Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Super Kudumbam
Super Kudumbam
Super Kudumbam
Ebook109 pages38 minutes

Super Kudumbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கால இளைஞர்கள் யோசிக்காமல் கொள்ளாமல் எவ்வளவு சுலபமாக விவாகரத்தை வேண்டுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரிப்பதே சூப்பர் குடும்பம்.. சிறந்த நாடகம், சிறந்த எழுத்தாளர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என்று மேடையில் பல விருதுகளைப் பெற்று வெற்றி வாகை சூடிய நாடகம்.. திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” குடும்பத்தின் வெற்றி நாடகம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142306695
Super Kudumbam

Read more from Sl Naanu

Related to Super Kudumbam

Related ebooks

Reviews for Super Kudumbam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Super Kudumbam - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சூப்பர் குடும்பம்

    Super Kudumbam

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    சமர்ப்பணம்

    என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய எனது தகப்பனார் திரு. சகஸ்ரநாமன் மற்றும் எனது தாயார் திருமதி. சிவகாமி அவர்களுக்கு.

    காட்சி - 1

    இடம்: குடும்ப நல கோர்ட்

    பாத்திரங்கள்: நீதிபதி சபாபதி, விக்னேஷ், நந்தினி

    (மேடையில் மூன்று Spot… இடது பக்கம் நந்தினி நின்றிருக்கிறாள்… மத்தியில் ஒரு மேஜை நாற்காலி போடப்பட்டு அதில் நீதிபதி சபாபதி உட்கார்ந்திருக்கிறார்… வலது பக்கம் விக்னேஷ் நின்றிருக்கிறான்… முதலில் நீதிபதி சபாபதியின் மேல் மட்டும் Spot… விழுகிறது… காட்சியின் துவக்கத்தில் இரைச்சலான சத்தம் கேட்க நீதிபதி சபாபதி கையில் சுத்தியை எடுத்து ‘ஆர்டர்’ என்று மேஜையில் தட்ட, சுத்தியின் தலை கழண்டு விழ, அவர் வலதுபக்கம் பார்த்து)

    சபாபதி: ஏம்பா… நல்ல சுத்தியா வெக்கக் கூடாது…? சுத்தியே ஆர்டரா இல்லை… கோர்ட்டுல எப்படி ஆர்டர் இருக்கும்…? சரி சரி… மொதல் கேஸைக் கூப்பிடு…

    குரல்: Family Court 2 Case Number 542/2014… விக்னேஷ் நந்தினி…

    சபாபதி: வந்திருக்கீங்களாப்பா… விக்னேஷ்… நந்தினி…

    (என்றவுடன் விக்னேஷ் நந்தினி மீது Spot… விழ அவர்களைப் பார்த்து)

    சபாபதி: சொல்லுங்கப்பா…

    விக்னேஷ்: நீங்கதான் சொல்லணும்…

    சபாபதி: நான் என்ன சொல்லணும்?

    விக்னேஷ்: எங்களுக்கு எப்ப டைவர்ஸ் கொடுக்கப் போறீங்கன்னு? இவகூட இனிமே வாழ முடியாது… ஒரே டார்ச்சர்…

    நந்தினி: உன் டார்ச்சரைத்தான் என்னால தாங்க முடியலை…

    விக்னேஷ்: என் பேச்சைக் கேட்கறதே இல்லை… ஹஸ்பெண்டுங்கற மதிப்பே கிடையாது… நான் என்ன சொன்னாலும் ரெடிமேடா உடனே பதில்… No தான்… இல்லைன்னா தூக்கி எறிஞ்சு பேச வேண்டியது

    நந்தினி: நான் என்ன உன் அடிமையா…? நீ சொல்றதுக்கெல்லாம் ரோபோ மாதிரி தலையாட்ட… No way… அதோட நீ சொல்ற பாதி விஷயங்களும் அபத்தம்…

    விக்னேஷ்: பேசாதே… என்னைப் பத்திப் பேச உனக்கு அருகதை கிடையாது…

    நந்தினி: உனக்கு மட்டும் என்ன அருகதை இருக்கு… என்னைப் பத்திப் பேச?

    விக்னேஷ்: வீட்டுல ஒழுங்கா சமையல் பண்றது கிடையாது… எங்கம்மா எவ்வளவு ஆசை ஆசையா விதவிதமா சமைச்சுப் போடுவா… ஆனா இங்க பாதி வேளையும் ஹோட்டல்தான்… அதோட வீட்டை ஒழுங்கா வெச்சுக்கறது கிடையாது… அப்புறம் என்ன பொண்டாட்டி?

    நந்தினி: ஏன், சமையல் பண்றதுக்கும்… வீட்டை ஒழுங்கா வெச்சுக்கறதுக்கும்தான் பொண்டாட்டியா? நானும் வேலைக்குப் போய் சம்பாதிக்கறேன்… வீட்டு வேலையை share பண்ணிக்கணும்…

    சபாபதி: அடாடா… உங்க சண்டையைக் கொஞ்சம் நிறுத்தறீங்களா? இது கோர்ட்டுப்பா… உங்க வீடு இல்லை…

    விக்னேஷ்: தெரியும்… அதனாலதான் ரொம்ப டீஸண்டாப் பேசறா… இதுவே வீடா இருந்தா படு கேவலமாப் பேசியிருப்பா.

    நந்தினி: ஆமா… நான் கேவலமாப் பேசுவேன்… நீ அப்படியே அருள்வாக்கா கொட்டிண்டிருப்பே…

    சபாபதி: உகும்… இந்தக் காலத்துப் பசங்களுக்கு வாழ்க்கைலயும் சீரியஸ்னஸ் இல்லை… கோர்ட்டுலயும் சீரியஸ்னஸ் இல்லை… Family Court-தான்… அதுக்காக இப்படியா?

    நந்தினி: போறும்… இவன்கிட்ட நான் பட்டது போதும்… இனிமே என்னால தாங்க முடியாது…

    சபாபதி: ஏம்மா… உங்களுக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு?

    நந்தினி: ஆறு மாசம்…

    சபாபதி: (திடுக்கிட்டு) ஆறு மாசமா?

    நந்தினி: இதுவே ஜாஸ்தி… கல்யாணமான அன்னிக்கே இவனை டைவர்ஸ் பண்ணியிருக்கணும்…

    விக்னேஷ்: உன்னை நான் பொண்ணு பார்த்த அன்னிக்கே டைவர்ஸ் பண்ணியிருக்கணும்…

    சபாபதி: உகும்… ரொம்பத் தப்பு…

    விக்னேஷ்: ஆமா… இவளை அன்னிக்கே டைவர்ஸ் பண்ணாதது ரொம்பத் தப்புதான்…

    சபாபதி: நீங்க நடந்துக்கறது தப்புன்னு சொன்னேன்… உகும்… பேசாம… கவுன்ஸிலிங் போட்டுற வேண்டியதுதான்…

    நந்தினி: கவுன்ஸிலிங்லாம் வேண்டாம்… தேவையில்லாம ஆறுமாசம் ஒரு வருஷம்னு இழுத்தடிக்காம உடனே டைவர்ஸ் கொடுத்திருங்க…

    சபாபதி: ஏம்மா இப்படி டைவர்ஸுக்கு பறக்கறே? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி… வாழ்க்கையோட சீரியஸ்னஸ் உங்களுக்குப் புரியலை… உங்களைச் சொல்லிக் குத்தமில்லை… கல்யாணம் ஆன உடனே தனியாப் போயிடறீங்க… அல்ப விஷயங்களுக்குக் கூட நீங்க முட்டி மோதிக்கும் போதெல்லாம் உங்களை Control பண்ணி வழிநடத்தக்கூட ஆளில்லை… அதான் இன்னிக்கு இங்க வந்து நிக்கறீங்க…

    விக்னேஷ்: எல்லாம் சரி… தயவுசெய்து இழுத்தடிக்காம இன்னிக்கே டைவர்ஸ் கொடுத்திருங்க…

    சபாபதி: என்னைப் பொறுத்தவரை டைவர்ஸே கூடாதுப்பா… நம்ம

    Enjoying the preview?
    Page 1 of 1