Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poonkili Kaivarum Naal Varumaa
Poonkili Kaivarum Naal Varumaa
Poonkili Kaivarum Naal Varumaa
Ebook98 pages32 minutes

Poonkili Kaivarum Naal Varumaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Manimala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466893
Poonkili Kaivarum Naal Varumaa

Read more from R.Manimala

Related to Poonkili Kaivarum Naal Varumaa

Related ebooks

Related categories

Reviews for Poonkili Kaivarum Naal Varumaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poonkili Kaivarum Naal Varumaa - R.Manimala

    1

    ‘ஹால்’ மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த அழகான சர விளக்குகள் மின்சாரத்தில் உயிரூட்டப்பட்டதும், வெள்ளமாய் பாய்ந்தது புது வெளிச்சம்.

    பங்களா களைகட்டி இருந்தது.

    ‘சீரியல் பல்பு’களால் ஆடை அணிந்து ‘தகதகவென மின்னியது. தோட்டத்து செடி கொடிகளையும்கூட விட்டு வைக்கவில்லை. அதற்கும் மின்சாரப் பூக்களை அணிவித்திருந்தார்கள்.

    மாலை நேரம்... மங்கிக்கொண்டிருந்த பொழுதாகையால், அந்த இடம் தேவலோகம் போல் மின்னியது.

    தோட்டத்துப் புல்வெளி மீது... ஆங்காங்கே வேலைப்பாடு மிகுந்த வெண்ணிற மேசை-நாற்காலிகள் போடப்பட்டு... ஒவ்வொரு மேசையின் மீதும் அழகாக பூங்கொத்துகள் வைக்கப்பட்டு... உணவுக்காக காத்திருந்தன.

    விருந்தினர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

    தேவன் அவர்களை வரவேற்று அமர வைத்துக்கொண்டிருந்தார். அவரது உடையிலும் ஆடம்பரம் இருந்தது.

    தேவன்-பிரபல தொழிலதிபர். ஒரே நேரத்தில் நான்கைந்து தொழில்களில் கவனம் செலுத்தி, எதிராளிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் திறமையான ‘பிசினஸ்’ புலி!

    சமூகத்தில் அவருக்கென, அவரது குடும்பத்துக்கென தனி கவுரவம் இருந்தது. அது அவர் முன்னோர் சேர்த்துவைத்துவிட்டுச் சென்ற சொத்து.

    தொழிலை நேசிப்பதைவிட அதிகமாக தனது குடும்பத்தை நேசிப்பவர்.

    எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டியபடி ஓடிக்கொண்டிருப்பார். தன் பிள்ளைகளுக்காக கடமையாற்ற வேண்டும் என்றால், எப்பேர்ப்பட்ட முக்கியமான விஷயம் என்றாலும் தூக்கி அடித்துவிட்டு தனது செல்வங்களுக்கு முக்கியத்துவம் தரும் பாசமிகு தந்தை.

    அவர் மலேசியா செல்வதாக இருந்தது. அங்கு தொழிலதிபர்கள் மாநாடு நடக்கிறது. அதில் கலந்துகொள்ள ஒரு மாதம் முன்பே அழைப்பு வந்திருந்தது.

    ஆனால், இன்று தன் அருமை மகள், ஆசை மகள் ரஞ்சனியின் பிறந்தநாள் என்று தெரிந்ததும்... ‘என் மகளின் பிறந்தநாள் விருந்தைவிடவா மாநாடு முக்கியம்?’ என்று பயணத்தைத் தூக்கி எறிந்தார்.

    ‘பார்ட்டி’யில் கலந்துகொள்வதற்காக பகட்டான உயர்தட்டு மக்கள் பரிசுகளுடன் வந்துகொண்டிருந்தனர். நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தெருவையே அடைத்திருந்தன.

    ‘பிறந்த நாளுக்கே இவ்வளவு கூட்டம் என்றால்... திருமணத்துக்கு?’

    தேவன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார். அந்த சிரிப்பில் பெருமிதம் பளிச்சிட்டது!

    இருளை முற்றிலுமாய் விரட்டியடித்து நடிகைகளைப் போல் ஜொலித்துக்கொண்டிருந்தன விளக்குகள்.

    நேரமாகிடுச்சே?- முணுமுணுத்தபடி பங்களாவுக்குள் நுழைந்தார்.

    கண்களில் முதலில் தென்பட்டது ஜெயாதான்! இவரின் மனைவி. ஒய்யாரமான உடை அலங்காரத்தில் மின்னலடிக்கும் வைர நகைகளுடன் நாற்பத்தைந்து வயதில் பதினைந்தை அழகு சாதனப் பொருட்களின் உதவியுடனும், தன் புன்னகையினாலும் குறைத்து இன்னமும் கட்டுக் குலையாத அழகுடன் இருந்தாள்.

    தேவன் குறுநகையுடன் மனைவியை நெருங்கினார்.

    உன் தங்கை ‘ரெடி’யாகிட்டாளா?

    தங்கையா... என்ன சொல்றீங்க? புரியாமல் அவளின் கண்கள் அழகாக விரிந்தன.

    ஆமா... வந்திருக்கிறவங்க உன்னைப் பார்த்து அப்படித்தான் சொல்லப் போறாங்க! ரஞ்சனிக்கு அம்மான்னா யாருடி நம்பப் போறாங்க? என்றார்... அவள் கன்னத்தைச் செல்லமாய் தட்டி.

    போங்க... சிணுங்கினாள் ஜெயா.

    அட... வெக்கமா? இப்படி வெக்கப்பட்டு நிக்கறதைப் பார்க்கிறப்ப... இருபத்தைஞ்சு வருஷம் முன்னாடி முதலிரவுல பால் சொம்போட வந்தியே... அந்த ஞாபகம் வருது!

    கடவுளே... யார் காதுலயாவது விழுந்துத் தொலைக்கப் போகுது. என்ன இப்படியெல்லாம் பேசிக்கிட்டு?- முகம் சிவக்க கணவனைப் பார்த்தாள்.

    என் பொண்டாட்டியை நான் கொஞ்சுறேன். யாருக்காக பயப்படணும்?

    விட்டா... நாள் முழுக்க இதையேதான் பேசிட்டிருப்பீங்க. கிளம்புங்க.

    ஓகே... ஓகே... எல்லாரும் வந்தாச்சு. விழாவை ஆரம்பிச்சிடலாம். ரஞ்சனி தயாராகிட்டாளா?

    தயாராதான் இருக்கா. நான் அழைச்சிட்டு வர்றேன். வர்றவங்களை நீங்க கவனியுங்க.

    சீக்கிரம் அழைச்சிட்டு வா! என்றபடி வெளியேறினார் தேவன்.

    ரஞ்சனியின் அறைக்குள் நுழைந்தாள் ஜெயா. இதுவரை புடவையை அறியாத அவளின் பூவுடல் பட்டுப் புடவை அணிந்து பளபளத்துக்கொண்டிருந்தது. தேவையான அணிகலன்களை அணிந்து தேவதையைப் போல் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.

    மகளின் அழகை கர்வம் பொங்க ரசித்தாள் தாய்.

    கிளம்பிட்டியா?

    ஆமா ‘மம்மி’! பிருந்தா வந்துட்டாளா?

    ‘பிருந்தா’ என்ற பெயரைக் கேட்டதும் சட்டெனத் திரும்பினான் மாதேஷ். ரஞ்சனியின் அண்ணன். அப்பாவுடன் தொழிலிலும் உதவியாக இருக்கும் அழகான இளைஞன்.

    இன்னும் வரலையே? என்றாள் ஜெயா.

    அதைக் கேட்டு ரஞ்சனியின் முகம் மட்டுமல்லாது மாதேஷின் முகமும் சோர்ந்துதான் போனது.

    இன்னுமா வரல?

    வந்துடுவா... நீ வாம்மா. நேரமாயிடுச்சு...!

    கண்டிப்பா வந்துடுவால்ல?

    உன் தோழியைப் பத்தி உனக்குத் தெரியாதா? கண்டிப்பா வந்துடுவா... நீ கிளம்பு- மகளின் கையைப் பற்றி அழைத்தாள்.

    ரஞ்சனி எழுந்து அம்மாவுடன் சென்றாள்.

    மாதேஷ் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான்.

    ‘பிருந்தா... நீ வருவேயில்ல?’-கேட்டுக்கொண்டான் தனக்குத்தானே!

    2

    அரக்க பரக்க தன்னை அலங்கரித்தாள் பிருந்தா.

    ரஞ்சனியின் பிறந்தநாளுக்கென புதிதாய் வாங்கிய ‘சல்வாரை’ அணிந்துகொண்டாள். அழகு சாதனங்களின் அவசியமின்றியே அழகான பவுர்ணமியைப் போல் ஜொலிப்பவள்தான். எனினும் இது ரஞ்சனியின் குடும்பத்தினர்... முக்கியமாய் அவளின் அண்ணன் மாதேஷும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அல்லவா? அதனால் தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டிருந்தாள் பிருந்தா.

    கறுப்பு பட்டாம்பூச்சியாய் பளிச்சிட்டன கண்கள். வடிவான

    Enjoying the preview?
    Page 1 of 1