Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetri Kalai Uththigal!
Vetri Kalai Uththigal!
Vetri Kalai Uththigal!
Ebook160 pages1 hour

Vetri Kalai Uththigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே போகிறது. பழைய கால உத்திகளுடன் நவீன உத்திகளும் வாழ்க்கையில் வெற்றி பெற இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

ஏராளமான பெரியோர்களும், வெற்றியாளர்களும் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பல்வேறு விதமாக எடுத்துக் கூறியுள்ளனர். தாங்கள் வெற்றி பெற்ற வழியைக் காண்பித்துள்ளனர்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580151008249
Vetri Kalai Uththigal!

Read more from S. Nagarajan

Related to Vetri Kalai Uththigal!

Related ebooks

Reviews for Vetri Kalai Uththigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetri Kalai Uththigal! - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    வெற்றிக் கலை உத்திகள்!

    Vetri Kalai Uththigal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    1. ஓஷோவின் அறிவுரை : புத்தகம் படியுங்கள்!

    2. படேரெவ்ஸ்கியின் அறிவுரை: பயிற்சி செய்யுங்கள்!

    3. லிங்கனின் அறிவுரை: மன்னித்து விடுங்கள்!

    4. மஹாத்மா காந்திஜியின் அறிவுரை: நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!

    5. ஆதிசங்கரரின் அருளுரை: நல்லோரைச் சேருங்கள்!

    6. ஜீன் ராபர்ட்ஸனின் அறிவுரை: சிரித்து மகிழுங்கள்!

    7. புத்தரின் அருளுரை: நிகழ்காலத்தில் வாழுங்கள்!

    8. ஸ்வாமி விவேகானந்தரின் அருளுரை : சேவை புரியுங்கள்!

    9. எட்வர்ட் டீ போனோவின் அறிவுரை: மாற்றி யோசியுங்கள்!

    10. வெப்ஸ்டரின் அறிவுரை: மொழிப்புலமை பெறுங்கள்

    11. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரை: தொழில்நுட்பம் பழகுங்கள்!

    12. ஷேக்ஸ்பியரின் அறிவுரை: இசை மூலம் இன்புறுங்கள்!

    13. பகவான் ரமணரின் அருளுரை: மௌனம் பழகுங்கள்!

    14.பதஞ்சலி முனிவரின் அருளுரை: யோகம் புரியுங்கள்!

    15. எமர்ஸனின் அறிவுரை: இயற்கையை நேசியுங்கள்!

    16. கோப்மேயரின் அறிவுரை: கேளுங்கள்!

    17. அருளாளர்களின் அருளுரை: கீதை படியுங்கள்!

    18. கபீரின் அருளுரை: குறை காணாதீர்கள்!

    19. டேல் கார்னீகியின் அறிவுரை: பாராட்டத் தவறாதீர்கள்!

    20. பெஞ்ஜமின் ஃபிராங்க்ளினின் அறிவுரை: குறிப்புப் புத்தகம் எழுதுங்கள்!

    21. மஸாகி இமாயின் அறிவுரை: படிப்படியாகத் தொடர்ந்து முன்னேறுங்கள்!

    22. அம்பலவாணர் அறிவுரை : இரகசியம் காத்துக் கொள்ளுங்கள்!

    23. மஹரிஷி வசிஷ்டரின் அருளுரை:சமநிலையுடன் இருங்கள்!

    24. வள்ளுவரின் அருளுரை : குடும்பத்துடன் குலவுங்கள்!

    25. ஹெட்விக் லூயிஸின் அறிவுரை : ஆளுமை கவர்ச்சியை அதிகரியுங்கள்!

    26. ஜீன் கால்மெண்டின் அறிவுரை: அதிக வயது ஒரு தடையில்லை என்பதை உணருங்கள்!

    27. அற்புதங்கள் புரியுங்கள்; ஆனால் அவற்றை விளக்காதீர்கள்!

    28. முடிவுரை

    என்னுரை

    வெற்றிக் கலை என்ற எனது புத்தகத்திற்குக் கிடைத்த ஆதரவு என்னை இன்னும் அதிகமதிகம் வெற்றிக் கலை பற்றி எழுத உந்தியது.

    முதல் பாகத்திற்கு எனது இனிய நண்பரும் பிரபல டைரக்டரும் பாக்யா இதழ் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் முன்னுரை தந்து கௌரவித்தார்.

    இன்றைய போட்டி மிகுந்த உலகில் நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே போகிறது.

    பழைய கால உத்திகளுடன் நவீன உத்திகளும் வாழ்க்கையில் வெற்றி பெற இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

    ஏராளமான பெரியோர்களும், வெற்றியாளர்களும் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பல்வேறு விதமாக எடுத்துக் கூறியுள்ளனர். தாங்கள் வெற்றி பெற்ற வழியைக் காண்பித்துள்ளனர்.

    இவற்றையெல்லாம் சிறிய கட்டுரைகளாக இணைய தள இதழான நிலாச்சாரல் இதழில் 2015ஆம் ஆண்டு எழுதி வந்தேன்.

    வாசகர்களின் பேராதரவு கிடைத்தது.

    வெற்றிக் கலையின் இரண்டாம் பாகமாக மிளிர்ந்த அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இப்போது வெற்றிக்கலை உத்திகள் என்ற நூலாக உங்கள் முன் மலர்கிறது.

    இதை நிலாச்சாரல் இதழில் வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    இந்த நூலின் முடிவுரையில் வெற்றிகரமான வாழ்க்கைக்கான வரையறை தரப்பட்டுள்ளது. அதை அடைவதே ஒவ்வொரு மனிதனின் இலட்சியமாக காலம் காலமாக இருந்து வந்துள்ளது. அதை அடைய இந்த உத்திகள் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

    இதைத் தொடராக வந்த போது இதைப் படித்து ஆதரவு தந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

    வெற்றி பெற விழையும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

    இந்த வெற்றிக்கலை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    நன்றி

    பெங்களூர்

    ச.நாகராஜன்

    5-3-2022

    1. ஓஷோவின் அறிவுரை : புத்தகம் படியுங்கள்!

    அருமையான ஆங்கிலக் கவிதை

    சமீபத்தில் இணைய தளத்தில் (injoy என்ற) இதழில் படித்த ஒரு கவிதை இது.

    Every great writer

    is an avid reader

    Every book

    has potential to

    take you on

    a journey

    Every picture speaks

    a thousand words

    One word can

    invoke a

    thousand pictures

    Between the lines

    there are often

    other stories

    to be found

    எழுதுகின்ற ஒவ்வொரு எழுத்தாளரும் ஏராளமான நூல்களைப் படிப்பது நிச்சயம் என்கிறது பொருள் பொதிந்த இந்தக் கவிதை. ஒவ்வொரு நூலும் ஒரு பெரிய பயணத்தை அதைப் படிப்பவருக்கு உருவாக்குகிறது. அந்தப் பயணத்தில் கிடைக்கும் இன்பம் வாழ்நாள் முழுவதும் கூட வரும் இன்பம். சின்னச் சின்ன வார்த்தைகள்…. அவற்றை மனதில் ஏந்தி அசை போட்டுப் பார்த்து அனுபவத்திற்கு உகந்தவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில் உள்ள ஆனந்தமே உண்மை ஆனந்தம்!

    ஓஷோ சொன்ன கதை!

    ஒஷோவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவரே கூறி இருக்கிறார். அது புத்தகம் படிப்பதைப் பற்றியது. அதைப் பார்ப்போம்.

    ஓஷோ பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.

    அவர் வகுப்புகளுக்குச் செல்வதே இல்லை. இதனால் பேராசிரியர்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. ஒரு நாள் தலைமைப் பேராசிரியர் ஓஷோவை அழைத்தார்.

    நீ ஏன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வந்தாய்? உன்னை ஒரு நாளும் எந்த புரபஸரும் வகுப்பறையில் பார்த்ததே இல்லையாம்! . தேர்வு வரும் சமயத்தில் அட்டண்டன்ஸ் இல்லை என்று என்னைப் பார்க்க வராதே! இப்போதே சொல்லி விட்டேன். 75 சதவிகித அட்டண்டன்ஸ் இருந்தால் தான் பரிட்சை எழுத முடியும் என்றார் அவர்.

    அவர் கையைப் பிடித்தார் ஒஷோ.

    சார்! என்னுடன் கொஞ்சம் வாருங்கள். நான் பல்கலைக் கழகத்தில் எங்கு இருந்தேன், என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியவரும் என்றார் ஓஷோ.

    முதலில் கொஞ்சம் பயாந்த அவர் இந்த கிறுக்கு நம்மை என்ன செய்யுமோ என்று நினைத்தார்.

    என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகிறாய்?

    ஒஷோ கூறினார்: நீங்கள் 100 சதவிகித அட்டண்டன்ஸ் நிச்சயம் தருவீர்கள். அந்த இடத்திற்குத் தான்! என்னுடன் தயவுசெய்து வாருங்கள்!

    ஒஷோ அவரை பல்கலைக் கழகத்தின் நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

    நூலகரைப் பார்த்துச் சொன்னார். தயவுசெய்து இவரிடம் சொல்லுங்கள். நான் நூலகம் வராத நாள் ஏதேனும் உண்டா?

    நூலகர் சொன்னார்: பல்கலைக் கழக விடுமுறை நாட்களிலும் கூட இவர் இங்கு வந்து விடுவார். ஒருவேளை நூலகத்திற்கும் விடுமுறை என்றால் எதிரில் இருக்கும் தோட்டத்தில் புல்வெளியில் அமர்ந்து கொள்வார். ஆனால் தினந்தோறும் நிச்சயம் வந்து விடுவார். ஒவ்வொரு நாளும், கிளம்பப்பா, நூலகத்தை மூட வேண்டும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக இவரை அனுப்புவோம்."

    ஒஷோ பேராசிரியரைப் பார்த்துச் சொன்னார்: உங்கள் பேராசிரியர்களை விட புத்தகங்கள் தெளிவாக அனைத்தையும் சொல்லித் தருவது மட்டும் நிச்சயம். இந்த புத்தகங்களில் உள்ளவற்றைத் தான் அவர்கள் திருப்பிச் சொல்கின்றனர். ஆகவே இரண்டாம் தரமாக உள்ள அந்தப் பேச்சைக் கேட்க நான் ஏன் தினமும் வகுப்பறைக்குப் போக வேண்டும்? நேரடியாக புத்தகங்களிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டியவற்றை நான் தெரிந்து கொள்கிறேனே!

    ஒஷோ தொடர்ந்தார்: இந்த புத்தகங்களில் இல்லாத எந்த விஷயத்தையாவது உங்கள் பேராசிரியர்கள் சொல்வதாக நீங்கள் எனக்கு நிரூபித்துக் காட்டினால், நான் வகுப்புகளுக்கு வரத் தயார்! அப்படி நிரூபிக்க முடியவில்லை எனில். நீங்கள் நிச்சயம் எனக்கு 100 சதவிகித அட்டண்டன்ஸ் தரவேண்டும். தரவில்லை எனில் உங்களுக்கு நான் தொந்தரவு தருவது மட்டும் நிச்சயம்!

    ஒஷோ மீண்டும் அவரைப் பார்க்கவே இல்லை. ஆனால் அவர் 100 சதவிகித அட்டண்டன்ஸை ஒஷோவிற்குத் தந்தார்.

    அவருக்கு விஷயம் நன்கு புரிந்து விட்டது.

    அவர் கூறினார்: நீ சொல்வது சரி தான்! எதற்காக இரண்டாம் தர அறிவைப் பெற வேண்டும்? நீ நேரடியாக புத்தகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். எனக்கு இந்த பேராசிரியர்களைப் பற்றி நன்கு தெரியும். ஏன், நானே ஒரு கிராமபோன் ரிகார்டு தான்! என்னுடைய பழைய நோட்ஸை வைத்துத் தான் நானே வகுப்பை எடுக்கிறேன்!

    முப்பது வருடங்களாக அவர் தனது பழைய நோட்டை வைத்துக் கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1