Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irattai Dhrogam
Irattai Dhrogam
Irattai Dhrogam
Ebook75 pages24 minutes

Irattai Dhrogam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திறமையால் அயராது உழைத்து சம்பாதித்த சொத்துக்களை, சூழ்ச்சியால் அபகரிக்க நினைக்கும் பொறாமை பிடித்தவர்கள் இச்சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை எப்படி வென்றார்கள் ஆனந்தி, சம்பத்? வாசிப்போமா இரட்டை துரோகம்!

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580100609614
Irattai Dhrogam

Read more from Devibala

Related to Irattai Dhrogam

Related ebooks

Reviews for Irattai Dhrogam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irattai Dhrogam - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இரட்டை துரோகம்

    Irattai Dhrogam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அந்தக் கேள்வியை முற்றிலுமாக அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாதிரி நிலைகுலைந்து போயிருந்தான்.

    நீங்க உடனடியா பதில் சொல்ல வேண்டாம். யோசிக்க அவகாசம் எடுத்துக்கலாம்.

    அவன் மௌனமாக வெளியே வந்து தன் கேபினுக்குள் நுழைந்தான்.

    கம்ப்யூட்டரில் சில சில்லறை வேலைகள் இருந்தன.

    அதை முடித்துவிட்டுச் சாய்ந்து உட்கார்ந்தாள்.

    அந்த ஏ.ஸியிலும் அவனுக்கு வியர்த்தது.

    இந்த எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அவன் சேர்ந்து ஒரு வருஷம்தான் ஆகிறது. கம்ப்யூட்டர் என்ஜினியர் பதவி. எட்டாயிரம் ரூபாய் சம்பளம்.

    சம்பத் தனி ஆள்தான்.

    உறவென்று இருந்த ஒர் அம்மாவும் இரண்டு வருஷம் முன்னால்தான் மாரடைப்பில் கண் மூடினாள்.

    ஆண்கள் தங்கும் ஒரு கெச்சலான மேன்ஷன் பகுதியில் வேறொருவனுடன் வாடகையைப் பகிர்ந்துகொண்டு அதில் கொசுக்களுடன் குடியிருக்கிறான் சம்பத்.

    நல்ல சம்பளம் வருவதால் தனி வீடு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ப்ரோக்கரிடம் பொறுப்பை ஒப்படைத்தது போன வாரம்தான்.

    இவன் வேலைக்குச் சேர்ந்த சமயம் இந்தக் கம்பெனியின் எம்.டி. + சேர்மன் ஆதித்தன். அப்போதே நோய் காரணமாக அடிக்கடி வரமாட்டார். அவள் மகள் ஆனந்திதான் அவருடன் வந்து நிர்வாகத்தில் பெரும்பங்கை சொந்தமாக்கிக் கொண்டாள்.

    ஆறுமாதம் முன்பு ஆதித்தன் தலையைச் சாய்க்க, முழுப் பொறுப்பும் அவரது ஒரே மகளான ஆனந்தியின் தலையில் விழுந்தது.

    அதிலிருந்து ஆபீஸில் ஒரே கெடுபிடிதான்!

    அல்லி தர்பார்தான்.

    பல சீனியர் தலைகள் உருண்டன. உத்தியோகத்திலிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. யாரும் வேலை செய்யாமல் ஒரு நொடிகூட இருக்க முடியவில்லை.

    எந்த நேரமும் ‘மேடம்’ என்றால் ஒருவித நடுக்கம்தான் என்ற நிலை ஆபீஸில் பரவிவிட்டது.

    வர்த்தகமும் கணிசமாக ஏறிவிட்டது.

    இந்த ஆறு மாதங்களில் ஆனந்தி வாயில் விழுந்து எழாத ஒரே ஆள் சம்பத் மட்டும்தான்.

    தன் வேலையை நறுவிசாக. திருத்தமாக, வேகமாகச் செய்து முடிக்கும் அவனை ஆனந்தி கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் வந்தாள்.

    சம்பத் யாரிடமும் அனாவசிய அரட்டை அடிக்க மாட்டான். கம்பெனியின் முழு விவரங்களும் தெரிந்தவன்.

    அவளும் வேலை தவிர எதையும் அவனிடம் பேசமாட்டாள். இன்று பேசி விட்டாள்.

    முன் பின் யோசிக்காமல், பளீரெனக் கேட்டுவிட்டாள்.

    ப்யூன் வந்து சொன்னதும், வழக்கம் போல ஏதோ கம்ப்யூட்டர் சிக்கல் என்று நினைத்துத்தான் அவள் கேபினுக்குள் நுழைந்தான் சம்பத்.

    உக்காருங்க சம்பத்!

    என்ன விஷயம் மேடம்?

    அவனை ஏற இறங்கப் பார்த்தாள். சம்பத், நீங்க யாரையாவது காதலிக்கறீங்களா?

    அதிர்ந்து நிமிர்ந்தான். அப்படி ஏதாவது புகார் வந்திருக்கா உங்களுக்கு?

    இல்லை.

    பின்ன ஏன் இந்தக் கேள்வி? எனக்குக் காதல்ல நம்பிக்கையே கிடையாது!

    "அப்படீன்னா கல்யாணமே

    Enjoying the preview?
    Page 1 of 1