Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?
Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?
Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?
Ebook154 pages57 minutes

Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காந்திஜி எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவந்தார். ஏனையோர் அவர் சொன்னாலும் கேட்பதாக இல்லை. இது இந்துக்களை ஆத்திரப்பட வைத்தது. அரசியலிலும் அவரது கொள்கைகள் எடுபடவில்லை. தன நிலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார்; ஆயினும் இந்த நூல் அவரது இந்துமதம் பற்றிய தொகுப்பு மட்டுமே. அஹிம்சை, ராம நாம மஹிமை, பிரம்மச்சர்ய விரதம், உண்ணாவிரதம், சைவ உணவு பற்றிய அவருடைய கொள்கைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

Languageதமிழ்
Release dateSep 2, 2023
ISBN6580153510022
Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?

Read more from London Swaminathan

Related to Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?

Related ebooks

Related categories

Reviews for Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar? - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?

    Matha Maattram, Hindu Madham Pattri Gandhiji Enna Solkirar?

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. காந்திஜி வாழ்க்கையில் ராமர் செய்த அற்புதம்!

    2. ஆவிகளுடன் பேசுவது நல்லதா? காந்திஜி பதில்; லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம்

    3. கிறிஸ்தவ பாதிரியுடன் காந்திஜி வாக்குவாதம்

    4. கோட்ஸே சுட்டதற்கு முன்னால் காந்திஜி எழுதியது

    5. மாமிச உணவு சாப்பிடலாமா? காந்திஜி, விவேகானந்தர் பதில்

    6. முஸ்லீம்கள் மாட்டு மாமிசம் சாப்பிடலாம்: காந்திஜி

    7. இந்து மதம் பற்றி காந்திஜியின் பொன்மொழிகள்

    8. மேலும் 30 காந்தி பொன்மொழிகள்

    9. தெரு நாய்களைக் கொல்லலாம்: மஹாத்மா காந்தி

    10. நம் தாயைவிடச் சிறந்தவள் கோமாதா!

    11. காந்திஜிக்கு வந்த சுவையான ‘காதல் கடிதங்கள்’

    12. காந்திஜிக்கு பிடிக்காத கிருஷ்ண பரமாத்மா!

    13. கிறிஸ்தவர்களும் இந்துக்களாக மதம் மாறக்கூடாது: காந்திஜி

    14. குணப்படுத்த முடியாத நோயாளிகளைக் கொல்லலாம்

    15. எல்லா இந்து மத நூல்களும் தீக்கிரையானாலும் இந்த ஒரு மந்திரம் போதும்: காந்தி

    16. காந்திஜிக்கு ஞானோதயம் ஏற்பட்டது உருளி காஞ்சன் கிராமத்தில்!

    17. சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்பது சரியே - காந்திஜி

    18. கம்பனைக் ‘காப்பி’ அடித்தாரா காந்திஜி?

    19. காந்தி வந்தாராம், பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்...

    20. மதம் மாறிய காந்திஜி மகனுக்கு மௌலவி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல்

    21. வாளும் குண்டூசியும்; காந்தியும் நாதிர்ஷாவும்

    22. Gandhi Quotes on Hinduism

    23. More Interesting Quotations from Mahatma Gandhi

    முன்னுரை

    மஹாத்மா காந்தி உலகம் முழுதும் அறியப்பட்ட ஹிந்து என்பது மட்டுமல்ல; போற்றப்பட்ட ஒரு ஹிந்துவும் ஆவார். உலகில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள், முஸ்லீம் நாடுகள்கூட அவரது நூற்றாண்டு தினம் 1969-ல் கொண்டாடப்பட்ட போது அஞ்சல்தலைகளை வெளியிட்டதிலிருந்தும், காந்திஜியின் சிலைகளை நிறுவியதிலிருந்தும் இது தெரிகிறது. இந்து மதம் பற்றிய அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவை. எவ்வளவோ கிறிஸ்தவர்கள் அவரை மதம் மாற்றம் செய்ய முயன்றபோதும், அவர் அசைந்து கொடுக்கவில்லை. ஏனையோரும் இந்து மதத்திற்கு வரவேண்டியதில்லை; அவரவர் மதத்தை ஒழுங்காகப் பின்பற்றினால் போதும் என்றே அவர் அறிவுறுத்தி வந்தார்.

    காந்திஜி எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவந்தார். ஏனையோர் அவர் சொன்னாலும் கேட்பதாக இல்லை. இது இந்துக்களை ஆத்திரப்பட வைத்தது. அரசியலிலும் அவரது கொள்கைகள் எடுபடவில்லை. தன் நிலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார்; ஆயினும் இந்த நூல் அவரது இந்துமதம் பற்றிய தொகுப்பு மட்டுமே. அஹிம்சை, ராம நாம மஹிமை, பிரம்மச்சார்ய விரதம், உண்ணாவிரதம், சைவ உணவு பற்றிய அவருடைய கொள்கைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

    ஆஸ்ரமத்தில் நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியைக் கொல்ல உத்தரவிட்டது, வயல்களை மேயும் குரங்குகளையும், தெரு நாய்களையும், தீராத நோயுடைய நோயாளிகளையும் கொல்வது சரியே என்று அவர் சொன்னது நீண்டகால சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பெரும்பாலோர் அவரைப் பின்பற்றினாலும், அவர் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராக இருக்கவில்லை. அரசியலிலும் நேதாஜிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கியது ஜனநாயக விரோதமான செயல் என்று ஏசப்பட்டது.

    அவர் இந்துமதத்தைப் போற்றி அதைக் கடைப்பிடித்தார் என்பதிலோ, சொந்த வாழ்வில் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தார் என்பதிலோ எந்த ஐயப்பாடும் இல்லை. அவரது மகன் மதம் மாறி, ஒழுக்கம் கெட்டுப்போனது அவரையும், அவர் மனைவி கஸ்தூரிபா காந்தியையும் மிகவும் பாதிக்கச் செய்தது.

    காந்திஜியின் பெயரில் நவஜீவன் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து இந்தக்கட்டுரைகள் எடுக்கப்பட்டு, என்னால் தமிழாக்கம் செய்யப்பட்டு, என்னுடைய ‘பிளாக்’குகளில் அண்மையில் வெளியிடப்பட்டன. அவைகளைத் தொகுத்து இங்கே வழங்குகிறேன்.

    இந்த நூலைப் படிக்கும்போது அவரது பெயரை வைத்துக்கொண்டு திரிவோரும், அவரது படத்தை அலுவலங்களில் மாட்டி வைத்திருப்போரும் அவரை நையாண்டி செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இறுதியில் காந்தியின் பொன்மொழிகளை ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளேன்; படித்துப் பயன் பெறுவீர்களாகுக.

    அன்புடன்

    ச. சுவாமிநாதன்

    ஜூன் 2023, லண்டன்

    1. காந்திஜி வாழ்க்கையில் ராமர் செய்த அற்புதம்!

    Post No. 11,957

    Date uploaded in London – May 1, 2023

    விக்ரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாத ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று கேள்விகளை காந்திஜிக்கு அனுப்பி இருந்தார். அவர் 3 கேள்விகளுக்கும் பதில் எழுதினார். மூன்றாவது கேள்விக்கான பதிலை மட்டும் முதலில் காண்போம்.

    கேள்வி:

    இந்துக்கள் போற்றும் (கடவுள்) ஒருவர், அவரது வாழ்க்கையில், ஏதேனும் தவறுகள் செய்திருக்கலாம். அந்தத் தவறுகளை, அவரைப் போற்றித் துதிபாடுபவரும் செய்தால், அவருக்கு தீங்கு நேரிடுமே... அந்த உருவத்தை அவர் வழிபட்டால் அந்தத் தவறை அவர் செய்வது சாத்தியம் அல்லவா?

    காந்திஜியின் பதில்:

    கடிதம் எழுதியவர், இந்துக்களின் அவதார தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்துவுக்கு அவதார புருஷர் மாசு மருவற்றவர். ஹிந்து பக்தருக்கு கிருஷ்ணன், பரிபூரணத்துவம் வாய்ந்தவர். மற்றவர்களின் கடுமையான விமர்சனம் பற்றி அவருக்கு கவலையே இல்லை.

    கிருஷ்ணரையும், ராமரையும் வணங்கும் பல லட்சம் பேருக்கு அக்கடவுளரை அதே பெயரைச் சொல்லி வணங்கியதால், வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கிறது. எப்படி இது நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இது ஒரு மர்மம். இதை நான் உள்ளத்தின் மூலமோ, அறிவின் மூலமோ அறிய முயற்சி செய்யவில்லை. ஆனால் நீண்ட காலத்துக்கு முன்னரே கடவுள் என்பவரின் அடையாளம் / குணம் சத்தியம் என்பதை உணர்ந்தேன். அந்த சத்தியத்தை ராமர் என்ற நாமத்தின் மூலமே அறிந்தேன்.

    எனக்கு சோதனை ஏற்பட்ட இருண்ட நேரத்தில் எல்லாம், அந்த ஒரு நாமம்தான் என்னைக் காப்பாற்றியது... இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பக்தியே காரணமாக இருக்கலாம். என்மீது துளசிதாஸ் ஏற்படுத்திய தாக்கமும் காரணமாக இருக்கலாம்... இந்த வரிகளை எழுதும்போது என் சின்ன வயசில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது; அப்போது நான் தினமும் ராமர் கோவிலுக்குப் போவேன். என்னுடைய ராமன் அப்போது அங்கு வசித்தார். பாவங்களிலிருந்தும், பயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றினார். இது என்னுடைய மூட நம்பிக்கை இல்லை. அந்த ராமர் விக்ரகத்தை வைத்திருந்தவர் கெட்டவராக இருந்திருக்கலாம். அவருக்கு எதிராக நான் எதையும் கேட்டதில்லை. அந்தக் கோவிலில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கலாம்... அவை பற்றியும் எனக்குத் தெரியாது. ஆகையால் அவை என்னைப் பாதிக்காது. எனக்கு எது உண்மையாக இருந்ததோ, இன்னும் இருக்கிறதோ, அது பல லட்சம் மக்கள் விஷயத்திலும் உண்மையே. என்னுடைய ஹரிஜன சகோதரர் அவருடைய சகதர்மிகளுடன், விரும்பினால், இந்தக் கோவில் வழிபாடு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளட்டும். ஜாதி இந்துக்கள், அவர்களுடைய ஹரிஜன சகோதர்களுக்கு, கோவில்களைத் திறந்துவிடுவது அவர்களின் தலையாய கடமை ஆகும்.

    மனித இனத்துக்குத் தேவையான ஆன்மீகத் தேவையை கோவில் வழிபாடு பூர்த்தி செய்கிறது. சீர்திருத்தங்களை ஏற்கிறது. மனித இனம் வாழும் வரை இதுவும் நீடித்து இருக்கும். (ஹரிஜன் பத்திரிகை, 18-3-1933)

    எம்.கே. காந்தி

    2. ஆவிகளுடன் பேசுவது நல்லதா? காந்திஜி பதில்; லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம்

    Post No. 11,960

    Date uploaded in London – May 2, 2023

    இறந்துபோன உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசுவது உண்மையா? அது நல்லதா? என்று கேள்வி கேட்ட ஒருவருக்கு காந்திஜி எழுதிய பதில் இதோ: (கீழே மதுரையில் எனக்கு ஏற்பட்ட சொந்த அநுபவத்தையும் எழுதியுள்ளேன் - லண்டன் சுவாமிநாதன்)

    காந்திஜி எழுதிய பதில்:

    இறந்து போனவர்களின்

    Enjoying the preview?
    Page 1 of 1