந்து நின்ற போது கௌரி மனம் கலங்கி விட்டாள்.

    யார், யாருக்கோ அள்ளிக் கொடுக்கிறோம் கை தூக்கி விடுகிறோம். உங்களுக்குச் செய்ய மாட்டோமா பெரியப்பா? உங்க காலம் வரை நீங்க ஜமீன் தோட்ட வீட்டிலேயே குடியிருந்துக்கலாம். ஜமீன் கணக்கு வழக்கைப் பார்த்துக்கங்க அதுக்கான சம்பளத்தை வாங்கிக்கங்க.. என்று சொல்லி விட்டாள்.

    பவானிக்கு அப்போது ஏழு வயது. ஆற்றைக் கடக்கும் போது ஆற்றோடு போய்விட்ட தாய், தந்தையைப் பற்றிய விவரம் அறியாதவள். அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள், என்றேனும் ஓர்நாளில் வந்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் கௌரியின் தாய் மனம் பதறும்.

    மனைவியை இழந்த குமரகுருவுக்கு பேத்தியான பவானி மட்டுமே வாழ்வின் பற்றுக்கோடு. கால வெள்ளத்தில் நீந்திக் கரை சேர வேண்டுமென்ற உத்வேகத்தை அந்தக் கிழவருக்குக் கொடுத்துக் கொண்டிருப்பவள். பேத்தியின் தலைவிதியாவது நன்றாக இருக்க வேண்டும், அவள் தீர்க்காயுளும், தீர்க்க சுமங்கலித்துவமும் பெற்றவளாக வாழ வேண்டும் என்பதே அவரது பிரார்த்தனை.

    பவானியைப் படிக்க வைக்கும் பொறுப்பை கௌரி ஏற்றுக் கொண்டாள். அவளுடைய பிள்ளைகளுக்குச் சமமாக பவானியை கௌரி நடத்தினாலும், ஜமின்தாரின் பிள்ளைகள் பவானியை சமமாக நினைக்க மாட்டார்கள். தள்ளியே நிறுத்துவார்கள். சிவனேசனும் அப்படியே. மனைவியின் தூரத்து உறவினர் என்பதற்காக சொந்தம் பாராட்ட அனுமதிக்க மாட்டார். வேலையாள் என்ற அளவில் குமரகுருவிற்கு எல்லைக் கோட்டை வரையறுத்திருந்தார். குமரகுருவும் அதைப் புரிந்து வைத்திருந்ததினால் எவ்வித சலுகைகளையும் எதிர்பார்த்ததில்லை. அவருடைய எல்லைக் கோட்டைத் தாண்டியதுமில்லை. அவருடைய எல்லைக்குள் நின்று வேலை செய்வார்.

    சிறுமியான பவானிக்கு இது எதுவும் தெரியாவிட்டாலும் தாத்தாவின் வாய்மொழிப்படி நடக்கத் தெரிந்திருந்தது.

    பவானிச் செல்லம். அத்தை நமக்குச் சொந்தமுன்னாலும் அவங்க ஜமின்தாரிணி. நாம அவங்களிடம் வேலை பார்ப்பவங்க. அவங்க உரிமை கொடுத்தாலும் நாம உரிமை எடுத்துக்கக் கூடாது. என்று சொல்லி வளர்த்திருந்தார்.

    உரிமை கொடுப்பது, எடுப்பது என்றால் என்ன என்று சின்னஞ்சிறு பவானிக்குத் தெரியாது. அதைத் தெரிய வைக்கத்தான் கௌரி பெற்ற மக்கள் இருந்தார்களே.

    ஏழுவயது சிறுமியாக அடைக்கலம் கேட்டு தாத்தாவுடன் அன்னவாசல் ஜமின் அரண்மனை வாசலில் வந்து நின்றபோது பவானியை அசூசையாகப் பார்த்தவள் சரளா. கௌரியின் இளைய மகள். அவளுக்கு அப்போது பத்து வயது. பவானியை விட மூன்று வயது மூத்தவள். ஜமின் குடும்பத்தின் இளவரசி என்ற செல்வச் செருக்கு அவள் முகத்தில் வழிந்தது. அவள் பார்த்த முதல் பார்வையிலேயே பவானி அரண்டு போய் குமரகுருவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அதில் சரளாவுக்கு பெருத்த சந்தோசம்.

    தங்கை இப்படியென்றால் அவளது அண்ணனான சங்கர் ஆணவம் பிடித்தவனாக இருந்தான். சிடுசிடுவென்ற முகமும், சுள்ளென்ற பார்வையுமாக.

    ஏய்ய். என் ஷீவின் மேல் காலை வைக்கிறாயே. உனக்கு அறிவில்லை? என்று பவானியைத் திட்டினான்.

    பதினான்கு வயது சங்கரின் பார்வையில் தெரிந்த அலட்சியம் குமரகுருவைத் தாக்கியது. அவருடைய வயதுக்கு மரியாதை கொடுக்காமல், அவர் இருக்கும் போதே அவளுடைய பேத்தியை அவன் அதட்டுகிறானே என்ற கோபம் அவருக்கு வரத்தான் செய்தது. அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் அவருடைய அனாதரவான நிலையை நினைத்து தன் பேத்திக்குத்தான் அறிவுரை சொன்னார்.

    மாமாவோட செருப்பு மேல கால் வைக்கக் கூடாது பவானி.

    அதைக் கேட்டவுடன் சிவனேசனின் முகம் மாறியதை இன்று வரை நினைவு வைத்திருக்கிறார் குமரகுரு.

    மாமாவா? யாருக்கு யார் மாமா?

    சிவனேசனின் கோபக்குரலில் சரளாவின் முகத்தில் தெரிந்த எள்ளலையும், சங்கரின் இதழ்களில் உதித்த இகழ்ச்சிச் சிரிப்பும் குமரகுருவை கூறுபோட்டன.

    என்ன பேசறிங்க நீங்க. நம்ம சங்கர் பவானிக்கு மாமா முறைதானே. நான் அவளுக்கு அத்தைதானே. கௌரி பரிந்து பேசினாள்.

    இப்படி நீ உறவு கொண்டாடுவதா இருந்தா நான் இவருக்கு வேலை போட்டுக் கொடுக்க முடியாது கௌரி. உன் சொந்தத்தை உன்னுடன் வைத்துக்க. எங்களிடம் கொண்டு வராதே.

    சிவனேசனின் கண்டிப்பான குரல் குமரகுருவின் எல்லையை வரையறுத்துத் தள்ளி நிறுத்தியது. விக்கித்துப் போன கௌரி ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் குமரகுரு முந்திக் கொண்டார்.

    ஜமீன்தாரய்யா சொல்கிறது சரிதானேம்மா. சின்னய்யா செருப்பு மேல படாம தள்ளி நில்லுன்னுல்ல நான் சொல்லியிருக்கணும்? பவானி. இவுக சின்னய்யா. ஜமீன்தாரய்யாவோட மகன். அவுக செருப்பு மேல கால் படாம தள்ளி நில்லும்மா.

    ஒரு நொடியில் குமரகுரு தன் புரிதலைத் தெரியப் படுத்திவிட, கௌரியின் முகம் கன்றியது.

    ‘அஃது.’ என்ற பார்வையுடன் அமர்த்தலாக குமரகுரு செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்ல ஆரம்பித்தார் சிவனேசன்.

    கௌரி சொன்ன வார்த்தைக்காக இருக்க இடம் கொடுத்து, பார்க்க வேலையும் கொடுத்திருக்கேன். விசுவாசமா வேலை செய்யனும். எந்தக் குறையும் இருக்கக் கூடாது. பார்க்கிற வேலையைத் தக்க வைச்சுக்கறது உங்க சாமர்த்தியம். குற்றம் குறைன்னு வந்தா நான் தயவு தாட்சண்யமெல்லாம் பார்க்க மாட்டேன்.

    கௌரிக்காக பார்க்க மாட்டேன் என்று சிவனேசன் சொல்லாமல் சொன்ன வார்த்தையை மனதில் பதிய வைத்துக் கொண்டார் குமரகுரு. அன்றிலிருந்து இன்றுவரை குண்டூசியளவு குற்றம்கூட சிவனேசனால் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வேலையைப் பொறுப்பாகவும், திறமையாகவும் செய்து கொண்டிருக்கிறார்.

    உறவினர்களிடம் வேலை பார்க்க நேர்வது கொடுமையிலும் கொடுமை. மற்ற வேலையாள்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது. மற்றவர்களிடம் இன்முகமாக பேசுபவர்கள் இவர்களிடம் கடுமையாகத்தான் பேசுவார்கள். சொந்தமென்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

    குமரகுரு வெகு கவனமாக இருந்தார். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடத் தன்னை ஜமீன் வீட்டுக் கணக்குப் பிள்ளை என்று சொல்வாரே தவிர, ஒருநாளும் ஜமீன்தாரிணிக்குப் பெரியப்பா முறையில் சொந்தமென்று சொன்னதே இல்லை.

    2

    பவானி தாவணியை இழுத்துச் செறுகிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். பரபரவென வீட்டு வாசலுடன், தோட்டம், அரண்மனையின் போர்டிகோ, அரண்மனை வாசல் என்று அத்தனையும் கூட்டிப் பெருக்கித் தண்ணீர் தெளித்து முடித்தாள். கோலப் பொடி டப்பாவுடன் குனிந்தவள் தோட்டத்து வீட்டு வாசலிலும், அரண்மனை வாசலிலும் அழகாக கோலம் போட்டு நிமிர்ந்தாள்.

    உன்னை யாரு இதையெல்லாம் பெருக்கித் தெளித்துக் கோலம் போடச் சொன்னது?

    ஆரம்பத்தில் கௌரி அதட்டினாள். உரிமையுடன் கோவித்துக் கொண்டாள். பனிரெண்டு வயது சிறுமியான பவானிக்கு இந்த வேலைகளையெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆதங்கம் அவளுக்கு. அவள் பக்கத்திலிருந்த சரளா ‘நான்தான் செய்யச் சொன்னேன்.’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லை. கௌரி கணவரிடம் தான் பொறுமையாகப் போவாள். பிள்ளைகளிடம் போக மாட்டாள். அதட்டி விடுவாள்.

    தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்த பவானியிடம் இந்த வேலைகளைச் செய்யச் சொல்லி சரளாதான் சொன்னாள். பொதுவாக அவள் அதிகாலையில் எழுந்து கொண்டதில்லை. அன்றைக்கு பவானிக்கு நேரம் சரியில்லையோ என்னவோ, சரளாவுக்கு சீக்கிரமாக விழிப்பு வந்து தொலைத்து விட்டது. எழுந்து கொண்டவள் என்றைக்கும் இல்லாத திருநாளாக தோட்டத்தின் பக்கம் சென்று விட்டாள். அங்கே பவானியைப் பார்த்தவளுக்கு கோவம் வந்துவிட்டது.

    ‘எங்க வீட்டுத் தோட்டம் இவள் விளையாடுவதற்கா?’ சொடக்குப் போட்டு பவானியை அழைத்தாள்.

    ஏய்ய்.

    திரும்பிப் பார்த்த பவானி அச்சத்துடன் மிரண்டு விழித்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1