Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Lockdown Kaadhal
Lockdown Kaadhal
Lockdown Kaadhal
Ebook91 pages35 minutes

Lockdown Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது நண்பர், திரைப்பட இயக்குநர், தனது தோழியுடன் பயணம் செய்த போது, அவரது வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து, அதனைத் திரைக்கதையாக எழுதச் சொன்னார். அந்த உண்மைச் சம்பவங்களோடு எனது கற்பனையையும் சேர்த்து இந்தக் குறுநாவலை எழுதியுள்ளேன். விரைவில், இக்கதை சில மாற்றங்களுடன் முழு நீளத் திரைப்படமாக வெளிவர இருக்கிறது!!!

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580150007720
Lockdown Kaadhal

Read more from Kavani

Related to Lockdown Kaadhal

Related ebooks

Reviews for Lockdown Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Lockdown Kaadhal - Kavani

    https://www.pustaka.co.in

    லாக்டவுன் காதல்

    Lockdown Kaadhal

    Author:

    கவாணி

    Kavani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    சென்னை

    கட்டணம் செலுத்தித் தங்கும் வீடுகள் சென்னையின் பல இடங்களையும் ஆக்ரமித்திருந்தன. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மென்பொருள் துறையில் வேலை செய்வோர், ஓரிரு மாதங்களுக்கு அலுவலகத்தில் பயற்சிக்கு வருவோர் என எல்லாருமே 'பி.ஜி' எனப்படும் இந்த மாதிரி தங்கும் வசதிகளையே விரும்பினர். அதே போன்றதொரு அடுக்குமாடியின் ஒரு தளத்தில் தங்கியிருந்தனர் சித்தாராவும் அவளது தோழி நித்யாவும்.

    அந்த அறையில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமே இல்லை. இருவருக்கும் தனித்தனியே கட்டில்கள். இரண்டு மேஜைகள், இரண்டு அலமாரிகள், ஒரு மின்விசிறி, ஒரு ஏ.சி. இவற்றைத் தவிர அவர்களது உடைமைகள் என்று ஏதும் இல்லை. நித்யா எப்பொழுதும் மடிக்கணினியுடன் இருப்பாள். அதை அவளிடமிருந்து பிடுங்கி விட்டால் அவளால் மூச்சுவிட முடியுமா என்று கூட சில சமயங்களில் சந்தேகம் வரும். ஏன் ஒரு முறை, அது பழுதாகிப் போக, ஐந்து நாட்கள் அதைக் கடையில் கொடுக்க வேண்டியிருந்தது. அவளால் சரியாகத் தூங்க முடியவில்லை; சாப்பிட முடியவில்லை; அவளது வாழ்க்கையே ஸ்தம்பித்து விட்டது. சித்தாராவிடமும் ஒரு மடிக்கணினி இருந்தது. அதை விட பெரியதாக ஒரு நிழற்படக் கருவியும் இருந்தது. அவளுக்கு நிழற்படங்களின் மேல் காதல். அந்த அறைக்கு வரும் எலி, எறும்பு, சிலந்தி என்று எதையும் அவள் விட்டுவைப்பதில்லை. அவ்வளவு ஏன், அவளுடைய அறையின் ஜன்னலில் இருந்து 180 டிகிரி கோணங்களிலும் அவள் நிழற்படங்கள் எடுத்து வைத்திருக்கிறாள். படம் பிடிப்பதில் விருப்பம் உள்ளவர்களை நமது அறை நண்பர்களாக பெறுபவர்கள் அதிர்டசாலிகள். அப்படித்தான் நித்யா மனதார நம்பினாள். ஏனென்றால் நித்யா தினமும் காலையில் அழகாய் உடை உடுத்தி வெளியே வந்ததும் அவளை ரசித்து ரசித்துப் பல கோணங்களில் படம் பிடித்துவிடுவாள் சித்தாரா. சித்தாரா மட்டும் ஆணாய் இருந்திருந்தால் அவனை மணமுடித்து அந்த அறையிலேயே அவன் கூடவே தங்கி விட்டிருப்பாள் நித்யா.

    சித்தாரா ஆர்வமாய் கணினியில் சில படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    சித்து… என்ன ஆபீஸ்ல எடுத்த போட்டோஸ்ஸா? என்றபடி அருகில் வந்தமர்ந்தாள் நித்யா.

    நான் போட்டோ எடுத்தா இப்படி எல்லாமா எடுப்பேன்? பாரு இந்த போட்டோல்ல சுத்தமா ப்ரைட்னெஸ்ஸே இல்லை; இதில் திரும்பி நிற்கிறாரு.. மூஞ்சியப் பார்க்கத் தானே கேட்டோம்.. இப்படி முதுகை காட்டினா?.. இது ஸேக் ஆகியிருக்கு. ஒரு போட்டோவைக் கூட உருப்படியா அனுப்ப முடியலை. இவங்களுக்கு பேஸ்புக் பார்க்காத, வாட்ஸ்ஆப்பில் சாட் பண்ணாத பெண் வேணுமாம். என்று கோபமாய்ச் சித்தாரா கூறினாள்.

    ஓ.. மேடமுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களா? ஐயோ பாவம்.. இருபத்து மூன்று வயசாச்சு, பெரிய ஐடி கம்பெனியில் வேலை பண்றே? போட்டோகிராபி எல்லாம் படிச்சிருக்கிறே? ஏதோ 90s கிட்ஸ் மாதிரி வீட்டில் மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்றே? உனக்கு வெட்கமா இல்லை? என்று பரிகாசம் செய்தாள் நித்யா.

    பேசுவடி… பேசுவ.. நீ பாத்துட்டுதானே இருக்க. நானும் நாலு வருசமா முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன். ஆனா, எந்த கேரக்டரும் எனக்கு செட் ஆக மாட்டேங்குதே சித்தாரா நித்யாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, 'டின் டின்' என்ற ஓசையுடன் அவளுக்கு மின்னஞ்சலில் ஒரு தகவல் வந்தது.

    திறந்து பார்த்தாள் சித்தாரா.

    'ஜதகம் பெருந்திவந்த்துசு. பென் பாக வருவ' என்ற தகவலுடன் ஒரு ஆணுடைய புகைப்படம் இருந்தது.

    என்ன உங்க அம்மா தமிழ் வாத்தியார் போல்ல. அழகான தமிழ்ல மெசேஜ் அனுப்பியிருக்காங்க. என்று கிண்டல் அடித்தாள் நித்யா.

    இப்ப அதுவா முக்கியம். இவனைப் பாரேன். நல்லாதா இருக்கான். ஆனா, லிப்ஸ் கருப்பா இருக்கே. நீள மூஞ்சி வேற. ஹேர் ஸ்டைல் கூட அவ்வளவு நல்லா இல்லே.. ப்யூச்சர்ல சொட்டை ஆயிடுவான்னோ என்று சித்தாரா கேட்க,

    நித்யா மனதாரச் சிரித்தாள்.

    பசங்கள்ள மொத்தம் இரண்டே வகைதான். ஒண்ணு ஆல்ரெடி சொட்டையா இருக்கவங்க. இன்னொன்னு சொட்டை ஆகப் போறவங்க

    "ம்.. சரி விடு.. எங்கம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1