Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhuvana Oru Puthumai Penn
Bhuvana Oru Puthumai Penn
Bhuvana Oru Puthumai Penn
Ebook184 pages1 hour

Bhuvana Oru Puthumai Penn

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பத்தாரின் கடும் எதிர்ப்புக்கிடையில் ஆட்டோ ஓட்டுனராகிறாள் புவனா. சவாரியின் போது, தனக்கு தோழியாகக் கிடைத்த அசிஸ்டெண்ட் கமிஷனர் உமாதேவியின் உதவியோடு, ஒரு ஆட்டோ ஓட்டுனராக இருந்து தான் காணும் சமூக அவலங்களை வெளிக் கொணர்ந்து நடவடிக்கை எடுக்கச் செய்கிறாள்.

போலிக் காதலனால் மும்பைக்குக் கடத்தப் பட இருந்த இளம் பெண்ணைக் காப்பாற்றுகிறாள்.

ராகிங் கொடுமையால் அவதியுற்ற கல்லூரி மாணவியைக் காப்பாற்றி மற்ற மாணவிகளுக்கு ராகிங் ஒரு சமூக அவலம் என்று எடுத்துரைக்கிறாள்.

எல்லோரும் தடுத்தும் தன் திருமணத்திற்கு இரண்டு நாள் இருக்கும் போதும் கூட சவாரிக்குச் செல்கிறாள். அப்போது, ஹைதரபாத் டிரெயினைப் பிடித்து, ஐ.டி.கம்பெனி இண்டர்வியூ போகும் இளைஞனுக்காக, ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்று, இடையில் ஒரு சிறு விபத்தைச் சந்தித்து, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவனை பத்திரமாக டிரெயின் ஏற்றி விடுகிறாள். ஆனால், அந்த விபத்தால் ஏற்பட்ட பெரிய காயத்தை பின்னால் உணர்கிறாள். மருத்துவமனையில் அட்மிட் ஆன புவனாவிற்கு மறுநாள் திருமணம்.

திருமணம் நடந்ததா...? திருமணத்திற்குப் பின்னால் புவனா மாறினாளா?

கதையைப் படிக்கும் வாசகர்கள் மனதில் எழும் இந்த கேள்விகளுக்கான விடை கதையின் இறுதி அத்தியாயத்தில்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004822
Bhuvana Oru Puthumai Penn

Read more from Mukil Dinakaran

Related to Bhuvana Oru Puthumai Penn

Related ebooks

Reviews for Bhuvana Oru Puthumai Penn

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhuvana Oru Puthumai Penn - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    புவனா ஒரு புதுமைப் பெண்

    Bhuvana Oru Puthumai Penn

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 1

    ஞான முத்ராம்... சாஸ்த்ரு முத்ராம்... குரு முத்ராம் நமாம் யஹம்! வன முத்ராம்... சுக்த முத்ராம்... ருத்ர முத்ராம் நமாம் யஹம்!

    பக்கத்துத் தெரு ஐய்யப்பன் கோவில் ஒலி பெருக்கி வழியாக காற்றில் கலந்து வந்து காதில் விழுந்த அந்த மந்திர ஓசை புவனாவிற்கு அந்தக் காலை நேரத்தில் பரவசத்தை ஏற்படுத்தியது. பாத்ரூமிலிருந்து குளித்து முடித்து வெளியே வந்தவள், எதிரில் வந்து நின்ற அம்மாவின் முகத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டாள், அவளுக்குத் தான் அந்தப் பணியில் சேர்வதில் துளியும் விருப்பமில்லையென்று.

    அதுக்காக...? அதுக்காக...? நான் என் முடிவை மாத்திக்க முடியுமா? நிலைக் கண்ணாடி முன் நின்று தானே தன் பிம்பத்துடன் வாதிட்டாள்.

    அறையின் கதவருகே வந்து நின்ற புவனாவின் தாய் கற்பகம், ஏய் புவனா...! அப்பா கூப்பிடறார்... வந்து என்ன?ன்னு கேட்டுட்டு அப்புறமா வந்து மூஞ்சிக்கு மேக்கப் போடு என்றாள்.

    அந்த மூஞ்சிக்கு மேக்கப் போடுவை அவள் அழுத்திச் சொன்ன விதத்திலிருந்தே அவளது உள் எரிச்சலை உணர்ந்து கொண்டாள் புவனா. ம்... வர்றேன்னு சொல்லு அலட்சியமாய் பதில் சொன்னாள் புவனா.

    ஏண்டி... என்னடி பழக்கம் இது...? அப்பாவுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா...? ஹூம்... வர வர உன்கிட்ட எல்லாப் பழக்கமுமே மாறிக்கிட்டு வருது...! இதெல்லாம் நல்லதுக்கில்லைன்னு எனக்குத் தோணுது!

    திரும்பி தன் தாயை ஒரு நேர்ப் பார்வை பார்த்த புவனா, ஏம்மா... நான் என்ன வர மாட்டேன்ன்னா சொன்னேன்...? வர்றேன்!னுதானே சொன்னேன்? கழுத்தைச் சாய்த்தபடி புவனா கேட்க,

    க்கும் இந்த வக்கணைப் பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை!" முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

    எப்படியும் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்ததைக் கேட்டுக் கொண்டு, தன்னை அந்தப் பணிக்குப் போக வேண்டாமென்றுதான் சொல்லுவார், என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த புவனா, அதை எதிர் கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டே சென்றாள்.

    ஏம்மா... புவனா...! உங்கம்மா என்னமோ சொல்லுறாளே... அது நெஜமா? வழக்கம் போல் நிதானமாக ஆரம்பித்தார் புவனாவின் தந்தை ராஜப்பன்.

    ஆமாம்ப்பா... இன்னிக்கு நல்ல நாள்... அதான் இன்னிக்குப் போய் டியூட்டில ஜாய்ன் பண்ணிடலாம்ன்னு கிளம்பிட்டிருக்கேன்!

    ம்மா... எனக்கென்னமோ அந்த வேலையெல்லாம் பொம்பளைக செய்யறதுக்கு தோதான வேலை இல்லைன்னு தோணுதும்மா...! நம்ம குடும்பம் காலகாலமா இந்த ஊர்ல ஒரு கவுரவத்தோட... ஒரு மரியாதையோட வாழ்ந்திட்டிருக்கற குடும்பம்...! அந்தக் குடும்ப கவுரவத்துக்கு பங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்திடாதேம்மா!

    புவனாவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது. தன் உள் மனக் கோபத்தை வார்த்தைகளாக்கிக் கொட்டினாள். அப்பா... நீங்க உங்க ரிடையர்மெண்ட் வரைக்கும் ஏதோ அரையும் குறையுமாய்ச் சம்பாதிச்சு... குடும்பத்தைக் காப்பாத்திட்டீங்க... குழந்தைகளை வளர்த்துட்டீங்க...! எங்களையெல்லாம் பெரிய அளவுல படிக்க வைக்காமப் போனாலும்... ஏதோ ஓரளவுக்கு கல்வியறிவையும் குடுத்துட்டீங்க...! உங்களுக்குப் பின்னாடி குடும்பப் பொறுப்பை ஏத்துக்க வேண்டிய உங்க மகன்... அதான் என்னோட அருமை அண்ணன் அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டானா...? ஹூம்... மொதல்ல பொறுப்புன்னா என்ன?ன்னாவது அவனுக்குத் தெரியுமா...? வேலை வெட்டிக்குப் போகாம கண்ட உதவாக்கரைப் பசங்களோட சேர்ந்துக்கிட்டு தான்தோன்றித்தனமா ஊர் சுத்திட்டிருக்கான் ஒரு முழு ஆம்பளைப்பையன்...! அது இந்தக் குடும்பத்தோட கவுரவத்துக்கு பங்கமில்லையா?

    அதைக் கேட்ட்தும் வீட்டின் புழற்கடைப் பக்கமிருந்த புவனாவின் அண்ணன் செல்வா, வேக வேகமாய் வந்து எதையோ சொல்ல வாயெடுக்க,

    அவனை வெறும் கையமர்த்தலில் அமைதிப்படுத்திய புவனா, ஏதோ உங்க பென்ஷன் பணத்துல இந்தக் குடும்பத்துல எல்லோரும் இன்னிக்கு வரைக்கும் அரை வயித்துக் கஞ்சி குடிச்சிட்டிருக்கோம்...! ரெண்டு மாசம் வீட்டு வாடகை பாக்கி... வீட்டு ஓனர் வந்து வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நாசூக்கா திட்டிட்டுப் போறார்... அது இந்தக் குடும்ப கவுரவத்துக்கு பங்கமில்லையா?

    அங்கு யாருமே அவள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியாதவர்களாய் வாயடைத்து நின்றனர்.

    அவர்களின் அந்த அமைதி நிலை புவனாவிற்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தி விட, அப்பா... மளிகைக்கடைக்காரன் பழைய பாக்கியை செட்டில் பண்ணாம இனி பத்துப் பைசா கூட கடன் தர மாட்டேனுட்டான்...! அம்மா பையை எடுத்துக்கிட்டு காய்கறி வாங்கப் போயிட்டு... எதுவுமே வாங்காம வெறும் பையோட திரும்பி வந்து, சுவற்று மூலைல உட்கார்ந்துட்டா... அதுல பறி போகலைய இந்தக் குடும்பத்தோட கவுரவம்...? நான் ஒருத்தி... இந்தக் குடும்பத்தோட பொருளாதார ஓட்டைகளை அடைக்கணும்கற ஒரே நோக்கத்தோட அந்தப் பணிக்குப் போறேன்...! அதுக்குப் பெருமைப் பட்டு... என்னை சந்தோஷமா வழியனுப்பி வைக்கறதை விட்டுட்டு என்னமோ ஆளாளுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்து சண்டைக்கு நிக்கறீங்களே... இது நியாயமா?

    அதுக்காக... அந்த வேலைக்குத்தான் போகணுமா...? வேற எத்தனையோ வேலைகள் இருக்கே பெண்கள் பார்க்கிற மாதிரி...? அண்ணன் செல்வா கேட்டு விட்டு, எப்படி என்னுடைய சாமார்த்தியம்?" என்பது போல் தன் தாயாரைப் பார்த்தான்.

    அப்படியா...? சரி... நான் போகலை...! நீ ஆம்பளைதானே நீ போறியா எனக்கு பதிலா அந்த வேலைக்கு? பொட்டில் அடித்தாற் போல் பொடீர்என்று கேட்டாள் புவனா.

    ஏய்... என்ன...? என்ன...? வாய் ரொம்ப நீளுது...! என்னைப் பார்த்தா அந்த வேலைக்குப் போகச் சொல்லுறே... ஹூம்... எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு தெரியுமா? குதித்தான் செல்வா.

    ஆஹா... ஹா... உன்னோட இமேஜ் என்ன?ன்னு எனக்குத் தெரியாதா? பசங்க கூடச் சேர்ந்துக்கிட்டு ஊர் சுத்தறது... கையேந்தி பவன்ல நின்னுக்கிட்டு கண்டதைத் திங்க வேண்டியது...! அப்புறம் பொட்டிக் கடைல கடனுக்கு சிகரெட் வாங்கி ஊதுறது...! த்தூ... இமேஜாம் இமேஜு...?

    புவனா அப்படி அவனுடைய சுயசரிதையை வெட்ட வெளிச்சமாக்கியதும், சட்டென்று ஆவேசமாகி, ஒரு தெரு ரவுடி போல், ஆய்... ஊய்என்று கத்திய செல்வாவை, சமையலறைக்குள்ளிருந்து வெளியே வந்த புவனாவின் தங்கை அருணா அடக்கினாள்.

    ச்சூ... உன்னோட அலப்பரையைக் கொஞ்சம் நிறுத்தறியா? ஓங்கிய குரலில் அவள் கத்த,

    படக்கென்று அமைதியானான் செல்வா.

    எல்லோருக்கும் மத்தியில் நின்று எல்லோருடைய முகத்தையும் ஒரு முறை ஆழமாய்ப் பார்த்த அருணா, உங்க எல்லார் கிட்டேயும் நான் ஒரு கேள்வி கேட்கறேன்...! புவனா ஆட்டோ ஓட்டுற வேலைக்குத்தானே போறா...? வேற அந்த மாதிரியான வேலை எதுக்கும் போகலையே?

    புவனாவின் அப்பாவும், அம்மாவும், அண்ணனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள,

    நீங்கெல்லாம் ஆளாளுக்கு அவளை நாலாப் பக்கமும் சுத்திச் சுத்தி வந்து பேசறதைப் பார்க்கும் போது அப்படித்தான் தெரியுது! என்றாள் அருணா.

    ஆஹா... அக்காளுக்கு ஆதரவா வந்துட்டாய்யா தங்கச்சிக்காரி! கற்பகம் விஷமமாய்ச் சொல்ல,

    இங்க பாருங்க... இது கற்காலமோ... சங்க காலமோ அல்ல...! பெண்களையெல்லாம் பூட்டுப் போட்டுப் பூட்டி வெச்சு... இந்த மாதிரிதான் நிற்கணும்...! இந்த மாதிரிதான் நடக்கணும்...! இந்த மாதிரிதான் உடை உடுத்தணும்!ன்னு சொல்லி அடிமைகளா நடத்த, இது இருபத்தியோராம் நூற்றாண்டு, இது ஆண் பெண் பாகுபாடெல்லாம் அகன்று போய், சமன்பாடு ஓங்கி நிற்கற நவீன காலம்...! இங்க பெண்களெல்லாம் போகப் பொருட்களல்ல! உயிருள்ள... உணர்ச்சியுள்ள... அறிவுள்ள... ஆற்றலுள்ள... ஆக்கப்பூர்வமான சிந்தனையுள்ள அவதாரங்களா உருவெடுத்திருக்காங்க!" அருணா சொல்லிக் கொண்டே போக, இடையில் புகுந்த ராஜப்பன்,

    ஏய்...! நீ சின்னப்பொண்ணு... உனக்கென்ன தெரியும்...? பேசாமப் போய் உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு! என்று அருணாவை எள்ளல் செய்ய,

    "அப்ப.அனுபவமுள்ள பெரியவரான நீங்களே சொல்லுங்க... இன்னிக்கு பெண்கள் விமானம் ஓட்டுறாங்க... ரயில் ஓட்டுறாங்க... அரசியல்ல ஈடுபட்டு ஆட்சி பீடத்தையே

    கைப்பற்றுறாங்க... அப்படியிருக்கும் போது... நம்ம அக்கா ஆட்டோ டிரைவராப் போறதில் என்ன தப்பு?"

    தன் தங்கையின் அந்தப் பேச்சைக் கேட்டதும் தன்னை மறந்து மகிழ்ச்சியில் கை தட்டினாள் புவனா. பரவாயில்லை இந்த வீட்டுக்குள்ளார எனக்காக குரல் கொடுக்க இன்னொரு ஜீவன் கூட இருக்கு!

    அக்கா... நீ கவலையேபடாத... க்கா...! நான் எப்பவும் உன் கட்சிதான்...! இந்தக் குடும்பத்துல இந்த ஆம்பளைக ரெண்டு பேரும் சாதிப்பதை விட பத்து மடங்கு அதிகமா நாம ரெண்டு பேரும் சாதிப்போம்...! நீ தைரியமா போ...! க்கா!

    எதிர்காலத்தை எழுச்சியுடன் சந்தித்து, ஏமாற்றங்களை ஏற்றங்களாய் மாற்றிட, வீறு கொண்டு நிமிர்ந்த அந்த இரு பெண்களையும் பாரதி பார்த்திருந்தால், பாட்டெழுதிப் பாராட்டியிருப்பான். இங்கு பாதகர்களும், பராரிகளும் மட்டுமே இருப்பதால்... பாராட்டு தற்காலிகமாய் முடங்கிக் கொண்டது.

    குடும்பத்தாரின் எதிர்ப்புக் கணைகள் தந்த ரணங்களோடு

    Enjoying the preview?
    Page 1 of 1