Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2
Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2
Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2
Ebook214 pages1 hour

Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனுநீதி நூலில் உள்ள அதிசய விஷயங்கள் பற்றிய இரண்டாவது பாகம் இது. அதாவது கடைசி பாகம். முதல் பாகத்தில் பல அறிமுகக் கட்டுரைகளும் பொதுவான செய்திகளும் இருப்பதால் அதைப் படித்துவிட்டு இந்த கடைசி பாகத்தைப் படிக்க வேண்டுகிறேன். இரண்டு பாகங்களிலும் உள்ள பொருளடக்கத்தைப் பார்த்தாலேயே எவ்வளவு புதுமையான விஷயங்கள் பற்றி மனு பேசுகிறார் என்பது விளங்கும்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580153509493
Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2

Read more from London Swaminathan

Related to Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2

Related ebooks

Related categories

Reviews for Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2 - London Swaminathan

    http://www.pustaka.co.in

    மனுநீதி நூலில் அதிசயச் செய்திகள் – பாகம் 2

    Manuneethi Noolil Athisaya Seithigal - Part 2

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில்

    2. மாணவர்களை அடிக்காதே, திட்டாதே - மநு நீதி நூல்

    3. கழுதை, நாய், புழு, பூச்சி – ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில்

    4. செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை

    5. வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?

    6. தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள்

    7. ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு

    8. ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்!

    9. அமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு

    10. டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்களுக்கு மநு தடை!

    11. இறந்துபோன முன்னோருக்கு சூடான உணவும், நதிக்கரை சாப்பாடும் பிடிக்குமாம்

    12. மநுவின் 4 கேள்விகளும் 4 அதிசயப் பிரார்த்தனைகளும்!

    13. பிராமணர்கள் என்ன செய்யக்கூடாது? மநுவின் தடாலடி!

    14. இருபத்தியோரு வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை!

    15. வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்!

    16. அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான் - மநு பயங்கர எச்சரிக்கை!

    17. எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர் - மநு புத்திமதி

    18. வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை - மநு சவுக்கடி

    19. பிறப்பு, இறப்பு தீட்டு யார் யாருக்கு? எவ்வளவு காலம்?

    20. கலைஞரின் கை எப்போதும் சுத்தமானது - மநு சர்ட்டிபிகேட்

    21. வள்ளுவனும் ஏசுவும் மநு நூலைக் ‘காப்பி’ அடித்தார்களா?

    22. இல்லறமே நல்லறம் - பத்து கட்டளைகள்

    23. ஆளும் கட்சியின் 18 கெட்ட செயல்கள்

    24. வாழ்க்கையில் முன்னேற மநு தரும் 4 டிப்ஸ்!

    25. விஷ முறிவுக்கு ரத்னங்கள், மூலிகைகள்

    26. பிராமணன் எப்போது சூத்திரன் ஆகிறான்? நீதிபதிகளுக்கு மநு அறிவுரை

    27. மநு சொல்லும் இரண்டு அதிசயக் கதைகள்!

    28. மநு சொல்லும் அதிசய சிவப்பு ஆடை உறுதி மொழி

    29. பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? மநு சொன்னது பற்றி சர்ச்சை

    30. மநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்!

    31. ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?

    32. மநுவை வள்ளுவர் ‘காப்பி’ அடித்தாரா?

    33. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் வேதம் படிக்க வேண்டும் - மநு கட்டளை

    34. மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள் - மநு தரும் ‘லிஸ்ட்’

    35. எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து - மநு

    36. பிராமணர்களுக்கு மரண தண்டனை பற்றி மநு!

    37. பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன - மனு

    38. பாம்பு, பல்லி, பன்றி, நாய், கழுதையாக யார் பிறப்பர்? - மநு தரும் பட்டியல்

    39. வேதமே கடவுள், மனிதர் ஆகியோரின் கண்கள் - மநுநீதி நூல் நிறைவு

    முன்னுரை

    மனுநீதி நூலில் உள்ள அதிசய விஷயங்கள் பற்றிய இரண்டாவது பாகம் இது. அதாவது கடைசி பாகம்.முதல் பாகத்தில் பல அறிமுகக் கட்டுரைகளும் பொதுவான செய்திகளும் இருப்பதால் அதைப் படித்துவிட்டு இந்த கடைசி பாகத்தைப் படிக்க வேண்டுகிறேன். இரண்டு பாகங்களிலும் உள்ள பொருளடக்கத்தைப் பார்த்தாலேயே எவ்வளவு புதுமையான விஷயங்கள் பற்றி மனு பேசுகிறார் என்பது விளங்கும்.

    இனி முதல் பாகத்தில் நான் முன்னுரையில் சொன்ன விஷயங்களின் சுருக்கம்: மனு நீதி நூலில் உள்ள விதிகளை யாரும் இப்போது பின்பற்றுவதில்லை. இந்திய அரசியல் நிர்ணய சபை இயற்றிய அரசியல் சட்டத்தையே நாம் பின்பற்றுகிறோம்..சட்ட விதிகள், காலத்துக்கு காலம் மாறும். வேத விதிகளுக்குப் புறம்பாக எதுவும் இருக்கக்கூடாது. அப்படி இருப்பது போலத் தோன்றினால், அந்தக் கால பெரியோர்களைக் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்பது மனுவின் பொன்மொழி.

    லண்டனில் உலகப்புகழ்பெற்ற செயின்ட் பால் கதீட்ரலில் வில்லியம் ஜோன்ஸ் கையில் மனு நீதி நூல் வைத்திருக்கும் சிலை உள்ளது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் மனுவின் சிலை, ராஜஸ்தான் ஹைகோர்ட்டில், பிலிப்பைன்ஸ் நாட்டில் என்று உலகெங்கும் அவருக்கு சிலை வைத்ததன் காரணம். உலகின் முதல் சட்ட நூலை எழுதியதால்தான். திருவாரூரில் மனு நீதிச் சோழனுக்கு நாமும் சிலை வைத்துள்ளோம்.இதற்குக்காரணம் உலகம் விதிப்படி இயங்க வேண்டும் என்பதே; விதிகள் மாறலாம்; அஸ்திவாரம் மாற முடியாது.

    எனது கட்டுரைகளில் அவர் சொன்ன அதிசய விஷயங்களை எடுத்துரைத்துள்ளேன். யாரேனும் 2600 பாடல்களில் 40 பாடல்களைக் காட்டி-இது சூத்திரனுக்கு எதிரான நூல்- என்று சொல்லி அதை எரித்தால் அவர்கள் எல்லோரும் செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் என்று அறிக!! அவை அனைத்தும் இடைக்காலத்தில் வந்த இடைச் செருகல்கள். இடைச் செருகல் (interpolations) என்று சொல்லி ஒவ்வொரு நூலுக்கும் புதிய தேதியை எழுதிய வெளி நாட்டார், மனு நீதி நூலில் மட்டும் இடைச் செருகல் பற்றி பேசவே இல்லை. அதாவது திருடனுக்குத் தேள் கொட்டிய கதை. இதை இடையில் நுழைத்ததே அவர்கள்தான்.

    ஒரு எச்சரிக்கை: நான் மனு நீதியை ஆதரித்து இதை எழுதவில்லை. அதிலுள்ள 100 ஸ்லோகங்களை அகற்றிவிட்டால் இப்படியும் ஒருவர் விதிகள் இயற்ற முடியுமா என்று அதிசயப்படுவீர்கள்.

    நீங்களே 60 கட்டுரைகளையும் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள். மனு சொன்ன ஸ்லோகங்களின் மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் வெப்சைட்டில் கிடைக்கிறது. தமிழில் வேண்டுவோர் என் பிளாக்குகளில் உள்ள போட்டோகாப்பி நகல்களைப் பார்க்கலாம். இந்த நூல் அதற்கான அறிமுகமேயன்றி மனு நூல் ஒரிஜினலைக் கொடுக்கவில்லை. இது இரண்டாம் பகுதி; முதல் பகுதியையும் படிக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஜனவரி 2023

    1. பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில்

    மநு நீதி நூல் - Part 14

    குருவின் ஆசனத்திலும் படுக்கவும் உட்காரவும் கூடாது; ஒரு மாணவன் தனது படுக்கையில் படுத்திருக்கும் போது அல்லது உட்கர்ந்திருக்கும்போது குரு வந்தால் எழுந்து நின்று வந்தனம் (வணக்கம்) செய்ய வேண்டும். 2-117 (235)

    வயதிலும் கல்வியிலும் பெரியவர்களானவர்கள் வரும்போது ஒருவன் உடகார்ந்திருந்தால் அவனுடைய பிராண வாயு மேலெழுந்து வெளியே செல்ல முற்படும்; எழுந்து நின்றால் அது சம நிலையை அடையும். 2-118 (236)

    நான்கு கிடைக்கும்!

    பெரியார்களை நாள்தோறும் வந்தனம் செய்கிறவனுக்கும் தரிசிக்கிறவனுக்கும் நான்கு கிடைக்கும். அவையாவன - ஆயுள், கல்வி, புகழ்/கீர்த்தி, பலம் 2-119 (237)

    பெரியோர்களுக்கு வணக்கம் சொல்லுகையில் தன்னுடைய பெயர், குலம், கோத்திரம், தான் படிக்கும் வேதம், ஷாகை ஆகியவற்றைச் சொல்லி அபிவாதனம் செய்ய வேண்டும்.

    அபிவாதனம் – மிகவும் அடக்கத்துடன் குனிந்து எதிரேயுள்ள பெரியோரின் காலைத் தொட்டுச் சொல்லுதல்

    யாருக்கு ஆசீர்வாதம் செய்யத் தெரியாதோ அவர்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் சொல்லுகையில் அபிவாதயே மந்திரம் சொல்லத் தேவை இல்லை. தன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும்.

    பெயரைச் சொன்ன பின்னர் ‘போ’ (தாங்கள் = தங்களை வணங்குகிறேன்) என்று சொல்லி முடிக்க வேண்டும்.அந்த சப்தமானது பெயர்களின் ஸ்வரூபம் (நிறைவு பெற்றது) என்று ரிஷிகளால் சொல்லப்படுகிறது.

    சிறியோர்கள் வந்தனம் சொல்லும்போது பெரியோர்கள் நீ நீண்டகாலம் வாழ்வாயாக என்று வாழ்த்த வேண்டும்; சம்ஸ்க்ருதத்தில் ஆயுஷ்மான் பவ,

    என்று வந்தனம் சொன்னவர் பெயரை நெடில் எழுத்தில் சொல்ல வேண்டும் (உ.ம். ஆயுஷ்மான் பவ ஸ்வாமிநாதா, கார்த்திகேயா)

    இவ்வாறு எந்தப் பிராமணனுக்கு ஆஸீர்வாதம் செய்யத் தெரியவில்லையோ அவனுக்கு வந்தனம் செய்யக்கூடாது- அவன் சூத்திரனுக்குச் சமம்.

    இவ்வாறு வணக்கம் செய்பவனை – பிராமணனாக இருந்தால் குசலம் (நலமாக இருக்கிறீர்களா?) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா? எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா? என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா? என்றும் கேட்கவேண்டும்.

    யாகம் செய்வதற்காக தீக்ஷை அணிந்தவன் – வயதில் சிறியவனாக இருந்தாலும் அவரைப் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. ‘போ’, ‘பவான்’ (தாங்கள்) என்றே அழைக்க வேண்டும்.

    வயதான மாதர்கள் பிறருடைய மனைவியாகவோ, உறவினர் அல்லாதவர்களாகவோ இருந்தால் ‘பவதி’, ‘சுபகே’, ‘பகினி’ என்று அழைக்க வேண்டும் அதாவது அவர்களை அக்கா, அம்மா, அம்மணி என்ற மரியாதையுடன் நடத்துவதாகும்.

    அம்மான், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், யாக புரோகிதர்கள், குரு வந்தால் எழுந்து நின்று அபிவாதனம் செய்து மரியாதை செய்தல் வேண்டும்.

    அண்ணன் மனைவியை நாள் தோறும் வணங்க வேண்டும். ஞாதி- சம்பந்திகளின் மனைவிமார்களை ஊருக்குப் போய் வந்தபோது மட்டும் வணங்க வேண்டும் - 132

    பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரிய தாய், சிறிய தாய்- ஆகியோரிடத்தில் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும்; ஆனால் தாயார், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் உயர்ந்தவள்

    யாரை நண்பன் ஆக்கலாம்?

    ஓர் பட்டணம், ஊரில் வசிப்பவன் தனக்கு பத்து வயது மூத்தவனோடும், சங்கீதம் முதலிய வித்தைகள் தெரிந்தவன் ஆனால் ஐந்து வயது மூத்தவனோடும், வேதம் தெரிந்திருந்தால் மூன்று வயது மூத்தவனோடும், ஞாதி ஆகியோருடன் கொஞ்சம் வயது வயது மூத்தவனோடும் சிநேகம் செய்யலாம் (நட்புறவு கொள்ள வேண்டும்).

    பத்து வயதுள்ள பிராமணனையும் 100 வயதுள்ள க்ஷத்ரியனையும் தகப்பன்- பிள்ளயாக கவனிக்க வேண்டியது. அதாவது பிராமணனை தகப்பன் மரியாதையுடனும் க்ஷத்ரியனை புத்திரன் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.

    பூஜிக்கத்தக்க 5 அம்சங்கள்

    நியாயமாய்த் தேடிய பொருள், சிற்றப்பன் முதலிய உறவினர்கள், உயர்ந்த வயது, நல்ல ஒழுக்கம், கல்வி ஆகிய ஐந்தும் ஒருவனை பூஜிப்பதற்குரிய /மதிப்பதற்குரிய ஐந்து அம்சங்கள் – வரிசைக் கிரமத்தில் பார்த்தால் இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது. இந்த ஐந்து அம்சங்/தகுதி/களில் ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள்/தகுதிகள் உடையோரை ஒன்று மட்டுமே உடையவர்கள் பூஜிக்க வேண்டும்; 90 வயதுக்கு மேற்பட்ட சூத்திரர்களுக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்.

    90 வயதுக்கு மேற்பட்டவன், நோயாளி, சுமையாளி, மாதர்கள், அநுஷ்டானமுள்ள பிராமணர்கள்,அரசன், கலியானம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஆகியோருக்கு வண்டி வாஹனங்களில் வருவோர் வழிவிட வேண்டும்.

    இவர்களில் பலரும் வந்தால் அனுஷ்டானமுள்ள பிராமணனுக்கும் மன்னனுக்கும் முதலில் வழிவிட வேண்டும். பிராமணனும் அரசனும் வந்தால் பிராமணனுக்கே முதலில் வழிவிடவேண்டும்.

    யார் ஆச்சார்யன்?

    எவன் உபநயனம் செய்வித்து வேத, யாக மந்திரங்களையும், வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனே ஆச்சார்யன் எனப்படுவார்.

    எவன் கர்ப்பதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவன் குரு எனப்படுவான்.

    எவன் அக்னிசந்தானம், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனைச் செய்விக்கிறானோ அவனை ரித்விக் என்று சொல்லுவார்கள்.

    எவன் ஸ்வரத்தோடு கூடிய வேத ஒலியினால் தன் காதுகளை நிறைவிக்கின்றானோ அவன் தாய், தந்தைக்குச்

    Enjoying the preview?
    Page 1 of 1