Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maayalogam - Part 3
Maayalogam - Part 3
Maayalogam - Part 3
Ebook123 pages47 minutes

Maayalogam - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல் இது. பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் 2009 முதல் 2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. மூன்று பாகங்களாக இப்போது இது வெளிவருகிறது.

இந்த மூன்றாம் பாகத்தில், கொட்டிக் கிடக்கும் தங்கக் கட்டிகள், எண்ணியதைச் செய்யும் அதிசயக் கணினி, மின்னல் மன்னன் டாமி காருதர், ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம், தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய ஹிம்லர், மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம், ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா, தீவிரவாதிகளைக் கண்டறிய புதிய சாதனங்கள் தயார்!, ஜேம்ஸ் பாண்ட் ‘007’ ஆனது எப்படி? செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை உ:ள்ளிட்ட பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன. புலன் கடந்த விஷயங்களைப் பற்றிக் கூறும் சுவையான இந்த நூல் அனைவரும் படிக்க ஏற்ற நூலாகும்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151011036
Maayalogam - Part 3

Read more from S. Nagarajan

Related to Maayalogam - Part 3

Related ebooks

Reviews for Maayalogam - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maayalogam - Part 3 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாயாலோகம் - பாகம் 3

    (விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல்!)

    Maayalogam - Part 3

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. கொட்டிக் கிடக்கும் தங்கக் கட்டிகள்!

    2. எண்ணியதை எண்ணியவுடனேயே செய்யும் அதிசய கணிணி!

    3. மின்னல் மன்னன் டாமி காருதர்!

    4. பார்வையற்றவர் மலையேறி உலக சாதனை படைக்கும் அதிசயம்!

    5. 200 நிமிடங்கள் அந்தரத்தில் நின்று சாதனை!

    6. அதிசய மாயாஜால நிபுணர் டேவிட் ப்ளெய்ன்!

    7. தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய ஹிம்லர்! – 1

    8. தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய ஹிம்லர்! – 2

    9. உலகின் அதிர்ஷ்டக்கார பெண்மணி!

    10. சோகுஷின்புட்சு- மம்மி ஆவதற்காக புத்தபிட்சுக்கள் செய்து கொள்ளும் தற்கொலை!

    11. கிரகம் விட்டு கிரகம் செல்லும் விண்கலம் வருகிறது!

    12. இன்னொரு பூமி கண்டுபிடிப்பு!

    13. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 1

    14. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! - 2

    15. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 3

    16. பெல்மெஸ் முகங்கள்

    17. கடலடியில் ஆறு ஓடுகிறதா? மெக்ஸிகோ அதிசயம்!

    18. மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம்! - 1

    19. மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம்! -2

    20. அரசை எதிர்க்காதீர்கள், ஆபத்து! - (இந்தியாவில் அல்ல!!)

    21. தீவிரவாதிகளைக் கண்டறிய புதிய சாதனங்கள் தயார்!!

    22. ஜேம்ஸ் பாண்ட் ‘007’ ஆனது எப்படி?

    23. உலக மக்களை இணைக்கும் பேஸ்புக்

    24. ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா!

    25. செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை!

    26. முடிவுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    மாயாலோகம் என்ற பெயரைச் சூட்டி இப்படி ஒரு தொடரை எழுதப் பணித்தவர் அன்பிற்குரிய பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள்.

    11-9-2009 பாக்யா இதழில் தொடங்கி 25-2-2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. தொடர்ந்து 4-3-2011 இதழிலிருந்து மிக நீண்ட தொடரான எனது அறிவியல் துளிகள் தொடர் ஆரம்பமானது.

    காஸினி பயணத்தில் ஆரம்பித்து செவ்வாய் பயணத்தில் முடியும் இந்தத் தொடரில் மாயா லோகத்தில் நாம் காணும் பல ஆச்சரியகரமான, அபூர்வமான, பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன.

    இந்த மூன்றாம் பாகத்தில், கொட்டிக் கிடக்கும் தங்கக் கட்டிகள், எண்ணியதைச் செய்யும் அதிசயக் கணினி, ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம், மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம், செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை உ:ள்ளிட்ட பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன.

    10-9-2010 முதல் 25-2-2011 முடிய பாக்யா இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை.

    இவற்றையெல்லாம் வெளியிட்ட திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடர் வெளிவரும் போது வாரந்தோறும் இதைப் பாராட்டி ஊக்கமூட்டிய வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி.

    இதை முதல் பதிப்பில் மூன்று பாகங்களாக லண்டன் திருமதி நிர்மலா ராஜு அவர்கள் நிலா பப்ளிஷர்ஸ் சார்பாக டிஜிடல் பதிப்பாக வெளியிட்டார். அவருக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மாயாலோகம் மூன்று பாகங்களையும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாக்யா இதழில் வெளி வந்த அதே தொடர் வரிசையில் இந்த அத்தியாயங்கள் இந்த மறுபதிப்பில் மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது என்பதை வாசகப் பெருமக்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    தக்க ஆதரவை எனக்குத் தொடர்ந்து நல்கி வரும் அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    பங்களூரு

    7-4-2024

    ச. நாகராஜன்

    1. கொட்டிக் கிடக்கும் தங்கக் கட்டிகள்!

    அமெரிக்காவின் மேற்கில் உள்ள மாகாணம் வ்யோமிங். பல மலைத் தொடர்களும் சமவெளியும் நிறைந்த இந்த இடத்தில் மர்மங்களுக்கும் குறைவில்லை. பூர்வீக (அமெரிக்க) இந்தியர்கள் தங்களது பழைய பாரம்பர்யத்துடன் வாழ்ந்து வந்து தங்களுக்கென ஒரு சரித்திரத்தையே படைத்த இடம் இது!

    இந்த மாகாணத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு பெரிய மலைத்தொடர் உள்ளது. பாறைகள் மிகுதியாக உள்ள இந்த மலைத்தொடரில் ஒரு அதிசயப் பாறை உள்ளது. ஒரு பெரிய மரத்தின் அடிப்பாகம் போல உள்ள அதிசியப் பாறை இது. இந்த அடிமரப் பாறையின் உயரம் ஆயிரம் அடி! செங்குத்தாக ஒரு தூண் போல இந்தப் பாறை உள்ளது! பாறையில் சில கீறல்களும் உள்ளன!

    இதற்கு வெள்ளையர் கொடுத்த பெயர் பிசாசு கோபுரம். பூர்வீக பழங்குடிகள் கொடுத்த பெயர் கரடி குகை.

    இந்த மர்மமான இடம் உலக பிரசித்தி பெற்றதாக ஆனதன் காரணம் டைனோஸர் புகழ் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான்! தனது ‘க்ளோஸ் என்கவுண்டர்ஸ் ஆப் தி தேர்ட் கைண்ட்’ என்ற படத்தின் இறுதிக் காட்சிக்கு இந்த இடத்தை இவர் தேர்ந்தெடுத்ததால் இது பேசப்படும் இடமாக ஆகி விட்டது!

    இந்த இடத்தைப் பற்றிய பழைய பாரம்பர்யமான வரலாற்றுக் கதை ஒன்று உண்டு. பண்டொரு காலத்தில் ஒரு நாள், ஏழு பெண்கள் இங்குள்ள ஒரு கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை சில கரடிகள் துரத்த ஆரம்பித்தன. அவர்கள் ஒரு பாறை மீது குதித்து ஏ, பாறையே! எங்கள் மீது கருணை காட்டு! எங்கள் உயிரைக் காப்பாற்று என்று அலறி வேண்டினர். பாறை அவர்களின் தீனக்குரலைக் கேட்டது. உடனே வானை நோக்கி வளரத் தொடங்கி விட்டது. கரடிகள் அந்தப் பாறை மீது மோதி சில கீறல்களை உருவாக்கின. ஆனால் வானையளாவி பாறை உயர்ந்ததால் கரடிகள் அந்தப் பாறை மீது ஏற முடியவில்லை. பாறை வானையே தொட்டு விட்டதால் அதில் ஏறி விண்ணுக்குச் சென்ற பெண்கள் நட்சத்திரங்களாக மாறி விட்டனர். இந்த நட்சத்திரத் தொகுதிக் கூட்டம் தான் கார்த்திகை நட்சத்திரம்!

    இந்த பாறையைப் பற்றிய இன்னொரு கதையும் உண்டு! ஆனால் இந்தக் கதை பாறைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களைப் பற்றி அல்ல! பாறைக்குக் கீழே புதைந்து கிடக்கும் தங்கக் கட்டிகளைப் பற்றி!

    வடகிழக்குப் பகுதியில் யாங்க்டான் என்ற பகுதிக்கு பூர்வீக பழங்குடியினரில் ஒருவன் சென்றான். அந்த இடத்தில் தன்னைச் சந்தித்த ஆறு பேர்களுக்கு பிசாசு கோபுரத்தின் படத்தைக் காண்பித்தான். அந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஆறு பேர்களில் ஒருவன், அந்த பாறைக்கு அடியில் ஒரு குகைப் பாதை உள்ளதா? என்று கேட்டான்.

    இல்லை என்று பூர்வீக குடி மனிதன் பதில் சொன்னான். இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1