Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ippadikku... Un Uyir!
Ippadikku... Un Uyir!
Ippadikku... Un Uyir!
Ebook131 pages50 minutes

Ippadikku... Un Uyir!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொள்ளாச்சியின் ஒரு பெரிய செல்வந்தர் குடும்பத்தின் ஒரே வாரிசு அமுதா. கோவையிலுள்ள ஒரு கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கிறாள். அவளுக்கு ஒரு வினோத குணம். பெரும் பணக்காரியாய் இருந்த போதிலும் சக மாணவர்களின் பர்ஸைத் திருடி அதிலுள்ள பணத்தை செலவு செய்வது அவளுக்கு ஒரு பொழுது போக்கு.
ஒரு முறை சக மாணவனான அருணின் பர்ஸைத் திருடுகிறாள். அதில் பெரிய தொகை இருக்க, சக தோழிகளுடன் ஷாப்பிங் மால்களுக்கெல்லாம் சென்று இஷ்டம் போல் செலவழிக்கிறாள். ஊட்டிக்கு பிக்னிக் செல்கிறாள்.
ஊர் திரும்பிய பின், அந்த அருண் இழந்த பணத்தைச் சம்பாதிப்பதற்காக மாலை நேர ஹோட்டலில் பேரராக பணி புரிவதை அறிந்து விசாரிக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு தான் செய்த அந்தக் காரியத்தால் ஒரு பெண்ணின் உயிர் போயுள்ளது, என்ற உண்மை தெரிய வருகின்றது.
மீதியை வாசித்து ரசியுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005109
Ippadikku... Un Uyir!

Read more from Mukil Dinakaran

Related to Ippadikku... Un Uyir!

Related ebooks

Reviews for Ippadikku... Un Uyir!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ippadikku... Un Uyir! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    இப்படிக்கு... உன் உயிர்!

    Ippadikku... Un Uyir!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    கதிரவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் மகளிர் விடுதி.

    நேரம் இரவு பனிரெண்டு மணி.

    மற்ற அறையிலுள்ள மாணவிகள் அனைவரும் விளக்கை அணைத்து விட்டு உறக்கத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கிருந்தனர். சிலர் தேர்வு பற்றிய கவலைகளுடன், சிலர் பாய் ஃபிரெண்ட் பற்றிய கனவுகளுடன்.

    ஆனால், அறை எண்-56ல் மட்டும் இன்னும் விளக்கு அணைக்கப்படாமலே இருந்தது. உள்ளிருந்து வந்து கொண்டிருந்த அந்த அறைப் பெண்களின் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும், கூச்சலும், கும்மாளமும் அந்த இரவு நேர அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்க...

    கோபமாய் தன் அறையிலிருந்து கிளம்பினாள் வார்டன் ஜெயலட்சுமி. இதுகெல்லாம் பொண்ணுகளா? இல்லை... பேய்க் குட்டிகளா? என்னை உய்ரெடுக்கவே வந்து சேர்ந்திருக்குதுக!

    பட... படவென அறைக் கதவு தட்டப்பட, பொசுக் கென்று அந்த அறை அமைதியானது.

    உள்ளே, தாறுமாறாய்ப் படுத்தவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த அறைப் பெண்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    யாருடி... இந்த நேரத்துல மீனா அமுதாவைப் பார்த்து சன்னக் குரலில் கேட்டாள்.

    அநேகமா அந்த வார்டன் பூசணிக்காயாய்த்தான் இருக்கு! அவளோட பேச எங்களால முடியாது! அருமைத் தலைவி அமுதா அவர்களே! நீங்களே போய்க் கதவைத் திறந்து அவளைச் சமாளிங்க என்றாள் இன்னொரு ரூம் மேட் விமலா.

    அவள் குறிப்பிட்டது போல் அமுதாதான் அந்த அறையின்... அவள் படிக்கும் வகுப்பின்... ஏன்? அந்தக் காலேஜுக்கே... ராணி. எங்கும்... எதற்கும்... எப்போதும் அஞ்சாதவள். வெளியூரிலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் அவளைப் பார்த்து உள்ளூர் மாணவிகள் நடுங்குவர். மாணவர்களோ லெக்சரரைப் பார்த்து பணிவாய் விஷ் பண்ணுவது போல், அவளைப் பார்த்து விஷ் பண்ணி விட்டுச் செல்வர்.

    காரணம்? அவள் அப்பா.

    பொள்ளாச்சியிலுள்ள ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே மகள் அவள். ஒரு மனிதன் ஒரு தொழிலில் வெற்றியடைவதே குதிரைக் கொம்பாய் இருக்கும் இந்தக் கால கட்டத்தில் ஏழெட்டுத் தொழில்களில் நெம்பர் ஒன்னாக விளங்கும் அவரது பாக்கெட்டில் பல முக்கிய அதிகாரிகளும்... மந்திரிகளும் உண்டு.

    நினைத்ததைச் சாதிப்பார். சாதிக்க முடியாது! என்று எதையுமே நினைக்க மாட்டார்.

    அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கா என்னும் சொலவடை எங்கு உண்மையாகிறதோ? இல்லையோ... அமுதா விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டிருந்தது.

    அப்பாவைப் போலவே அதிகார குணம். அடங்காத்தனம். அலட்சியப் பேச்சு. ஆணவப் போக்கு. சட்டென்று கையை நீட்டி விடும் தைரியம்.

    அறைத் தோழிகள் பல முறை கேட்டிருக்கிறார்கள், ஏண்டி அமுதா... உனக்கிருக்கற வசதிக்கு நீயெல்லாம் காலேஜுக்கு வரணுமா? வீட்டில் இருந்திட்டே அட்டெண்டன்ஸையும், டிகிரியையும் விலைக்கு வாங்கி விட வேண்டியதுதானே?

    சரி... அப்படித்தான் வந்தே? இந்தப் பாடாவதி ஹாஸ்டல்ல... பாம்புகள் பல்லிகள் மத்தியில் தங்கியிருக்கணும்!னு உனக்கென்ன விதியா? அழகா... வெளிய ஒரு தனி வீடு பார்த்து, சமையலுக்கு ஒரு ஆளு, மத்த எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆள்!ன்னு வெச்சுக்கிட்டு ஜாலியாய் வந்திட்டுப் போக வேண்டியதுதானே?

    நோ... எப்பப் பாரு ஏ.சி.கார்ல போயிட்டு... ஏ.சி.பங்களாவுல இருந்துக்கிட்டு... ஹை கிளாஸ் உணவுகளைச் சாப்பிட்டுக்கிட்டு... காஸ்ட்லி டிரஸ்களைப் போட்டுக்கிட்டு... வாழுற அந்த பணக்கார... மேல் மட்ட வாழ்க்கை எனக்கு ரொம்ப போரடிச்சிடுச்சு! அதான்... கொஞ்ச காலம் இப்படியும் இருந்து பார்க்கலாமே?ன்னு இங்க வந்திட்டேன்! அதே ஊர்ல... அதே வீட்டுல... அதே வாழ்க்கையை வாழ்ந்திட்டிருந்தா... எதிர்காலத்துல மலரும் நினைவுகள்!ன்னு சொல்லிக்கறதுக்கு எதுவுமே இல்லாமப் போயிடும்! ஸோ... நான் வருங்காலத்துக்கான மலரும் நினைவுகளை இப்போதிருந்தே சேமிக்கறேன்! என்னோட இந்த ஆசையை... எங்கப்பா கிட்ட சொன்னேன், அவர்தான் என்னோட எந்த ஆசைக்குமே தடை போடாதவராச்சே? உனக்கு அதுல சந்தோஷம் கிடைக்கும்ன்னா தாராளமாய்ப் போய் இரும்மான்னு அனுப்பிட்டார்

    அறைக் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. இந்த முறை அந்த தட்டலில் அதிக கோபமிருந்தது.

    அமுதா அம்மையாரே... ப்ளீஸ்... போய்த் திறங்க! அந்த வார்டன் சனியம் கதவை உடைச்சாலும் உடைச்சிடும் விமலா கெஞ்சினாள்.

    விருட்டென கோபமாய் எழுந்த அமுதா, அதே வேகத்தில் சென்று கதவைத் திறந்தாள். முகத்தில் சரவெடியோடு வார்டன் ஜெயலட்சுமி நின்றிருக்க, என்ன மேடம்? என்ன வேணும்? சற்றும் பணிவின்றி உரத்த குரலில் கேட்டாள்.

    இப்ப... மணி என்ன தெரியுமா? வார்டன் குரல் கோபம் கலந்து வந்தது.

    ஏன் மேடம்... உங்க வாட்ச் ரிப்பேரா? என்று அமுதா கேட்க, அறைக்குள்ளிருந்து சிரிப்பொலி.

    ஸ்டுப்பிட்... மணி பனிரெண்டரை ஆகப் போகுது... இன்னும் தூங்காம லைட்டை போட்டுக்கிட்டு என்ன பண்ணிட்டிருக்கீங்க? அதிரடிக் குரலில் ஆக்ரோஷமாய்க் கேட்டாள் வார்டன்.

    அது... வந்து... தூக்கம் வரலையா? அதான்... சும்மா... பேசிட்டிருந்தோம் மேடம் உள்ளேயிருந்து மீனா சொல்ல,

    தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டுப் பேசற அளவுக்கு அப்படியென்ன முக்கியமான டிஸ்கஷன்? கேட்கும் போது வார்டனின் பார்வை அறைக்குள் எட்டி நோட்டமிட்டது.

    ஏன் மேடம் சிரமப்பட்டு எட்டிப் பார்க்கறீங்க? தாராளமா உள்ளேயே வந்து பாருங்க! என்று சொல்லி வழி விட்டாள் அமுதா.

    நோ... நோ... அதெல்லாம் வேண்டாம்! லைட்டை ஆஃப் பண்ணிட்டுத் தூங்கற வேலையைப் பாருங்க! என்று சொல்லி விட்டு வார்டன் நகர,

    நீங்க ஏன் மேடம் இன்னும் தூங்காம முழிச்சுக்கிட்டிருக்கீங்க? அமுதா திருப்பிக் கேட்டாள்.

    அவளுக்கு பதில் சொல்லப் பிரியம் இல்லாதவள் போல் வார்டன் ஜெயலட்சுமி வேகமாய்த் திரும்பி, நீ யார்? என்னைக் கேட்க? என்று கேட்காமல் கேட்டு விட்டு, அலட்சியமாய் நடந்து சென்றாள்.

    ஒரு வேளை பக்கத்துல புருஷன் இல்லாம மேடத்தாலே தூங்க முடியலையோ? என்னவோ? அறைக்குள்ளிருந்து விமலா சொன்னதும்,

    வார்டன் ஜெயலட்சுமியின் முதுகிற்குப் பின்னால் அந்தப் பெண்கள் கல... கலவெனச் சிரித்தனர்.

    பிரின்ஸி கிட்ட சொல்லி புருஷனையும் இங்க கூட்டிக்கிட்டு வந்திட வேண்டியதுதானே? எவளோ ஒருத்தி பகிரங்கமாகவே சொல்ல,

    விருட்டென்று தலையைத் திருப்பி அவர்களைப் பார்த்து முறைத்த வார்டன், நீங்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு... ஒரு முரட்டுத்தமான புருஷன் கிட்டேயோ?.இல்லை... கொடுமைக்கார மாமியார் கிட்டேயோ? சிக்கிச் சீரழியும் போதுதான் தெரியும் என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றாள்.

    "கவலையேபடாதீங்க அக்கா... நாங்கெல்லாம் மாமியார் இல்லாத வீட்டுக்குத்தான் மருமகளா

    Enjoying the preview?
    Page 1 of 1