Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paathai Marantha Payanangal
Paathai Marantha Payanangal
Paathai Marantha Payanangal
Ebook144 pages53 minutes

Paathai Marantha Payanangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்னால் தன் மனைவியையும், இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையையும் பரிதவிக்க விட்டுவிட்டு சிங்கப்பூருக்குப் பிழைக்கச் சென்ற வெள்ளிங்கிரி, தான் திரும்பி வருவதாக தகவல் அனுப்ப,

மூத்த மகள் சரசு, இளைய மகள் திலகா, மற்றும் தியாகராஜன் மூவரும் ஒரு தீர்மானம் செய்கின்றனர். “வரப்போகும் தந்தையை யாரும் சந்திக்கப் போவதில்லை, சந்தித்தாலும் பேசப் போவதில்லை, பேசினாலும் அடைக்கலம் தரப் போவதில்லை” என்று.

தியாகராஜன் மனைவி செல்வி மட்டும், சிங்கப்பூரிலிருந்து வரும் தன் மாமனார் நிறைய சம்பாதித்துக் கொண்டு வருவார், அவை மொத்தத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வெள்ளிங்கிரியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.

சிங்கப்பூரிலிருந்து வரும் சொத்து…நேர் வழியில் வந்த சொத்தா?

அதை தியாகராஜனால் அனுபவிக்க முடிந்ததா?

நாவலை முழுமையாகப் படியுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130006340
Paathai Marantha Payanangal

Read more from Mukil Dinakaran

Related to Paathai Marantha Payanangal

Related ebooks

Reviews for Paathai Marantha Payanangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paathai Marantha Payanangal - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பாதை மறந்த பயணங்கள்

    Paathai Marantha Payanangal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    வீட்டின் முன் ஹாலில் அனைவரும் கூடியிருந்தனர்.

    இறுக்கமான முகத்துடன் எல்லோரும் அமர்ந்திருக்க, காரமடையிலிருந்து நேற்றே தன் கணவர் தங்கவேலுடன் வந்திருந்த மூத்தவள் சரசு மட்டும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.

    பருத்த உடலும், பம்மென்ற தலையும் கொண்ட அந்த சரசுவை பார்த்த யாருமே சட்டென்று கணிப்பது, அய்யோ...இவ மூஞ்சியைப் பார்த்தாலே சரியான வம்புக்காரின்னு எழுதி ஒட்டியிருக்கே? என்பதுதான். ஆனால் அவளுடன் பேசிப் பழக ஆரம்பித்த பின் அதே கணிப்பு, ஆஹா...பொம்பளைன்னா இவ பொம்பளை!... என்னவொரு அன்பான பேச்சு...பக்குவமான பழக்க வழக்கம்? என்று மாறிவிடும்.

    உள்ளூரிலேயே வாழ்க்கைப்பட்டு, அம்மா வாழ்ந்த அதே வீட்டில் கணவர் ஞான மூர்த்தியுடன் வாழ்பவள் கடைசிப் பெண் திலகா. அவள்தான் தன் அக்கா சரசுவையும், ஒரே தம்பியான தியாகுவையும் தன் வீட்டிற்கு வரவழைத்திருந்தாள். அதன் காரணமாகவே, அவர்கள் எல்லோருக்கும் அவ்வப்போது காஃபி..மற்றும் டீ வழங்குவதில் பிஸியாயிருந்தாள்.

    அந்த இரு சகோதரிகளுக்கும் அடுத்து, கடைசித் தம்பியாய்ப் பிறந்து இரண்டு அக்காக்களின் அன்போடு அரவணைப்போடும் வளர்ந்தவன் கடைக்குட்டி தியாகு. போன வருடம் அந்த அன்பான சகோதரிகளின் எதிர்ப்பையும் மீறி, தான் காதலித்த செல்வியைக் கைப்பிடித்தவன். அவனது அந்தச் செயல் சகோதரிகள் இருவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கிய போதும், அவர்கள் தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, அரை மனதுடன் அவன் திருமணத்தை முடித்து வைத்தனர். திருமணம் முடிந்த கையோடு மாமனார் வீட்டில் தஞ்சம் புகுந்து வீட்டோட மாப்பிள்ளை என்கிற அந்தஸ்தைப் பெற்றான்.

    த பாருங்க என்னுடைய அன்புச் சகோதரிகளே... நான் பார்க்கிற தொழில் ஃபைனான்ஸ் தொழில், வட்டிக்குக் கடன் கொடுத்து வசூல் பண்ணிப் பொழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கற...வசூல் ராஜா நான்!... எந்த நேரத்துல எவனைப் போய்ப் பார்த்தா வசூல் ஆகும்!... யாரை...எங்கே...போனால் பிடிக்கலாம்!... ன்னு ஒவ்வொரு நிமிஷமும் அதை பத்தியே நெனச்சிட்டு அலையறவன்!... அதனால...எதுக்கு என்னை அவசரமா வரச் சொன்னீங்க?ன்னு சீக்கிரம் சொன்னீங்கன்னா...கேட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன் இருபத்தி நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரம் பணம்...பணம்...வட்டி...அசல்... என்று மொபைலில் பேசிக் கொண்டேயிருக்கும் பக்கா ஃபைனான்ஸ்காரன்.

    டேய்...தியாகு நாங்க ஒண்ணும் உன்னைய விருந்து சாப்பிட இங்க அழைக்கலை!... ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி நாம நாலு பேரும் பேசி முடிவெடுக்கத்தான் இங்க கூடியிருக்கோம் கோபமாய்ச் சொன்ன மூத்தவள் சரசு, அது சரி...என்ன நீ மட்டும் வந்திருக்கே?... எங்க உன் காதல் பொண்டாட்டி...செல்வி?... ரெண்டு பேரும்தான் இப்பத் தனிக்குடித்தனம் போயிட்டீங்கல்ல?..அப்புறமென்ன அவளையும் கூட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே? கேட்டாள்.

    அட...நான் வெளிய வேற இடத்திலிருந்து வர்றேன்...அதனாலதான்...அவளைக் கூட்டிட்டு வர முடியலை என்றவன், மொபைலில் யாரையோ லைனில் வைத்துக் கொண்டே, அந்த முக்கிய விஷயத்தைத்தான் கொஞ்சம் சீக்கிரமே சொல்லுக்கா! கேட்டான்.

    அப்பா...சாமி...மொதல்ல அந்த மொபைலை ஆஃப் பண்ணி வெச்சிட்டு அப்புறமா பேசு சலித்துக் கொண்டாள்.

    ப்ச் என்று முணுமுணுத்துக் கொண்டே மொபைலை ஆஃப் செய்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ம்...இப்பச் சொல்லு என்றான்.

    தயவு செய்து நான் சொல்றதை எல்லோரும் கூர்ந்து கவனிங்க! என்று ஆரம்பித்த சரசு, மொதல்ல நம்ம குடும்பத்துல இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடநத ஒரு விஷயத்தை உங்களுக்கெல்லாம் ஞாபகப்படுத்திடறேன்... 1996-ல...நம்மையெல்லாம் பெத்த அப்பன்...மகாஸ்ரீஸ்ரீ வெள்ளிங்கிரி அவர்கள் நம்ம நாலு பேரையும்...நம்ம அம்மாவையும் விட்டுட்டு சிங்கப்பூருக்கு வேலை பார்க்கக் கிளம்பிப் போனார்!

    இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே அக்கா? குறுக்கே புகுந்து தியாகு சொல்ல,

    அடேய்... குறுக்கே பேசாதடா!

    சரி...சரி...சொல்லு...இனிப் பேசலை என்று தன் வலது உள்ளங்கையால் வாயைப் பொத்திக் கொண்டு, தியாகு சொன்னதும் சரசு தொடர்ந்தாள்.

    சிங்கப்பூர் போனவர் முதல் ஆறு மாசம் தவறாமல் கடிதம் போட்டார்...பணமும் அனுப்பினார்!..அதுக்குப் பிறகு ஏனோ அது கொஞ்சம் கொஞ்சமாய் நின்று போனது!... கடிதம் மட்டுமா நின்னு போச்சு?... அவர்கிட்டேயிருந்து வந்துக்கிட்டிருந்த பணமும் நின்னு போச்சு!... ..அம்மா ரொம்ப பயந்து போய்...யார்..யார்...காலையோ பிடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி...அவரோட சிங்கப்பூர் அட்ரஸுக்கு ஒரு லெட்டர் போட்டாங்க!... அந்த அட்ரஸில் ஆள் இல்லை!ன்னு...லெட்டர் செவுத்துல அடிச்ச பந்து மாதிரித் திரும்பி வந்திடுச்சு!... அதுக்கப்புறம் நம்ம குடும்பம் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது!... ஆனாலும் அம்மா எப்படியாவது நம்மையெல்லாம் காப்பாத்தி...ஆளாக்கியே தீரணும்கற ஒரு ஆவேச வெறில கடுமையா உழைச்சாங்க!... கட்டிட வேலைக்குப் போனாங்க...பங்களா வீடுகளுக்கு பத்துப் பாத்திரம் தேய்க்கப் போனாங்க!... பகலிரவு பார்க்காம கஷ்டப்பட்டு நாலு குழந்தைகளையும் வளர்த்தாங்க! சரசு சொல்லி விட்டு நிறுத்த,

    சரசக்கா...நான் ஒண்ணு கேட்கலாமா? சன்னக் குரலில் கேட்டான் தியாகு.

    ம்..கேளு

    ஏன்...சிங்கப்பூர் போன அப்பாவுக்கு என்னாச்சு?...

    உதட்டைப் பிதுக்கினாள் சரசு, யாருக்குத் தெரியும்?... உள் நாட்டுல எங்காவது இருந்திருந்தால் கூட நிச்சயமா யாராவது கண்ணுல பட்டிருப்பாரு!... ஆனா அவரு இருந்தது வெளி நாட்டிலாச்சே?... அதான் அவரைப் பற்றி எந்த தகவலுமே தெரியலை!... ஏழெட்டு வருஷத்துக்கும் மேலே அவரைப் பற்றிய தகவல் தெரியாமலேயிருக்க ஊர்ப் பெரியவங்கெல்லாம் சேர்ந்து... அவரு இறந்திருப்பார்ன்னு முடிவு பண்ணி...அவருக்கு காரியங்களைச் செய்யச் சொல்லி அம்மாவை வற்புறுத்தினாங்க!...

    அடப்பாவிகளா...அதெப்படி செய்ய முடியும்?... ஒருவேளை அவரு உயிரோட இருந்திட்டா...அது தப்பா போயிடுமே? தியாகு உடனே சொன்னான்.

    கரெக்ட்...அதே காரணத்தைச் சொல்லித்தான் அம்மாவும் இழுத்தடிச்சிட்டே இருந்தாங்க!... ஆனா...பதினஞ்சு வருஷத்துக்கு மேலே ஆனதும், குடும்பத்துல பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் கல்யாணத்தை முடிச்சதும், அம்மாவே தன்னோட மனசைக் கல்லாக்கிட்டு...அப்பாவுக்கு காரியத்தைப் பண்ணினாங்க!... ஆனா...அதைப் பண்ணிய மறு வாரமே அம்மாவுக்கு உடல் நிலை பாதிச்சுது...மூணே நாள்தான்..பொசுக்குன்னு உயிரை விட்டுடுச்சு சொல்லும் போது சரசு கண் கலங்கி விட்டாள்.

    சில நிமிடங்கள் அங்கு கெட்டியான அமைதி நிலவியது. எல்லோரும் தங்கள் மனதிற்குள் அந்தப் பழைய நினைவுகளைக் கிளறிப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

    சரசுவே தொடர்ந்தாள், இத்தனை வருஷத்துக்குப் பிறகு நாமெல்லாம் இங்க கூடி ஏன் இந்தக் கதையைப் பேசிட்டிருக்கோம்!ன்னா? என்று சொல்லி விட்டு சஸ்பென்ஸாய் நிறுத்தி, தன் உடன் பிறப்புக்களின் முகத்தை ஆராய்ந்தாள்.

    எல்லோர் முகத்திலும் புதிரான எதிர்பார்ப்பு. புருவ நெரிப்புக்கள்.

    இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி...நம்மையும்...அம்மாவையும் விட்டுட்டு சிங்கப்பூர் போன அப்பா... மகா ஸ்ரீ ஸ்ரீ வெள்ளிங்கிரி அவர்கள்... வர்ற புதன் கிழமை திரும்பி வரப் போறாராம்

    அதிர்ச்சி மற்றும் திகைப்பில், வாயைப் பிளந்தனர் சரசுவின் உடன் பிறப்புக்கள்.

    "இந்த தகவலை நம்ம லோகு மாமா...திலகா கிட்டே சொல்லியிருக்கார்!... அவ உடனே மூத்தவளான

    Enjoying the preview?
    Page 1 of 1