Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endha Moongil Pullankuzhal?
Endha Moongil Pullankuzhal?
Endha Moongil Pullankuzhal?
Ebook140 pages54 minutes

Endha Moongil Pullankuzhal?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடறிந்த பிரபல ஓவியர் பிரம்மா. அவர் படம் வரையாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு உடன் பயிலும் மாணவன் ஒருவன் காதல் கடிதம் எழுதி விட, மனைவியின் வற்புறுத்தல் காரணமாய் பள்ளித் தலைமையாசிரியரைச் சென்று சந்திக்கிறார்.
பல வருடங்களுக்கு முன், தனது பள்ளிக் காலத்தில், தானும் அதே போல் தன்னையும் ஒரு மாணவியையும் இணைத்து பள்ளிச் சுவற்றில் ஒரு ஓவியம் வரைந்து விட, சம்மந்தப்பட்ட மாணவியின் தந்தை நேரில் வந்து அவரைத் தண்டிப்பதற்கு பதிலாய், அவரது ஓவியத்திறமையை பாராட்டி விட்டுச் சென்றது பிரம்மாவின் ஞாபகத்தில் வருகின்றது.
“இன்று அந்த மாணவனை தான் என்ன செய்வது?” என்பது புரியாமல் குழப்பத்துடன் சென்றவர், அந்த மாணவனின் திமிர்த்தனத்தைப் பார்த்து கோபமாகி அவனைப் பள்ளியை விட்டு நீக்கச் செய்து விடுகிறாள்.
மறுநாள், அவன் தன் தாயுடன் ஓவியர் பிரம்மா வீட்டிற்கு மன்னிப்புக் கேட்க வருகிறான். அவன் தாயைக் கண்ட பிரம்மா அதிர்கிறார்....
மீதி நாவலுக்குள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130005017
Endha Moongil Pullankuzhal?

Read more from Mukil Dinakaran

Related to Endha Moongil Pullankuzhal?

Related ebooks

Reviews for Endha Moongil Pullankuzhal?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endha Moongil Pullankuzhal? - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    எந்த மூங்கில் புல்லாங்குழல்?

    Endha Moongil Pullankuzhal?

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    மதிய நேரம், கரு மேகங்களின் ஆக்கிரமிப்பால் சூரியன் தன் வீரியத்தை இழந்திருக்க, வெயில் ஏனோதானோவென்று சுரத்தேயில்லாமல் காய்ந்து கொண்டிருந்தது. காற்று தன் பங்குக்கு கொஞ்சமாய் புழுதியை வாரியிறைத்தது.

    சாலையில் ஏதோ ஒரு ஜாதி அமைப்பின் ஊர்வலம் சில பேனர்களோடு, சில வீணர்களோடு, மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. காற்றில் பறந்து வந்த புழுதியால் அந்தக் கூட்டத்தில் பலர், கைகளால் மூக்கைப் பொத்திக் கொண்டு நடந்தனர்.

    பக்கத்து மேன்சனில், நேற்றிரவு முழுவதும் பணியில் ஈடுபட்டு வந்திருந்த ஐ.டி.கம்பெனியின் கொத்தடிமைகள் அந்த மதிய நேரத்தை தங்களது காலை நேரமாகிக் கொண்டு, பல் துலக்கிக் கொண்டிருந்தனர். மாதந்தோறும் தவறாமல் வந்து வங்கிக் கணக்கில் விழும் கொழுத்த சம்பளத்திற்காக, நேர ஒழுங்கீனங்களை துல்லியமாய்க் கடைப்பிடித்தனர்.

    முகப்பெங்கும் நீல நிறக் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டிருந்த அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்திலிருந்த தன் அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட பிரத்யேக அறையில் அமர்ந்து, மும்முரமாக அந்த ஓவியத்தை வரைவதில் ஈடுபட்டிருந்தார் பிரபல ஓவியக் கலைஞர்.பிரம்மா. மூக்கின் நுனியில் தொங்கும் மூக்குக் கண்ணாடியும், நடு வகிடும், அவரது அடையாளங்கள். பேச ஆரம்பித்தால் சாக்ரடீஸைப் போல தத்துவங்களையும், குஷ்வந்த் சிங்கைப் போல ஜோக்குகளையும் கொட்டுவார். அவருக்குத் தெரியாது என்று எதுவும் இல்லை. சரோஜாதேவி பற்றியும் பேசுவார், ஸ்ருதிஹாசன் பற்றியும் பேசுவார். பில் கேட்ஸ் பற்றியும் பேசுவார், நித்தியானந்தா பற்றியும் பேசுவார்.

    தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் வார... மாத... நாவல் இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பவராக... அட்லீஸ்ட்... அவ்வப்போது புரட்டுபவராக நீங்கள் இருந்தால்... நிச்சயமாக பிரம்மா என்கிற பெயர் உங்களுக்கு பரிச்சயமான ஒரு பெயராகத்தான் இருக்கும். ஏனென்றால்... அந்தப் பத்திரிக்கைகளில் இடம் பெறும் சிறுகதை, தொடர்கதை... மற்றும் இதர செய்திகளுக்கு வரையப் படும் ஓவியங்களின் கீழ் பிரம்மா என்ற பெயர் ஒரு நெளிவு... சுளிவோடு... நேர்த்தியாக கையெழுத்திட்டாற் போல் எழுதப்பட்டிருக்கும்.

    அந்த பிரம்மா வேறு யாருமில்லை... சாட்சாத் இவரேதான்!... இயற் பெயர் பிரம்மநாயகம். நாடறிந்த ஓவியர் ஆன பின் அது சுருக்கப்பட்டு பிரம்மா ஆனது. உயிரோவியங்கள் பல படைப்பதால் அவரை பிரம்மா என அழைப்பதிலும் தப்பில்லை என்று அவரது ரசிகர்கள் பெருமிதமாய்ச் சொல்லிக் கொள்வார்கள்.

    பள்ளிக் காலத்திலிருந்தே ஓவியத்தின் மீது அளவுக்கதிகமான ஆர்வமும்... அதற்கேற்றாற் போல் திறமையும் கொண்டிருந்ததால் அதுவே தனக்குரிய தளம் என்று முடிவு செய்து... தேர்ந்தெடுத்து... இன்று அதில் சிகரம் தொட்டு நிற்கிறார். அதே நேரம், தான் வரையும் ஓவியங்கள் எந்த விதத்திலும் சமுதாயச் சீர்கேட்டிற்கோ... வக்கிர உணர்வுத் தூண்டல்களுக்கோ காரணமாகி விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பதால், பல குடும்பப் பத்திரிக்கைகளும்... பெண்களுக்கான பத்திரிக்கைகளும் கூட அவரது ஓவியத்திற்கு தங்கள் பத்திரிக்கைகளில் இடமளித்துள்ளன.

    அந்த நிமிடத்தில், அமுதம் வார இதழில் வந்து கொண்டிருக்கும், நினைப்பதெல்லாம்... நின்னையே! தொடர் கதைக்கான ஓவியத்தை மிக சிரத்தையோடு வரைந்து கொண்டிருந்தவரை, செல் போன் இசைத்து தொந்தரவு செய்தது. வா... வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுதே...

    ச்சே!... இதை சைலண்ட்ல வைக்க மறந்துட்டேன்! சொல்லியவாறே எடுத்து, இணைப்பு பட்டனை அழுத்தி, யெஸ்? என்றார்.

    மறு முனையில் அவர் மனைவி மல்லிகா. பெயர்தான் மல்லிகா கேரக்டரில் வில்லிகா.

    சொல்லும்மா... என்ன விஷயம்?... வரும் போது ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா? ஒருவித சலிப்புடன் கேட்டார். வழக்கமாய் இந்த மாதிரி கால் வரும் போதெல்லாம் வரும் போது சமோசா வாங்கிட்டு வாங்க!... சர்க்கரை வாங்கிட்டு வாங்க என்று சொல்வது அவளுடைய வாடிக்கை.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நீங்க எத்தனை மணிக்கு லன்ச்சுக்கு வருவீங்க?... அதைச் சொல்லுங்க மொதல்ல! கர்ண கடூரக் குரலில் செல்லமாய் விசாரித்தாள்.

    தலையைத் திருப்பி, சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

    மணி 12:15

    இப்பத்தானே மணி பனிரெண்டே கால்?... எப்படியும் நான் ரெண்டு ரெண்டரை மணிக்கு மேலதான் கிளம்புவேன்! தான் வரைந்து கொண்டிருந்த அந்த ஓவியத்தை இன்று முடித்தே தீர வேண்டும் என்கிற உந்துதலில் சொன்னார்.

    ம்ஹூம்!... அந்த வேலையே ஆகாது... நீங்க கொஞ்சம் உடனே கிளம்பி வாங்க... ஒரு பிரச்சினை என்று மல்லிகா அதிகாரத் தொணியில் சொல்ல,

    அட என்னம்மா?... ஒரு முக்கியமான... அவசரமான வேலை ஒண்ணு பண்ணிட்டிருக்கேன்னு சொல்றேன் அல்ல?... கையிலிருந்த ஸ்கெட்ச் பேனாவை கோபமாய் மேசை மீது வைத்தபடியே சொன்னார்.

    க்கும்... என்ன பெரிய வேலை பண்ணப் போறீங்க?... சின்னக் குழந்தைக பேப்பரையும்... ஸ்கெட்ச் பேனாவையும் வெச்சுக்கிட்டு ஏதேதோ படங்களைக் கிறுக்கிட்டு இருக்கற மாதிரி... நீங்களும் எதையாச்சும் கிறுக்கிட்டிருப்பீங்க... வேறென்ன செய்யப் போறீங்க? ஓவிய ரசனையே சிறிதுமில்லாதவள் நான், என்பதை உறுதிப்படுத்தினாள் மல்லிகா தன் பேச்சால்.

    அவள் சொல்லச் சொல்ல, அளப்பரிய சினம் அவருக்குள்ளிருந்து பிரவாகமெடுத்தது. ஆனாலும் அதை நிதானமாய் விழுங்கிக் கொண்டார். ஏனென்றால்... ஒரு ஓவியம்... அதிலும் ஒரு தொடர்கதைக்கான ஓவியம்... வரையும் போது... முழு கவனத்தோட வரைந்தால்தான் அது முழுமை பெறும், இல்லையென்றால் சென்ற வார இஷ்யூவில் வந்த முகத்திற்கும்... இந்த வார இஷ்யூவில் வரும் முகத்திற்கும் ஏதாவதொரு மாற்றம் ஏற்பட்டு விடும்!... என்கிற யதார்த்த உண்மை அவருக்கும்... அவரைப் போன்று அந்தப் பணியில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.

    ஒரு திரைப்பட ஷூட்டிங்கில் கன்டினியூட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல்தான் இங்கும். இது மல்லிகாவிற்கு சுயமாகவும் தெரியாது... சொன்னாலும் புரியாது... புரிந்தாலும் திருந்தாது. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?... வருந்தாத நெஞ்சங்கள் பிறந்தென்ன லாபம்? என்ற கவிஞரின் வரிகள் மல்லிகாவிற்குப் பொருந்தும் அளவிற்கு வேறு யாருக்கும் பொருந்தாது.

    ஓ.கே!... ம்மா... இதோ இப்பவே எடுத்து வைத்து விட்டு... உடனே கிளம்பி வர்றேன்! அவளிடம் வாக்குவாதம் என்பது சுவரோடு பேசுவது. மரத்தோடு மல்லுக் கட்டுவது. காற்றோடு கத்திச் சண்டை போடுவது, போலாகும். உடன் பேசுபவரின் பேச்சைக் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல், தான் மட்டுமே பேசும் அவளுடன் பல முறை விவாதம் செய்து, பற்களைக் கடித்துக் கொண்டதைத் தவிர வேறெந்த பலனையும் இதுவரை கண்டதில்லை பிரம்மா. கண்களை மூடி அவளுடைய அஷ்ட கோணல் அபிநயங்களை கற்பனையில் பார்த்தவர், விருட்டென்று கண்களை விழித்து, தலையைச் சிலுப்பி அவற்றை அழித்தார்.

    ஐந்தே நிமிடத்தில் அறைக்குள்ளிருந்து வெளியேறினார்.

    வெளியே படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த அலுவலக உதவியாளன், அவரைப் பார்த்ததும் படக்கென அதை ஆஃப் செய்து விட்டு அவரையே பார்த்தான். அவன் என்ன பார்த்திருப்பான்?... எதற்காக அவர் வந்ததும் மொபைலை

    Enjoying the preview?
    Page 1 of 1