Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alien Mama
Alien Mama
Alien Mama
Ebook59 pages24 minutes

Alien Mama

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீட்டை விட்டு ஓடிப் போய் காதல் திருமணம் செய்து கொண்ட வந்தனா; பல வருடங்களுக்குப் பிறகு, கிராமத்திலிருந்து அவளை பார்க்க வரும் அவளது அண்ணன்; டெக்னாலஜி பற்றி ஒன்றுமே தெரியாத தனது மாமாவை ஓர் ஏலியனைப் போல் பாவிக்கும் வந்தனாவின் குழந்தைகள்; மாமாவிற்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் நகைச்சுவையான உரையாடல்களும், மாமாவுடன் அவரது ஊருக்குச் செல்லும் குழந்தைகளின் புத்துணர்ச்சி அளிக்கும் சேட்டைகளும் சுவாரசியம். மாமாவால் குழந்தைகளின் சேட்டைகளை சமாளிக்க முடிந்ததா? வந்தனாவை அவளது பெற்றோர் மன்னித்தார்களா? குழந்தைகள் மாமாவை புரிந்து கொண்டார்களா? இறுதியில் அனைவரும் ஒன்றாய் இணைந்தார்களா என்பதெல்லாம் மீதிக் கதை!!!

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580150007718
Alien Mama

Read more from Kavani

Related to Alien Mama

Related ebooks

Reviews for Alien Mama

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alien Mama - Kavani

    https://www.pustaka.co.in

    ஏலியன் மாமா

    Alien Mama

    Author:

    கவாணி

    Kavani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தலைநகராம் தில்லியில் கிழக்கே பார்த்து அமைந்திருந்த அழகானதொரு அபார்ட்மென்ட் வீடு. அந்தக் காம்பவுன்டில் நானூறு குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வந்தனர். அதில் பத்தாவது மாடியில் வலது பக்கத்து வீடு வந்தனாவிற்குச் சொந்தமானது.

    அன்று, வந்தனா அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். முப்பத்தைந்து வயது இளநரையை, மங்கிய கருப்பு நிற முடிகளுக்குள் ஒளித்து வைக்கவே அவளுக்கு எக்ஸ்ரா டைம் தேவைப்பட்டது. ஒருவழியாய் அந்த டாஸ்கை வெற்றிகரமாகச் செய்துவிட்டு கண்ணாடிக்கு குட்பை சொல்லி நகர்ந்தாள்.

    தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் இருந்து கதர் வேட்டி சட்டையுடன் டில்லியில் இறங்கிய வந்தனாவின் அண்ணன், சோபாவில் உட்கார்ந்து நடப்பவற்றை ஹாயாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் இப்பொழுதுதான் முதல் முறையாய் கிராமத்திலிருந்து தனது தங்கை வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரது நெடுநாள் கோபங்கள் காலத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கரைந்து போயிருந்தன.

    வந்தனாவின் பிள்ளைகள் ஐந்து வயது அமுதாவும் எட்டு வயது அநையும் ஒரு ‘டேப்’பிற்குள் தலைகளை விட்டு இதயத்துடிப்பு எகிறிக் குதிக்க பரப்பரப்பாய் ஏதோ கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இவ்வாறு விளையாடும்போது காதிற்குள் சங்கை வைத்து ஊதினாலும் அவர்களுக்குக் காது கேட்காது. வந்தனா இரண்டு மூன்று முறை கோபமாக வார்னிங் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அவள் ஆக்ஸனில் இறங்கினாள். சடாரென்று

    அந்த டேப்பைப் பிடுங்கித் தனது ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டாள். அப்பொழுதுதான் அந்த கேமிங் உலகத்திலிருந்து பூமிக்குள் குதித்த அவர்கள் இருவரும், அவர்களது அம்மாவைத் திரும்பிப் பார்த்தனர்.

    மம்மி.. மம்மி.. ப்ளீஸ்… ப்ளீஸ்… சண்டைக் கோழிகள் இருவரும் ஒரே குரலில் கெஞ்சினர்.

    எப்பப் பார்த்தாலும் இது வச்சு நோண்டிக்கிட்டு இருக்கீங்க.. இன்னைக்கு ஒரு நாளாவது அந்தக் குட்டி மூளைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க கோபமாகக் கூறினாள் வந்தனா.

    மம்மி.. மம்மி ப்ளீஸ்… மம்மி…

    அவள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் ஆபிஸ் கிளம்புவதில் மும்முரமாக இருந்தாள்.

    குழந்தைகள் அப்போதுதான் அங்கு உட்கார்ந்திருந்த மாமாவை நோட்டம் விட்டனர். மாலில் வைத்திருக்கும் ஆளுயரக் கரடி பொம்மையைப் பார்ப்பது போல் அதிசயமாகப் பார்த்தனர்.

    வந்தனா, மாமாவே இவ்வளவு வருசம் கழிச்சு இப்பதான் வந்திருக்காங்க. நான் வர வரைக்கும் மாமாக்கு தொல்ல கொடுக்காம்ம சமத்தா இருக்கணும். ஓ.கே? என்றாள்.

    இருவரும் ‘மாட்டேன்’ என்று தலையாட்டிக் கொண்டே ‘ ஓ.கே மம்மி’ என்று கம்மிய குரலில் கூறிவிட்டு மாமாவை முறைத்தனர்.

    மாமா இவர்கள் செய்கைகளை கவனித்துவிட்டுச் சிறிது அதிர்ச்சியாய் வந்தனாவைப் பார்த்தார். வந்தனா அவசரமாய் ஹேண்ட் பேக்கில் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

    மேலும் அவசரமாய் டேபிள்ள சாப்பாடிருக்கு.. என்று கத்திக்கொண்டே கதவுவரை சென்றவள், பின் ஏதோ மறந்தவளாய்த் திரும்பி

    Enjoying the preview?
    Page 1 of 1