Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalai Vellum Naal
Naalai Vellum Naal
Naalai Vellum Naal
Ebook200 pages1 hour

Naalai Vellum Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒரு சூட்சமம் மறைந்திருக்கிறது. அந்த சூட்சமத்தைப் புரிந்து கொண்டாலே நாளை வெல்லும் நாளாவது நிச்சயம். வென்றவன் வாழ்க்கை வரலாறுப் படித்தாலே உனக்கும் அதன் மூலம் ஒர் உன்னத குறிப்பு கிடைக்கும். அந்த சிறுகுறிப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் "நாளை வெல்லும் நாள்" புத்தகம். வென்றவர்களின் வரலாற்றை நான் இதுவரை படித்த புத்தகங்கள் மூலமும், இணையதளங்களின் மூலமும் சேகரித்த விவரங்களுடன் என்னுடைய கருத்தையும் இணைத்து இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளை அதனோடு முடிச்சு போட்டு உங்கள் முன் படைத்திருக்கிறேன் வாசித்து மகிழ்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580169510171
Naalai Vellum Naal

Read more from A.R. Murugesan

Related to Naalai Vellum Naal

Related ebooks

Reviews for Naalai Vellum Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalai Vellum Naal - A.R. Murugesan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நாளை வெல்லும் நாள்

    Naalai Vellum Naal

    Author:

    ஏ.ஆர். முருகேசன்

    A.R. Murugesan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ar-murugesan

    பொருளடக்கம்

    என்னுரை

    1. உன்னை அறிந்தால்...

    2. பயமா... எனக்கா... நெவர்!

    3. என் பேச்சைக் கேட்பவர் யார்?

    4. ஏன் இந்தப் பிடிவாதம்?

    5. ஏன் என்ற கேள்வி...

    6. ஊருக்குள்ளே உனக்கென்ன பெயர்

    7. கனவுகள்

    8. கனவு காணுங்கள்!

    9. இயற்கையின் இரகசியம்

    10. மன இறுக்கத்தைப் போக்க...

    11. ஏன் என்ற கேள்வி - 2

    12. தாயன்பு தன்னம்பிக்கை வார்த்தை

    13. அணுகுண்டு

    14. சிட்டுக்குருவி!

    15. இலக்கை நோக்கிய பயணம்

    16. மாண்புமிகு நீங்கள்!

    என்னுரை

    வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு மனிதனும் கவனிக்கப்படுகிறான். சாதனை படைத்த பிறகுதான் ஒவ்வொரு மனிதனும் மக்கள் மத்தியில் பிரபலமடைகிறான். இதுபோன்று வெளிச்சத்துக்கு வந்த, சாதனை படைத்த வெற்றியாளனின், அப்போதைய சந்தோஷ முகத்தை மட்டுமே நாம் எல்லோரும் பார்க்கிறோம்.

    ஆனால், அதற்கு முன் அந்த வெற்றியாளன் எத்தனைத் தடைக் கற்களை கடந்து வந்தான் என்றோ எத்தனை அவமானங்கள் மூலம் பாடம் கற்றுக்கொண்டான் என்றோ கவனிப்பதில்லை. எத்தனை இரவுகள் விழித்திருந்து கனவு கண்டான் என்றோ, எத்தனை முயற்சிகள் மூலம் தோல்விப் பாடம் கற்றுக்கொண்டு வெற்றிப் படிகளுக்கு மிக அருகில் வந்தான் என்றோ யாரும் விசாரிப்பதில்லை.

    வெற்றியாளனின் முன் வரலாறுகளைத் தெரிந்துகொண்டாலே உனக்குள்ளே ஓர் உந்துசக்தி பிறக்கும். தொட்டுவிடும் தூரத்தில்தான் வானம் இருக்கிறது என்ற விளக்கமும் கிடைக்கும்.

    ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு சூட்சமம் மறைந்திருக்கிறது. அந்தச் சூட்சமத்தைப் புரிந்துகொண்டாலே நாளை வெல்லும் நாளாவது நிச்சயம். வென்றவன் வாழ்க்கை வரலாற்றைப் படித்தாலே உனக்கும் அதன் மூலம் ஓர் உன்னதக் குறிப்புக் கிடைக்கும். அந்தச் சிறுகுறிப்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் நாளை வெல்லும் நாள் புத்தகம். வென்றவர்களின் வரலாற்றை நான் இதுவரை படித்த புத்தகங்கள் மூலமும், இணையதளங்களின் மூலமும் சேகரித்த விவரங்களுடன் என்னுடைய கருத்துகளையும் இணைத்து, இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளை அதனோடு முடிச்சுப் போட்டு உங்கள் முன் படைத்திருக்கிறேன்.

    வழக்கம்போல இந்நூல் அச்சாகும்போது உரிய மெய்ப்புகள் திருத்தி உதவிய பெரியகுளம், புலவர். து. இராசகோபால் (அருளாளன்) ஐயா அவர்களுக்கு என் நன்றி உரியது.

    ஏ. ஆர். முருகேசன், திண்டுக்கல்

    E-mail: murugesanar@gmail.com

    1. உன்னை அறிந்தால்...

    பல வருடங்களுக்குப் பிறகு பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். பல விஷயங்களைப் பற்றிப் பேசி முடித்த பிறகு, சிறுவயதில் நடந்த சம்பவங்கள் பக்கம் அந்த நண்பரின் கவனம் சென்றது. 1970-களில் ஆங்கிலப் பள்ளிகள், அந்தச் சிறு நகரத்தில் குறைவாகவே இருந்தன. ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. நண்பரின் பெற்றோர் அவரை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்திருந்தனர். LKG - யை முடித்துவிட்டு அப்போதுதான் UKG - க்கு வந்திருக்கிறார்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு விசேஷத்துக்காக UKG படிக்கும் மாணவர் வயதில் நண்பரும், அவருடைய பெற்றோரும் சொந்த கிராமத்துக்குச் சென்றனர். அங்கு உறவினர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். அனைவரும் நீளமான பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். தந்தையும் அமர்ந்துகொண்டார். தந்தையின் மடியை தொத்திக்கொண்டு UKG வயதில் நம்முடைய நண்பர். இனி அவரே தொடர்கிறார்.

    "எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது! என்னுடைய சித்தப்பா என் அப்பாவிடம் என்னைப் பற்றி விசாரித்தார். ‘என்ன படிக்கிறான்?’ என்று கேட்டார். ‘UKG படிக்கிறான்’ என்றார் என் தந்தை. ‘அட இங்கிலீஷ் மீடியமா? எங்கே... ஏ, பி, சி, டி, சொல்லுப்பா!’ என்று என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டார் சித்தப்பா. என் தந்தையும் என்னை மடியில் இருந்து இறக்கிவிட்டுப் ‘போய் சொல்லுப்பா!’ என்றார். ஆனால், நான் என் தந்தையின் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டே நாணத்துடன் எதுவும் பேசாமல் இருந்தேன்.

    அப்படி நான் இருந்ததற்குக் கூச்ச உணர்வுதான் காரணம். எனக்கு ஏபிசிடி முழுவதும் தெரியும் இருந்தாலும், அனைவரின் முன்னிலையிலும் அதைக் கூறுவதற்கு அந்தக் கூச்சம்தான் தடை போட்டது. என் தந்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ஆனால், கடைசி வரை காலடியைவிட்டு நகரவே இல்லை. என் சித்தப்பாவும் சரிண்ணே... பரவாயில்லை இருக்கட்டும் பயல் ரொம்ப வெட்கப்படறான் என்று சொல்லிவிட்டு, வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.

    இந்தச் சம்பவம் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டதால் இன்னும் நினைவில் இருக்கிறது. அதற்குக் காரணம்,

    அந்தச் சமயத்தில் என் சித்தப்பாவிடம் சென்று ஏபிசிடி ஒப்பிக்க வேண்டும் என்று மனத்திரையில் தோன்றிவிட்டது. ஆனால், அந்தக் கூச்ச உணர்வு என்னைத் தடுத்து நிறுத்திவிட்டது. என்னிடம் திறமையிருந்தும் அதை வெளிக்காட்ட முடியவில்லை. ஒரு வேளை, நான் துணிச்சலாக ஏபிசிடி கூறியிருந்தால் அது என் திறமையை வெளிக்காண்பித்ததாக இருந்திருக்கும். அது, என் அப்பாவுக்கு பெருமையாகவும் இருந்திருக்கும். அந்தச் சந்தோஷத்தை என் அப்பாவுக்குத் தராமல்விட்டது என்னுடைய தவறுதானே என்று இப்போது யோசிக்கிறேன்.

    இது உங்கள் தவறு மட்டுமல்ல நண்பரே. உங்களுடைய சுற்றத்தாருடைய தவறாகவும் இருக்கலாம். அதைப் பற்றி நாம் பின்னர் பேசப் போகிறோம். இனி, அந்த நண்பரே மீண்டும் தொடர்கிறார்.

    பள்ளிப்பருவத்தில் ஐந்தாவது வகுப்புப் படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. எனக்குத் தமிழ் உச்சரிப்புகள் நன்றாக வரும். நிறுத்தி நிதானமாகப் பேசுவேன். வீட்டில் சும்மா இருக்கும்போது, வானொலியின் செய்தி வாசிப்பாளரைப்போல் நாளிதழைப் பார்த்துச் செய்தி வாசிப்பேன். என் நண்பர்கள் இதைப் பார்த்துக் கைதட்டி இருக்கிறார்கள்.

    பள்ளியில் தமிழ்க் கட்டுரையை மனப்பாடம் செய்து வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் என்னிடம் வரலாம் என்று தமிழ் டீச்சர் வகுப்பறையில் கூறினார். பக்கத்தில் அமர்ந்திருந்த என் நண்பன் என்னைச் சுட்டிக் காண்பித்து டீச்சர்! இவன் நல்லா தமிழ் பேசுவான் என்றான்.

    டீச்சரும் என்னை அழைத்துத் தமிழ்ப் புத்தகத்தில் உள்ள சில வரிகளை வாசிக்கச் சொன்னார். நானும் ழ – வுக்கும், ள-வுக்கும் வித்தியாசம் காண்பித்து தடங்கல் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் வாசித்தேன். என்னுடைய தமிழ் உச்சரிப்பில் திருப்தி அடைந்த டீச்சர் என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார். நீதான் வாசிக்கப் போகிறாய்! என்று சொல்லி A4 சைஸ் பேப்பரில் மூன்று பக்கங்கள்கொண்ட ஒரு கட்டுரையை மனப்பாடம் செய்து வரும்படி கொடுத்தார். இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து வர வேண்டும் என்று கூறினார்.

    நான் கட்டுரை அடங்கிய தாளை வாங்கும்போது நம்பிக்கையுடன்தான் வாங்கினேன். ஆனால், என் மனத்தின் மூலையில், ‘ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை? உன்னால் முடியுமா? முதலில், இந்த மூன்று பக்கங்கள் அடங்கிய கட்டுரையை மனப்பாடம் செய்துவிடுவாயா? சரி... ஏதோ குருட்டாம் போக்கில் மனப்பாடம் செய்துவிடுகிறாய் என்று வைத்துக்கொள்வோம். அனைவரின் முன்னிலையிலும் தைரியமாகப் பேசிவிடுவாயா? கூட்டத்தைப் பார்த்தாலே கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் எப்படி நீ மனப்பாடம் செய்த வரிகள் ஞாபகத்துக்கு வரும். அனைவரின் முன்னிலையிலும் ஒன்றும் பேசாமல் முழித்துக்கொண்டு நின்றால் கேவலமாக அல்லவா போய்விடும்! இது ஒன்றும் தமிழ் பரீட்சையல்ல. உன் இஷ்டத்துக்கு கதை அடிப்பதற்கு! அப்படியே நீ பரீட்சையில் கதை அடித்தாலும், வெகுநாட்களுக்குப் பிறகுதான் அதைத் திருத்தும் டீச்சர் படித்துப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஆனால், இது அப்படி அல்ல. உன் முன்னால் ஏகப்பட்ட மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள். உடனுக்குடன் மார்க் போடுவதற்கு அருகில் நாற்காலிகளில் ஆசிரியர்கள் அமர்ந்திருப்பார்கள். உன்னால் கை நடுக்கமும், குரல் நடுக்கமும் இல்லாமல் பேச முடியுமா?’ என்று என் மனத்தின் ஓரத்தில் சின்னப்புள்ளியாக ஆரம்பித்த அவநம்பிக்கை சிறிது சிறிதாக என் மனம் முழுவதும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

    ஒவ்வொரு நாளும் அந்தச் சின்னப்புள்ளி பெரிதாகிக்கொண்டே வந்தது. இதற்கிடையே தீபாவளி வந்தது. தீபாவளி நாளில் சங்குச்சக்கரம் கொளுத்தும்போது கையில் சுட்டுக்கொண்டேன். அது, பெரிய புண்ணாக ஆகி ஆறுவதற்கு ஒரு வாரம் ஓடிவிட்டது. அந்த ஒரு வாரமும் பள்ளி செல்லவில்லை.

    புண் ஆறிய பிறகு பள்ளி சென்றபோது, என்னிடம் தமிழ் டீச்சர் கேட்ட முதல் கேள்வி ‘தமிழ்க் கட்டுரையை மனப்பாடம் செய்து வந்தாயா? இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கிறது’ என்று கேட்டார். நான் இன்னும் மனப்பாடம் செய்யவில்லை என்று பதில் அளித்ததும் அடுத்த கேள்வியை கேட்டார். உன்னால் பத்து நாள்களுக்குள் மனப்பாடம் செய்துவிட முடியுமா?

    நான் யோசிக்கக்கூட இல்லை. முடியாது என்று கூறிவிட்டேன். அந்த டீச்சர் என் கண்களில் தெரிந்த அவநம்பிக்கை இருளைப் பார்த்துவிட்டார் போலும்! அதனால்தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்று இப்போது யோசிக்கும்போது புரிகிறது.

    அந்த அவநம்பிக்கைக்குக் காரணம் எனக்கு ஏற்பட்ட பயமும், கூச்சமும்தான். இந்த இரண்டின் காரணமாகத் தயக்கம் ஏற்பட்டுவிட்டது. தயக்கத்தின் காரணமாக என் மனம் யோசிக்கக்கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் முடியாது என்று கூறிவிட்டது.

    அதன்பிறகு அந்த டீச்சர் வேறொரு மாணவனைத் தயார்படுத்திப் பேச வைத்தார். காலம் மிகக் குறுகியதாக இருந்ததால் அவன் சுமாராகத்தான் பேசினான். அவன் குரலும், என் குரலைவிடச் சுமாராகவே இருந்தது. தமிழ் உச்சரிப்பும் பரவாயில்லாமல் இருந்தது. என் அளவுக்கு இல்லை. இந்த விமர்சனத்தைச் சொல்லுவதற்கு எனக்கு உரிமையில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

    அவன் சுமாராகப் பேசியதால் பரிசு கிடைக்கவில்லை. ஆனால், அவனைத் தயார்ப்படுத்திய டீச்சர் அவனைத் தட்டிக் கொடுத்து, பரவாயில்லையே... எட்டு நாள்களுக்குள் இந்த அளவுக்குப் பேசியது உண்மையிலேயே பெரிய விஷயம், உனக்குப் பரிசு கிடைக்கவில்லையே எனக் கவலைப்படாதே. நான் உனக்குப் பரிசு கொடுக்கிறேன் என்று கூறி ஏதோ ஒரு பரிசு கொடுத்தார். இந்தச் சம்பவம் என் உள்மனத்துக்கு கிடைத்த பெரிய அடியாகவே கருதினேன்.

    குரல் வளமும், தமிழ் உச்சரிப்பும் சரியாக இல்லாதபோதும், தன்னுடைய பயமற்ற தன்மையாலும், கூச்சம் இன்மையாலும், டீச்சரிடம் பாராட்டும், பரிசும் பெற்றுவிட்டான் அவன். ஆனால், எனக்குக் குரல் வளமும், தமிழ் உச்சரிப்பும் நன்றாக இருந்தும் பயஉணர்ச்சியாலும், கூச்ச உணர்வாலும் நல்லதொரு வாய்ப்பை இழந்துவிட்டேன். நான் பேசியிருந்தால் உறுதியாக முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பேன் என்பதை அப்போதே உணர்ந்துவிட்டேன்.

    2. பயமா... எனக்கா... நெவர்!

    அந்த நண்பர் ஐந்தாம் வகுப்புத் தேர்ச்சியாகி ஆறாம் வகுப்புக்கு வந்துவிட்டார். ஆறாம் வகுப்பு வரும்போது, ஆறாம் அறிவும் விழித்துக்கொள்கிறது. பள்ளிக்கூடத்தில் உள்ள நூலகத்துக்குச் சென்று பல நூல்களை எடுத்துப் படித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். பிறகு நூலகத்தில் உறுப்பினராகி நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். அங்கு அறிமுகமானதுதான் தன்னம்பிக்கை நூல்கள்.

    "நான் முதன்முதலில் தன்னம்பிக்கை நூலைப் படிக்க ஆரம்பித்த போதுதான், என்னிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1