Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kerala Koyilgal Part 2
Kerala Koyilgal Part 2
Kerala Koyilgal Part 2
Ebook215 pages1 hour

Kerala Koyilgal Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கேரளாவின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘கேரளா கடவுளின் தேசம்’ (God's own country) என்ற வாசகம் ஏற்புடையதே என்று சொல்லுமளவிற்குக் கேரளாவில், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இந்து சமயப் புராணக்கதைகளுடன் தொடர்புடைய பல்வேறு கோயில்கள் இருக்கின்றன. இவை தவிர, கேரளாவில் வித்தியாசமான வழிபாடுகளைக் கொண்ட கோயில்களும் நிறைய இருக்கின்றன.

நான் எழுதிய பல கேரளக் கோயில்களுக்கான கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முப்பது கோயில்களின் கட்டுரைகள் இதற்கு முன்பாக, கேரளக் கோயிகள் - தொகுதி 1 எனும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது தொகுதியாக, முப்பது கோயில்களின் கட்டுரைகளைக் கொண்டு கேரளக் கோயிகள் - தொகுதி 2 நூலாக்கம் செய்யப் பெற்றிருக்கிறது.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580150507983
Kerala Koyilgal Part 2

Read more from Theni M. Subramani

Related to Kerala Koyilgal Part 2

Related ebooks

Reviews for Kerala Koyilgal Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kerala Koyilgal Part 2 - Theni M. Subramani

    https://www.pustaka.co.in

    கேரளக் கோயில்கள் தொகுதி - 2

    Kerala Koyilgal Part - 2

    Author:

    தேனி மு. சுப்பிரமணி

    Theni M. Subramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/theni-m-subramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளடக்கம்

    1. பழவங்காடி மகாகணபதி கோயில்

    2. கொட்டியூர் மகாதேவர் கோயில்

    3. குமாரநல்லூர் பகவதி அம்மன் கோயில்

    4. திருவல்லா திருவாழ்மார்பன் கோயில்

    5. மருத்தோர்வட்டம் தன்வந்திரி கோயில்

    6. நாலம்பலம்

    7. திருப்பிரையார் இராமர் கோயில் (நாலம்பலம் -1)

    8. இரிஞ்சாலக்குடா பரதன் கோயில் (நாலம்பலம் - 2)

    9. திருமூழிக்களம் இலட்சுமணர் கோயில் (நாலம்பலம் - 3)

    10. பாயம்மல் சத்துருக்கனன் கோயில் (நாலம்பலம் - 4)

    11. புல்பள்ளி சீதாதேவி, லவன், குசன் கோயில்

    12. திருவஞ்சைக்களம் மகாதேவர் கோயில்

    13. கொடுங்கலூர் பகவதியம்மன் கோயில்

    14.கிடங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில்

    15. வர்க்கலை ஜனார்த்தனர் கோயில்

    16. செருகுன்னு அன்னபூரணேஸ்வரி கோயில்

    17. வைக்கம் வைக்கத்தப்பன் கோயில்

    18. கொற்றன்குளக்கரை பகவதி கோயில்

    19. திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோயில் (அஞ்சம்பலம் - 1)

    20. திருப்புலியூர் மகாவிஷ்ணு கோயில் (அஞ்சம்பலம் - 2)

    21. திருவாரண்விளை பார்த்தசாரதி கோயில் (அஞ்சம்பலம் - 3)

    22. திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோயில் (அஞ்சம்பலம் - 4)

    23. திருக்கொடித்தானம் மகாவிஷ்ணு கோயில் (அஞ்சம்பலம் - 5)

    24. பெருநா சுப்பிரமணியசுவாமி கோயில்

    25. அனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்

    26.காலடி திருக்காலடியப்பன் கோயில்

    27. வராகம் லட்சுமி வராகமூர்த்தி கோயில்

    28. கல்பாத்தி காசிவிசுவநாதர் கோயில்

    29. நெல்லியக்காட்டுப் பத்ரகாளி கோயில்

    30. திருச்சம்பரம் கிருஷ்ணர் கோயில்

    31. திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில்

    என்னுரை

    கேரளாவின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘கேரளா கடவுளின் தேசம்’ (God's own country) என்ற வாசகம் ஏற்புடையதே என்று சொல்லுமளவிற்குக் கேரளாவில், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இந்து சமயப் புராணக்கதைகளுடன் தொடர்புடைய பல்வேறு கோயில்கள் இருக்கின்றன. இவை தவிர, கேரளாவில் வித்தியாசமான வழிபாடுகளைக் கொண்ட கோயில்களும் நிறைய இருக்கின்றன. தினத்தந்தி நாளிதழின் இணைப்பிதழ்களான அருள் தரும் ஆன்மிகம் மற்றும் வெள்ளிமலர் இதழ்களில் நான் எழுதிய பல கேரளக் கோயில்களுக்கான கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முப்பது கோயில்களின் கட்டுரைகள் இதற்கு முன்பாக, கேரளக் கோயிகள் - தொகுதி 1 எனும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது தொகுதியாக, முப்பது கோயில்களின் கட்டுரைகளைக் கொண்டு கேரளக் கோயிகள் - தொகுதி 2 நூலாக்கம் செய்யப் பெற்றிருக்கிறது.

    இந்நூலில், பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுணன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் புதுப்பித்து வழிபட்ட அஞ்சம்பலம் எனப்படும் மகாவிஷ்ணு கோயில்கள், தசரதரின் மகன்களான இராமர், பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் எனும் இராம சகோதரர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கோயில்கள், காசிக்குச் சென்றால் கிடைக்கும் பலன்களின் பாதி பலன்களை அளிக்கும் கோயில், முருகன் பிரமச்சாரியாக இருக்கும் கோயில், ஆண்கள் பெண் வேடமிட்டு வழிபடும் கோயில், ஆண்டுக்கு இருபத்தெட்டு நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்குத் திறக்கப்படும் கோயில், மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோயில், இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில், வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் முருகன் கோயில், இராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருடன் சீதாதேவி கோயில், வயதான தாய் வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்ட கோயில், அதிகாலையில் தொடக்கக்கால பூசையின்றி பச்சரிசி சாதம் படைத்து வழிபடும் கோயில், இறைவனின் திருமார்பு தரிசனத்திற்கான கோயில், கணவன் - மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை அகற்றி அவர்களைச் சேர்த்து வைக்கும் கோயில், பன்னிரண்டு நாட்கள் மட்டும் வழிபாட்டிற்காகத் திறக்கப்படும் பார்வதி தேவி சன்னதி கொண்ட கோயில், வைக்கம் போராட்டத்திற்கு வழி வகுத்த கோயில், பிறவித்துன்பம் போக்கியருளும் கோயில் என்று பல்வேறு வித்தியாசமான கோயில்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கான கட்டுரையிலும், அதனுடன் தொடர்புடைய சில முக்கியத் தகவல்களைப் பெட்டிச் செய்திகளாக வழங்கியிருக்கிறேன். இந்து சமய ஆன்மிகத்தில் ஈடுபாடுடையவர்களுக்கும், பல்வேறு கோயில்களுக்குப் புனிதப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கும் இந்நூல் நல்லதொரு வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.

    இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளைத் தினத்தந்தி நாளிதழின் அருள் தரும் ஆன்மிகம் மற்றும் வெள்ளிமலர் இதழ்களில் வெளியிட்டுச் சிறப்பித்த பொறுப்பாசிரியருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னைத் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் தூத்துக்குடி எஸ்.ஏ. சுகுமாரன், மதுரை வழக்கறிஞர் எஸ். இளங்கோவன், தேனியிலிருக்கும் வி.பி. மணிகண்டன், எஸ். செந்தில்குமார், கவிஞர் வி.எஸ். வெற்றிவேல், ஆர்.எம். தாமோதரன் மற்றும் என் மேல் அன்பு கொண்ட உறவுகள், நட்புகள் என்று அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் அனைத்து வளர்ச்சியிலும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர் எஸ்.முத்துசாமி பிள்ளை - கமலம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவி தாமரைச்செல்விக்கும், என் மகள் மு.சு.முத்துக்கமலம் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை மின்னூலாகப் பதிப்பித்திருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -தேனி. மு. சுப்பிரமணி

    19/1, சுகதேவ் தெரு,

    பழனிசெட்டிபட்டி,

    தேனி – 625 531

    அலைபேசி: 9940785925, 9042247133.

    www.muthukamalam.com

    www.thenitamilsangam.org

    1. பழவங்காடி மகாகணபதி கோயில்

    pazhavangadi ganapathy temple1

    நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய உதவும் தலமாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம், கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பழவங்காடி மகாகணபதி கோயில் இருக்கிறது.

    தல வரலாறு

    திருவாங்கூர் சமஸ்தான மன்னர் ராமவர்ம மகாராஜா தனது அரண்மனையைப் பத்மனாபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்து, அங்கிருந்து தனது படைவீரகள் மற்றும் மக்களுடன் பத்மனாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தார்.

    அவர்கள் இடம் பெயர்ந்து சென்ற வேளையில், மன்னர் வழிபட்டு வந்த விநாயகர் சிலை ஒன்றையும் படைவீரர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற சிலையை அங்கிருந்த கோட்டைக்கு அருகில் வைத்தனர். அரண்மனை பாதுகாப்புப் பணியிலிருந்த படை வீரர்கள் அந்த விநாயகரை வழிபட்டுத் தங்கள் பணிக்குச் செல்லத் தொடங்கினர்.

    படைவீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் காலங்களில், அந்த விநாயகர் சிலையையும் தங்களுடன் எடுத்துச் சென்று போர்க்களத்தில் நிறுவி வழிபட்டு, அதன் பிறகு போரிடச் சென்றனர். அவர்கள் சண்டையிட்ட போர்களிலெல்லாம் வெற்றி கிடைத்தது. அந்தப் படை வீரகளின் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

    பிற்காலத்தில் படைவீரர்கள், அந்த விநாயகர் சிலையை ஓரிடத்தில் நிலையாக நிறுவி வழிபாடுச் செய்வதென முடிவு செய்தனர். அதனைத் தொடந்து, சிறிய அளவிலான கோயில் ஒன்று கட்டப்பட்டு அதில் விநாயகர் சிலை நிறுவப்பட்டது என்று இக்கோயில் அமைந்த வரலாறு சொல்லப்படுகிறது.

    இராணுவப் பிள்ளையார்

    திருவாங்கூர் சமஸ்தானப் படை வீரர்கள் அனைவரும் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்பு, படை வீரர்கள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகர் கோயிலும் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இராணுவப் பராமரிப்பில் இருக்கும் விநாயகரை அன்றிலிருந்து இராணுவப் பிள்ளையார் (மிலிட்டரிப் பிள்ளையார்) என்று அங்குள்ளவர்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்.

    கோயில் அமைப்பு

    திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடி எனும் பகுதியில் இருக்கும் இக்கோயிலில் மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலுக்குள் முத்கல புராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்கள் அழகிய ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில் வளாகத்தில் தர்மசாஸ்தா, துர்க்கை அம்மன், நாகராசா ஆகியோருக்கான சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    வழிபாடு

    இக்கோயிலில் காலை 4.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.300 வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது. கணேஷ் ஜெயந்தி, சதுர்த்தி நாட்கள், திருவோணம், சித்திரை விசு, மகாசிவராத்திரி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இக்கோயிலில் தேங்காய் உடைத்து (விடலை) வழிபாடு செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. கேரளாவில் சபரிமலைக்கு அடுத்ததாக இக்கோயிலில்தான் அதிக அளவில் தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெறுகிறது என்கின்றனர். இங்கு விநாயகருக்கு நடைபெறும் வழிபாட்டில் அப்பம், மோதகம் போன்றவை படைக்கப்படுகின்றன.

    சிறப்புகள்

    இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில் இராணுவத்தில் கடைப்பிடிக்கப்படும் நேரம் தவறாமை, ஒழுக்கம், சுத்தம் ஆகிய மூன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கிருக்கும் விநாயகரைத் தேங்காய் உடைத்து (விடலை) வழிபட்டால், நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய முடியும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    அரசு மற்றும் தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் முக்கியப் பணிகளுக்காக வெளியூர் செல்லும் போது, இங்கு வந்து தேங்காய் உடைத்து (விடலை) வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

    2. கொட்டியூர் மகாதேவர் கோயில்

    kottiyoor temple

    காசிக்குச் சென்று வந்த அனைத்துப் பலன்களையும்

    Enjoying the preview?
    Page 1 of 1