Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jana Gana Mana
Jana Gana Mana
Jana Gana Mana
Ebook135 pages50 minutes

Jana Gana Mana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள அரசியல் சமூகக் காரணங்களை அண்மைக்கால வரலாறு போதியமட்டும் நமக்கு அளித்து விட்டது. ஆனால் வரலாறு சொல்லத் தவறிய விஷ்யங்கள் பற்பல. கோட்சே எப்படி சிந்தித்தான், காந்தியைக் கொல்வது என்று முடிவெடுத்தபின் அவனது மனநிலை எப்படி இருந்தது? எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படி செயல்படுத்தினார்கள்? கோட்சே எப்படிப்பட்ட மனிதன்?
வெறும் பெயராகவும், புகைப்படமாகவும் நமக்கு இதுவரை அறிமுகமாகியுள்ள நாதுராம் கோட்சே முதல் முறையாக மாலனின் ஜன கண மனவில் நமக்கு அறிமுகமாகிறான்.
வரலாறு எங்கு முடிகிறது, புனைவு எங்கே தொடங்குகிறது என்று பிரித்துப் பார்க்க ஒரு நொடி அவகாசம் கூட அளிக்காமல் விறுவிறுவென்று இந்த நாவலைக் கொண்டு செல்கிறார் மாலன்.
பத்திரிகையில் வெளிவந்த போது ஏராளமான சர்ச்சைகளையும் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்ற இந்நாவல் மாலனின் மிக முக்கியப்படைப்பாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580115405366
Jana Gana Mana

Read more from Maalan

Related to Jana Gana Mana

Related ebooks

Related categories

Reviews for Jana Gana Mana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jana Gana Mana - Maalan

    http://www.pustaka.co.in

    ஜன கண மன

    Jana Gana Mana

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    'சிறுபான்மையினரிடம் பெருந்தன்மை காட்டிப் பெரும்பான்மையினர் நடந்துகொள்ளாவிட்டால், ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் சர்வாதிகாரக் கொடுங்கோன்மை ஆகிவிடும்' என்பதை உணர்ந்திருந்தவர் மகாத்மா காந்தி. அதுதான் அவர் முஸ்ஸிம் சகோதரர்களிடம் காட்டிய கனிவுக்கும் அன்புக்கும் அடிப்படை. ஆனால் இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பலருக்கு, அவர் மீது கோபம் கோபமாக வந்தது. காந்திஜி எப்போது பார்த்தாலும் முஸ்லிம்கள் பக்கமாகவே இருக்கிறார்; அவர்களுக்காகவே வாதாடுகிறார்; உண்ணாவிரதம் இருக்கிறார் என்றெல்லாம் ஆத்திரப்பட்டார்கள். இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் காந்திஜியின் மரணம்.

    காந்திஜியின் மறைவு அண்மைக்காலச் சரித்திரம். அரசியல் சரித்திரம் எழுதுகிறவர்கள், அவர் படுகொலை செய்யப்பட்டதையும் அதற்கான அரசியல், சமுதாயப் பின்னணிகளையும் ஆராய்ந்து எழுதுவார்கள். ஆனால், மானுடச் சரித்திரம் எழுதுகிறவர்கள் என்று இன்று சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல், சமுதாயப் பின்னணியை மட்டுமின்றி, நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களின் செயல்களையும், அதற்குக் காரணமான அவர்களின் மனங்களையும் ஆராய்ந்து எழுதுகிறார்கள். இது ஒரு புதிய உத்தி. அவ்வாறு பார்க்கும் போது, மனித முயற்சிகளுக்கு எல்லாம் மேலான விதி என்பதாக ஒன்று இருக்கவே செய்கிறது என்ற நீர்மானமான முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. விதி விளையாடி பிராவிட்டால், காந்திஜியின் மரணம்கூட அன்று தவிர்க்கப்பட்டிருக்க முடியும் என்பதைக் காண்கிறோம்.

    இதைத்தான் இந்த நாவலில் மாலன் மிக சுவாரஸ்யமாக எடுத்துக் காட்டுகிறார். சிறிய நாவல்தான் என்றாலும், மாலன் நுணுகி ஆராய்ந்து, பல்வேறு உண்மை நிகழ்ச்சிகளைத் தொகுத்து, தமது கற்பனையைப் பொருத்தமான விதத்தில் அளவாகச் சேர்த்து கதையை வளர்த்திருக்கிறார். எது சரித்திரம், எது கற்பனை என்று புரிந்து கொள்ள முடியாதபடி வெகு சாமர்த்தியமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறார். இதில் ராஜாஜி குறிப்பிட்டது போன்ற ஓர் அபாயம் உண்டு. அதிகம் படிக்காத அல்லது சரித்திரத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாத மக்கள், கற்பனைப் பகுதிகளைக்கூடச் சரித்திரம் என்றே கருதிவிடக்கூடிய அபாயம்தான் அது! மாமல்லபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர், அங்கு வடிக்கப்பட்டுள்ள குடவறைக் கோயில்களும் சிற்பங்களும் ஆயனச் சிற்பி உருவாக்கியவை என்றே எண்ணுகிறார்கள் அல்லவா? இது ஒருபுறமிருந்தாலும் இப்படிப் பலர் ஏமாந்து போவதே சரித்திர நாவலாசிரியனின் மாபெரும் வெற்றி என்றும் கொள்ளலாம். அந்த முறையில் மாலன் தம்மை ஒரு முதல்தர சரித்திர நாவலாசிரியராக இந்த நாவல் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆய்வுத் திறனும், கதை சொல்லும் ஆற்றலும் பக்கத்துக்குப் பக்கம் என்ன, பத்திக்குப் பத்தி விகாசிக்கின்றன.

    ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டுகிற, விறுவிறுப்பான நடை. அநாவசியங்களைப் புகுத்தாதனாலேயே, நாவல் அதிவேகமாக நடக்கிறது - காந்திஜி போல!

    ஒரே ஓர் இடம் நெருடுகிறது. முடிவுரையாக சுகனுக்கு எழுதப்படும் கடிதம். அதில் வாக்கியங்கள்:

    "முதன் முதலாக அரசியலோடு மதத்தைப்

    பிணைத்து நடத்தியவர் காந்திஜி. அந்த அரசியல்

    அவரைச் சாப்பிட்டது."

    இது மாலனின் தவறான கணிப்பு என்று நான் கருதுகிறேன். அரசியலோடு காந்தி இறைஉணர்வைப் பிணைத்தாரேயன்றி, மதத்தை அல்ல. மதத்தைப் பிணைக்கக்கூடாது என்றவர் அவர். எம்மதமும் அவருக்குச் சம்மதம்; சமம். காந்தியின் அரசியல் அவரைச் சாப்பிட வில்லை. காந்தியின் அற்புதமான அரசியலை நம்மால் புரிந்துகொள்ள முடியாத அறியாமைதான் அவரைச் சாப்பிட்டது. நம்முடைய அறியாமை தொடர்ந்து நீடித்து, காந்தியத்தையும் சாப்பிட்டு வருகிறது! விடிவுகாலம் பிறக்க இன்னொரு காந்தி தோன்றவேண்டும். பிரார்த்திப்போம்.

    கல்கி ராஜேந்திரன்

    தத்துவங்களை அல்ல....

    அம்மாவின் அந்த முகம் இன்னும் கண்முன் நிற்கிறது.

    எங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜை ரத்தமில்லாத யுத்தகளம். உற்சாகமான சர்ச்சை மடம்.

    அங்கே அரசியல் சூடு பறக்கும். இலக்கியம் பரிமாறப்படும். சரித்திரம் மெல்லப்படும். ஜோக்குகள், அனுபவங்கள், குட்டிக் கதைகள் சொல்லப்படும்.

    என்றாலும், அதன் நிரந்தர’இன்றைய ஸ்பெஷல்' காரமான அரசியல் விவாதம்.

    யார் எப்படி நடந்துகொண்டிருக்க வேண்டும் என்று தர்க்கபூர்வமான நியாயங்களோடு,’நடைமுறைக்குச் சரிப்பட்டுவராத சிறுபிள்ளைகளின் லட்சிய நோக்கோடு’ ஆதாரங்களோடு, வாதிடுகிற நான் எப்போதும் எதிர்க்கட்சி.

    'அனுபவம், உலக சரித்திரம், இந்தச் சூழ்நிலையில் இதுதான் சாத்தியம் என்ற நிதர்சனம், மனிதர்கள் என்றால் அப்படித்தான், சற்று முன்பின் இருப்பார்கள் என்ற பெரிய மனம் - இவை கொண்டு அப்பா எனக்கு, எங்களுக்குப் பதில் சொல்வார்.

    அன்று இந்திய அரசியலில் ஒரு புயல் மையம் கொண்டிருந்தது.

    அவர் ஜெயபிரகாஷ் நாராயணன்.

    'அநீதியான அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு ராணுவம் கட்டுப்பட வேண்டியதில்லை. அவரவர் மனசாட்சி கொண்டு முடிவெடுத்தால் போதும்' என்கிற ரீதியில் ஜெ.பி. ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    'காந்தியோடு பழகியவர். எத்தனை பெரிய மனிதர். அவர் இப்படிப் பேசலாமா?' என்று அப்பா கவலைப்பட்டார்.

    'அவர் சொல்வது முற்றிலும் சரி. நேர்மையை இழந்துவிட்ட அரசாங்கம், ஆளும் தகுதியை இழந்து விட்டது. அதன் ஆணைகளுக்கு அதன் ஊழியர்கள் அடிபணிய வேண்டிய அவசியமில்லை. காந்தி இருந்திருந்தால் அவர்கூட இன்று இதைத்தான் சொல்லி இருப்பார்' என்பது எனது வாதம்.

    அப்பா சொன்னார்:’உனக்குத் தெரிந்திராது மாலன். ஒரு காலகட்டத்தில், பெஷாவர் என்ற இடத்தில் கார்வாலி ரெஜிமெண்ட் என்ற இந்திய ராணுவம், தங்களது எஜமானர்களான பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக, மக்களோடு சேர்ந்து கொண்டு கிளர்ந்து எழுந்தது. கிட்டத்தட்ட ஒரு வார காலம், ஆங்கில அரசாங்கத்துக்குத் தண்ணி காட்டியது. ஆங்கிலேயர் பயங்கரமான அடக்கு முறையை அவிழ்த்து விட்டு, அந்தக் கார்வாலி ரெஜிமெண்டை சித்ரவதை செய்தார்கள். அந்தமானில் கொண்டு சிறையில் அடைத்தார்கள். பெஷாவர் எங்கே, அந்தமான் எங்கே! பின்னாளில் காந்தி, இர்வின் பிரபுவோடு ஓர் ஒப்பந்தம் போட்டார். என்னவென்று? அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்,’கார்வாலி ரெஜிமெண்ட்' தவிர. பின்னர் பம்பாயில் நடந்த’நேவல் ம்யூட்னியைக்கூட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால் ராணுவம் புரட்சி செய்வதை காந்தி ஒருபோதும் அரசியலாக' ஏற்றுக் கொண்டதேயில்லை.'

    அப்பா இதைச் சொல்லி முடித்ததும்,’காந்தி ஒரு நம்பிக்கைத் துரோகி' என்று என்னுடைய தம்பி பொங்கினான். அவர் ஒரு’ஹிப்போகிரேட்' என்று இன்னொருவன் சொன்னான்.’ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பாசிஸ்ட்!' என்று நான் வர்ணித்தேன்.’அவர் ஒரு மோசமான கணவர்' என்று எனது தங்கை குற்றம் சாட்டினாள்.

    ஐந்து நிமிஷத்துக்குள் மளமளவென்று காந்தியின் மீது சரமாரியாகக் கல் விழுந்தது. அத்தனையும் இளைய தலைமுறை - அத்தனை பேரும் சுதந்தரத்துக்குப்பின் பிறந்தவர்கள்- வீசிய கற்கள்.

    அப்போதுதான் அது நடந்தது. கட்டுக்கடங்காமல் வெடித்துப் பீறிடுகிற விம்மல் எழுந்தது. நாசி

    Enjoying the preview?
    Page 1 of 1