Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavukku Oru Parisu
Ammavukku Oru Parisu
Ammavukku Oru Parisu
Ebook84 pages18 minutes

Ammavukku Oru Parisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றும் இன்றும் என்றும் வானொலி நம் இதயத் துடிப்புதான். வானொலிப் பெட்டியின் இலட்சோப இலட்சம் இரசிகர்களும் இரண்டு செவிகளை இதயமாகவே மாற்றிக்கொண்டு கவிதை வாசிப்போனுக்கு வாழ்த்து அனுப்புகிறவர்கள். அவ்வழியில் தொடர்ந்து புதுவை வானொலிக்கும் எனக்கும் கவித்தொடர்பு நிரந்தரமாய் நீண்டுள்ளது.

இது தவிர இத்தொகுப்பில் சாகித்ய அகாதமி கவிதை வாசிப்பு (பெங்களூரு); பொதிகை தொலைக்காட்சி, வேரிதாஸ் ஆசியா தமிழ் கவிதை ஒலிபரப்பு, இலங்கை வானொலி, கடலூர், சேலம் உள்ளிட்ட கவியரங்க மேடைக் கவிதைகள் ஆக மொத்தம் 22 கவிதைகளும் வாசகனுக்கு ஓர் நீண்ட புதிய சிந்தனைக் களத்தைத் தரும். ஆர்வம் தூண்டும்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580161010381
Ammavukku Oru Parisu

Read more from P. Sathiyamohan

Related to Ammavukku Oru Parisu

Related ebooks

Reviews for Ammavukku Oru Parisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavukku Oru Parisu - P. Sathiyamohan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மாவுக்கு ஒரு பரிசு

    (வானொலி கவிதைகள்)

    Ammavukku Oru Parisu

    Author:

    பா. சத்தியமோகன்

    P. Sathiyamohan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan

    பொருளடக்கம்

    வார்த்தைச் சிக்கல்

    அம்மாவின் அடிகள்

    ஞானமரத்துடன் ஒரு பேட்டி

    ஒளியை அனுசரி ஒளியாமல் வாழலாம்

    காற்று என்ன சொல்கிறது!

    சந்தனவாசம் நிகழ்காலம்...!

    அன்புடன் அன்பு ஒரு டன்

    நீலமானது உலகம் திடீரென்று

    தீவிரவாதமும் மனிதநேயமும் சந்தித்தால்?

    பலூனுடன் ஒரு பாதயாத்திரை

    பண்பு பாராட்டும் உலகு

    அம்மாவுக்கு ஒரு பரிசு

    மலரட்டும் மனிதநேயம் அஹிம்சையில் வாழட்டும்

    மீண்டும் தொலைதல்

    காந்தியுடன் ஒரு நேர்காணல்

    பகைத்துக் கொள்!

    புதுமையைப் போற்றுதும் புதுமையைப் போற்றுதும்

    அவர்களும் நீயும்

    மூன்றாம் காலம் உண்டா?

    இன்றைய தேவை வேகமான தலைமையா? விவேகமான தலைமையா?

    கண்ணுக்கு இமை எதற்காக?

    கண்ணுக்கு இமை எதற்காக

    நண்பா! கேள்!

    அன்றும் இன்றும் என்றும் வானொலி நம் இதயத் துடிப்புதான்.வானொலிப் பெட்டியின் இலட்சோப இலட்சம் இரசிகர்களும் இரண்டு செவிகளை இதயமாகவே மாற்றிக்கொண்டு கவிதை வாசிப்போனுக்கு வாழ்த்து அனுப்புகிறவர்கள். அவ்வழியில் தொடர்ந்து புதுவை வானொலிக்கும் எனக்கும் கவித்தொடர்பு நிரந்தரமாய் நீண்டுள்ளது.

    இது தவிர இத்தொகுப்பில் சாகித்ய அகாதமி கவிதை வாசிப்பு (பெங்களூரு); பொதிகை தொலைக்காட்சி,வேரிதாஸ் ஆசியா தமிழ் கவிதை ஒலிபரப்பு, இலங்கை வானொலி, கடலூர், சேலம் உள்ளிட்ட கவியரங்க மேடைக் கவிதைகள் ஆக மொத்தம் 22 கவிதைகளும் வாசகனுக்கு ஓர் நீண்ட புதிய சிந்தனைக் களத்தைத் தரும். ஆர்வம் தூண்டும்.

    குறிப்பாக புதுச்சேரி வானொலி தேர்வு செய்து இந்தியக்கவிஞர்கள் சம்மேளனம் நிகழ்வுக்கு குஜராத்தில் தமிழகம் சார்பாக கலந்துகொண்டு வாசித்த அம்மாவுக்கு ஒரு பரிசு இந்தியக்குடியரசு நாளில் 18 மொழிகளில் ஒலிபரப்பானது.

    மூக்கு நாசி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் முடி சீரமைப்பு தொடங்கி இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தம் வேண்டுவது வரையில் அன்றாடக் குவியல் எண்ணங்களில் கவி உணர்வு ஓர் தனித்த மாணிக்கமாய் தனது ஒளியை தானே கண்டுபிடிக்கிறது.

    அதனைக் வாங்கும் ரிஸீவராக கவிஞர்கள் உள்ளனர். நுண் அலைப் பிரபஞ்சத்தில் கேளா நுண்ணலைகளாக இயங்கும் வரிகளை ஸ்தூலப்படுத்துதல், எழுத்து வடிவப் படுத்துதல் இரண்டுமே கவிஞனின் பொறுப்பாக உள்ளது.

    இக்கவிதைகள் ஆங்காங்கே உதிரிப்பூக்களாக ஆகாமல், கண்ணதாசனுக்கு இராம. கண்ணப்பன் உதவியது போல, அடியேன் கவிதைகளைச் சர மாலைகளாகத் தொகுத்த, என் மனைவி லாவண்யா சத்தியமோகன் அவர்களுக்கு நவராத்ரி நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களுமே நான் நன்றி கூறக் கடமைப்பட்டவனாக உள்ளேன்.

    மிக முக்கியமாக, புஸ்தகா நூல் வெளியீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை மிக்க தமிழ் ஆதரிப்பு தருவதால் சிறந்த நூல்கள் தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு உடனடியாக கிட்ட வாய்ப்பு சூழல் ஏற்படுகின்றது. வாழ்க. அவர்கள் மனம் வாழ்க என்று ஈசனை வேண்டுகிறோம்.

    வாசகர்கள் அகில உலகின் எல்லா வளமும் பெறுக.

    பா.சத்தியமோகன்,

    17.10.23 நவராத்ரி

    வடலூர்.

    வார்த்தைச் சிக்கல்

    இன்று நேற்றல்ல - இது அன்புக்கு ஏங்கும் பல கோடி மனிதர்களின் சிக்கல்!

    அது எது? ஆம்! அதுதான் -

    அன்பற்ற மனிதர்களின் வார்த்தையில் இருக்கும் வெப்பம்!

    அதனை வடிகட்ட

    ஒரு தனி இதயமே வேண்டும்!

    எனக்குத் தெரிந்த மனிதர்கள் சிலர் சொல்லில் இருக்கும் -

    Enjoying the preview?
    Page 1 of 1