Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

"Rendum Rendum Moonu"
"Rendum Rendum Moonu"
"Rendum Rendum Moonu"
Ebook261 pages1 hour

"Rendum Rendum Moonu"

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுரேஷ் என்னும் அந்த இளைஞனுக்கு ஒரே பெண் தினமும் கனவில் வருகிறாள். அவளுடன் சுரேஷ் ரொமான்ஸ் செய்கின்றான். “யாரிவள்… எப்படி தினமும் என் கனவில் வருகிறாள்… இவளை நான் எங்குமே பார்த்ததில்லையே?” குழம்பிப் போய் மண்டையைப் பிய்த்துக் கொள்கிறான் அவன். ஒரு நாள் செய்தித்தாளில் அந்த பெண்ணின் கண்ணீர் அஞ்சலி செய்தி வருகின்றது. அதிர்ந்து போன சுரேஷ் மனநல மருத்துவரிடம் செல்கிறான்.

அங்குதான் “டெலிபதி” என்னும் விந்தையான விஷயம் அவனுக்கு அறிமுகமாகின்றது. எங்கிருந்தோ டெலிபதி மூலம் அச்சம்பவங்கள் அவன் கனவில் வருவதாய் மனநல மருத்துவர் கூறுகின்றார். ஒரு கட்டத்தில் சிறு வயதில் காணாமல் சுரேஷின் சகோதரனிடமிருந்து அந்த டெலிபதிகள் இவன் மூளைக்குள் வருவதாய் கண்டறியப்படுகின்றது. சகோதரனைச் சந்திக்க ஆசைப்பட்ட சுரேஷை சட்டம் தடுக்கின்றது. காரணம், அவன் சகோதரன் பல வருடங்களாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கிரிமினல்.

டெலிபதியை உபயோகித்து அக்குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் முயல்கின்றது. சுரேஷ் அதற்கு உதவினானா? சுரேஷின் சகோதரன் கண்டுபிடிக்கப்பட்டானா? நாவலைப் புரட்டுங்கள்… விறுவிறுப்பான நாவல்… ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை உங்களுக்கு நிச்சயம் தரும்.

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580130009004
"Rendum Rendum Moonu"

Read more from Mukil Dinakaran

Related to "Rendum Rendum Moonu"

Related ebooks

Related categories

Reviews for "Rendum Rendum Moonu"

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    "Rendum Rendum Moonu" - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    ரெண்டும் ரெண்டும் மூணு

    Rendum Rendum Moonu

    Author :

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் –7

    அத்தியாயம் –8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் –10

    அத்தியாயம் –11

    அத்தியாயம் –12

    அத்தியாயம் –13

    அத்தியாயம் –14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் –16

    அத்தியாயம் –17

    அத்தியாயம் –18

    அத்தியாயம் –19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 30

    அத்தியாயம் – 31

    அத்தியாயம் – 32

    அத்தியாயம் – 33

    அத்தியாயம் – 34

    அத்தியாயம் – 35

    அத்தியாயம் – 36

    அத்தியாயம் – 37

    அத்தியாயம் – 38

    அத்தியாயம் – 39

    அத்தியாயம் – 40

    அத்தியாயம் – 1

    திடீரென்று அறைக்குள் பரவிய டியூப் லைட் வெளிச்சத்தால் உறக்கம் கலைந்து எழுத விஜயகுமார், கண்களைக் கசக்கிக் கொண்டு பக்கத்துப் படுக்கையைப் பார்த்தான். ரூம் மேட் சுரேஷ் இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு, குனிந்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தான்.

    படுத்தவாறே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான் விஜயகுமார்.

    அது டிஜிட்டலில் 06.30 என்றது.

    வழக்கமா இந்த சுரேஷ் எட்டு மணிக்கு மேலேதான் படுக்கையை விட்டே எந்திரிப்பான்... இன்னிக்கு என்னாச்சு?... அதிசயமா ஆறு மணிக்கே எந்திரிச்சு உட்கார்ந்திட்டிருக்கான்?... உடம்பு கிடம்பு சரியில்லையா? தன் படுக்கையை விட்டு எழுந்து வந்த விஜயகுமார், சுரேஷின் அருகில் வந்து,நண்பா... என்ன இன்னேரத்துக்கே எந்திரிச்சு உட்கார்ந்திட்டிருக்கே?... .ஆர் யூ ஆல் ரைட்? கேட்டவாறே சுரேஷின் தாடையைத் தொட்டுத் தூக்கினான்.

    அவன் கண்களிரண்டும் செக்கச் செவேல் என தக்காளிப் பழம் போலிருந்தன. போதாக்குறைக்கு அவன் மொத்த உடலும்கிடு... கிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது.

    பதறிப் போனான் விஜயகுமார்.டேய்... சுரேஷ்... என்னடா உடம்பு சரியில்லையா?... சொல்லுடா

    வாயைத் திறந்து பதில் சொல்லாமல், தன் தலையை மட்டும் இட, வலமாய் ஆட்டினான் சுரேஷ். அவனது வலது உள்ளங்கை அவனையுமறியால் நெற்றியைத் தேய்த்தது.

    தலை வலிக்குதா?... சொல்லுடா?

    அப்போதும் வாய் திறந்து பதில் சொல்லாமல், நெற்றியைத் தேய்த்தபடி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான் சுரேஷ்.

    அவன் ஏதோ மனக் குழப்பத்தில் இருக்கின்றான், என்பதைப் புரிந்து கொண்ட விஜயகுமார்,கொஞ்சம் இருடா... .டீ ஆர்டர் பண்றேன் என்று கூறி விட்டு மொபைலை எடுத்து எதிர்க் கட்டிடத்திலிருக்கும் நாயர் டீ ஸ்டாலுக்கு கால் செய்தான்.யாரு?... ஜூனியர் ரஜினியா?... .சூடா ரெண்டு டீ கொண்டு வாப்பா... . என்றான்.

    இணைப்பைத் துண்டித்து விட்டு மறுபடியும் கேட்டான்,நண்பா... நீ மனசுக்குள்ளார எதையோ போட்டுக் குழப்பிக்கிட்டிருக்கே... சொல்லு... என்ன உன் பிரச்சினை?... ஆபீஸ்ல ப்ராப்ளமா?... இல்லை சொந்த ஊர்ல ஏதாச்சும் பிரச்சினையா?...

    கேட்ட விஜயகுமாரின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்த சுரேஷிடம்,என் கிட்ட சொல்லக் கூடிய பிரச்சினையா இருந்தா சொல்லு... இல்லேன்னாலும் சொல்லு! புன்னகையோடு கேட்டான் விஜயகுமார்.

    நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்து விட்டு பேச ஆரம்பித்தான் சுரேஷ்.விஜி... மூணு நாளா உன் கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்!னு நெனைச்சிட்டிருந்தேன்... .சொல்ல முடியலை

    சரி... இப்பச் சொல்லு

    வந்து... நாலு நாளா தொடர்ந்து ஒரே கனவு திரும்பத் திரும்ப வருதுடா

    என்னது... ஒரே கனவு டெய்லி வருதா?... ஓ... இப்பக் கனவெல்லாம் கூட டி.வி.சீரியல் மாதிரி எபிஸோடு... எபிஸோடா... வர ஆரம்பிச்சிடுச்சா? சிரித்தபடி கேட்டான் விஜயகுமார்.

    சிரிக்காதடா கோபமானான் சுரேஷ்.

    சட்டென முகத்தை சீரியஸாக்கிக் கொண்டு,ம்... சொல்லு... என்ன மாதிரிக் கனவு... பேய்க் கனவா?... ஃபேண்டஸி கனவா?... இல்லை...அந்த... அந்த... மாதிரிக் கனவா? கண்ணடித்துக் கேட்டான் விஜயகுமார்.

    ஆமாம்டா... கொஞ்சம் அந்த மாதிரியான கனவுதாண்டா சங்கடமாய்ச் சொன்னான் சுரேஷ்.

    வாவ்... இண்ட்ரஸ்டிங்... சொல்லு சொல்லு

    அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர். டீக்கடை ஜூனியர் ரஜினி கையில் இரண்டு டீ டம்ளருடன் கதவருகே நின்றிருந்தான்.

    வாடா... வந்து... வெச்சிட்டுப் போடா அவனை அவசரமாய்த் துரத்தினான் விஜயகுமார்.

    நீங்க குடிங்க... இருந்து டம்ளரை வாங்கிட்டுப் போறேன் கையால் முடியைக் கோதியபடி அவன் சொல்ல,

    டேய்... அப்புறமா வந்து டம்ளரை எடுத்துக்கோ... .இப்ப இடத்தைக் காலி பண்ணு

    அவர்களிருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, அறைக்குள் சுற்றும்முற்றும் நோட்டமிட்டவாறே வெளியேறினான் அந்த டீக்கடை ஜூனியர் ரஜினி.

    அவன் சென்றதும், விஜயகுமார் கேட்டான்.ம்... சொல்லு... சொல்லு

    கனவுல ஒரு பொண்ணுடா... நல்லா... சூப்பரா இருக்கா!... அழகுன்னா அழகு... அப்படியொரு அழகு!... .மொதல் நாள் கனவுல ஒரே முத்த மழை...

    உனக்கா?...

    தலையை மேலும் கீழும் ஆட்டினான் சுரேஷ்.

    ம்..அப்புறம்?

    அவ்வளவுதான் அத்தோட மொதல் நாள் கனவு முடிஞ்சிடுச்சு என்று சுரேஷ் சொல்ல,

    அய்யய்ய... .சுவாரஸியம் போயிடுச்சே!

    அப்புறம் ரெண்டாம் நாள்... அதே பொண்ணு கனவுல வந்து முந்தின நாளை விட அதிகமா ரொமான்ஸ் பண்ணினா

    அதே பொண்ணு அடுத்த நாள் கனவிலேயும் வந்தாளா?... ஆச்சரியமாயிருக்கே?... ம்ம்ம்... .மேலே சொல்லு

    மூணாவது நாள் கனவுல அதே பொண்ணு... ரொம்ப ரொம்ப முன்னேறி... என்னை என்னென்னமோ பண்ணினா!... அப்புறம்... நாலாவது நாள்... .அதாவது நேத்திக்கு... அதே பொண்ணு வந்தா... எல்லாமும் முடிஞ்சிடுச்சுடா...சுரேஷ் சங்கடமாய்ச் சொல்ல.

    எல்லாமுமே!ன்னா.... தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான் விஜயகுமார்.

    உனக்கு விளக்கி வேற சொல்லணுமா?... மெயின் மேட்டரையே முடிச்சிட்டுப் போயிட்டாடா அதைக் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்த விஜயகுமார்,பரவாயில்லை மச்சா... உனக்கு இலவசமாகவே ஒரு இன்பம் கெடைச்சிடுச்சு என்றான்.

    கோபக் குரலில் அவனை அடக்கினான் சுரேஷ்,டேய்... விஜி!... பி சீரியஸ்!... நான் எவ்வளவு டென்ஷன்ல... எவ்வளவு கன்ஃப்யூஸன்ல... இருக்கேன் தெரியுமா?

    இதுல என்னடா டென்ஷன்?... என்னடா கன்ஃப்யூஸன்?... .இந்த வயசுல எல்லாருக்கும் வர்றஅந்த மாதிரிக் கனவு உனக்கும் வந்திருக்கு தட்ஸ் ஆல்!... நாட்டுல பல பேர் ஷகிலா படம் பார்த்திட்டு பத்து நாள் அவ கூடக் கனவுல ரொமான்ஸ் பண்ணிட்டு கிடக்கறானுக!... அது மாதிரித்தான் இது படு காஷுவலாய்ச் சொன்னான் விஜயகுமார்.

    டேய்... நான் சொல்றதைக் கொஞ்சம் சீரியஸாக் கேளுடா... என் கனவுல அந்தப் பொண்ணை... நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லைடா!... அவ யாரு?... .எந்த ஊரு... எப்படி என் கனவுல தெனமும் வர்றா?... எதுவுமே புரியலைடா!... ஷகிலாவைப் படத்துல பார்த்து ரசிச்சதினால அவங்க கனவுல வர்றாங்க... இந்தப் பொண்ணை நான் நேர்ல பார்த்ததே இல்லையே?

    கீழுதட்டைத் தேய்த்துக் கொண்டு யோசித்த விஜயகுமார்,இல்லைடா... நீ எங்காவது அவளைப் பார்த்திருப்பே... மறந்திருப்பே என்று சொல்ல,

    அய்யோ... மூணு நாளா என் மூளையைக் கசக்கிக் கசக்கி யோசிச்சுப் பார்த்திட்டேன்... அவ யார்ன்னே புரியலை! என்றான் சுரேஷ் முகத்தைச் சோகமாய் வைத்துக் கொண்டு.

    உன்னோட ஆபீஸ் சர்க்கிள்ல?...

    ம்ஹும்... இல்லவே இல்லை

    ரிலேட்டிவ்ஸ் சர்க்கிள்ல?

    உதட்டைப் பிதுக்கினான் சுரேஷ்.

    அப்படின்னா... .பஸ்ல போகும் போதோ... வரும் போதோ... ஏதாவது ஒரு இடத்துல பார்த்திருப்பே!... ஒரு செகண்ட் பார்த்திட்டு அத்தோட மறந்து போயிருப்பே!... ஆனா அவ உருவம் உன்னையேயறியாம உன் மனசுலபச்சக்ன்னு ஒட்டிக்கிச்சு

    கோபமானான் சுரேஷ்.

    டேய்... நான் இவ்வளவு ஆணித்தரமாய்ச் சொல்றேன்... அப்பக் கூட உனக்கு என் பேச்சுல நம்பிக்கை இல்லையாடா?... சத்தியமா சொல்றேன்... நான் அந்தப் பொண்ணைப் பார்த்ததில்லை!... பார்த்ததில்லை!... பார்த்ததில்லை! கத்தினான்.

    மிரண்டு போன விஜயகுமார் சுரேஷின் முகத்தைக் கூர்ந்து பார்க்க,

    டேய் விஜி... அந்த மாதிரி ஒரு அழகான தேவதையை நான் எங்காவது பார்த்திருந்தா... நிச்சயம் ஒரு செகண்ட் மட்டும் பார்த்திட்டுப் போயிட மாட்டேன்!... நாலஞ்சு தடவையாவது திரும்பித் திரும்பிப் பார்த்து சத்தமில்லாம சைட் அடிச்சிருப்பேன்!

    தலை முடியைப் பிய்த்துக் கொண்ட விஜயகுமார், அய்யோ... .போதும்டா... விட்டுடா!... வேணா ஒண்ணு செய்... இன்னிக்கு மறுபடியும் அந்தப் பொண்ணு உன் கனவுல வந்தா... மொபைல் நெம்பர்... வீட்டு அட்ரஸ்... எல்லாம் கேட்டு வாங்கி வை! என்றான்.

    அப்போது,

    பட... பட ஓசையுடன் அறைக்குள் வந்து விழுந்ததுதினத் தகவல் செய்தித்தாள்.

    வர... வர... இந்தப் பேப்பர் பாய்க்கு ரொம்பவே கொழுப்பு ஏறிடுச்சு!... அன்னிக்கு இப்படித்தான் கதவருகே நின்னுட்டிருந்தேன்... .என் மூஞ்சிலேயே பேப்பரை வீசிட்டுப் போறான் என்றவாறே குனிந்து பேப்பரை எடுக்க முயன்ற விஜயகுமாரை சுரேஷின் அலறல் நிறுத்தியது.

    திடுக்கிட்டு நிமிர்ந்த விஜயகுமார்,என்னடா... என்னாச்சு உனக்கு? பதட்டமாய்க் கேட்டான்.

    இவள்தான்... இவள்தான்... என் கனவுல தினமும் வந்தவ இவள்தான் வேகமாய் வந்து, குனிந்து அந்த செய்தித்தாளைக் காட்டிச் சொன்னான் சுரேஷ்.

    அதில்... .

    சுகன்யா என்னும் இருபது வயது... அழகான... இளம் பெண்ணின் புகைப்படமும், அதனடியில் அவள் குடும்பத்தாரின்கண்ணீர் அஞ்சலி செய்தியும் வெளியாகியிருந்தது.

    அவசரமாய் அந்தப் பேப்பரை எடுத்து, ‘பர... பர’வென்று வாசித்த விஜயகுமார்,எ... என்னடா சொல்றே?... நீ சொல்றது நிஜமா? கேட்டான்.

    ஆமாம்டா... சத்தியமா இவளேதாண்டா பித்துப் பிடித்தவன் போல், கண்களில் பீதியுடன் சொன்னான் சுரேஷ்.

    எப்படிடா?... .இவ இறந்து போயிட்டதா செய்தி போட்டிருக்கேடா குழப்பத்துடன் சொன்னான் விஜயகுமார்.

    சுரேஷின் உடல் வேகமாய் நடுங்க ஆரம்பித்தது.டேய்... விஜி... எனக்கு ரொம்ப பயம்மாயிருக்குடா... நடுங்கும் விரல்களால் நண்பனின் கையைப் பற்றிக் கொண்டான் சுரேஷ்.

    இருடா... இருடா... எதுக்கு பயப்படறே?

    வந்து... இவ இன்னிக்கும் என் கனவுல வருவாளோ?... வந்து என்ன பண்ணுவாளோ?ன்னு நெனச்சா... நெஞ்சுபட... படன்னு அடிச்சுக்குதுடா

    வந்தா என்ன?... வழக்கம் போல் ரொமான்ஸ் தானே?... என்ஜாய் பண்ணு சாதாரணமாய்ச் சொன்னான் விஜயகுமார்.

    டேய் விஜி... நீயென்ன லூஸா?... .நேத்திக்கு வரைக்கும் இவ யாரு?... எந்த ஊரு?ன்னு எனக்குத் தெரியாது!... ஆனா இன்னிக்கு இவ செத்துப் போனவ... ஆவியா சுத்திட்டிருப்பவள்ன்னு தெரிஞ்சு போச்சு... அப்புறம் எப்படிடா ரொமான்ஸ் வரும்?... ஹாரர் தான் வரும்!" கோபமாய்ச் சொன்னான் சுரேஷ்.

    அவள் சொல்வதில் இருந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட விஜயகுமார்,ஓ.கே... அந்த மேட்டரைப் பத்தி இனி பேச வேண்டாம்!... இப்போதைக்கு கிளம்பி ஆபீஸ் போற வழியைப் பார்ப்போம்!... சுரேஷின் மனதை திசை திருப்ப முயன்றான் விஜயகுமார்.

    சுரேஷ் அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், மறுபடியும் பேப்பரைக் கையிலெடுக்க,வெடுக்கென்று அவன் கையிலிருந்து அதைப் பறித்த விஜயகுமார்,மொதல்ல பாரூமுக்குள்ளார போப்பா என்று சொல்லி, சுரேஷின் தோள்களைப் பற்றி பாத்ரூமிற்குள் தள்ளினான்.

    சுரேஷ் பாத்ரூமிற்குள் சென்றதும், விஜயகுமார் அந்தப் பேப்பரை எடுத்து அதில் வந்திருந்தகண்ணீர் அஞ்சலி செய்தியை விரிவாக வாசித்தான்.

    அவனையுமறியாமல் அவன் அடி வயிற்றில் லேசாய் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.

    அத்தியாயம் – 2

    மகேஷ் ஷர்மா ஆட்டோ கேரேஜ் என்ற போர்டைத் தாங்கிய அந்தக் காம்பௌண்ட் சுவற்றுக்குப் பின்னால் இருந்த கார் மெக்கானிக் ஷாப் கொஞ்சம் விஸ்தாரமான ஏரியாவை உள்ளடக்கியிருந்தது.

    பத்துப் பதினைந்து கார்கள் அரைகுறை வைத்திய நிலையில் கிடந்தன. ரெண்டுஹோண்டா சிட்டி கார்கள் பட்டி பூசப்பட்ட நிலையில் பெயிண்டிற்காக காத்து நின்றன. ஒரேயொருமாருதி ஸிப்ட் மட்டும் புத்தம் புதிதாய் பளீரென்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது பெரிய கேட்டைத் தாண்டி சரேலென்று உள்ளே நுழைந்து வட்டமடித்து நின்றது அந்த இன்னோவா. அதிலிருந்து இறங்கிய அந்த மனிதர் பணக்கார வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை பகட்டான அந்த கோட்டும் சூட்டும், பளபளப்பான அந்த கோல்டன் ஃபிரேம் கண்ணாடியும் கட்டியம் கூறின.

    கிரீஸில் முக்கி எடுக்கப்பட்டது போன்ற பெர்முடாஸ் டிரவுசரும், டீஷர்ட்டும் அணிந்திருந்த அந்த பதினைந்து வயதுப் பையன், வேகமாய் வந்து அந்த இன்னோவாவின் அருகில் நின்று வண்டியை கண்களால் அளந்தான்.

    எங்கேப்பா உங்க முதலாளி மகேஷ் ஷர்மா? கரகரப்பான திமிர்க் குரலில் கேட்டார் அந்த பணக்காரர்.

    இக்கட சூடு சாரே? என்றவாறே ஒரு இண்டிகா காரின் அடியிலிருந்து வெளியே வந்த மகேஷ் ஷர்மாவிற்க்கு சற்றுப் பெரிதான முகம், அகலமான தோள் பட்டையும், ஆறடிக்கும் மேலான உயரமும், அவன் தோற்றத்தை கம்பீரமாக்கிக் கொண்டிருந்தன. அவன் கையில் நாலைந்து ஸ்பேனர்கள்.

    வாங்க சார்... என்னாச்சு?... வண்டி தகராறு பண்ணுதா? கேட்டபடியே இன்னோவாவின் கதவைத் திறந்து, டிரைவர் சீட்டில் அமரப் போன மகேஷ் ஷர்மாவை அவர் தடுத்தார்.நோ ஷர்மா... ப்ராப்ளம் வண்டில இல்லை... வாழ்க்கையில் எதையோ பூடகமாகச் சொன்னார் பணக்காரர்.

    நெற்றியைச் சுருக்கியபடி திரும்பி நின்ற மகேஷ் ஷர்மா, புருவத்தை மட்டும் உயர்த்திஎன்ன? என்று கேட்க, அந்தப் பெரிய மனிதர் சிறுவனை ஜாடை காட்டினார்.

    அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மகேஷ் ஷர்மா,டேய் பச்சு... போடா போயி அரை பாக்கெட் கோல்ட் ஃபில்டர் கிங்ஸ் வாக்கிட்டு வாடா சிறுவனை வெளியே அனுப்பினான்.

    பையன் சென்றதும்,சார் எது பேசறதுன்னாலும்... இங்க வெளிய நின்னு பேச வேண்டாம்!... என்றபடி அந்த இன்னோவா காரின் இடதுபுறக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மகேஷ் ஷர்மா,வாங்க சார் உள்ளார வந்து டிரைவர் சீட்ல உட்காருங்க என்றான்.

    பெரியவர் உள்ளே வந்து அமர்ந்ததும்,ம்... இப்பச் சொல்லுங்க!... யார் நீங்க?... எதுக்காக என்னைத் தேடி வந்திருக்கீங்க?... உங்களுக்கு என் அட்ரஸைக் கொடுத்தது யார்? திடீரென்று சீரியஸாகி கடுமையான

    Enjoying the preview?
    Page 1 of 1