Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeevan Oyum Munney!
Jeevan Oyum Munney!
Jeevan Oyum Munney!
Ebook143 pages54 minutes

Jeevan Oyum Munney!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீழ் சாதி....மேல் சாதி என்கிற பாகுபாடு உச்ச நிலையில் இருந்து கொண்டிருக்கும் கிராமம் அது. அந்த விபரீதக் கட்டுப்பாட்டை மீறி, வீரமுத்து என்னும் கீழ் சாதி ஆணும், ஒரு மேல் சாதி பெண்ணும் காதல் வயப்படுகின்றனர். அந்தப் பிரச்சினை பஞ்சாயத்து வரை வந்து, ஆரம்பத்தில் வாக்குவாதமாய்த் துவங்கி, பின் கை கலப்பாய் மாறி, கடைசியில் கலவரமாய் வெடித்தது. இந்தப் பக்கம் பல சாவுகளும், அந்தப் பக்கம் பல சாவுகளும் விழ, கடைசியில் தோல்வி கண்ட கீழ் சாதியினரை ஊருக்குள் வாழக் கூடாதென்று கலெக்டர் மூலமாய் பஞ்சாயத்தில் தீர்ப்பெழுதி, ஊருக்கு வெளியே உள்ள மலை மீது அவர்களை குடியேறச் செய்கின்றனர் மேல் சாதி மக்கள். தொடர்ந்து கீழ் சாதி மக்களை எல்லா விதத்திலும் ஒதுக்கியே வைக்கின்றனர் அவர்கள்.

தன் ஜீவன் ஓயும் முன், தன் இன மக்களை மீண்டும் ஊருக்குள் குடியேற்றி விட்டே தீருவேன், என்கிற சபதத்தோடு பல வருடங்கள் காத்திருந்த வீரமுத்துவுக்கு அந்த ஊரில் அடித்த பேய் மழையும், அதன் காரணமாய் பெருகிய பெரு வெள்ளமும் உதவி புரிய... மீதி நாவல் புத்தகத்தில்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580130007097
Jeevan Oyum Munney!

Read more from Mukil Dinakaran

Related to Jeevan Oyum Munney!

Related ebooks

Reviews for Jeevan Oyum Munney!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeevan Oyum Munney! - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    ஜீவன் ஓயும் முன்னே!

    Jeevan Oyum Munney!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 1

    மதிய நேரத்திலேயே வானம் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. தெருவில் சுழன்றடித்த மழைக்காற்று புழுதியை வாரியிறைத்தது. மரங்கள் பேயாட்டம் ஆடின. ஒன்றிரண்டு தென்னை மரத்திலிருந்து இற்றுப் போன மட்டைகள் சத்தத்தோடு கீழே விழுந்தன.

    அரவைக் கூடத்திற்கு வெளியே, வாசலுக்கு இடது புறமிருந்த திண்ணை மேல், தன் கூடையை வைத்துக் கொண்டு, காத்திருந்தாள் மயிலம்மா. இறுகிப் போன முகமே அவள் நிரந்தர முகம். அவள் பார்வை கூடைக்குள்ளிருந்த ராகியின் மீது நிலைக் குத்தியிருந்தாலும், அவ்வப்போது அரவைக் கூடத்தின் உட்புறத்தையும் எட்டிப் பார்க்கத் தவறவில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே வெயில் எட்டிப் பார்க்காததால் அவள் கொண்டு வந்திருந்த ராகி சற்று ஈரப்பதமாகவே இருந்தது. அரவைக்காரன் சில சமயங்களில் அம்மாதிரியான தானியங்களை அரைக்க மறுத்து விடுவான். அவற்றை அரைத்தால் தனது அரவை எந்திரம் கெட்டுப் போகும் என்று கூறி திருப்பியனுப்பி விடுவான். இன்று அவன் தன்னைத் திருப்பியனுப்பி விட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வயிற்றுப் பாடு திண்டாட்டம்தான் என்கிற கவலையில் அவள் முகம் இறுகிப் போய்க் கிடந்தது. ஹும்... இந்த ஓட்டைக் குடிசையில் எல்லாப் பக்கத்திலும் தண்ணி ஒழுகுது... இதுல எங்க வெச்சு ராகியைக் காப்பாத்தறது?

    அரவைக் கூடத்தின் உள்ளே, மேல் சாதிக்காரப் பெண்மணிகள் தங்கள் கூடைகளைக் கொடுத்து விட்டு, இவளைப் போலவே காத்திருந்தனர். அவர்கள் பிறப்பால் மேல் சாதி என்கிற ஒரே காரணத்தினால் உள்ளே சென்று... உட்கார்ந்து காத்திருக்க அனுமதியும், மயிலம்மா பிறப்பால் கீழ் சாதி என்கிற ஒரே காரணத்தால் வெளியே... நின்றபடி காத்திருக்கும் நிர்பந்தமும் அந்த ஊரில் ஆண்டாண்டு காலமாய் இருந்து வரும் எழுதப் படாத சட்டம்.

    வியர்த்த நெற்றியை புடவை முந்தானையால் முகத்தைத் துடைத்த மயிலம்மாளின் இடது காலில் ஏதோ சுருக்கென்று தைக்க, குனிந்தாள். கட்டெறும்பு ஒன்று சத்தமில்லாமல் கடித்து விட்டு, படு அலட்சியமாக நடந்தது. நான் கீழ் சாதிக்காரி என்பது இந்தக் கட்டெறும்பிற்குக் கூடத் தெரியும் போலிருக்கு!... அதான் வெகு தைரியமாகக் கடித்து விட்டு... வெகு அலட்சியமாகப் போகிறது!... ஹூம் இந்த ஊர்ல கீழ் சாதி ஜீவன்களை எறும்பு கூட மதிப்பதில்லை!... .எல்லாம் விதி!

    இந்தாம்மா... .நின்னுக்கிட்டே கனாக் கண்டது போதும்... .மொதல்ல கூடையைக் குடு!... அங்கு எடுபிடி வேலை பார்ப்பவனுக்கும் எகத்தாளம் உண்டு. மேல் சாதிப் பிறப்பல்லவா?... ரத்தத்திலேயே இருந்தது அதிகாரத் தொணியும், அலட்சியப் போக்கும்.

    அவன் அப்படிக் கேட்டதை ரசித்த மேல் சாதிப் பெண்மணிகள் க்ளுக்... க்ளுக்கென்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். உள்ளே அரவை எஞ்சினின் ஓட்டம் நின்று போயிருந்தது. மேல் சாதி அம்மணிகளுக்கான அரவைப் பணி முடிந்து போயிருக்கும், இனி வெளியே காத்திருக்கும் கீழ் சாதிக்காரர்களின் முறை. அப்பாடா இப்பவாது நமக்கு முறை வந்ததே?.

    தனது கூடையை பவ்யமாக எடுத்துக் கொடுத்தாள் மயிலம்மா. அப்படிக் குடுக்கும் போது தன் விரல்கள் அவன் மீது பட்டு விடாமல் ஜாக்கிரதையாகக் கொடுத்தாள். ஒரு முறை அப்படிப்பட்டு விட்டதற்காக தன் இனப் பெண்ணுக்கு அரைத்துத் தராமல் விரட்டியடித்தவன் அந்த எடுபிடி ஆள்.

    கூடைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, ராகியைக் கொஞ்சம் எடுத்து வாய்க்குள் போட்டு கடித்துப் பார்த்த அந்த எடுபிடி, அய்யய்ய... இதென்ன ஈரப்பதமா இருக்கு!... இதையெல்லாம் அரைக்க முடியாதே!..மெஷின் கெட்டுப் போயிடும்!னு மொதலாளி சொல்லுவாரே? என்றான்.

    அய்யோ... .அப்படிச் சொல்லாதீங்க சாமீ... நல்லாக் காய்ஞ்ச ராகிதான் சாமீ... .ஊட்டுக்குள்ளார செவுரெல்லாம் ஓதம் அதனாலதான் கொஞ்சம் பதமா இருக்கு!... எப்படியாவது அரைச்சுக் குடுங்க சாமீ சமாளித்துப் பார்த்தாள் மயிலம்மா.

    சொன்னவளை மேலிருந்து கீழ் வரை ஒரு மோகனமாய்ப் பார்த்து விட்டு, ஹி... ஹி... நான் மட்டும் அரவை மொதலாளியா இருந்தா உனக்காக அரைச்சுக் குடுத்துடுவேன்!... நானே இங்க அல்லக்கை!... சரி... ..எனக்கென்ன நான் கொண்டு போய் மொதலாளிகிட்ட குடுத்துடறேன்!... அவராச்சு... நீயாச்சு... அரைச்சுக் குடுத்தா வாங்கிக்க... இல்லியா... அப்படியே திருப்பிக் கொண்டு போ! சொல்லியவாறே அவன் அதை உள்ளே எடுத்துச் சென்றான். போகும்போது திரும்பி அவளைப் பார்த்து ஒரு சரசப் புன்னகையை வீசினான். அவது இடது கண் பளிச்சென்று துடித்து எதற்கோ சமிக்ஞை காட்டியது. மயிலம்மாவிற்கு அதற்கான அர்த்தம் தெளிவாகத் தெரியும். இந்த ஊரில் அந்த விஷயம் என்று வரும் போது மட்டும் மேல் சாதி... கீழ் சாதி பேதம், எல்லா ஆண்களுக்கும் மறந்து போய் விடுகிறது. சமத்துவமும், சமரசமும் காமரசத்தில் மட்டும் ஓங்கி நிற்பது கட்டாய விதி. நாதாரிப் பயலுக்கு திமிரு ஏறிக் கிடக்கு உள்ளுக்குள் சபித்தாள்.

    மயிலம்மாவின் நெஞ்சு திக்..திக்கென்று அடித்துக் கொண்டது. உள்ளே என்ன நடக்குதோ?... அந்த மொதலாளிப்பயல் என்ன சொல்லுறானோ?

    சில நிமிடங்களில் உள்ளே அரவை எஞ்சின் ஓடும் சத்தம் கேட்க, அப்பாடா!... மெஷினு ஓடுது... அப்படின்னா நம்ம ராகிதான் அரைக்கப்படுது! தன் நெஞ்சின் மீது கையை வைத்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் அழுக்கு முந்தானையில் முடிந்து வைத்திருந்த சில்லரைக் காசுகளை எடுத்துக் கொண்டு தயாரானாள்.

    அரவைக்கூட முதளாளி பொன்னுரங்கம் மேல் சாதிப் பெண்களை ஒவ்வொருவராக வரிசையாக அழைத்து அவரவர் கூடைகளைக் கையில் கொடுத்து, சில்லரைக் காசுகளை வாங்கி கல்லாவில் போட்டார். வாங்கும் போது அவர் கை வேண்டுமென்றே படுவதை அப்பெண்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களில் பலர் அந்த அரவை முதலாளியிடம் ஏற்கனவே அரைபட்டவர்கள்தான்.

    மேல் சாதிப் பெண்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே வர, அவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றாள் மயிலம்மா. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாள், ஏதோ ஞாபகத்தில் அவள் ஒதுங்கி நிற்காது போக, ஒரு மேல் சாதிப் பெண் தன் கால் செருப்பைக் கழற்றி அவளை அடிக்க வந்து விட, பெரிய களேபரமே ஆகி விட்டது. அந்த விஷயத்தை இதுவரையில் மயிலம்மா தன் புருஷன்காரனிடம் சொல்லவில்லை. காரணம், அவன் ஒரு முரடன், எடுத்த எடுப்பில் அருவாளைத் தூக்கு... கொடுவாளை எடுன்னு துள்ளுவான், என்பதால்.

    மேல் சாதிப் பெண்கள் அனைவரும் சென்று விட்ட பின், சில நிமிடங்களில் உள்ளே அரவை எந்திரத்தின் சத்தம் நின்றது.

    யாரும்மா அது வெளிய?... ராகி குடுத்த மகாராணி... அரைச்சு முடிஞ்சாச்சு வாங்கிக்க! முதலாளி உள்ளிருந்து கத்த,

    எட்டிப் பார்த்தாள் மயிலம்மா.

    Enjoying the preview?
    Page 1 of 1