Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhinamum Oru Thiruvaakku
Dhinamum Oru Thiruvaakku
Dhinamum Oru Thiruvaakku
Ebook184 pages1 hour

Dhinamum Oru Thiruvaakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல செயலை உருவாக்குகிறது. நல்ல செயல்கள் நம் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கின்றன. நம் வாழ்க்கைத் தரமே சமுதாயத்தில் நமக்கென ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது.

ஆக... அனைத்திற்கும் மூலகாரணமாக விளங்குவது நம் மனதில் உதிக்கும் நற்சிந்தனையே. நற்சிந்தனைகள் மனதில் உதிக்க நம் மனம் எனும் பண்பட்ட நிலத்தில் ஆன்றோர், சான்றோர்களது எண்ண விதைகள் விதைக்கப்பட வேண்டியது அவசியம்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு அறிஞரது நற்சிந்தனையையாவது நாம் படித்து நம் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். இதற்காக நாம் எண்ணற்ற நூல்களைத் தேடிப் படிக்க வேண்டியதாகிறது. இதை மனதில் கொண்டே அறிஞர்களது நற்சிந்தனைகளைத் தொகுத்து ஒரே நூலாக அமைத்திருக்கிறேன். ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள மொத்தம் 365 நாட்களுக்கும் 365 நற்கருத்துக்கள் அடங்கியது தான் இந்நூல்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முதல் ஔவையார், திருவள்ளுவர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, சுவாமி சிவானந்தர், ஸ்ரீ காஞ்சி பெரியவர், இராமலிங்க அடிகளார், புத்தர், முகம்மது நபி, இயேசு கிறிஸ்து முதலானோரின் நற்சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580134805865
Dhinamum Oru Thiruvaakku

Read more from Geetha Deivasigamani

Related to Dhinamum Oru Thiruvaakku

Related ebooks

Reviews for Dhinamum Oru Thiruvaakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhinamum Oru Thiruvaakku - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    தினமும் ஒரு திருவாக்கு

    Dhinamum Oru Thiruvaakku

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல செயலை உருவாக்குகிறது. நல்ல செயல்கள் நம் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கின்றன. நம் வாழ்க்கைத் தரமே சமுதாயத்தில் நமக்கென ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது.

    ஆக... அனைத்திற்கும் மூலகாரணமாக விளங்குவது நம் மனதில் உதிக்கும் நற்சிந்தனையே. நற்சிந்தனைகள் மனதில் உதிக்க நம் மனம் எனும் பண்பட்ட நிலத்தில் ஆன்றோர், சான்றோர்களது எண்ண விதைகள் விதைக்கப்பட வேண்டியது அவசியம்.

    ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு அறிஞரது நற்சிந்தனையையாவது நாம் படித்து நம் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். இதற்காக நாம் எண்ணற்ற நூல்களைத் தேடிப் படிக்க வேண்டியதாகிறது. இதை மனதில் கொண்டே அறிஞர்களது நற்சிந்தனைகளைத் தொகுத்து ஒரே நூலாக அமைத்திருக்கிறேன்.

    ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள மொத்தம் 365 நாட்களுக்கும் 365 நற்கருத்துக்கள் அடங்கியது தான் இந்நூல்.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முதல் ஔவையார், திருவள்ளுவர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, சுவாமி சிவானந்தர், ஸ்ரீ காஞ்சி பெரியவர், இராமலிங்க அடிகளார், புத்தர், முகம்மது நபி, இயேசு கிறிஸ்து முதலானோரின் நற்சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

    என் எழுத்துலக வெற்றிகளுக்கு உடனிருந்து ஊக்கம் அளிக்கும் என் கணவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. என் தெய்வசிகாமணி அவர்களுக்கு நன்றிகள் பல. என்னுள் இருந்து என்னை இயக்கி வரும் என் தாயார் நாவலாசிரியை தெய்வத்திரு. லீலா கிருஷ்ணன், தந்தையார் தெய்வத்திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் இந்நூலினை சமர்ப்பிக்கிறேன்.

    - கீதா தெய்வசிகாமணி

    23, 'அபிநவ் பேலஸ்'

    ஜெத்நகர்

    முதல் பெயின் ரோடு

    மந்தவெளி

    சென்னை -28

    தொ.பே: 24933886

    ஜனவரி - 1

    மூவுலகிலும் நான் செய்ய வேண்டும் என்று ஒன்றும் இல்லை. ஏனென்றால் நான் அடையாத ஒன்றை அடைய வேண்டும் என்கிற நிலையில் இல்லை. இருப்பினும் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். அதாவது செய்ய வேண்டுவதை நான் செய்துகொண்டிருக்கிறேன். உனக்குத் தேரோட்டுவதைப் போல.

    - பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா

    ***

    ஜனவரி - 2

    "இறைவா! நீ பாடச் செய்தால் பாடுகிறேன்.

    பணியச் செய்தால் பணிகின்றேன்.

    உன்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன்.

    மனம் குழையச் செய்தால் குழைகின்றேன்.

    குறித்த உணவை உண்ணச் செய்தால் உண்கின்றேன்.

    தூங்கச் செய்தால் தூங்குகின்றேன்.

    எனக்கெனத் தனித்ததோர் இயக்கம் ஏது? எல்லாம் உன்னால் ஆவன.

    இச் சிறியேனால் தன்னிச்சையாகச் செயல்படுவது என்பது எங்கே?"

    - வள்ளலார் திருஅருட்பா

    ***

    ஜனவரி - 3

    ஒரு தந்தை தன்னுடைய குழந்தைக்கு நற்குணத்தைக் கற்றுக்கொடுப்பதைக் காட்டிலும் அக்குழந்தைக்குச் சிறப்பாக வேறு எதையும் கற்றுக் கொடுக்க முடியாது. நல்லொழுக்கத்தினும் மேலான பொருள் எதையும் தந்தை மகனுக்குக் கற்றுத் தர முடியாது. உன் அன்னையின் பாதக் கமலங்களிலேயே சுவர்க்கம் இருக்கிறது. தாய் உன்னை பத்து மாதங்கள் சுமந்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி நடந்து விடாதே.

    - முகம்மது நபி

    ***

    ஜனவரி - 4

    தினமும் காலையில் படுக்கையைவிட்டு எழும்போது இரண்டு நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

    உங்களைப் படைத்தவருக்காக இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கலாம் அல்லவா!

    இறைவா, இன்று உமது விருப்பத்தை நிறைவேற்ற எவ்விதம் நீர் விரும்புகிறீரோ அவ்விதம் என்னைப் பயன்படுத்துவீராக. நான் என்னை ஒன்றுமில்லாதவனாக ஆக்கி உங்கள் பொறுப்பில் என்னை முழுக்கவும் விட்டு விடுகிறேன்.

    - ஸ்வாமி சிவானந்தா

    ***

    ஜனவரி - 5

    தினமும் தூங்கப் போகுமுன் இன்று மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்தோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

    பரோபகாரம் செய்யாமலே ஏழு நாள் போயிற்று என்றால் அது நாம் பிறவா நாளே - அன்றைக்கு நாம் செத்துப் போனதற்கு சமம் - என்று வருத்தப்பட வேண்டும். நாமே செத்த மாதிரி என்றால் இதுதான் பெரிய தீட்டு.

    - ஸ்ரீ காஞ்சி பெரியவர்

    ***

    ஜனவரி - 6

    இறைவனை ஒரு ஆசானாகப் பாவித்து அவருக்கு மாணாக்கனாக இருத்தல், அவரை ஒரு தந்தையாக பாவித்து அவருடைய புதல்வனாகத் திகழ்தல், ஓர் அன்னையாகப் பாவித்து அவரது பரிவைப் பெறுதல், அவரை ஒரு நண்பனாகக் கருதி அவரைத் தழுவுதல், விளையாட்டுத் தோழனாகக் கருதி அவருடன் சிரித்து விளையாடுதல், ஆண்டான் - அடிமை என்பதில் பேரின்பம் எய்தல், நம்முடைய ஆசை நாயகன் என அவரை நோக்கி ஆனந்த பரவசமாக நிற்றல் - இவ்வேழு திரு அருட்பேறுகளே இந்த மானுட வடிவெடுத்த இந்த ஜீவனுக்கு உரியன.

    - ஸ்ரீ அரவிந்தர்

    ***

    ஜனவரி - 7

    மனிதனுக்கு வெளி உதவி என்பது இல்லவே இல்லை. அன்றும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இனியும் இருக்காது. ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் ஆண்களும் பெண்களும் அல்லவா! உலக நாயகர்களான உங்களுக்கு பிறர் உதவியா? வெட்கமாக இல்லை? நீங்கள் ஆன்மா, நீங்கள் சக்தி, நீங்களே முயன்று துன்பங்களிலிருந்து விடுபடுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ யாரும் எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. அப்படி ஒருவர் இருப்பதாக நினைப்பது ஒரு இனிய மயக்கம். அதனால் எந்தப் பயனுமில்லை.

    - சுவாமி விவேகானந்தர்

    ***

    ஜனவரி - 8

    நம்முடைய ஆத்மாவின் சக்தியை உணராதவரையில் கடவுள் இருப்பதாக நாமும் உணரமாட்டோம். பெரிய வான்வெளி இருக்கிறது. அதில் காற்று நிறைந்திருக்கிறது. அதில் ஒரு சிறு வீட்டை பூமியில் கட்டுகிறோம். அதன் அளவுக்குள் மின்விசிறியைப் பொருத்துகிறோம். அறையின் ஜன்னல்களை மூடிவிட்டு காற்று இல்லை என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அறைக்குள்ளும் காற்று இருக்கிறது. மின்விசிறியைப் போட்டதும் அது காற்றின் அசைவைத் தூண்டுகிறது. அதேபோல் கடவுள் விரித்த வான்மண்டலக் காற்றைப் போன்றவர். நம்முள்ளும் பரவி இருக்கிறார். நம் பக்தி உணர்வால்தான் ஆத்மாவைத் தூண்டிப் புரிந்து கொள்ள வேண்டும்.

    - சுவாமி சின்மயாநந்தர்

    - Vedantha Through Letters நூலிலிருந்து.

    ***

    ஜனவரி - 9

    வாரம் ஒருமுறை உப்பைக் கைவிடுங்கள்.

    மாதம் ஒருமுறை சர்க்கரையைக் கைவிடுங்கள்.

    பயனற்ற, மனதைக் கெடுக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடாதீர்கள்.

    உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    உணவு, உடை, பழக்கங்கள் எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடியுங்கள்.

    தினம் இரண்டு மணி நேரம் மௌன விரதத்தைக் கடைப்பிடியுங்கள்.

    - சுவாமி சிவானந்தர்

    - The Technique of Self - Culture நூலிலிருந்து.

    ***

    ஜனவரி - 10

    'நான் ஒரு கருவியே. தெய்வம் என் மூலமாகப் பணியைச் செய்கிறது' என்று நீங்கள் கருதவேண்டும். நீங்கள் கத்தியால் காயை நறுக்கும் போது கத்தி தானாகவே நறுக்குகிறதா? நீங்களே அதன் மூலம் நறுக்குகிறீர்கள். அதேபோல உங்கள் உடல் ஒரு கருவி. அதை இயக்குவது உள்ளே தெய்வத்துவமான ஆத்மா. இப்படிப்பட்ட உணர்வுடன் எல்லாப் பணிகளையும் தெய்வப் பணியாக மாற்றி இணங்கிப் பணிபுரிய வேண்டும்.

    - பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

    ***

    ஜனவரி - 11

    கடவுளைத் தாங்கள் கண்டிருக்கிறீர்களா? எனக்குக் காட்ட முடியுமா? என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தன்னையே ஒருவன் எதிரே வைத்துப் பார்க்க வேண்டும். 'உண்மையான நான் யார்?' என்று கேட்டுக்கொண்டு தன்னையே காண முயலவேண்டும். அதற்கு வேண்டிய மனப்பக்குவம் அவனுக்குக் கிடைத்து விட்டால், தனக்கும் மூலமாக உள்ள கடவுளைக் காண முடியும். 'நான்' என்கிற அகந்தைதான் நமக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது. அது மறைந்து விட்டால் அங்கே எஞ்சியுள்ள நிஜ ஸ்வரூபமே கடவுள்.

    - பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி

    - 'திருவருண்மொழி' நூலிலிருந்து.

    ***

    ஜனவரி - 12

    இவ்வுலகப் பொருட்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது. உள்முகச் சிந்தனையை மேற்கொள்ள வேண்டும். மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது, தியானம் செய்ய வேண்டும்.

    - ஷிர்டி சாயிபாபா

    ***

    ஜனவரி - 13

    கடவுளைக் காண முடியும். அதுவும் மூன்றே நாட்களில்... எப்படி?

    கருமி ஒருவன் தான் சேர்த்து வைத்துள்ள பொருட்கள் மீதும், கற்புக்கரசியான காரிகை ஒருத்தி தன் கணவன் மீதும், ஆதரவு தேடி அலையும் குழந்தை தன் அன்னையின் மீதும் கொண்டுள்ள அளவிட முடியாத ஆசையும், பற்றும், ஈடுபாடும் கடவுள் மீது ஒருவனுக்கு இருந்தால் அவனுக்கு மூன்றே நாட்களில் கடவுள் காட்சி அளிப்பார். இறைவன் எங்கோ எட்டாத் தொலைவில் வானத்தில் வசிப்பவன் அன்று. அவனை எளிய மக்களும் அறியலாம். உணரலாம். அடையலாம்.

    - ஸ்ரீராமகிருஷ்ணர்

    ***

    ஜனவரி - 14

    இல்லறத்தானாக வாழ விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பணித்து விடு.

    துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ, பணத்தையோ, பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே.

    இல்லறமும் சரி, துறவறமும் சரி,

    Enjoying the preview?
    Page 1 of 1