Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indiya Dhesiya Poongakkal
Indiya Dhesiya Poongakkal
Indiya Dhesiya Poongakkal
Ebook236 pages1 hour

Indiya Dhesiya Poongakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இந்திய தேசியப் பூங்காக்கள்” என்ற இந்நூல், இந்தியாவில் அரசால் அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிற தேசியப் பூங்காக்களைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பூங்காவின் அமைவிடம், பார்வையாளர்கள் செல்வதற்கான அருகில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய குறிப்புகளையும், பூங்காவைப் பார்ப்பதற்கான சிறந்த காலம், அப்பகுதிகளில் பேசப்படும் மொழிகள் ஆகியவற்றையும் குறிப்பிட்டு இந்நூலை ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு பூங்காவினுடைய சிறப்பியல்புகள், அங்குள்ள தாவர வகைகள், பறவைகள், விலங்கினங்கள் ஆகிய குறிப்புகளையும் தந்துள்ளார். இயற்கை ஆர்வலர்களுக்கும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும், சுற்றுலா ஆர்வலர்களுக்கும் இந்நூல் சிறந்த தகவல் களஞ்சியமாகவும், கையேடாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. வன விலங்குகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதிலும், அவை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடமும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடமும் பரப்புவதில் இந்நூல் சிறந்த பங்காற்றும்.

Languageதமிழ்
Release dateDec 7, 2021
ISBN6580150507840
Indiya Dhesiya Poongakkal

Read more from Theni M. Subramani

Related to Indiya Dhesiya Poongakkal

Related ebooks

Related categories

Reviews for Indiya Dhesiya Poongakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indiya Dhesiya Poongakkal - Theni M. Subramani

    https://www.pustaka.co.in

    இந்திய தேசியப் பூங்காக்கள்

    Indiya Dhesiya Poongakkal

    Author:

    தேனி. மு. சுப்பிரமணி

    Theni M. Subramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/theni-m-subramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அசாம்

    2. அரியானா

    3. அருணாச்சலப் பிரதேசம்

    4. ஆந்திரப் பிரதேசம்

    5. இமாச்சலப் பிரதேசம்

    6. இராசசுத்தான்

    7. உத்தரகண்ட்

    8. உத்தரப்பிரதேசம்

    9. ஒடிசா

    10. கர்நாடகா

    11. குசராத்

    12. கேரளா

    13. கோவா

    14. சத்தீசுகர்

    15. சம்மு காசுமீர்

    16. சார்கண்ட்

    17. சிக்கிம்

    18. தமிழ்நாடு

    19. திரிபுரா

    20. நாகலாந்து

    21. பீகார்

    22. மகாராட்டிரா

    23. மணிப்பூர்

    24. மத்தியப் பிரதேசம்

    25. மிசோரம்

    26. மேகாலயா

    27. மேற்கு வங்கம்

    28. அந்தமான் நிக்கோபர் தீவுகள்

    423px-Dhanavel

    கி. தனவேல் இ.ஆ.ப.,

    அரசுச் செயலாளர்,

    குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை,

    தலைமைச் செயலகம்,

    சென்னை - 9

    அணிந்துரை

    நம் நாட்டின் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பல் உயிரினப் பெருக்கத்தின் மூலம் இயற்கை மனித குலத்துக்கு அளித்துள்ள கொடைகளை அடுத்த தலைமுறைக்கும் பயன்படும்படி விட்டுச் செல்லவும், அரசின் கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களின் செயலாக்கத்துடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றார்கள். இதில் குறிப்பாக, தேசிய வனக் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், பல் உயிரினப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம், தேசிய வன விலங்குகள் பாதுகாப்புச் செயல் திட்டம், இந்திய வனச் சட்டம், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் முதலிய பல்வேறு சட்டங்கள் மூலமாகவும், அரசின் திட்டங்கள் மூலமாகவும் நமது நாட்டின் வன விலங்குகள், இயற்கை வளங்கள் மற்றும் பல் உயிரினப் பெருக்கம் ஆகியவை காக்கப்பட்டு வருகின்றன.

    எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் எழுதியுள்ள இந்திய தேசியப் பூங்காக்கள் என்ற இந்நூல், இந்தியாவில் அரசால் அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிற தேசியப் பூங்காக்களைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பூங்காவின் அமைவிடம், பார்வையாளர்கள் செல்வதற்கான அருகில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய குறிப்புகளையும், பூங்காவைப் பார்ப்பதற்கான சிறந்த காலம், அப்பகுதிகளில் பேசப்படும் மொழிகள் ஆகியவற்றையும் குறிப்பிட்டு இந்நூலை ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு பூங்காவினுடைய சிறப்பியல்புகள், அங்குள்ள தாவர வகைகள், பறவைகள், விலங்கினங்கள் ஆகிய குறிப்புகளையும் தந்துள்ளார். இயற்கை ஆர்வலர்களுக்கும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும், சுற்றுலா ஆர்வலர்களுக்கும் இந்நூல் சிறந்த தகவல் களஞ்சியமாகவும், கையேடாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. வன விலங்குகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதிலும், அவை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடமும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடமும் பரப்புவதில் இந்நூல் சிறந்த பங்காற்றும். எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

    அன்புடன்

    கி. தனவேல்

    என்னுரை

    மனிதனின் தேவைகளும் ஆசைகளும் அதிகரித்து வரும் நிலையில், இவ்வுலகில் இருந்த எத்தனையோ இயற்கை வளங்கள் இல்லாமல் போய் விட்டன. தற்போதிருக்கும் இயற்கை வளங்களையும் இழந்து விடுவோமோ என்கிற நிலையில் இயற்கை வளங்களைப் பாதுகாத்திட உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், சில சமூக விரோதிகளால் தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள் மற்றும் சில உயிரினங்கள் உட்பட பல்வேறு இயற்கை வளங்களும் வேட்டையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. சமூக விரோதிகளிடமிருந்து இயற்கையைக் காக்கவும், உயிரினங்களைக் காக்கவும் அரசின் செயல்பாடுகள் அவசியமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் இயற்கைக்கு ஆதாரமாக விளங்கும் காடுகளைக் காக்கவும், காடுகளில் இருக்கும் உயிரினங்களைக் காக்கவும் பல காட்டுயிர்க் காப்பகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அரசுகள் காடுகளுக்கும், காட்டுயிரினங்களுக்கும் சமூக விரோதிகளிடமிருந்து ஓரளவு பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. இதுபோன்று உலகம் முழுவதும் அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற அடிப்படைகளில் சிறப்பு பெற்ற தாவரங்கள், விலங்கினங்கள், புவிப்புறவியல் களங்கள் மற்றும் வாழிடங்கள் போன்றவைகளையும், மிகுந்த அழகுடன் கூடிய இயற்கை நிலத்தோற்றம் கொண்ட இயற்கை வளம் மிகுந்த குறிப்பிட்ட பகுதிகளையும் முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பல தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் தேசியப் பூங்காக்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, இந்திய தேசியப் பூங்காக்கள் எனும் தலைப்பில் இந்நூலை உருவாக்கி இருக்கிறேன். இந்நூல் இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    இந்நூலுக்கு அணிந்துரை எழுதித் தந்து, என்னை ஊக்கப்படுத்திய தமிழ்நாடு அரசின் குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலாளர் கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களுக்கு என் இனிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னைத் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் தூத்துக்குடி எஸ். ஏ. சுகுமாரன், மதுரை வழக்கறிஞர் எஸ். இளங்கோவன், தேனியிலிருக்கும் வி.பி. மணிகண்டன், எஸ். செந்தில்குமார், கவிஞர் வி. எஸ். வெற்றிவேல், எஸ். மாரியப்பன், ஆர்.எம். தாமோதரன் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூல் வெளிவருவதற்கும், என் அனைத்து வளர்ச்சியிலும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர் எஸ். முத்துசாமி பிள்ளை – கமலம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவி உ.தாமரைச்செல்விக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை மின்னூலாகப் பதிப்பித்திருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - தேனி மு. சுப்பிரமணி

    19/1, சுகதேவ் தெரு,

    பழனிசெட்டிபட்டி,

    தேனி – 625 531

    அலைபேசி: 9940785925, 9042247133.

    www.muthukamalam.com

    www.thenitamilsangam.org

    இந்திய தேசியப் பூங்காக்கள்

    தேசியப் பூங்கா என்பது ஒரு அரசால் அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான இயற்கை நிலங்களையோ அல்லது குறிப்பிடத்தக்க இயற்கை நிலங்களையோ கொண்ட ஒரு பகுதி ஆகும். இவை மனிதருடைய பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், விலங்குகள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத் தகவல்களின்படி, தற்போதைய நிலையில் உலகில் சுமார் 7000 தேசியப் பூங்காக்கள் உள்ளன.

    உலகில் இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN - International Union for Conservation of Nature ) என்கிற அமைப்பு 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதிலுமிருந்து 80 மாநிலங்கள், 110 அரசு அமைப்புகள், 800 அரசு சாரா அமைப்புகள், 81 பன்னாட்டு அமைப்புகள் என 140 நாடுகளிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்டும், 11 ஆயிரத்துக்கும் அதிகமான அறிவியல் வல்லுநர்களைக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமும், அதன் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும் தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு II என்னும் வகையினுள் சேர்த்து வரையறுத்துள்ளன.

    1969 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், தேசியப் பூங்காக்கள் ஒப்பீட்டளவில் பெரியவையாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட வரைவிலக்கணத்துக்கு அமையும் இயல்புகளைக் கொண்டவையாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதன்படி, ஒரு தேசியப் பூங்கா என்பது பின்வரும் இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

    • மனிதர் பயன்படுத்தியதனாலோ அல்லது வாழ்ந்ததினாலோ மாற்றங்களுக்கு உட்படாத, ஒன்று அல்லது பல சூழல் மண்டலங்களைக் கொண்டிருக்க வேண்டும். இங்குள்ள தாவர, விலங்கு இனங்கள், புவிப்புறவியல் களங்கள் மற்றும் வாழிடங்கள் என்பன அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற அடிப்படைகளில் சிறப்பு பெற்றவையாக இருக்க வேண்டும் அல்லது மிகுந்த அழகுடன் கூடிய இயற்கை நிலத்தோற்றம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

    • நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு, இப்பகுதியை மனிதர் பயன்படுத்துவதையும், வாழ்வதையும் தடுக்க வேண்டும் அல்லது கூடிய விரைவில் அகற்ற வேண்டும். அத்துடன் பூங்கா அமைப்பதற்குக் காரணமாக இருந்த சூழலியல், புவிப்புறவியல் அல்லது அழகியல் அம்சங்களை மதிப்பதற்கான இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    • அகத்தூண்டல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற தேவைகளுக்காகச் சிறப்புக் கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.

    என்று வரையறுத்திருந்தது.

    1971 ஆம் ஆண்டில், தேசியப் பூங்காக்களின் மதிப்பீட்டை எளிதாக்குவதற்காக,

    • தேசியப் பூங்காப் பகுதி குறைந்தது 1000 எக்டேர்கள் பரப்பளவு கொண்டவையாக இருக்க வேண்டும்.

    • இப்பகுதியின் இயற்கை வளம் மாறாமலிருக்கத் தகுந்த சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

    • முறையான பாதுகாப்பு கொடுப்பதற்குத் தேவையான போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேவையான பணியாட்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    • வேட்டையாடுதல், மீன்பிடித்தல் என்பவை உள்ளடங்கிய இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் அதற்கான மேலாண்மை, வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    என்பது போன்ற வரையறைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.

    தேசியப் பூங்காக்கள் அனைத்தும் குறிப்பிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் நடுவண் அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆசுத்திரேலியாவில் மட்டும் அங்குள்ள மாநில அரசுகள் தேசியப் பூங்காக்களை நிர்வாகம் செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் தேசியப் பூங்காக்கள் அனைத்தும் இந்திய நடுவண் அரசின் நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்

    இந்தியாவில் அசாம், அரியானா, அருணாசலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் (இம்மாநிலம் தெலுங்கானா, சீமாந்திரா எனும் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட உள்ளது), இமாச்சலப் பிரதேசம், இராசசுதான், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, குசராத், கேரளா, கோவா, சத்தீசுகர், சம்மு காசுமீர், சார்கண்ட், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, நாகலாந்து, பஞ்சாப், பீகார், மகாராட்டிரா, மணிப்பூர், மத்தியப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, மேற்கு வங்கம் எனும் 28 மாநிலங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவு, சண்டிகர், தாத்ரா மற்றும் நகர்அவேலி, தாமன் தியு, புதுச்சேரி மற்றும் புதுதில்லி எனும் 7 இந்திய நடுவண் அரசு ஆட்சிப் பகுதிகளும் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதிகளில் புதுதில்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு நடுவண் அரசு ஆட்சிப் பகுதிகளில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்பட்டு வருகின்றன. பிற ஆட்சிப் பகுதிகளில் நடுவண் அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    இந்திய தேசியப் பூங்காக்கள்

    இந்திய விடுதலைக்கு முன்பாகவே விளையாட்டு இடங்கள், துப்பாக்கிச் சுடுமிடங்கள், வேட்டையாடும் இடங்கள் போன்றவை அரசு அல்லது ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 4.90 சதவிகிதப் பரப்பளவுப் பகுதி பாதுகாக்கப்பட்டப் பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 102 தேசியப் பூங்காக்கள் (National Parks), 515 காட்டுயிர்க் காப்பகங்கள் (Wildlife Sanctuaries), 47 பாதுகாப்பு ஒதுக்கீட்டு இடங்கள் (Conservation Reserves), 4 சமுதாய ஒதுக்கீட்டு இடங்கள் (Community Reserves) என்று மொத்தம் 668 பாதுகாக்கப்பட்ட இடங்கள் 161221.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. (பார்க்க: பின்னிணைப்பு - I)

    இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் 93 தேசியப் பூங்காக்களும், இந்திய நடுவண் அரசின் 7 ஆட்சிப் பகுதிகளில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் 9 தேசியப் பூங்காக்கள் என்று இந்தியாவில் மொத்தம் 102 தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேசியப் பூங்காக்கள் 39888.113 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவான 3,287,240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1.21 விழுக்காடாகும். (பார்க்க: பின்னிணைப்பு - II)

    இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 18 முதல் 34 வரை காட்டுயிர்க் காப்பகங்கள் குறித்தும், 35 வது பிரிவு தேசியப் பூங்காக்கள் குறித்தும் 38 வது பிரிவு குறிப்பிட்ட பகுதிகளை காப்பகங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களாக அறிவிப்பதற்கான இந்திய நடுவண் அரசு உரிமை குறித்தும் விளக்குகிறது.

    ஒரு தேசியப் பூங்கா என்பது கீழ்க்காணும் பொதுவான வரையறைகளைக் கொண்டிருக்கிறது.

    * இயற்கை விலங்கினங்கள், தாவரங்கள், புவியியல் படிமங்கள் மற்றும் கண்ணுக்கினிய இயற்கை வளங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்படுவது.

    * காட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1