Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Sirippu Konjam Sinthanai
Konjam Sirippu Konjam Sinthanai
Konjam Sirippu Konjam Sinthanai
Ebook71 pages20 minutes

Konjam Sirippu Konjam Sinthanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸத்சங்கங்களில் உபன்யாசங்களுக்கு நடுவே அவ்வப்போது சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580163610686
Konjam Sirippu Konjam Sinthanai

Read more from Haripriya

Related to Konjam Sirippu Konjam Sinthanai

Related ebooks

Related categories

Reviews for Konjam Sirippu Konjam Sinthanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Sirippu Konjam Sinthanai - Haripriya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை

    Konjam Sirippu Konjam Sinthanai

    Author:

    ஹரிப்ரியா

    Haripriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/haripriya

    பொருளடக்கம்

    1. ஏ... கத்திரிக்கா...

    2. நாராயண கோஷம்

    3. நன்றாகப் படித்தவன்

    4. கிட்டும்

    5. சாக்ஷி ராமன்

    6. கொட்டாவி சேவை - 1

    7. கொட்டாவி சேவை - 2

    8. ஏட்டுச் சுரைக்காய்

    9. ரா... ரா... ரா...

    10. சாப்பாட்டு ராமன்

    11. ஞானமும் பூனையும்

    12. மணற்கோபுரம்

    13. சந்தேக சிகாமணி - 1

    14. சந்தேக சிகாமணி - 2

    15. சந்தேக சிகாமணி – 3

    1. ஏ... கத்திரிக்கா...

    ஒரு சிலருக்கு அவர்கள் அவர்கள் எதை அடிக்கடி சொல்கிறார்களோ அதுவே பெயராகிவிடுகிறது.

    உதாரணத்திற்கு வாசலில் தலைமீது கூடை நிறைய கத்தரிக்காயை சுமந்துகொண்டு விற்க வரும் பெண்ணை,

    ஏ கத்தரிக்கா என்று கூப்பிட்டால் அவள் மகிழ்ந்துபோய் அருகில் வருகிறாள். உண்மையில் அவளா கத்தரிக்காய்?

    ஒரு பத்து நிமிஷம்‌ அவள் கத்தரிக்கா கத்தரிக்கா என்று கூவியதற்கே அவள் பெயர் கத்தரிக்காய் என்றாகிவிடுகிறது.

    தொடப்பம் விற்க வரும் வியாபாரிக்கும் அதுதான் பெயர். அவரும் கோபம் கொள்வதில்லை.

    எனவே நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை எதுவோ அதுவே நமக்குத் தெரியாமலே நமது பெயராகிவிடும் வாய்ப்புள்ளது.

    எனவே, பேசும் சொற்களில் கவனம் தேவை.

    உலக விஷயங்களுக்கே இப்படி என்றால், இறைவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் நமது பெயர், நிலை, உருவம் எல்லாம் இறைவனாக மாறிவிடுமல்லவா?

    2. நாராயண கோஷம்

    ஹிரண்யகசிபுவைப் பற்றி அனைவரும்‌அறிவோம். பக்த ஸாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியான ப்ரஹலாத மஹராஜின் தந்தை. ஈரேழு பதினான்கு லோகங்களும் ஹிரண்யனுக்கு அடிமைப்பட்டிருக்க, அவனது உதிரத்திலேயே உதித்த ப்ரஹலாதன் மட்டும் ஹரிநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    அவனை ஹரிநாமத்தை மறக்கச் செய்து தனது பெயரை ஜபம் செய்யும்படி அறிவுறுத்துவதற்காக பாடசாலைக்கு அனுப்பினான் ஹிரண்ய கசிபு.

    ஹரியைப் பகைத்துக்கொண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்த அவனால் ஒரு உத்தம ஹரிதாஸனைப் பகைத்துக்கொண்டு ஐந்துவருடம் கூட வாழமுடியவில்லை.

    அசுரகுருவான சுக்ராசாரியார் ஹிரண்யகசிபுவின் நிலைமை தெரிந்து ஹிரண்யனோ சொன்னால் கேட்கமாட்டான். தனக்கு பாகவத அபசாரம் வேண்டாம் என்று தீர்த்தயாத்திரை கிளம்பிச் சென்றுவிட்டார். அவரது மகன்களான சண்டனும் அமர்க்கனும் பாடசாலையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

    சந்தனமரம் இருந்தால் போதும். தானாகவே அதனுடைய நறுமணம் காற்றில் பரவி வரும். அதுபோல், ப்ரஹலாதன் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் நாராயண நாமம், பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளிடமும் பரவ ஆரம்பித்தது.

    ப்ரஹலாதன் ராஜா வீட்டுக் குழந்தையானதால், மிகவும் கண்டித்துச் சொல்லவும் சண்டாமர்க்கர்களுக்கு பயம். எனவே,

    இருவரும் தினமும்

    Enjoying the preview?
    Page 1 of 1