Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattu Ketkum Samy
Paattu Ketkum Samy
Paattu Ketkum Samy
Ebook130 pages33 minutes

Paattu Ketkum Samy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் கொண்டாடப்படும் கலியுக தெய்வமான பாண்டுரங்கன் வசிக்கும் பண்டரிபுர க்ஷேத்ரத்திற்கு வாசிப்பின் மூலமாக கைப்பிடித்து அழைத்துச் செல்லும் முயற்சி பாட்டு கேட்கும் சாமி. வாருங்கள் வீட்டுக்குள்ளேயே விட்டலனை அழைப்போம்.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580163609644
Paattu Ketkum Samy

Read more from Haripriya

Related to Paattu Ketkum Samy

Related ebooks

Reviews for Paattu Ketkum Samy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattu Ketkum Samy - Haripriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாட்டு கேட்கும் சாமி

    Paattu Ketkum Samy

    Author:

    ஹரிப்ரியா

    Haripriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/haripriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ராம் க்ருஷ்ண ஹரி...

    பண்டரிபுரமே போவோமே...

    புண்டலீக வரதா...

    மஹாத்வாரத்தின் நிழலில்

    தாசருக்கு அருள்

    விட்டல தரிசனம்

    ரகுமாயி தரிசனம்

    கன்ஹோபத்ராவின் காதலன்

    சோகாமேளாவின் நண்பன்

    அரியும் சிவனும் ஒன்று

    துகாராம் காதா

    கால்யாசாவாடா

    தாக்பீட் மந்திர்

    கபீர்தாஸ் ஸமாதி

    கோபால்புர்

    சக்குபாய்

    கோராகும்பார்

    சஜ்ஜன்காட்

    பாட்டு கேட்கும் சாமி

    முக்கிய இடங்கள்

    ராம் க்ருஷ்ண ஹரி...

    C:\Users\ASUS\Desktop\pattum kaetkum\1.JPG

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. அவ்வூரில் அதை நாடுவதே சிறப்பு. உதாரணத்திற்கு காஞ்சிபுரம் எனில் காமாட்சி, வரதராஜ பெருமாள், மஹா பெரியவர், பட்டு ஆகியவை பட்டென்று நினைவில் வரும்.

    கும்பகோணம் என்றால் மகாமகமும், ஆயிரக்கணக்கான கோவில்களும் நினைவில் வரும். சிலருக்கு டிகிரி காபியும் நினைவில் வந்துபோவதுண்டு.

    திருநெல்வேலி என்றால் நெல்லையப்பரும், அல்வாவும் நினைவில் வந்துபோகும்.

    குருவாயூர் என்றால் குருவாயூரப்பன், நாராயண நாமம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை சிறப்பாகும்.

    காசிக்குச் சென்றால் கங்கையில் நீராடுவதும், நீத்தார் கடன் செய்வதும், அன்னபூரணியை தரிசனம் செய்வதுமே சிறப்பம்சங்களாக பலர் அறிந்துள்ளனர்.

    ஆன்மீகத் தலங்களில் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதும், கோவிந்த நாமமும், காணிக்கை செலுத்துவதும், முக்கியமாக லட்டும் சிறப்பாகும்.

    ராமேஸ்வர யாத்திரை செய்பவர்கள் கோடி தீர்த்தங்களில் நீராடுவதற்கும், தில தர்ப்பணம் செய்வதற்குமே பெரும்பாலும் செல்கின்றனர். பாம்பன் பாலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இப்போது பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடமும் சிறப்பு சேர்க்கின்றது.

    ஒரு ஊரின் பெயரைச் சொன்னதுமே, அவ்வூரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருப்பினும் சட்டென்று நினைவில் வரும் சில விஷயங்களைப் பற்றியே இங்கு கூற விழைகிறேன்.

    பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் பண்டரிபுரத்தின் சிறப்பு என்ன?

    நாமத்திற்காகவே ஒரு ஊர் உண்டெனில், அது பண்டரிபுரமே. இங்கு வாழ்ந்த, வாழும் ஸாதுக்கள் அனைவரும் இறை நாமத்தை மட்டுமே இடையறாது சொல்லி, வேறெந்த ஸாதனைகளையும் கனவிலும் நினைக்காமல் பாண்டுரங்கனின் தரிசனம் பெற்று வந்திருக்கின்றனர்.

    எந்த ஒரு ஸ்தலத்திலும் ஏழு நாள்கள் தொடர்ச்சியாகத் தங்கினால், அவ்வூரின் தெய்வம் நம்மை அவ்வூரைச் சேர்ந்தவர் (க்ஷேத்ரவாஸி) என்பதாக அங்கீகாரம் கொடுத்து விடுகிறது என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    எந்த ஒரு ஸாதனையையும் ஏழு நாள்கள் செய்தால் அது ஸித்தியைக் கொடுக்கிறது. ஸ்ரீமத் பாகவதத்தில் நாரத மஹரிஷி துருவனுக்கு த்வாதஸாக்ஷரி மந்திரத்தை உபதேசம் செய்துவிட்டு, இந்த மந்திரத்தை நீ இரவு பகல் பாராமல் ஏழு நாள்கள் ஜபம் செய்து வந்தால், வானத்தில் உலாவும் தேவர்கள் உன் கண்களுக்குப் புலப்படுவர் என்பதைப் பார்க்கிறோம்.

    ஸ்ரீ பப்பா ராமதாஸ் அவர்களும் ஏழு நாள்கள் விடாமல் ராம நாமம் சொல்லி ஸ்ரீ ராம தரிசனத்தைப் பெற்றார் என்று பார்க்கிறோம். ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாள்கள் ஸப்தாஹமாகச் செய்யும்படி விதி இருக்கிறது. சிரத்தையாக ஏழு நாள்கள் பாகவதத்தைக் கேட்டவர் எட்டாவது நாளே பரமபதம் செல்வதை பல மஹான்களின் சரித்திரங்களின் வாயிலாக அறிகிறோம்.

    வாழ்நாளில் ஏழு கிழமைகளில் ஒரு கிழமைதான் நமக்கு மரணம் நேரும். அந்தக் கிழமை இறைவனை நினைத்த கிழமையாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏழு நாள்கள் என்று நிர்ணயம் செய்திருக்கக்கூடும்.

    இந்த புனிதமான மார்கழி மாதத்தில் பிறவி எடுத்ததன் பயனாக, என் ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் கருணையால், பண்டரிபுரத்தில் ஏழு நாள்கள் தங்கி மஹாமந்திர கீர்த்தனம் செய்யும் பேறு கிட்டியது. பொங்கிப் பெருகிய நாம கங்கையில் திளைத்து, மனமின்றி உடலை மட்டும் திருப்பிக் கொண்டுவரும்படி ஆயிற்று.

    இந்த வைபவத்தில் அனுபவித்த சில விஷயங்களையும், புனித தலங்களைப் பற்றியும், நான் புரிந்துகொண்ட அளவில், என்னால் இயன்ற அளவு பகிர விழைகிறேன்.

    பண்டரிபுர யாத்திரை பற்றி எழுதும்படி தொடர்ந்து பல நட்புக்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதால் இம்முயற்சியைத் துணிவுடன் துவங்குகிறேன். தகவல்களில் தவறுகள் இருப்பின், உங்கள் வீட்டு மழலையாக எண்ணிச் சுட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

    ஸத்குருநாதரின் கமல சரணங்களைத் தொழுது சொல் துணை வருவதற்கு வேண்டிக்கொள்கிறேன்.

    ஸாதுக்கள் எல்லோரும் வாருங்களேன்!!

    பண்டரிபுரமே போகலாமே!!

    பண்டரிபுரமே போவோமே...

    C:\Users\ASUS\Desktop\pattum kaetkum\2.JPG

    பண்டரிபுரத்தில் நாம ஸப்தாஹம் என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1