Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தசாவதாரம்
தசாவதாரம்
தசாவதாரம்
Ebook242 pages1 hour

தசாவதாரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஸ்ரீ கிருஷ்ண பகவான் குருஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதையில், தீயவர்களை அழித்து தூயவர்களைக் காக்க யுகங்கள்தோறும் நான் அவதரிக்கிறேன்" எனக்கூறி இருக்கிறார். அதன்படி பரம்பொருளான அந்த ஸ்ரீமந் நாராயணன் துஷ்டர்களை சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்திருக்கிறார். அவை யாவற்றிலும் தசாவதாரம்" எனப்படும் பத்து அவதாரங்களை புராணங்கள் மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன.

மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, பரசுராம, ஸ்ரீ ராம, பலராம, ஸ்ரீ கிருஷ்ண, கல்கி என்ற வரிசையில் அப்பத்தும் அமைந்துள்ளன. இக்கால அறிவியல், மானிட உயிர், தொடக்கத்தில் நீரில் உருவாகி நிலத்திற்கு வந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவிக்கிறது. பகவான் எடுத்த தசாவதாரங்கள், இந்த விஞ்ஞான விளக்கத்தை ஒட்டியே அமைந்திருப்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

முதல் அவதாரம் நீர்வாழ் உயிரினமான மத்ஸ்யம், அடுத்தது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடிய கூர்மம் (ஆமை), மூன்றாவது நிலத்திலேயே இருக்கக் கூடிய வராகம், நான்காவது பாதி மனிதனும், பாதி மிருகமுமான நரசிம்ஹம், ஐந்தாவது குள்ள மனிதன் வாமனர், ஆறாவது கானக வாசம் புரிந்த ரிஷிகுமாரர் பரசுராமர், ஏழாவது பண்பாடும் ஒழுக்கமும் மிகுந்த ஸ்ரீராமர், எட்டாவதும், ஒன்பதாவதுமான பலராம, ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் உலகியல் தர்மங்களைப் பிரதிபலிப்பவை. பத்தாவது கலியுகத்தில் நிகழ இருக்கும் கல்கி அவதாரம், அநீதியும், அக்கிரமங்களும் தழைத்தோங்குகின்றனவே என்று சோர்வடையும் நல்ல உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகும்."

Languageதமிழ்
Release dateFeb 13, 2021
ISBN9788179504758
தசாவதாரம்

Read more from R Ponnammal

Related to தசாவதாரம்

Related ebooks

Related categories

Reviews for தசாவதாரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தசாவதாரம் - R Ponnammal

    பதிப்புரை

    ஸ்ரீ கிருஷ்ண பகவான் குருஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதையில், தீயவர்களை அழித்து தூயவர்களைக் காக்க யுகங்கள்தோறும் நான் அவதரிக்கிறேன் எனக்கூறி இருக்கிறார். அதன்படி பரம்பொருளான அந்த ஸ்ரீமந் நாராயணன் துஷ்டர்களை சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்திருக்கிறார். அவை யாவற்றிலும் தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்களை புராணங்கள் மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன.

    மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, பரசுராம, ஸ்ரீ ராம, பலராம, ஸ்ரீ கிருஷ்ண, கல்கி என்ற வரிசையில் அப்பத்தும் அமைந்துள்ளன. இக்கால அறிவியல், மானிட உயிர், தொடக்கத்தில் நீரில் உருவாகி நிலத்திற்கு வந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவிக்கிறது. பகவான் எடுத்த தசாவதாரங்கள், இந்த விஞ்ஞான விளக்கத்தை ஒட்டியே அமைந்திருப்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

    முதல் அவதாரம் நீர்வாழ் உயிரினமான மத்ஸ்யம், அடுத்தது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடிய கூர்மம் (ஆமை), மூன்றாவது நிலத்திலேயே இருக்கக் கூடிய வராகம், நான்காவது பாதி மனிதனும், பாதி மிருகமுமான நரசிம்ஹம், ஐந்தாவது குள்ள மனிதன் வாமனர், ஆறாவது கானக வாசம் புரிந்த ரிஷிகுமாரர் பரசுராமர், ஏழாவது பண்பாடும் ஒழுக்கமும் மிகுந்த ஸ்ரீராமர், எட்டாவதும், ஒன்பதாவதுமான பலராம, ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் உலகியல் தர்மங்களைப் பிரதிபலிப்பவை. பத்தாவது கலியுகத்தில் நிகழ இருக்கும் கல்கி அவதாரம், அநீதியும், அக்கிரமங்களும் தழைத்தோங்குகின்றனவே என்று சோர்வடையும் நல்ல உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகும்.

    நம் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் தொன்மையான வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், சான்றோர்களின் வரலாறு, ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக நூல் வடிவில் வெளியிட்டு ஆன்மீக சேவை புரிந்து வரும் எமது ’கிரி நிறுவனம், பகவான் எடுத்த பத்து அவதாரங்களின் மகிமையை, தசாவதாரம் என்ற நூலாக வெளியிட்டிருக்கிறது. ஆன்மீக நூல்கள் பலவற்றை எழுதிப் புகழ் பெற்ற ஆர்.பொன்னம்மாள் இந்நூலை நல்ல தமிழில் எழுதித் தொகுத்துத் தந்துள்ளார். அன்பர்கள், இதனை வாங்கிப் படித்து பாற்கடல் வாசனான பரந்தாமனின் திருவருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    பதிப்பகத்தார்

    ï

    முன்னுரை

    அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு,

    வணக்கம்பல. ருக் வேதத்தில் ’பிரம்மம் ஒன்றுதான் பிரளய காலத்தில் உள்ளது, படைத்தல், காத்தல், அழித்தல் முதலானவற்றைச் செய்கிறது என்றிருக்கிறது. சமுத்திரத்தின் அடியிலிருந்து உலகத்தைத் தன் கொம்பால் நெம்பி எடுத்தார் மஹாவிஷ்ணு வராக அவதாரத்தில். நரசிம்மமாய் தோன்றி தீய இரண்யனை சம்ஹரித்தார். ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவ தாரத்திலும், பரசுராம அவதாரத்திலும் பூபாரம் குறைக்க கெடுமதியாளர்களை அழித்தார். மச்சமாய் அவதரித்து, ஊழிக் காலத்தில் ராஜரிஷியான சத்தியவிரதனை ஓளஷதிகளோடு, சப்தரிஷிகளும் அமர்ந்து வந்த ஓடத்தில் ஏறச் சொல்லி, தன் கொம்பால் படகைக் காத்து மத்ஸ்ய புராணத்தை உபதேசித்து, அவனை வைவஸ்வத மனுவாக்கி உலகங்களைப் படைத்தார்.

    யஜுர் வேதத்தில் எப்பொழுதும் உண்டாகாமல் இருக்கும் எம்பெருமான் பல அவதாரங்களை எடுத்துப் பிறக்கிறார்" என்றுள்ளது. பிரம்மாண்டமான ஆமை(கூர்ம)யாகி மந்த்ர மலையைத் தாங்கி, தேவர்களோடு அமுதம் கடைந்து, மோகினியாய் அசுரர்களை மயக்கி அமரர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட்டு, இப்படிப் பல வடிவம் எடுத்த பகவானின் சரித்திரத்தைப் படிப்பவருக்கு, படிக்கச் சொல்லிக் கேட்பவருக்கு ஆயுள் பெருகும். பெரிய சாதனைகளை எளிதில் முடிக்கும் ஊக்கத்தையும், வெற்றியையும் கொடுக்கும்.

    வாமனனாய் அவதரித்து திரிவிக்கிரமனாகி மூவுலகையும் அளந்த சரித்திரம், பாராயணம் செய்பவருக்கு தொழில் விருத்தியை அளிக்கும். கல்கி அவதாரம் படித்தால் கஷ்டங்கள் நீங்கும். பலராம அவதாரம் வலிமையைத் தரக்கூடியது. தசாவதாரத்தையும் தினமும் முடிந்த அளவு பாராயணம் செய்வது பாபத்தை அகற்றி புண்ணியத்தைப் பெருக்கும்; சந்தான பாக்கியத்தை அளிக்கும்.

    கர்ணன், ’அர்ஜுனனை ஜெயித்த பிறகுதான் சாப்பிடுமுன் கைகால் கழுவுவேன் என்று பிரதிக்ஞை செய்தான். ’கைகால் அலம்பாமல் ஆகாரம் உட்கொண்டால் ஆயுள் குறையும் என்கிறது சாஸ்திரம். கெட்ட புத்தி தீய வழியில் செல்லும். தகாத சகவாசம் அறிவைக் கெடுக்கும். மழைக்காலத்தில் காய்ந்த விறகு கேட்ட அந்தணருக்காக சந்தன மரத்தூணையே பெயர்த்துக் கொடுத்த வள்ளல், கிருஷ்ணருக்கு எதிர்க் கட்சியில் இருந்ததால் அகால மரணமடைந்தான். இதைப் படிப்பவர்கள் கண்ணபிரானின் அன்புக்குப் பாத்திரமாகி றார்கள். ’கைகால் கழுவாதது போன்ற சிறு பிழையையும் அவர்களைச் செய்யவிடாமல் தடுக்கும் தசாவதாரப் புராணம். இதைப் படித்துப் பாக்கியங்களை அடைவது அவரவர் செய்த பூர்வஜென்ம புண்ணியம். சாமவேதம் சொல்லும் செந்தாமரைக் கண்ணனின் லீலைகள் புதையலாகும்.

    கரும்பு தான் இனிப்பதாக விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தசாவதாரம் சுவாரஸ்யமான நூல் என்பதும் அதே ரகம்தான். படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல். ஆன்மீகப் பணிபுரிந்து வரும் கிரி நிறுவனத்திற்கு இவ்வரிய நூல் மேலும் புகழ் சேர்க்கும். இதனை மக்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் புண்ணியம் பெற பிரார்த்திக்கிறேன். வணக்கம்.

    அன்புடன்

    ஆர். பொன்னம்மாள்

    ï

    1. ஸ்ரீ மச்சாவதாரம்

    மீனோடாமை கேழல் கோளரியாய்

       வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்

    பின்னுமி ராமரிருவராய்ப் பாரில்

       துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்

    கலி தவிர்த்தருளுங் கற்கியாய் மற்றும்

       நலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற

    நானாவுருவங் கொண்டு நல்லடி யோர்

       வானாரின்ப மிங்குற வருதி.

    (ஸ்ரீ தேசிகப்ரபந்தம் - மும்மணிக்கோவை.)

    மீனமாகியும் கமடமதாகியும் மேருவை எடுக்கும்தாள்

       ஏனமாகியும் நரஅரி ஆகியும் எண்ணருங் குறளாயும்

    கூனல் வாய் மழுத்தரித்த கோவாகியும் அரக்கரைக் கொலை செய்த

       வான நாயகன் ஆகியும் நின்றமால் மலரடி மறவேனே!

    என்று மனமுருகிப் பாடினார் ஸ்ரீவில்லிப்புத்தூரார்.

    திருமால், உலகினை ரக்ஷிப்பதற்காகவும், சத்தியத்தையும், தர்மத்தையும் நிலைநாட்டி, அதர்மத்தை அழிக்கவும் எடுத்த பத்து அவதாரங்களில் முதல் அவதாரம், மச்சாவதாரம் ஆகும்.

    உயிர்களை படைப்பதையே பணியாகக் கொண்ட பிரம்ம தேவனுக்கு படைப்பிற்கு தேவையான அறிவை அளித்தது வித்யை புகட்டும் வேதம்.

    இப்படி உலகைப் படைக்கும் பிரம்மதேவனுக்கு பலகோடி ஆண்டுகள் பகல் பொழுதாகவும், பலகோடி ஆண்டுகள் இரவுப் பொழுதாகவும் அமைந்தன. பிரம்மனின் வாழ்நாளில் பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரம் தான் பிரளயம் ஏற்படுகின்றது. அப்பிரளயத்தில் உலகம் முழுவதும் அழிந்து போகும். அவ்வாறு பிரளயம் வரும்பொழுது கருணாகரனான பரந்தாமன் உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, திருவுள்ளம் கொண்டு எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம்.

    நாட்டுமக்கள் அனைவரும் போற்றும் வண்ணம், கடுஞ்சொல் அற்றவனானவனும், குடிமக்களின் நலம் ஒன்றையே தனக்கு குறிக்கோளாக கொண்டவனும் எந்நேரமும் திருமாலின் திருநாமத்தையே உச்சரிப்பவனும், சத்தியம், தர்மம் என்றும் தவறாதவனும் ஆன சத்திய விரதன் என்ற ராஜன் பாரத தேசத்தை ஆண்ட காலம் அது. அரசனாக இருந்தும் ரிஷிகளை போன்று எளிமையாக வாழ்க்கை நடத்தியவன் ராஜரிஷி சத்தியவிரதன். ஒருமுறை தவம் புரிய வனம் சென்றபோது, அங்கு தீர்க்கசிருஷ்டி என்ற முனிவர், தன் சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார். சத்திய விரதனும் அவரது சீடனானான். அவரிடம் உபதேசம் பெற்று, நீரை மட்டுமே உண்டு தவம் செய்தான்.

    ஒரு நாள் சத்தியவிரதன் கிருதமாவா என்ற நதியில் வழக்கம் போல நீர்க்கடன்கள் செய்து கொண்டிருந்தான். இருகைகளிலும் நீர் ஏந்தி அர்க்கியம் விட இருக்கும் தருணம், கைகளில் ஏந்திய நீரில் சிறுமீன் ஒன்று வந்து விழுந்தது.

    நதியில் பெரிய மீன்கள் என்னை விழுங்கிவிடும். என்னை அவைகளிடமிருந்து காப்பாற்று என்றது.

    கமண்டலத்தில் மீனை எடுத்து போட்டுக்கொண்ட சத்தியவிரதன் ஆசிரமத்தை அடைந்ததும், கமண்டலத்தில், திரும்பக்கூட முடியாத அளவு, மீன் பெரியதாக வளர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.

    அப்போது மீன் ராஜரிஷி! என்னைப் பெரிய இடத்தில் விடு, இடம் போதவில்லை! என்றது.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டான் சத்தியவிரதன். முகூர்த்த நேரத்தில் அந்தப் பாத்திரம் பூராவும் மீன் வியாபித்து வளர்ந்தது.

    இதைவிடப் பெரிய இடம் உனக்குத் தெரியாதா? என்றது மச்சம் (மீன்).

    சத்தியவிரதன் மீனைக் குளத்திலே விட்டான். குளமும் அதற்குப் போதாததாகி விட, பெரிய ஏரியில் சேர்த்தான். ஏரி பூராவும் மீன் வியாபித்தது. பிறகு, மீன் சொன்னபடி கடலில் சேர்த்தான்.

    சத்தியவிரதா! ஒரு உத்தமமான தவசியான உன் கைப்பட்டதால் தான், நான் விரைந்து விஸ்வரூபியானேன்! உனக்கான வரம் ஒன்று கேள் என்றது மத்ஸ்யம். (மச்சம்)

    ஜகப்பிரளயம் நெருங்கிவிட்டது என்றார் குருநாதர். நான் பிரளயத்தைப் பார்க்க, அனுபவிக்க, ஆசைப்படுகிறேன் என்றான் சத்தியவிரதன் மீனிடம்.

    ஏழு நாட்கள் பொறுத்திரு. அதற்குள் சகல ஔஷதிகளையும் சேகரித்துக்கொள் என்று கூறி மறைந்தது மத்ஸ்யம். ஏழுநாள் முடிந்ததும், உலக்கை பருமனில் மழை பெய்தது. நிலம் நீரில் மறைந்தது. அஞ்சாது, ஔஷதிகளுடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்தியவிரதன்.

    அப்போது ஒரு ஓடம் நீரிலே மிதந்து வந்தது. சப்த ரிஷிகளும் அதில் வேத பாராயணம் சொல்லிக் கொண்டிருந்தனர். சத்தியவிரதனை ஓடத்தில் ஏறிக்கொள்ளும்படி சைகை செய்தனர். சத்தியவிரதனும் ஓளஷதிகளுடன் உடல் நடுங்க ஓடத்தில் ஏறிக்கொண்டான். அலைகளால் ஓடம் சுழன்றது.

    பிரம்மா யோக நித்திரை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் முகத்திலிருந்து வேதங்கள் வெளிப்பட்டன. அயக்கிரீவன் என்ற அசுரன் வேதங்களைக் கொண்டுபோய் கடலில் மறைத்து வைத்தான்.

    சத்தியவிரதன் சமுத்திரத்தில் விட்ட மீன், எட்டு லட்சம் மைல் நீளமும், கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடனும் இருந்தது.

    கடலுக்குள் அலைந்து தேடி அயக்கிரீவனோடு சண்டையிட்டு, அவனையும், அவனுக்குத் துணையாக வந்த சோமுகனையும் அழித்து, வேதங்களை மீட்டு நான்முகனிடம் கொடுத்து சிருஷ்டித் தொழிலை நடத்து என்றது.

    பிறகு, சத்தியவிரதா! என் கொம்பிலே தோணியைக் கட்டு! என்றது. அவனும் அவ்வாறே செய்தான். பிறகு, பகவானை சப்த ரிஷிகளுடன் ஸ்தோத்திரங்கள் செய்தான் சத்தியவிரதன். பிரளய வெள்ளத்தில் ஓடத்தை இழுத்துக் கொண்டு பிரளய காலம் முழுவதும் சஞ்சரித்தார் மத்ஸ்யமான ஸ்ரீஹரி. அதோடு அவனுக்கு மத்ஸ்ய புராணத்தையும் உபதேசித்தார்.

    Matsyavataram.TIF

    பிறகு சத்தியவிரதா! நீயே ஏழாவது மனுவாகி பகைவரைப் பற்றிய அச்சமின்றி சர்வ சம்பத்துக்களுடனும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பாயாக! என்று வரமருளினார்.

    நான் ஏழாவது மனு என்றால் முன் ஆறு மனுக்கள் யார்? என்று நயந்து கேட்டான் ராஜன்.

    முதல் மனு சுவாயம்பு; சுவாயம்பு மனுவின் பிள்ளைகள் பிரியவிரதன், உத்தானபாதன் என்று இருவர். பிரியவிரதனின் குமாரன் சுவாரோசிஷன் இரண்டாவது மனு; பிரியவிரதனின் இரண்டாவது பிள்ளை உத்தமன் மூன்றாவது மனு என்று பரந்தாமன் கூற,

    குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். உத்தானபாதன் மனுவாகாமல் பிரியவிரதனின் பிள்ளைகளே மனுக்களானது எப்படி? என்று கேட்டான் சத்தியவிரதன்.

    "இது வம்சாவளி அல்ல. புண்ணியமும், தவமும், நற்குண நற்செய்கைகளும் உடையவர்களுக்கே மனுவாகும் பாக்கியம் கிட்டும். உத்தானபாதனுக்கு ஸுருசி, ஸுநிதி என்று இரண்டு மனைவியர். ஸுருசியின் மகன் உத்தமன். ஸுநிதியின் மகன் துருவன். உத்தானபாதன் இருமனைவிகளுக்கிடையே பாரபட்சமாக நடந்து கொண்டான். இளைய மனைவி ஸுருசி அக்கிரமமாக நடக்கும்போது, தட்டிக் கேட்காதிருந்தான். உத்தமன், உத்தானபாதனின் மடியில் உட்கார்ந்திருந்தபோது, தானும் உட்கார ஆசைப்பட்டான் துருவன். ஆனால் ஸுருசி அதை தடுத்துவிட்டாள். இதனால் மனம் நொந்த அவன் சகலருக்கும் பிதாவான நாராயணனை நோக்கி தவம் செய்து, இருபத்தேழு நட்சத்திரங்களும், நவக்கிரகங்களும் பிரதட்சணம் செய்ய, வானில் துருவ நட்சத்திரமாய் ஒளி விடுகிறான்!

    பிரியவிரதனின் மூன்றாவது மகன் தாமசன், நான்காம் மனுவானான். பிரியவிரதனின் நான்காவது மகன் ரேவந்தன் ஐந்தாம் மனுவானான். ரேவந்தனின் மகள் ரேவதி, ஆதிசேஷ அவதாரமான பலராமனின் மனைவி" என்று பகவான் விளக்கவும்,

    அது எப்படி முடியும்? தங்களின் மச்சாவதாரம் கிருதயுகத்தில் நடக்கிறது. நீங்கள் சொன்னதுபோல் நடப்பதாயிருந்தால் துவாபர யுகமாயிருக்க வேண்டும். இது சாத்தியமா? குமரி குமரியாகவே இருப்பாளா? என்று கேட்டான் சத்தியவிரதன்.

    கதையைக் கேள் என்றபடி சொல்லத் தொடங்கினார் பரந்தாமன்.

    Enjoying the preview?
    Page 1 of 1