Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veppamaramum Sila Kaakangalum
Veppamaramum Sila Kaakangalum
Veppamaramum Sila Kaakangalum
Ebook90 pages33 minutes

Veppamaramum Sila Kaakangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் குறுநாவலின் தொடக்கம், ஏதோ வடை திருடிய காக்கா கதைபோலத் தோன்றுகின்றது. நகரத்தின் விளிம்பில் அமைந்திருக்கின்ற ஒரு கிராமத்தின் ஓரத்தில் உள்ள ஓட்டு வீட்டின் அருகில் ஓங்கி வளர்ந்து கிளைபரப்பி இருக்கும் வேப்பமரம்தான் கதைக்களம். அந்த மரத்தில் கூடுகட்டி வாழும் அண்டராஜன் என்ற கருங்காகமும், அதன் தோழர்களான கோணக் கழுத்துக் காகம், மச்சக்காரக் காகம், வாலாட்டிக் காகம் ஆகியவைதான் கதாபாத்திரங்கள்.

பாப்பாக் கதை போலத் தொடங்கி, மரத்தை வெட்டப் போகின்றார்களென்ற திடுக்கிடும் செய்தியோடு கதை வளர்கின்றது. மரத்தை வெட்டி விடுவார்களா என்ற பதைபதைப்போடு கதையைப் படிக்கச் செய்து, மரத்தைக் காக்கத் தன்னலமின்றிப் போராடும் மாணவன் கணேசன், பண நெருக்கடியில் மரத்தை விற்கும் அவனது தந்தை சாமிநாதன், மகனின் மன உணர்வுகளைப் புரிந்து நெகிழும் தாய் செங்கமலம் என குறுநாவல் விரிகின்றது. கதையின் போக்கில் நாம் நம்மை மறக்கின்றோம். மறப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580169510170
Veppamaramum Sila Kaakangalum

Read more from A.R. Murugesan

Related to Veppamaramum Sila Kaakangalum

Related ebooks

Reviews for Veppamaramum Sila Kaakangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veppamaramum Sila Kaakangalum - A.R. Murugesan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வேப்பமரமும் சில காகங்களும்

    Veppamaramum Sila Kaakangalum

    Author:

    ஏ.ஆர். முருகேசன்

    A.R. Murugesan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ar-murugesan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அணிந்துரை

    முனைவர் மா.பா. குருசாமி

    செயலாளர், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை

    இயற்கையைக் காக்க ஓர் இனிய புதினம்

    படைப்பிலக்கியத்தில் புதினத்திற்குத் தனி இடம் உண்டு. சிறுகதை, ஓடுகிற ஓட்டத்தில் கருப்பொருளைப் புனைந்து அள்ளித் தெளிக்கும். புதினம் நிதானமாக, புனைபுலத்தில் நின்று, கற்பவர் நெஞ்சினைச் சிறிது சிறிதாகக் கவர்ந்து, ஈர்த்து, மலர்ந்து, மணம் பரப்பி, சொல்ல வருவதை ஆழமாக ஊன்றும்.

    புனை கதைகள் வெறும் பொழதுபோக்கிற்காகப் படைக்கப்படுவதில்லை. அவற்றைப் படிப்பவர்களைச் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுபவை சிறந்த சிறுகதைகள், புதினங்கள், அப்படி ஒரு புனை கதையை மிகஅருமையாக, கலையழகும், கற்பனை வளமும் பின்னிப்பிணைய, திரு. ஏ.ஆர். முருகேசன், வேப்பமரமும் சில காகங்களும் என்ற தலைப்பில் படைத்தளித்திருக்கின்றார்.

    இந்தக் குறுநாவலின் தொடக்கம், ஏதோ வடை திருடிய காக்கா கதைபோலத் தோன்றுகின்றது. நகரத்தின் விளிம்பில் அமைந்திருக்கின்ற ஒரு கிராமத்தின் ஓரத்தில் உள்ள ஓட்டு வீட்டின் அருகில் ஓங்கி வளர்ந்து கிளைபரப்பி இருக்கும் வேப்பமரம்தான் கதைக்களம். அந்த மரத்தில் கூடுகட்டி வாழும் அண்டராஜன் என்ற கருங்காகமும், அதன் தோழர்களான கோணக் கழுத்துக் காகம், மச்சக்காரக் காகம், வாலாட்டிக் காகம் ஆகியவைதான் கதாபாத்திரங்கள்.

    பாப்பாக் கதை போலத் தொடங்கி, மரத்தை வெட்டப் போகின்றார்களென்ற திடுக்கிடும் செய்தியோடு கதை வளர்கின்றது. படிப்பவர்கள் அடுத்தது என்ன, மரத்தை வெட்டி விடுவார்களா என்ற பதைபதைப்போடு கதையைப் படிக்கச் செய்து, மரத்தைக் காக்கத் தன்னலமின்றிப் போராடும் மாணவன் கணேசன், பண நெருக்கடியில் மரத்தை விற்கும் அவனது தந்தை சாமிநாதன், மகனின் மன உணர்வுகளைப் புரிந்து நெகிழும் தாய் செங்கமலம் என குறுநாவல் விரிகின்றது. கதையின் போக்கில் நாம் நம்மை மறக்கின்றோம்.

    இன்றையச் சமுதாயப் பொருளாதாரப் பின்புலத்தில் மரங்களை வெட்டி இயற்கையை அழிக்கும் கொடுமையை, அறிவியல் நோக்கில் இயற்கையைக் காக்க வேண்டிய தேவையைக் கருப்பொருளாகக் கொண்டு புதினத்தைப் படைத்திருப்பதற்கு ஆசிரியரை முதலில் பாராட்ட வேண்டும்.

    கட்டுரையின் பொருளாகப் பெரும்பாலானவர்கள் கையாள்கின்ற ஒரு கருப்பொருளை, குறுநாவலின் கருப்பொருளாக்கி, உயிரோட்டமான கற்பனையில் கதையின் கருவாக்கி, சரியான திருப்பங்களோடு கதை சொல்லும் உத்தி குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் மனம் ஒன்றிப் படிக்கும் வகையில் நாடகக் காட்சிகளைப் போன்ற சின்னச்சின்ன நிகழ்வுகளோடு கதை ஓட்டமெடுக்கின்றது. ஒவ்வொரு நிகழ்விலும், திருப்பத்திலும் ஆசிரியரின் கைவண்ணம் ஒளிர்கின்றது.

    இந்தப் புதினத்தின் நாயகன் கணேசன். வேப்பமரத்துக் காகங்களுக்குப் பொரிகடலையும், மிக்சரும் வைக்கும் சிறுவனாகத் தொடக்கத்தில் தோன்றினாலும், அவன் +2 படித்துவிட்டுக் கல்லூரியில் ‘அனிமேஷன்’ பாடம் பயிலப் போகின்றவன் என்று அறிகின்ற பொழுது அவனது இயற்கை பற்றிய அறிவின் தெளிவு புரிகின்றது. அவன் சிறுவனல்ல; வளரும் இளைஞன்.

    கணேசன் பிறந்தபொழுது அப்பா நட்டுவளர்த்த வேப்பமரம். அதனை அவன் தன் அண்ணனாகவே, கருதுகின்றான். அதனை வெட்டுவது அண்ணனின் கை, கால்களை வெட்டுவது போலென எண்ணித் தடுக்கின்றான். பெற்ற தந்தையிடம் அடி வாங்குகின்றான். மரத்தைக் காக்கின்றான்.

    சங்க இலக்கியத்தில், வீட்டின் முன்னால் வளர்ந்திருக்கும் புன்னை மரத்தை, உடன் பிறந்த தமக்கையாகக் கருதிப் போற்றிய இலக்கியத் தலைவி நினைவிற்கு வருகின்றாள்.

    வேப்ப மரத்தை வெட்டாமல் காப்பதோடு, கணேசனின் படிப்புத் தொடர வழிகாட்டும் தொலைக்காட்சிச் செய்தியாளர் செந்தில், துணைநிற்கும் ஊராட்சித் தலைவர் சொக்கலிங்கம், உதவுகின்ற சுற்றுச்சூழல் அமைச்சர் என்று கதை சுழன்றுசுழன்று நிறைவடைகின்றது. நல்ல வேளை, வில்லன்கள் இல்லாத கதை; மங்களமாக முடிகின்றது.

    இந்தக் குறுநாவலின் தனிச் சிறப்புக்களில் ஒன்று, இதில் வருகின்ற, இயற்கையின் பங்களிப்பு, அதனைச் சீர்குலைப்பால் ஏற்படும் விளைவுகள் இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஆகியவை பற்றிய கருத்துகள் கதையின் போக்கிலேயே அறிவியல் கருத்துகள் தெளிவுபட விளக்கப்படுகின்றன. இதில் வரும் வேப்ப மரம் இயற்கையின் இடுகுறி. டெலிவிஷன் டவர் அமைக்க வேப்பமரத்தை வெட்ட முயல்வது இக்காலச் சூழலின் வெளிப்பாடு.

    காகங்களின் உரையாடலின் மூலம் டெலிவிஷன் டவர் காரணமாகக் குருவி, காகம் என்று சிறிய உயிரினங்கள் அழிவது மட்டுமின்றி, கதிர்வீச்சினால் மனிதர்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1