Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Microwave Ovanil Samaikka Rusikka
Microwave Ovanil Samaikka Rusikka
Microwave Ovanil Samaikka Rusikka
Ebook102 pages31 minutes

Microwave Ovanil Samaikka Rusikka

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மைக்ரோவேவ்' சமையல் முறை என்பது இப்போது பரவலாகவே நம்நாட்டில் எல்லோரும் விரும்பி வரவேற்கும் சமையல் முறையாக உள்ளது. காரணம், சமைப்பது எளிது, குறைந்த நேரம், குறைந்த அளவு எண்ணெய். பட்டனைத் தட்டிய மாத்திரத்திலேயே சமையல் பதார்த்தங்கள் தயாராகும் அனுபவம். இதனால் இம்முறையை அனைவரும் வரவேற்பதில் ஆச்சரியமில்லை.

மைக்ரோவேவ் ஓவனை உபயோகிப்பதற்கு சிறப்பான திறமை தேவையில்லை. எவ்வித பயமோ, சந்தேகமோ தேவையில்லை. மிகவும் பாதுகாப்பானது. மைக்ரோ ஓவன் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள புத்தகத்தின்படி மின் அளவையும், நேரத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓவனுக்கும் இது வித்தியாசப்படும். இந்தப் புத்தகத்தில் 800 வாட்ஸ் மின்சக்தி அளவுள்ள மைக்ரோ ஓவனில் சமைக்குமாறு நேரத்தை திட்டமிட்டு எழுதியிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580134805870
Microwave Ovanil Samaikka Rusikka

Read more from Geetha Deivasigamani

Related to Microwave Ovanil Samaikka Rusikka

Related ebooks

Reviews for Microwave Ovanil Samaikka Rusikka

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Microwave Ovanil Samaikka Rusikka - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    மைக்ரோ வேவ் ஓவனில் சமைக்க... ருசிக்க...

    Microwave Ovanil Samaikka… Rusikka…

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    என்னுள் இருந்து,

    இமைப்பொழுதும் என்னைவிட்டு நீங்காமல் இயக்கி,

    ஒவ்வொரு எழுத்தையும் என்னுள் இருந்து எழுதிவரும்

    ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் மலர்பாதங்களில் சரணடைந்து

    'மைக்ரோவேவ் ஓவனில்'

    சமைக்க... ருசிக்க...

    எனும் இந்த சமையற்கலை நூலினை

    சமர்ப்பிக்கிறேன்.

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    கீதா தெய்வசிகாமணி

    என்னுரை

    'மைக்ரோவேவ்' சமையல் முறை என்பது இப்போது பரவலாகவே நம்நாட்டில் எல்லோரும் விரும்பி வரவேற்கும் சமையல் முறையாக உள்ளது. காரணம், சமைப்பது எளிது, குறைந்த நேரம், குறைந்த அளவு எண்ணெய். பட்டனைத் தட்டிய மாத்திரத்திலேயே சமையல் பதார்த்தங்கள் தயாராகும் அனுபவம். இதனால் இம்முறையை அனைவரும் வரவேற்பதில் ஆச்சரியமில்லை.

    மைக்ரோவேவ் ஓவனை உபயோகிப்பதற்கு சிறப்பான திறமை தேவையில்லை. எவ்வித பயமோ, சந்தேகமோ தேவையில்லை. மிகவும் பாதுகாப்பானது. மைக்ரோ ஓவன் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள புத்தகத்தின்படி மின் அளவையும், நேரத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓவனுக்கும் இது வித்தியாசப்படும். இந்தப் புத்தகத்தில் 800 வாட்ஸ் மின்சக்தி அளவுள்ள மைக்ரோ ஓவனில் சமைக்குமாறு நேரத்தை திட்டமிட்டு எழுதியிருக்கிறேன்.

    மைக்ரோவேவ் சமையலில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி கற்றுத்தந்த அன்புத் தோழி டி.வி. புகழ் திருமதி கீதா பாலகிருஷ்ணனுக்கு நன்றி. அவரும் நானும் மாதம் தோறும் சேர்ந்து நடத்தும் சமையல் வகுப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

    என்னுள் இருந்து என்னை இயக்கிவரும் என் தாயார் லீலா கிருஷ்ணன்-தந்தை பாலகிருஷ்ணன் இருவருக்கும் இந்நூலினை சமர்ப்பிக்கிறேன். எனக்கு உடனிருந்து ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் அன்புக் கணவர் அட்வகேட் திரு தெய்வசிகாமணிக்கு நன்றிகள் பல.

    இந்தப் புத்தகம் பற்றிய வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி

    23, அபிநவ் பேலஸ்

    ஜெத் நகர், முதல் மெயின் ரோடு

    மந்தவெளி, சென்னை - 600028

    மைக்ரோவேவ் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

    'மைக்ரோவேவ்' என்றால் என்ன என்று பார்ப்போம்.

    மைக்ரோவேவ் என்றால் 'நுண் அலை' இந்த மைக்ரோவேவ் ஓவனில் உள்ள மாக்னட்ரான் எனும் பாகம் மின்சக்தியை (Electric Power) மைக்ரோவேவ் சக்தியாக மாற்றுகிறது. இந்த மைக்ரோவேவ் அலைகள் ஓவனில் உள்ள மெட்டல் சுவர்களால் பிரதிபலிக்கப்பட்டு உணவுப் பொருட்களை சூடாக்குகிறது. இந்த அலைகள் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு துகளையும் ஊடுருவிச் சென்று அதிர்வை ஏற்படுத்த, இந்த அதிர்வினால் உராய்வு ஏற்பட்டு சூடு கிளம்புகிறது. இந்த சூட்டில் உணவு தயாரிக்கப்படுகிறது.

    மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும்போது முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது.

    மின்சக்தி:

    100% மின்சக்தி - மைக்ரோ ஹை

    75% மின்சக்தி - மீடியம் ஹை

    50% மின்சக்தி - மீடியம்

    நேரம்:

    சமைப்பதற்கான நேரம் உணவின் அளவையும் ஈரப் பதத்தையும் பொறுத்தது.

    பாத்திரம்:

    மைக்ரோ ஓவனில் செய்வதற்குரிய பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் சமையல் செய்வதற்கு நன்கு கெட்டியான கண்ணாடி பாத்திரங்கள் கிடைக்கின்றன. அதில் சமைப்பது நல்லது. சூடு செய்ய (டிஃப்ராஸ்ட் செய்ய) மைக்ரோ சேஃப் பிளாஸ்டிக் பவுலைப் பயன்படுத்தலாம்.

    கையுறை:

    சூடான கண்ணாடிப் பாத்திரத்தை கையுறை இல்லாமல் எடுக்கக் கூடாது.

    ஸ்டாண்டர்டு டைம்:

    உணவு தயாரித்து முடித்ததும் 2-3 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகுதான் உபயோகிக்க வேண்டும். வெளியே எடுத்த பிறகும் மைக்ரோ நுண் அலைகளின் அதிர்வு அடங்குவதற்கு இரண்டு மூன்று நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

    மிக முக்கியமான முன்னெச்சரிக்கைகள்:

    பாத்திரத்தை மூடிவைத்து சமைக்கும்போது மூடியை திறக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். திடீரென திறந்தால் உள்ளே உள்ள நீராவி உடனே வெளியேறி, நம் மேல் பட்டு காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் திறக்கும் போது குனிந்து முகத்தை அருகில் வைத்து திறக்கக் கூடாது.

    பால், தண்ணீர் போன்று நீர்த்த உணவு சமைக்கும்போது சற்று பெரிய பாத்திரத்தை உபயோகிக்க வேண்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1