Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pyramidgalum Avai Patriya Athisayangalum
Pyramidgalum Avai Patriya Athisayangalum
Pyramidgalum Avai Patriya Athisayangalum
Ebook165 pages48 minutes

Pyramidgalum Avai Patriya Athisayangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மணலில் கோபுரம் கட்டி ஜாலியாக விளையாடுவீர்கள் அல்லவா? எவ்வளவு மகிழ்ச்சியான விளையாட்டு! இது போல் இன்னும் பெரிய கோபுரம் கட்டினால் எப்படி இருக்கும்? இன்னும் இன்னும் பெரி….சாய் அதைக் கட்டினால் எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்!

நினைக்கவே பிரமிப்பாய் இருக்கிறதல்லவா? மணலில் கட்டாமல் அதையே கற்களால் கட்டினால் எப்படி இருக்கும்? கற்களும் பாறைகளும் இல்லாத இடங்களில் பாறைகளைக் கொண்டு வந்து கட்டடம் கட்டினால் எப்படி இருக்கும்?

வியந்துபோய்விட்டீர்களா! இன்றைக்கு நாம் அப்படிப்பட்ட கட்டடங்களைப் பற்றிய சுவையான பல விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். சரிதானே குழந்தைகளே?

அந்தக் கட்டடங்கள்தான்

பி..ர..மி..ட்..க..ள்!

இந்தப் பிரமிட்கள் பல நாடுகளில் உள்ளன. ஆனால் எகிப்தின் பிரமிட்கள் உலகப்புகழ் பெற்றவை. அவற்றில் ஒன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது காஸா என்ற இடத்தில் உள்ளது. இதன் பெயர் கூஃபூ பிரமிட்.

வாருங்கள் உங்களை எகிப்திற்குக் அழைத்துப் போகிறேன். பாஸ்போர்ட் எடுக்காமல் விசா பெறாமல் நாம் இந்த நூலின் மூலமாகவே எகிப்துக்குச் சென்று சுற்றிப்பார்த்து வருவோமா?

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580128407966
Pyramidgalum Avai Patriya Athisayangalum

Related to Pyramidgalum Avai Patriya Athisayangalum

Related ebooks

Reviews for Pyramidgalum Avai Patriya Athisayangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pyramidgalum Avai Patriya Athisayangalum - Vedha Gopalan

    https://www.pustaka.co.in

    பிரமிட்களும் அவை பற்றிய அதிசயங்களும்

    Pyramidgalum Avai Patriya Athisayangalum

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் -13

    அத்தியாயம் -14

    அத்தியாயம் -15

    அத்தியாயம் -16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் -19

    அத்தியாயம் -20

    அத்தியாயம் -21

    அத்தியாயம் -22

    அத்தியாயம் -23

    என்னுரை

    வணக்கம்

    பெரியவர்கள் படிக்கும்படி எழுதுவதே பெரும்பாடு. எளிதாக…. சின்னச் சின்ன வாக்கியங்களாக புரியும்படியாக போரடிக்காமல் போக வேண்டும்.

    இந்த எளிமை என் ஆசான்கள் எனக்குக் கற்றுத் தந்த பாடம். ஆசான்கள்? அது பெரிய லிஸ்ட். அவற்றல் முதன்மையாக வருபவர்கள் குமுதம் பத்திரிகையை நிறுவிய ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி அண்ணாமலை, குமுதத்தின் தூண்களில் ஒருவரான எழுத்து மன்னன் திரு ராகி ரங்கராஜன்.. அதே பதவியில் இருந்த திரு ஜ ரா சுந்தரேசன்.. எழுத்துலகின் எம் ஜி ஆரான சுஜாதா போன்றவர்கள் எனக்குக் கற்றுத் தந்த பாடம் எளிமை தவிர வேறில்லை.

    பெரியவர்களுக்கு எழுதுவதுகூட ’ஓரளவு’ சுலபம். குழந்தைகளுக்கு எழுதுவது மிகமிகக் கஷ்டம். இரட்டிப்பு எளிமை வேண்டும். சிக்கலான வார்த்தைகளை அவிழ்த்துக் கொண்டிருக்க அவர்களுக்குத் தெரியாது. புரியாக வாக்கியங்களைப் பிரித்துக் கொடுக்க அம்மா அப்பாக்களுக்குப் பொறுமையும் நேரமும் இல்லை.

    எனவே எழுத்து பெரும் பொறுப்பு எனில் சிறுவர்களுக்காக எழுதுவது இரட்டிப்புப் பொருப்பு.

    அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்தபோது என் இரண்டு பேரன்களும் பாட்டி கதை சொல்லுங்க பாட்டி.. என்று ராத்திரியில் bed time story கேட்பார்கள். புராண..இதிஹாசக் கதைகளைச் சொல்வேன். சில சமயங்களில் நானே கற்பனையில் புதுப்புதுக் கதைகளை இட்டுக்கட்டி சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளைச் சொல்வதும் உண்டு. (ராக்கெட் மெர்க்குரிக்கு வீனஸ்க்கு என்று போகும் என்று நான் கதைவிடும்போது "அங்கேயெல்லாம் டெம்ப்ரேச்சர் மனித வாழ்க்கைக்கு ஏற்றதாய் இரக்காதே பாட்டி என்பான் பேரன். )

    அமெரிக்காவில் புத்தக வாசிப்புக்குக் குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே நன்கு தயார் செய்வார்கள். பள்ளிக்கூட லைப்ரெரியிலிருந்து கட்டாயமாக வாரத்துக்கு இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்து வாசித்து, அடுத்த வாரம் அதை வகுப்பில் விளக்க வேண்டும்.

    ஆகவே ஏகப்பட்ட புத்தகங்கள் எடுத்து வருவான் என் பேரன். பெரியவர்களும் படிக்கும்படி சுவாரஸ்யமாக இருக்கும் அவை.

    சிறுவர்களுக்கு எப்படி எழுத வேண்டும் என்பது அதைப் பார்த்தாலே விளங்கும். ஒரு குறிப்பிட்ட பதிப்பாளரின் சீரிஸில் குழந்தைகளுக்காக இது போல நூறு நூறு பக்கங்களாக ஏகப்பட்ட புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அவை அத்தனையும் குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் ஏகப்பட்ட தகவல்கள். சுவாரஸ்யமாயிருக்கும்.

    அந்த யுக்திகளை நினைவு வைத்துக்கொண்டு நான் எழுதியதே இந்த நூல். ஆகவே பெற்றோரே.. உங்கள் குழந்தைகள் மட்டுமன்றி நீங்களும் இவற்றை வாசித்துப் பலனடையலாம்.

    என் எழுத்துக்களை எப்போதும் சிறந்த முறையில் மின் புத்தகமாகப் பிரசுரிக்கும் புஸ்தகா டிஜிடல் நிறுவனத்துக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

    என் எழுத்துப் பணிகளுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துக்கொண்டிருக்கும் என் அன்புக் கணவர் எழுத்தாளர் திரு பாமாகோபாலனுக்கு என்றைக்கும் நன்றி.

    அன்பு + நன்றிகளுடன்

    வேதா கோபாலன்

    பனி பொழியும் டிசம்பரின் கடைசி நாள், 2021

    அத்தியாயம் - 1

    என் அன்புக் குழந்தைகளே!

    நலமா?

    நீங்களெல்லாம் அம்மா அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றதுண்டா? அங்கே ஏராளமான மணல் கொட்டிக்கிடக்கும் அல்லவா?

    அங்கு போனால் என்ன செய்வீர்கள்? மணலில் கோபுரம் கட்டி ஜாலியாக விளையாடுவீர்கள் அல்லவா? எவ்வளவு மகிழ்ச்சியான விளையாட்டு!

    இது போல் இன்னும் பெரிய கோபுரம் கட்டினால் எப்படி இருக்கும்? இன்னும் இன்னும் பெரி….சாய் அதைக் கட்டினால் எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்!

    நினைக்கவே பிரமிப்பாய் இருக்கிறதல்லவா?

    மணலில் கட்டாமல் அதையே கற்களால் கட்டினால் எப்படி இருக்கும்? கற்களும் பாறைகளும் இல்லாத இடங்களில் பாறைகளைக் கொண்டு வந்து கட்டடம் கட்டினால் எப்படி இருக்கும்?

    வியந்துபோய்விட்டீர்களா! இன்றைக்கு நாம் அப்படிப்பட்ட கட்டடங்களைப் பற்றிய சுவையான பல விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். சரிதானே குழந்தைகளே?

    அந்தக் கட்டடங்கள்தான்

    பி..ர..மி..ட்..க..ள்!

    இந்தப் பிரமிட்கள் பல நாடுகளில் உள்ளன. ஆனால் எகிப்தின் பிரமிட்கள் உலகப்புகழ் பெற்றவை. அவற்றில் ஒன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது காஸா என்ற இடத்தில் உள்ளது. இதன் பெயர் கூஃபூ பிரமிட்.

    வாருங்கள் உங்களை எகிப்திற்குக் அழைத்துப் போகிறேன். பாஸ்போர்ட் எடுக்காமல் விசா பெறாமல் நாம் இந்த நூலின் மூலமாகவே எகிப்துக்குச் சென்று சுற்றிப்பார்த்து வருவோமா?

    கம் ஆன். கம் ஆன்.

    முதலில் இந்த எகிப்து எங்கே இருக்கிறது என்று பார்க்கலாம்.

    உலகின் ஏழு கண்டகங்களின் ஒன்று ஆப்பிரிக்காக் கண்டம். அதன் வடகிழக்கில் அமைந்துள்ளது எகிப்து நாடு. ஆங்கிலத்தில் ஈஜிப்ட் (Egypt) என்று பெயர் .

    இந்த எகிப்தில்தான் 365 நாட்கள் கொண்ட காலண்டர்கள் கண்டறியப்பட்டன.

    உலகின் மிகப் பழைய உடைகள் இந்த நாட்டில்தான் கிடைத்தன. (எனில் உலகில் முதல் முதலாக உடை அணிந்தவர்கள் இவர்களாகத்தான் இருக்க வேண்டும். இது என் ஊகம் அல்ல. வல்லுனர்களின் கருத்து).

    இவற்றையெல்லாம்விட மிகப் பெரிய வியப்பூட்டும் விஷயம் ஒன்று எகிப்து பற்றிச் சொல்ல வேண்டும்.

    புகழ்மிக்க அந்த பிரமிட்கள் இந்த எகிப்தில்தான் அதிகமாகக் கட்டப்பட்டன. உலகின் மற்ற நாடுகளிலும் பிரமிட்கள் உள்ளன. ள

    பிரமிட் கட்டடங்கள் என்றால் என்ன? எப்போது கட்டடப்பட்டன? அவை எதற்காகக் கட்டப்பட்டன? அவை எதனால் புகழ் பெற்றவையாக உள்ளன? அவற்றை யார் கட்டினார்கள்? அவற்றின் உள்ளே என்னவெல்லாம் உள்ளன? அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் எதை வெளிப்படுத்தின?

    இது போல் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுகின்றனவா உங்கள் மனசில்? எனக்கும் எழுந்தன நான் உங்கள் வயதில் இருக்கும்போது. எனவே அவற்றைப் பற்றிய புத்தகங்களை ஆர்வத்துடன் தேடித் தேடிப் படித்தேன். அப்படிப் படித்தபோது எனக்கு ஏற்படட் பிரமிப்புக்கும் வியப்புக்கும் அளவே இல்லை.

    அது போல் ஏராளமான புத்தகங்களை இரவும் பகலுமாகப் படித்துப் படித்துப் பல வருஷங்களாக நான் அறிந்து கொண்ட விஷயங்களை உங்களுக்கு எளிதாகப் புரிகிற வகையில் சொல்ல விரும்பியதாலேயே இப்படி ஒரு அருமையான நூல் உங்கள் கைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

    சந்தோஷம்தானே?

    நீங்கள் கடற்கரை மணலில் கட்டும் கோபுரங்களையெல்லாம்விட இந்த பிரமிட்கள் மிக மிக மிகப்

    Enjoying the preview?
    Page 1 of 1