Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Namam Ondre Pothume..
Namam Ondre Pothume..
Namam Ondre Pothume..
Ebook116 pages31 minutes

Namam Ondre Pothume..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாமச்சுவையை நமக்கு ஊட்டும் நல்லோரின் கதைகள்

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580163610684
Namam Ondre Pothume..

Read more from Haripriya

Related to Namam Ondre Pothume..

Related ebooks

Reviews for Namam Ondre Pothume..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Namam Ondre Pothume.. - Haripriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நாமம் ஒன்றே போதுமே..

    Namam Ondre Pothume..

    Author:

    ஹரிப்ரியா

    Haripriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/haripriya

    பொருளடக்கம்

    1. நாமம் ஒன்றே போதுமே...

    2. கொடுங்கோலனுக்கும் கதி

    3. நாமா சொன்னால் போதுமா?

    4. ஜீவன் உள்ளது பகவன் நாமம்

    5. அறியாமலே சொன்ன நாமம்

    6. நாமம்‌ சொன்ன ராட்டி

    7. நாமத்தால் வந்த மதிப்பு

    8. வலிகளை விலக்கும் நாமம்

    9. அந்திம நேரத்தில் சொன்ன‌ நாமம்

    10. அந்திம நேரத்தில் சொன்ன நாமம் - 2

    11. அந்திம நேரத்தில் சொன்ன நாமம் - 3

    12. ராம யோகி

    13. படை வரும் முன்னே...

    14. பாபம் போக்கும் நாமம்

    15. பாறை உடைந்தது

    16. வேடன் எழுதிய காவியம் – 1

    17. வேடன் எழுதிய காவியம் - 2

    18. இறக்கை முளைத்தது

    19. பாவனமாக்கும் நாமம்

    20. கைவல்யம் தரும் மஹாமந்திரம்

    நாமம் ஒன்றே போதுமே - 21

    நாமம் ஒன்றே போதுமே - 22

    ஸத்சங்கங்கங்களில் கேட்ட உபன்யாசங்களின் அடிப்படையில் தொகுத்து எழுதப்பட்டது

    ஹரே ராம ஹரே ராம

    ராம ராம ஹரே ஹரே |

    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

    க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ||

    1. நாமம் ஒன்றே போதுமே...

    ஈரேழு உலகையும் படைத்து காத்து அழிக்கும் திறன் பெற்ற இறைவன் ஒரு அசுரனை வதைப்பதற்காக அவதாரம் செய்ய வேண்டுமா என்ன?

    இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ப்ப்ப்பூஊஊஊ என்று ஒரு ஊதினால் போதும், அல்லது ஸங்கல்பம் செய்தாலும்கூட, ஹிரண்ய கசிபுவோ, ராவணனோ, கம்சனோ, அல்லது மற்ற அரக்கர்களோ மாண்டுவிட மாட்டார்களா?

    இதற்காக ப்ரஹலாதன் கூப்பிடும் வரை காத்திருந்து, கஷ்டப்பட்டு பாதி மிருகமாகவும், பாதி மனிதனாகவும் உருவம் எடுத்துக்கொண்டு வந்து ஹா ஹா என்று அட்டஹாஸமெல்லாம் செய்து, விளையாட்டாகப் போரிட்டு, வாசற்காலில் அமர்ந்து வயிற்றைக் கிழிக்கவேண்டுமா என்ன? அதில் வேறு அவருக்கு உக்ர ரூபமாம். சமாதனப்படுத்த மஹாலக்ஷ்மிக்கே பயமாம். இதற்காகவெல்லாமா அவர் வந்தார்?

    ஈராறு மாதங்கள் கௌசல்யை வயிற்றிலாம், சமன் செய்யும் விதமாக எட்டு மாதங்கள் தேவகி வயிற்றிலாம். கடலைச் சற்று கொந்தளிக்கச் செய்தால் ராவணன் லங்கையோடு மூழ்கமாட்டானா? சற்றே பூமி பிளந்தால், கம்சன் அரண்மனையோடு உள்ளே போகமாட்டானா?

    செய்யலாம்தான். இறைவனால் முடியாதது உண்டா?

    இறைவன் அதற்கா அவதாரம் செய்கிறான்? அப்படிச் செய்தால், ப்ரஹலாதன் பகவான் மீது கொண்டிருக்கும் அன்பு எப்படி உலகுக்குத் தெரியும்?

    பக்த ஸ்பர்சத்திற்கு பகவான் ஏங்குகிறானே. அந்தக் குழந்தையை மடிமேல் அமர்த்திக் கொள்ளும் சுகம் எப்படிக் கிடைக்கும்? ந்ருசிம்மன், ஹரி என்ற திருநாமங்கள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? ரகு வம்சத்தில் பிறந்ததால் அல்லவோ ராகவன் என்ற நாமம் கிடைக்கிறது? தசரதனின் மைந்தனாகப் பிறந்ததால் அல்லவோ

    தாஸோஹம் தவ தாசரதே ராமா

    என்று பாடமுடிகிறது. இல்லையென்றால் ராமா என்றோ தாசரதே என்று எப்படி அழைக்க முடியும்? லக்ஷ்மணன், சத்ருக்னன் இவர்களின் தாஸ்ய பாவம், பரதனின் குரு பக்தி, சபரி, சுக்ரீவன், விபீஷணன், எல்லாவற்றுக்கும் சிகரமாய் ஹனுமான் இவர்களைப் பற்றியெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்?

    வசுதேவருக்குப் பிறந்ததால் வாசுதேவன், நந்தன் வளர்த்ததால் நந்தலால், வெண்ணெய் திருடினால், நவநீதக்ருஷ்ணன், மலை பிடித்ததால் கிரிதாரி, முரனை அழித்ததால் முராரி, புண்டலீகனுக்காக வந்ததால் பாண்டுரங்கன், இன்னும் ஆயிரமாயிரம் லீலைகள், ஆயிரமாயிரம் பெயர்கள், ஆயிரமாயிரம் பக்தர்கள், நமக்கு எப்படிக் கிடைக்கும்?

    ஒரு தாய் உறங்கும் குழந்தையை அப்படியே விட்டு விடுகிறாளா என்ன? நேரத்தில் எழுப்பி அதைப் பணிகளில் ஈடுபடுத்துகிறாள். பள்ளி முடிந்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே விடுகிறாளா? மறுபடி உள்ளே அழைத்து சாப்பிடவைத்து உறங்க வைக்கிறாள். காலை எழுப்பியவளே இரவானதும் உறங்கவும் வைக்கிறாள். அதுபோலவே இறைவன் ஒவ்வொரு ஜீவனும் தன்னோடு இரண்டறக் கலக்கும் வரை ஜனன மரணச் சுழலில் தள்ளி பக்குவம் வரும் வரை ஜீவனைத் தூய்மைப்படுத்துகிறான்.

    இறைவனே அவதாரம் செய்தபோது ஓரிரு பக்தர்கள்தான் கிடைத்தார்கள்.எங்கோ ஒரு ப்ரஹலாதன், எங்கோ ஒரு த்ருவன் இப்படி. இவ்வளவு கஷ்டப்பட்டு லோக வ்யவஹாரத்தை நடத்தினாலும் இறைவனை உணர்ந்தவர்கள் மிகக்குறைவு.

    நான் பகவான் நான் பகவான் என்று அறைகூவல் விட்டுக்கொண்டு லீலைகள் செய்த க்ருஷ்ணனுக்கு கோபிகைகள், விதுரர், பீஷ்மர்,போன்ற சிலர் கிடைத்தாலும், கண்ணெதிரேயே நிந்தனைகளையும், வீண்பழியையும், அவச் சொற்களையும் தாங்கினானே. மிகவும் கவலைப்பட்ட பகவான் வேறு உபாயம் செய்தான்.

    கலி

    Enjoying the preview?
    Page 1 of 1