Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhukku Padatha Azhagu
Azhukku Padatha Azhagu
Azhukku Padatha Azhagu
Ebook145 pages2 hours

Azhukku Padatha Azhagu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பல்வேறு உணர்ச்சிக் கூறுகளின் மொத்த வடிவம்தான் மனிதன். வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவனது மன உணர்வுகள் மாறுகின்றன. அழுகிறான்; ஆனந்தப்படுகிறான். அச்சம் கொள்கிறான். சில வேளைகளில் ஆக்ரோஷமும் ஆணவமும் கொள்கிறான். தேவையற்ற மன உளைச்சல்களை சமப்படுத்தி அவனை ஆற்றுப்படுத்துவது இலக்கியங்களே. அதிலும் சிறப்பாக நாடகங்கள் மனித மனங்களைப் பக்குவப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இத்தொகுப்பில் நான்கு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடகத்தோடு பயணிப்போம்...

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580141907044
Azhukku Padatha Azhagu

Read more from M. Kamalavelan

Related to Azhukku Padatha Azhagu

Related ebooks

Reviews for Azhukku Padatha Azhagu

Rating: 3.8 out of 5 stars
4/5

5 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    எனக்கு இதில் வரும் அனைத்து கதைகளும் மிகவும் பிடித்திருந்தது ❤️...very fantastic storys

Book preview

Azhukku Padatha Azhagu - M. Kamalavelan

https://www.pustaka.co.in

அழுக்குப்படாத அழகு

Azhukku Padatha Azhagu

Author:

மா. கமலவேலன்

M. Kamalavelan

For more books

https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

முன்னுரை

பல்வேறு உணர்ச்சிக் கூறுகளின் மொத்த வடிவம்தான் மனிதன். வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவனது மன உணர்வுகள் மாறுகின்றன. அழுகிறான்; ஆனந்தப்படுகிறான். அச்சம் கொள்கிறான். சில வேளைகளில் ஆக்ரோஷமும் ஆணவமும் கொள்கிறான். தேவையற்ற மன உளைச்சல்களை சமப்படுத்தி அவனை ஆற்றுப்படுத்துவது இலக்கியங்களே. அதிலும் சிறப்பாக நாடகங்கள் மனித மனங்களைப் பக்குவப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நல்ல நாடகங்களை நாளும் வெளியிடுவதில் அக்கறை கொண்டுள்ள நிறுவனம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆகும்.

இத்தொகுப்பில் நான்கு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

சௌந்தரவல்லி

ஏதோ மூட நம்பிக்கைக்குத் துணை போவதுபோல தொடக்கத்தில் தோன்றினாலும் மனிதர்கள் ஒருவர்க்கு ஒருவர் அன்பைத்தான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. ‘சௌந்தரவல்லி’ நான் வாழ்க்கையில் நேரில் சந்தித்த ஒரு நங்கையின் கதைதான் நாடகமாக உருப்பெற்றுள்ளது.

அழுக்குப்படாத அழகு

அழகு உழைப்பிலும் அடுத்தவர்களுக்கு உதவுவதிலும்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

உறவுப் பின்னல்கள்

உண்மையிலேயே பல வாழ்க்கைப் பிரச்சனைகள் பின்னல்தான். ஆனாலும் சிக்கல் இன்றிப் பிரச்சனைகளை கதாநாயகன் தீர்த்துவைக்கிறான். காதலியும் நண்பனும் அதற்கு உதவுகிறார்கள். இளநீர் விற்பவன் இந்நாடகத்தின் முக்கியத் திருப்பு முனைக்குக் காரணமாகிறான். விறுவிறுப்பான நாடகம்.

நடைபாதை நம்பிக்கை நட்சத்திரங்கள்

வசதி படைத்தவர்கள் ஏழை எளிய மக்களை கிள்ளுக்கீரையாக மதிப்பார்கள். அவர்களை மிதிப்பார்கள். கீரை விற்றுப் பிழைக்கும் பெண்ணின் சோகக்கதை நம் உள்ளத்தை உலுக்கிவிடுகிறது.

நான்கு நாடகங்களுமே அகில இந்திய வானொலி நிலையம், மதுரையிலிருந்து ஒலிபரப்பானவை. நிலையத்தாருக்கு என் நன்றி.

அன்புடன்

மா. கமலவேலன்

உள்ளடக்கம்

அழுக்குப்படாத அழுகு

நடைபாதை நம்பிக்கை நட்சத்திரங்கள்

உறவுப் பின்னல்கள்

சௌந்தரவல்லி

அழுக்குப்படாத அழுகு

உள்ளடக்கம்

காட்சி - 1

காட்சி - 2

காட்சி-3

காட்சி - 4

காட்சி - 5

காட்சி-6

காட்சி - 7

காட்சி - 8

காட்சி - 9

கதாபாத்திரங்கள்:

பாலகுரு

சுந்தரமூர்த்தி

திவ்யா

நித்யா

கனகவல்லி

பெரியநாயகி

தினேஷ்

பழனி

மற்றும் ஹேமாவதி

காட்சி - 1

இடம் : வீடு

காலம் : மாலை நேரம்

பாத்திரங்கள் : திவ்யா, பாலகுரு, கனகவல்லி, சுந்தரமூர்த்தி, பெரியநாயகி

சுந்தர : ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் பாலகுரு... எங்களுக்கு உங்க பொண்ணு திவ்யாவை ரொம்பப் பிடிச்சிருக்கு... அப்புறம் என்ன? ஐப்பசியிலேயே முகூர்த்தத்தை வச்சிடுவோம்... சம்மதம்தானே?

பாலகுரு : எங்களுக்கும் உங்க சம்பந்தம் ரொம்பப் பிடிச்சிருக்கு. தொழில் அதிபர் சுந்தர மூர்த்தின்னா... உங்களை இந்த மாவட்டத்தில் தெரியாதவங்க யாருங்க? உங்களோட ஒரே மகன்... அதுவும் ஃபாரினில் படிச்சவரு... உங்க மகனை மருமகனா அடைய நாங்க கொடுத்து வச்சிருக்கணுங்க...

பெரிய : எங்க வீட்டுக்காரர் எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வாரு... உங்க பொண்ணும் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டுல்லே... பங்களூர்ல வேலை பார்க்கிறாள்... என் மகன் மறுபடியும் அமெரிக்காவுக்கே திரும்பிப் போகணும்னு நினைக்கிறான்... அதுக்குள்ள திருமணத்தை முடிச்சுடணும்னு நாங்க நினைக்கிறோம்.

கனக : நீங்க ரொம்பப்பெரிய இடம். உங்களோட தகுதிக்கு எங்களால சீர்வரிசை செய்ய முடியாதுதான். பொன்னை வைக்கிற இடத்துல பூவை வைக்கிறமாதிரி நாங்க செய்யறதைக் கட்டுவிடாமல் செய்துடுவோம் (கணவனிடம் தணிவான குரலில்) என்னங்க... தை மாதம்னா... நமக்குக் கொஞ்சம் வசதியாயிருக்கும் இல்லே?

பால : உம்... நீ சொல்றதும் சரிதான்... (பின்னர் சுந்தரமூர்த்தியிடம்) என் மனைவி கனகவல்லி எப்போதுமே கன கச்சிதமாய் பேசிப் பழக்கம்... அவள் சொல்றமாதிரியே... தையிலேயே வச்சிட்டா...

சுந்தர : சுருக்கமாத்தான் சுந்தரமூர்த்தி பேசுவான்... உங்க பொண்ணை கட்டின புடவையோட... அனுப்பிச்சாலும் எங்களுக்கு சம்மதம்... நீங்க... என்னென்ன சீர் செய்யணும்னு நினைக்கிறீங்களோ... அதை... மெதுவா... செய்யுங்க... என்ன பெரியநாயகி... நீ என்ன சொல்றே?

பெரிய : நீங்க... கிழிச்ச கோட்டை நான் என்னிக்குங்க தாண்டியிருக்கேன்?

கனக : என்னங்க... அவங்க நினைக்கிற மாதிரியே ஐப்பசியிலே கல்யாணத்தை வைச்சுக்கலாம்னு சொல்லிடுங்க...

பால : (மெல்லிய குரலில்) கனகவல்லி... இன்னும் பணம் தோது பண்ணலே... நகைக்கெல்லாம் இப்பத்தான் ஆர்டர் கொடுத்திருக்கோம்... உம்...

சுந்தர : மிஸ்டர் பாலகுரு... நீங்க ஒன்ணும் முணுமுணுக்க வேண்டாம்... ஜாம்... ஜாம்னு ஐப்பசியிலேயே இந்தக் கல்யாணம் நடக்குது... சுருக்கமாகத்தான் சுந்தரமூர்த்தி பேசுவான்.

பால : நீங்க... பெரியவங்க... சரி... உங்க விருப்பப்படியே செய்திடுவோங்க...

சுந்தர : ரொம்ப மகிழ்ச்சி... அடுத்த வாரமே ஒரு நல்ல நாள் பார்த்து... வெத்தில பாக்கு... கை மாத்திப்போம்...

சுந்தர : சொன்னா நம்பமாட்டீங்க... ஐப்பசியிலே உள்ள எல்லா முகூர்த்த நாளையும் அந்த மண்டபத்துல புக் பண்ணிட்டேன்... ஏன்னா...எங்க ஊர்லேயே... பெரிய... ஃபுள்ளி ஏ.சி. கல்யாண மண்டபம் அது ஒண்ணுதான்... ஒரே சமயத்துல 25 கார் நிறுத்தலாம்...அந்த மண்டபம் கிடைக்கறதே கஷ்டம்...

பெரிய : எங்க வீட்டுக்காரர் எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வாருங்க... அப்போ நாங்க புறப்படறோம்...

கனக : கொஞ்சம் இருங்க... குங்குமம் எடுத்துக்குங்க... திவ்யா திவ்யா... உள்ளே என்னம்மா செய்யறே... அந்தக் குங்குமச் சிமிழைக் கொண்டுவா...

திவ்யா : இதோ கொண்டு வர்ரேம்மா...

பெரிய : ஏம்மா... திவ்யா... நீ பி.இ. பட்டதாரி... பங்களூர்ல பொதுத்துறை நிறுவனத்துல வேலை பார்க்கிறே பேசறதுக்கு இப்படி வெட்கப்படறியே!

கனக : அவள்... ரொம்பக் கூச்ச சுபாவக்காரிங்க... திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே வெட்கப்பட்டுகிட்டு ஓடி ஒளிஞ்சுடுவா...

பெரிய : திவ்யா... நாங்க பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டியாம்மா... ஐப்பசியிலே திருமணம்... சம்மதம்தானே...

திவ்யா : வந்து... வந்து...

பெரிய : தயக்கம் ஏம்மா?... தாராளமாப் பேசும்மா...

திவ்யா : வந்து... ஒரு நிமிஷம் உள்ளே வர்ரீங்களா? உங்ககிட்ட தனியாப் பேசணும்...

பெரிய : எல்லாரும் பையன்கிட்டதான் தனியாப் பேசணும்பாங்க... நீ... என்னடான்னா... எங்கிட்டப் பேசணும்ங்கிறே...

சுந்தர : இப்பவே... மாமியாரை கைக்குள்ளே போட்டுக்கறதுக்கா... அம்மா...? பையன் எப்படி இருப்பான்? ஏன் பெண் பார்க்க வரலேன்னு கேக்கறதுக்கா...? அவன் பிசினஸ் விஷயமா கல்கத்தா போயிருக்கான்... அடுத்த வாரம் உன்னை... பங்களூர்லயே வந்து பார்க்கச் சொல்றேன்... அவன் என்ன மாதிரி கருப்பு இல்லேம்மா... பங்களூர் தக்காளி மாதிரி... சிவப்பா... அழகா இருப்பான்... எதையுமே சுருக்கமாத்தான் பேசுவான் சுந்தரமூர்த்தி...

பெரிய : நீங்க கொஞ்சம் பேசாமயிருங்க. திவ்யா... தனியா என்னவோ பேசணும்னு நினைக்கிறாள்... நீ... வாம்மா... உள்ளே... (பின்னணியில் வயலின் இசை... அந்த இசை சில வினாடிகள் ஒலித்தல்... பின்னர் இசை

Enjoying the preview?
Page 1 of 1