Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ottrumai Thedi Oru Payanam
Ottrumai Thedi Oru Payanam
Ottrumai Thedi Oru Payanam
Ebook332 pages2 hours

Ottrumai Thedi Oru Payanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒற்றுமை தேடி - நூலின் தலைப்பே இன்றைய காலத்தின் தேவையை உணர்த்துகிறது. கற்பனை துளியுமற்ற, உண்மையான அனுபவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த நூல். வீதியெங்கும் வளர்க்கப்படும் வெறுப்பு அரசியலின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, அன்பை விதைக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் சில பகுதிகளில் கலந்துகொண்டவர் கீர்த்தி.

அத்துடன் நிற்கவில்லை அவர். கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பாதையிலேயே சென்று, அவருடைய நடை பயணத்தின் விளைவு என்ன? அரசியலுக்குத் தொடர்பே இல்லாத கீர்த்திக்கு ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மீது இவ்வளவு அக்கறை வரக் காரணம் என்ன? மதவெறி, வெறுப்பு அரசியல் ஆகியவை நாளுக்கு நாள் பரவி வருவது கண்டு அவருக்கு ஏற்பட்ட அச்சம். இதைத் தடுத்து நிறுத்தவே முடியாதா? இதைத் தடுக்க யார் வருவார்?

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580170510295
Ottrumai Thedi Oru Payanam

Related to Ottrumai Thedi Oru Payanam

Related ebooks

Reviews for Ottrumai Thedi Oru Payanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ottrumai Thedi Oru Payanam - Kirthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கன்னியாகுமரி – காஷ்மீர்

    ஒற்றுமை தேடி ஒரு பயணம்

    Ottrumai Thedi Oru Payanam

    Author:

    கீர்த்தி

    Kirthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kirthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    முன்னுரை

    ஒற்றுமை தேடி - நூலின் தலைப்பே இன்றைய காலத்தின் தேவையை உணர்த்துகிறது. கற்பனை துளியுமற்ற, உண்மையான அனுபவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த நூல்.

    வீதியெங்கும் வளர்க்கப்படும் வெறுப்பு அரசியலின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, அன்பை விதைக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் சில பகுதிகளில் கலந்துகொண்டவர் கீர்த்தி. அத்துடன் நிற்கவில்லை அவர். கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பாதையிலேயே சென்று, அவருடைய நடை பயணத்தின் விளைவு என்ன? மக்களிடம், நடைபயணம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய விரும்பினார். கவிதா, நிஷா என்ற இரண்டு தோழிகளை தன்னோடு அழைத்துக்கொண்டர். தன்னுடைய காரில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டார். இந்த மூன்று பேரில் கீர்த்திக்கு மட்டுமே கார் ஓட்டத் தெரியும். ஆனாலும், தான் ஒருவரே காரை ஓட்டிக்கொண்டு காஷ்மீர் வரை சென்று திரும்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டார் கீர்த்தி. இது எளிதானதல்ல. ஆனாலும் மிகுந்த துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் புறப்பட்டார். அவரோடு புறப்பட்ட இரண்டு தோழிகளின் நம்பிக்கையையும் பாராட்ட வேண்டும். வெற்றிகரமாக கஷ்மீர் வரை காரில் சென்று திரும்பியுள்ளார்.

    குடும்பத்தலைவி, மனநல ஆலோசகர் என்று தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த, அரசியலுக்குத் தொடர்பே இல்லாத கீர்த்திக்கு ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மீது இவ்வளவு அக்கறை வரக் காரணம் என்ன? மதவெறி, வெறுப்பு அரசியல் ஆகியவை நாளுக்கு நாள் பரவி வருவது கண்டு அவருக்கு ஏற்பட்ட அச்சம். இதைத் தடுத்து நிறுத்தவே முடியாதா? இதைத் தடுக்க யார் வருவார்? என்று கீர்த்தி ஏங்கி நின்ற நேரத்தில்தான், வழியெங்கும் அன்பை விதைக்கும் ஒற்றுமை நடை பயணம் அறிவிப்பை வெளியிட்டார் ராகுல். மழை பெய்யாதா என்று ஏங்கி நின்றபோது மழை பெய்து, மனம் குளிர்ந்த விவசாயி போல மனம் குளிர்ந்தார் கீர்த்தி.

    நடை பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. 4000 கிலோ மீட்டர் நடை பயணத்தை வெற்றிகரமாக முடிக்கப் போகிறார் சரி. அதன் பலன் என்ன? இதை அறிய விரும்பினார் கிர்த்தி. அதன் விளைவுன் கீர்த்தியும் அவரது தோழிகளும் மேற்கொண்ட பயணம்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்ற கார் பயணத்தில், வழி நெடுக பல மாநிலங்களில், பலதரப்பட்ட மக்களை சந்தித்துப் பேசியுள்ளனர் இவர்கள் மூன்று பேரும். ராகுல் நடைபயணம்சென்ற பாதையில், செல்லச் செல்ல சாலை ஓரம் உள்ள ஊர்ப் பெயர் பலகைகளில் மொழி மாறுகிறது. உணவு மாறுகிறது. அங்குள்ள மக்களின் உடை மாறுகிறது. மக்களின் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. எத்தனை மொழி, எத்தனை கலாச்சாரம், எத்தனை இன மக்கள்... எல்லாவற்றையும் தாண்டி, நாம் இந்தியர்கள் என்ற உணர்வோடுள்ள மக்களை வழியெங்கும் சந்தித்துள்ளனர். ராகுல் காந்தி, பாதம் பதித்த ஊர்கள் பக்குவப்பட்டிருப்பதையும், அவர் விதைத்த அன்பின் விதை ஆழப் புதைந்து முளைவிட்டிருப்பதையும் அறிந்து மகிழ்ந்துள்ளனர். வடக்கே செல்லச் செல்ல, மக்களுக்கு அரசியல் புரிதல் குறைவாக இருப்பதையும், பெண்கள், அரசியல் பேசவே அஞ்சுவதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிவதை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் கீர்த்தி.

    வடமாநிலங்களின் பல ஊர்களில், மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. ஆனாலும் அதை வெளியில் சொன்னால் தனக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. அதனால் பேசவே பயப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் இது ஒரு மோசமான சூழ்நிலை என்ற வருத்தத்தையும் நூலில் பதிவு செய்துள்ளார். நாம் இந்துக்கள்; அதனால் நம்ம கட்சிக்குத்தானே வாக்களிக்க வேண்டும் என்று ஓர் இளைஞர் சொல்கிறார். இந்த அளவுக்கு மதவெறி அரசியல் மக்கள் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது என்பதையும் வலியோடு பதிவு செய்துள்ளார்.

    தான் பயணம் செய்த வழியில் இருந்த ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் மனநிலை என்ன? ராகுல் காந்தியின் நடைபயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை நூல் முழுக்க விரிவாகப் பதிவு செய்துள்ளார் கீர்த்தி. அவர் ஒரு உளவியல் நிபுணராகவும் பெண்ணிய சிந்தனையாளராகவும் இருப்பதால் மக்களின் மனத்தைத் தெளிவாகப் புரிந்து பதிவு செய்துள்ளார். மிக நீண்ட பயணத்தால் ஏற்பட்ட உடல் வலியைவிடவும், மக்களின் அறியாமை, அரசியல் புரிதல் இன்மை கண்டு அவருக்கு ஏற்பட்ட மனவலி அதிகம். இதை இந்த நூலின் பல இடங்களில் உணர முடிகிறது.

    ஒற்றுமை தேடி என்ற இந்த நூல், ஏதோ, அவருடைய பயண அனுபவ நூலாக மட்டுமில்லை. சமகால மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் நூலாக, இந்திய சமூகத்தை ஆய்வு செய்து அளித்துள்ள உணர்வுகளின் தொகுப்பு அறிக்கையாக விளங்குகிறது இந்த நூல். அதே நேரம், விறுவிறுப்பாகவும் சுவையாகவும் அமைந்துள்ள எழுத்து நடை, நூலுக்குள் இயல்பாக நம்மை இழுத்துச் செல்கிறது. இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. அருமையான காலக் கண்ணாடியாக இந்த நூலை வழங்கியுள்ள கீர்த்திக்கு என் வாழ்த்துகளும் பாராட்டும். சமூக அக்கறை கொண்ட அவரது பயணம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.

    சசிகாந்த் செந்தில் Ex IAS,

    காங்கிரஸ்.

    அத்தியாயம் 1

    பயணமும் பார்வையும்

    ராகுல் காந்தியைச் சந்திப்பது எளிதில்லை. அத்தனை போட்டி. அவர் அன்று சந்தித்தது எல்லாம் மக்கள் நலம் சார்ந்து சிந்திப்பவர்களை மட்டுமே. எவிடன்ஸ் கதிர், தூத்துக்குடி உதயகுமார், அருண்மொழி இப்படி... மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கும் பலர். செக்யூரிட்டி, அது இது என்றாலும் முதன் முதலில் ராகுல் காந்தி முன்பு அமர்ந்துள்ளேன். அவரின் கண்கள் ஏனோ அப்பொழுது அலைபாய்ந்தது. அவருக்கு மட்டும் டீ தராமல் சென்றனர். அவருக்கு அளிக்க ப்ரொடோக்கால்கள் இருக்கலாம். சாதாரண கவுன்சிலருக்குக் கூட அடிப்பொடிகள் இருக்கும் காலம். அப்படி ஏதுமின்றி மற்ற அரசியல்வாதிகளுடன் மிக எளிமையாக தனித்தன்மையுடன் அமர்ந்திருந்தார் ராகுல். அவரைச் சுற்றி லோக்கல் தலைவர்கள், மேலிட தலைவர்கள், பாதுக்காப்பு வீரர்கள். ஒரு பி.ஏ கூட இல்லை... ஆச்சரியம்.

    ராகுல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை மிகவும் கவர்ந்தது.

    அதிகம் பேசவில்லை, கூர்ந்து கேட்டார். நியாயமான கருத்துகளை ஆமோதித்தார். செய்ய வேண்டியவற்றை ராகுல் செய்யாமல் விடுவதில்லை என்று சுற்றி இருப்பவர்கள் கூறினார்கள் பல லட்சம் மக்களைச் சந்திக்கப் போகிறார். எத்தனையோ சிக்கல்களை கேட்கப் போகிறார். அத்தனையையும் எப்படி நினைவு வைத்துக் கொண்டு செயல்பட முடியும் என யோசித்தேன் இங்கே பேசப்படுபவற்றைக் குறித்து வைத்து, டாக்குமெண்ட் செய்யப்பட்டு டெல்லி அலுவலகத்துக்கு சென்றுவிடும் என்றார்கள். பின் அதை எடுத்து வேலை செய்வோம் என்று சொன்னபோது, அவர்களின் திட்டமிடல் புரிந்தது

    ராகுலை சந்திக்கும் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, செக்யுரிட்டி செக்கிங் எளிதாக இல்லை. எங்களை காலையில் வரச் சொல்லி, ஒரு அறையில் அமர வைத்தனர். அங்கு இன்னும் பலர் இருந்தனர். இரண்டு மீட்டிங். மிகக் குறைந்த நேரம். ஒருவர் அதிகபட்சம் ஐந்து நிமிடம் பேசலாம். அங்கு நாங்கள் பேச ஆரம்பித்தோம். இந்த சந்திப்பு மொத்தமே இருபத்தி ஐந்து நிமிடங்கள் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாற்பது நிமிடங்கள் சென்றது. வீட்டு வேலையாட்களின் உரிமைக்காக போராடும் கீதா மேடம் அதைப் பற்றி பேசினார். மதுவின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடத்தைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பது பற்றி சுபத்ரா சொல்ல, அதை, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தலாம் என்றார் ராகுல். பீடி சுற்றும் தொழிலாளர் யுனியன், அரசியலில் பெண்களை ஈடுபத்த வழிவகுக்கும் தாரா எனப் பலரும் பல சிக்கல்களை எடுத்து வைத்தனர். கன்னியாகுமரியில் இருந்து மைதிலி சுந்தரம் வந்திருந்தார்.

    பெண் தொழில் முனைவோர் நெட்வொர்க்கிங் ஏன் இந்தியா முழுக்க வேண்டும் என நான் சொன்னேன். மற்ற கட்சியினர் முனைப்பாக கட்சி வளர்ச்சியில் ஈடுப்பட்டு இருப்பது பற்றியும் தமிழக காங்கிரஸில் முனைப்பு அதிகம் இல்லாமல் இருப்பது பற்றியும் சொன்னவுடன் என்னுடன் அத்தனை பெண்களும் இணைந்தனர்.

    சோஷியல் மீடியா, இணையம் எதிலும் காங்கிரஸ் பரப்புரைகள், கொள்கைகள் குறைவாக இருப்பது அல்லது மக்களை அடையாதது பற்றி எல்லாருமே பேசினர். நான் பொதுமக்களில் ஒருத்தி... நீங்கள் கட்சித் தலைவர். உங்களுக்கு என் கருத்து என பணிவுடன் தெரிவித்தேன். கருத்து சரியாக இருந்ததாலோ என்னவோ எல்லாரும் அதில் இணைந்துக்கொண்டார்கள். ஒரு புன்னகையைப் பதிலாக அளித்தார் ராகுல். ராகுல் அருகில் சென்று போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என ஜெயராம் ரமேஷ் சார் அனுப்பினார். தயக்கத்தை வென்று ராகுல் அருகில் நின்று போஸ் கொடுத்தேன். அதாவது, மிக மிக அருகில். தலைவர்களை ஏன் அருகில் பார்க்க வேண்டும்? மொழி சொல்லாத பல விஷயங்களை உடல் மொழியில் உணரலாம். அவரின் அருகில் இருந்தபோது ஒரு விதமான பாசிடிவ் உணர்வு ஏற்பட்டது. ஆனால் ஏதோ ஒன்று வேண்டும் என்று தோன்றியது. அது எது என அப்பொழுது புரியவில்லை... அதற்குத்தான் காஷ்மீர் வரை நான் பயணம் மேற்கொள்ள வைத்திருக்கக் கூடுமோ என்னவோ?

    என்னைப் பொறுத்தவரை ஒரு தலைவர் பற்றி எழுதுகிறோம் எனில் அந்த எழுத்துக்கு முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும் எனப் பார்ப்பேன்... அப்பொழுது அவரைப் பற்றி அறிய வேண்டும் என நினைத்தேன். ராகுல் காந்தி ஒருவரின் இந்த ஒற்றுமை கான்செப்ட் மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும் என எண்ணினேன். ஆனாலும் அவரை நேரில் சந்தித்து, அவருடன் பேசி, அவரைப் பற்றி அறியாமல் எப்படி அவரை ஆதரிப்பது என என் மனத்துள் ஒரு கேள்வி இருந்தது.

    எனவே அவரின் கூட்டங்கள், நடை பயணம் எல்லாவற்றிலும் கலந்துகொள்ள முடிவெடுத்தேன். அங்கு உணவு பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அத்தனை வகையான உணவுகள். கிட்டதட்ட ஸ்டார் ஹோட்டல் போல இருந்தது. எல்லாரையும் வரவேற்று உணவு அளித்தனர். காபி, ஐஸ்க்ரிம் எல்லாம் கிடைத்தது. அங்கு இருந்த அனைவரும் வி.ஐ.பி.கள். வெளியில் இருந்து அந்த பள்ளிக்குள் வர காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. ராகுல் காந்திக்கு ஒரு கேரவன் ஏற்பாடு செய்திருந்தனர். கேம்ப் போட முடியாத நேரத்தில் ரெஸ்ட் எடுக்கவாக இருக்கலாம். வேறு இடங்களில் அந்தக் கேரவனை நான் பார்க்கவில்லை. எல்லா இடங்களிலும் எல்லார் போலவும் கன்டெய்னர் அறைதான்.

    காங்கிரஸ் என்னும் பேரியக்கம் எத்தனை பெரிய வீச்சைக்கொண்டது என கவனித்தேன். இந்த பக்கம் பார்த்தால் முன்னாள் மத்திய அமைச்சர்கள், அந்த பக்கம் பார்த்தால் முந்நாள், இந்நாள் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என எல்லாரும் வீதியில் மிகச்சாதரணமாக நடந்துக்கொண்டு இருந்தனர். ஒரு அமைச்சர் வருகிறார் என்றாலே ஊர் அல்லோகலப்படுகிறது. இங்கோ இத்தனை பேர், மிகச் சாதாரணமாக... அதுவும் அவர்களின் தலைவர் ராகுல் காந்தி என யோசித்த பொழுது பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை.

    ராகுல் காந்தி சந்திப்புக்குப் பின் பலரை அங்கு சந்திக்க முடிந்தது. உதயகுமார் அவர்களை அறிமுகம் செய்துவைத்தனர். ஒரு வட இந்தியர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசிடிங் கார்டு கொடுத்தார். பார்த்தால் முன்னாள் யுனியன் மினிஸ்டர் என்று இருந்தது. ஒரு கணம் ஜெர்க் ஆகிவிட்டேன். என்னது? இவர்கள் எல்லாம் இங்கு இத்தனை சாதரணமாக நடமாடிக்கொண்டுள்ளனர் என... அங்கு எல்லாருமே அப்படிதான் இருந்தார்கள். அரசியல்வாதிகள், பெரும் பதவி வகித்தவர்கள், அமைச்சர்கள் என. காங்கிரஸ் என்பதன் வீச்சு இந்தியா முழுக்க எப்படி பரந்துப்பட்டு உள்ளது எனப் புரிய வந்தது.

    சரி முதல் நாள் நடைபயண அனுபவத்தை இனி பார்ப்போம்.

    அத்தியாயம் 2

    நடைபயணம்.

    ராகுல் காந்தியுடன் எங்கள் சந்திப்பு மாலையில் முடிந்தது. பின்பு ராகுல் காந்தி மிக வேகமாக புறப்பட்டுச் சென்றார் அப்பொழுது கூட்டத்தில் பெரிய சலசலப்பு. என்ன என்று எட்டிப் பார்க்கிறேன். நடைப்பயணம் ஆரம்பித்து விட்டது என்றார்கள். பறை, மேளம், செண்டை என ஆர்ப்பாட்டம், மிக சந்தோஷமான கூட்டம். என் நண்பர்களுடன் பறைக்கு செம ஆட்டம் போட்டோம். மாற்றத்துக்கான விதை இது. எந்த அளவுக்கு ஆடணுமா அந்த அளவுக்கு ஆடி தீர்க்கணும் அப்படின்னு ஒரு மகிழ்வு. பெண்கள் குழுவாய் வாசிக்கும் பறை, அவர்கள் பறையை அடிக்க அடிக்க மகிழ்வில் நாங்கள் ஆட ஆட ஆட அங்கே பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டோம். ஆம் புரட்சி என்னும் பொழுது மனத்துக்குள் வேகம் வரும். அந்த வேகத்தை அங்கு இருந்த ஒவ்வொரிடமும் கவனித்தேன். நல்லது நடக்கும் என உணர்ந்தோம்.

    நடைபயணத்தின்போது, ஒருவர் தேசிய உடையில் டர்பனுடன் இருந்தார். கையில் தேசியக் கொடி. அவர்தான் இந்தப் பயணம் முழுக்க தேசியக் கோடி சுமந்து சென்றவர். அதை மிக ஆர்வமாக செய்தார்.

    நடைபயணத்தில் ராகுல் காந்தி எங்கே? என்று தேடினேன். என்னுடன் நண்பர் சுபத்ராவும் வந்திருந்தார். இருவரும் ராகுல் காந்தி பின் நடக்க தீர்மானித்து நடக்கிறோம்... நடக்கிறோம்... நடக்கிறோம்... நடந்து கொண்டே இருந்தோம். ராகுல் காந்தி கண்ணுக்கு புலப்படவே இல்லை. வழியில் மிகப்பெரிய தலைகள், முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் முன்னாள் எம்.பி.கள், மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர்கள், மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களைச் சேர்ந்த இப்போதைய முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். அத்துடன் பெரும்பலத்துடன் தொண்டர்கள்; எல்லா மாவட்டத்திலிருந்தும் வந்திருந்தனர்.

    நடந்து போய்க்கொண்டேயிருக்கிறோம். சாலையில் ஒரு விஐபி நடந்து சென்றாலே எவ்வளவு ஆச்சரியமாகப் பார்ப்போம்... அன்று கன்னியாகுமரியில் திரும்பின இடமெல்லாம் விஐபிகள்.

    அன்று மதியம், நடைபயணத்தின் இடையில் மதிய உணவு அருந்தும் நேரம். அற்புதமான சாப்பாடு. விருந்து உபசரிப்பில் காங்கிரஸ் எந்தக் குறையும் வைக்கவில்லை. சுற்றிலும் பார்க்கிறேன், மிகப்பெரிய மனிதர்கள். ஜோதிமணி மேடம் ஒரு தூணில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார். ஒரு மத்திய முன்னாள் அமைச்சர், அவரோட கார்டு கொடுத்து ரொம்ப சகஜமா பேசுகிறார். இதையெல்லாம் ஏற்பாடு செய்துகொண்டிருந்த கன்னியாகுமரி எம்.பி. விஜய வசந்த், ஒரு திண்ணையில் படுத்திருக்கிறார். மிகப்பெரிய மனிதர்கள் நம்மோடு பயணிக்கிறார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தை தவிர வேறு எதிலாவது இப்படி நடக்குமா என்றால், நடந்திருக்க வாய்ப்பில்லை. என் வாழ்வில் மிக அழகான அனுபவம் என்றால் கன்னியாகுமரியில் கிடைத்த அனுபவம்தான் அதுக்கு என்னை அழைத்த லட்சுமி ராமச்சந்திரன் அவர்களுக்கும் கே டி லட்சுமிகாந்த் அவர்களுக்கும் நன்றிகள்.

    வழியெங்கும் இரு பக்கமும் மக்கள். பொதுவாக மக்கள் மனத்தைக் கணிக்கத்தான் இந்த போன்ற பயணங்கள். கன்னியாகுமரியில் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்? பொதுவாக, தமிழகத்தில், தேசிய அரசியலில் என் பங்கு குறைவு. ராகுல் காந்திக்கு பெரிய வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், அவர் நடந்து சென்ற எல்லா ரோடுகளிலும் இரு பக்கமும் ஜெஜெ என மக்கள் கூட்டம். மாணவர்கள், பெண்கள், வேடிக்கை பார்ப்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருந்தனர். வெளியூரில் இருந்து குழுவாக சிலர் வந்து சேர்ந்திருந்தனர்.

    மாணவர்கள் பலர், தேசிய தலைவர்கள் வேடமணிந்து நடனம் ஆடுவது, சில கலைகளில் ஈடுபடுவது என்ன ஒரு கொண்டாட்ட மனநிலை அங்கு காணப்பட்டது. நடைபயணத்தில் உள்ளே சென்று, பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் எல்லா இடத்துக்கும் பயணிப்பது போல பயணித்தேன். எதுவும் திட்டமிடாமலே எனக்கு அது அமைந்துவிட்டது.

    அங்கு 150 நாட்களும் நடக்கக் கூடிய ஒரு குழு. அதற்கு பலத்த பாதுகாப்பு. அவர்கள் மட்டும்தான் கேரவனில் தங்குவார்கள். அவர்களுக்கு ஒரு கேம்ப் இருக்கும். இரவு அந்த கேம்பில் தங்கி, காலையில் எழுந்து, பின்பு நடந்து மதியம் ஒரு கேம்புக்கு சென்றடைவார்கள். அங்கு ஓய்வு. இரவு தங்குவதற்கு இன்னொரு கேம்ப். அங்கு கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதில்தான் உறக்கம். அதைக் கேரவன் என்று சொல்வதை விட கண்டெய்னர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த கண்டெய்னர்களில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு மிக பலமாக இருந்தது. அந்த கண்டெய்னர்களில் ஒன்றில்தான் ராகுல் காந்தி தங்கினார். சமையலுக்கான குழு, உணவளிக்கும் குழு எல்லாமே அவர்களோடு பயணித்தது. லாரிகளின் பொருத்தப்பட்டு இருக்கும் கண்டெய்னர்கள் அவை.

    நடை பயணம் செல்லச் செல்ல, கண்டெய்னர்களும் அடுத்த இடத்துக்குச் சென்றுவிடுகின்றன. மிகக் கச்சிதமான ஏற்பாடு. நடை பயணத்தில் பங்கேற்றுள்ள விஐபிகள், எப்பொழுதும் ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் நடக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    தெரிந்தோ தெரியாமலோ கூட்டத்தில் அந்த வளையத்துக்குள் சென்று விட்டேன் அவர்கள் எல்லாரும் வெள்ளை நிற உடை; கையில் தேசியக்கொடி... இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னெடுத்தது காங்கிரஸ் கட்சி மட்டுமா? என்றால்... இல்லை. பலர் பங்கேற்றிருக்கின்றனர். கட்சி சார்பற்று பலர் 150 நாட்களும் பயணித்தனர். கண்ணையா குமார்; அவரை முதன் முதலில் பார்க்கிறேன். அந்த குழுவை திக் விஜய் சிங் வழிநடத்திச் செல்கிறார். சரி நம்ம வேலையைப் பார்ப்போம் என்று பலரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் வந்திருந்தனர். பொதுநல ஆர்வலர்களும் வந்திருந்தனர். பாசிச சித்தாந்தத்தை முறியடித்து இந்தியாவை மீட்க வேண்டும் என்பதே எண்ணமெல்லாம் நிறைந்திருந்தது.

    அந்த சித்தாந்தம், பிரிவினைவாதம். மக்கள் மனத்தில் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்வது. அது வெற்றியும்

    Enjoying the preview?
    Page 1 of 1