Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suttum Vizhisudarey!
Suttum Vizhisudarey!
Suttum Vizhisudarey!
Ebook130 pages50 minutes

Suttum Vizhisudarey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செல்ஃபோன், டிவி போன்ற சாதனங்கள் வந்து குழந்தைகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காலத்தில் நல்ல சிறார் நூல்கள் அத்தியாவசியம் ஆகிறது. தங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லவும், அவர்களுக்கு வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்தித் தரவும் இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். மழலைப் பருவம் முதல் பதின்ம பருவக் குழந்தைகள் வரை, அவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து ரசிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. அறநெறி, அறிவியல், உறவுகளின் மேன்மை என கருத்துகள் நிறைந்துள்ள இந்தக் குட்டிக் கற்பனை உலகத்தில் நுழைய நீங்கள் தயாரா?!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580168010302
Suttum Vizhisudarey!

Read more from Uma Aparna

Related to Suttum Vizhisudarey!

Related ebooks

Reviews for Suttum Vizhisudarey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suttum Vizhisudarey! - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுட்டும் விழிச்சுடரே!

    (சிறுகதைகள்)

    Suttum Vizhisudarey!

    (Sirukathaigal)

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    1. மிக்கி என்னும் நான்...

    2. அணில் கூடு

    3. நாய் ஜன்மம்

    4. காணாமல் போன கலா

    5. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

    6. சொக்கத் தங்கம்

    7. தன்னம்பிக்கை

    8. மாற்றம்

    9. தீராத விளையாட்டு பிள்ளை

    10. குழந்தையும் தெய்வமும்

    11. வானவில் ஸ்பிரிங்கள்ர்ஸ்

    12. கண்ணான கண்ணே!

    13. நட்பறிந்து பழகு!

    14. பகிர்தலில் மகிழ்வு கொள்

    15. புதிய ஆரம்பம்

    16. சேற்றுக் குளியல்

    1. மிக்கி என்னும் நான்...

    மிக்கி... நீ எங்கே இருக்கே? என்னோட பாஸ் வள்ளி கூப்பிட்டதும்...

    இதோ வந்துட்டேன் வள்வள் என்று என்னோட பாஷையில் சொல்லிக் கொண்டே ஓடி வந்த என் தலையைத் தடவித் தந்த வள்ளியம்மா...

    மிக்கி ஒரு குட் நியூஸ் இன்னிக்கு.

    வாலை மகிழ்ச்சியுடன் ஆட்டிக் கொண்டே வள்ளியம்மாவின் மடியில் வந்து அமர்ந்தேன்.

    என்னைப் பார்த்து புன்னகை புரிந்தபடி வள்ளியின் கணவன் கதிர்...

    என்ன வள்ளி... இன்னிக்கு மிக்கியோட கொஞ்சல் அதிகமா இருக்கு என்றான்.

    ஆமாங்க. மிக்கிக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி இருக்கிறதால அதுக்கு முன் கூட்டியே நடக்கப் போவது தெரியுது. இன்று ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததும் என் மேல எப்படி வந்து உட்கார்ந்து இருக்குது என்று என்னை முத்தமிட்டு கொஞ்சினாங்க. எனக்கும் குட்டிப் பாப்பா வரப்போவுது என்றால் சந்தோஷமா இருக்காதா?

    வள்ளியம்மாவும் கதிர் அப்பாவும் நான் பொறந்த உடனேயே என்னைத் தூக்கிட்டு வந்து அழகா ஒரு ஸ்பூனால பால் கொடுத்தாங்க. நான் ஒரு வாயில்லா ஜீவன், என்னால பேச முடியாது என்று அவங்களுக்குத தெரிஞ்சாலும் என்கிட்ட எல்லா செய்திகளும் சொல்லுவாங்க.

    சில நேரங்களில் எனக்கு அவங்க சொல்ற செய்திகள் பிடிச்சா ரெண்டு பக்கமும் வாலாட்டி என்னோட மகிழச்சியைக் காட்டுவேன். பிடிக்கலைன்னா முகத்தை உர்ன்னு வச்சுப்பேன்...

    நான் பொறந்ததுமே வள்ளியம்மா வீட்டுக்கு என்னை அழைச்சுகிட்டு வந்துட்டாங்க. என்னை எத்தனை பாசமா வளர்த்தாங்க? எனக்கு வியாதி வராம இருக்க டாக்டர் கிட்ட கூப்பிட்டுகிட்டு போய் செக்கப் பண்ணுவாங்க.

    ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே!! நான் உயர்ந்த வகை இனத்தைச் சேர்ந்தவன்.

    என்னால யாருக்கும் இன்பெக்க்ஷன் வராது. உன்னி போன்ற எதுவும் வராது.

    ***

    "மிக்கி, இதோ பாரு, உனக்கு இன்னிக்கு பசிக்கலையா? வச்ச சாப்பாடு அப்படியே இருக்குது" என்றாள் வள்ளி.

    ஆமாம் மா. நான் ரொம்ப குஷியாக இருக்கேன். சாப்பிடக் கூட மறந்து போச்சு. இதோ வரேன் என்றபடியே எனக்காக வச்சு இருந்த தட்டைத் தூக்கிகிட்டு ஓடினேன்.

    எனக்கு எச்சில் அசுத்தமான உணவு பிடிக்காது. தெனம் குளிக்காம இருந்தா பிடிக்காது.

    வீட்டுக்குள் சிறு நீர் மலம் கழிக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லித் தந்து இருக்காங்க.

    போதும் என்னோட தற்பெருமை! என் மனசுல நினைச்சுகிட்டு வாலைச் சுருட்டிகிட்டு படுத்தேன்...

    எதுக்கு நான் வாலைச் சுருட்டிகிட்டு படுக்கறேன்னு தெரியுமா? குளிரில் இருந்து என்னையே நான் பாதுகாக்க...

    ‘தன் வாலே தனக்குதவி’ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க... பெரியவங்க சொன்னா பெருமாள் சொல்ற மாதிரி... அவங்க அறிவுரைகளைக் கேட்டா எல்லோரும் நலமா இருப்போம்.

    ***

    கதிர், இங்க வாங்களேன். நம்ம குழந்தை என் வயிற்றில வளர வளர மிக்கிக்கு தனக்கு ஒரு தங்கச்சி வரப் போறான்னு எத்தனை மகிழ்ச்சி!!

    ஆமாம். பேசாம மிக்கிக்கு ஒரு தம்பியும் கொண்டு வரலாமா?

    என்னங்க, மிக்கியை வளர்ப்பதே கஷ்டமா இருக்கு. இதுல பாப்பா வேற வரப் போகுது... இப்போ இன்னொருவனா? நமக்குக் கட்டுப்படி ஆகுமா? என்றாள் வள்ளி.

    வள்ளி... எனக்கும் உனக்கும் பிராணிகள் வளர்ப்பது பிடிக்கும். பாவம் வாயில்லாதது. நன்றி உள்ளது.

    சரிங்க என்று வள்ளிம்மா சொன்னதும் எனக்கு ஏக குஷி.

    என்கூட விளையாட ஒரு தம்பி வரப்போறான், ஒரு தங்கச்சி வரப் போறா என்று சந்தோஷமாக வாலை ஆட்டிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினேன்.

    நாங்க மூணு பேரும் எனக்குத் தம்பி வாங்க கண்காட்சிக்குப் போனோம். அங்கே வித விதமாக என் தோழர்கள் இருந்தாங்க. அப்போ எங்களைப் பத்தி ஒருத்தர் புகழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார். புகழ்ச்சி யாருக்குப் பிடிக்காது? நான் மட்டும் விதி விலக்கா என்ன!

    ஒரு தம்பியை வாங்கி அதுக்கு லக்கின்னு கதிரப்பா பேரு வச்சாரு. வீட்டுக்கு வந்ததும் எங்க ரெண்டு பேரையும் நல்லா கவனிச்சாங்க. எங்களுக்கு விதவிதமா சாப்பாடு, பிஸ்கட், விளையாட பொம்மைங்க வாங்கித் தந்தாங்க.

    நாளாக நாளாக வள்ளியம்மா ரொம்ப சோர்வா இருந்தாங்க, பாவம். அவங்களுக்கு தண்ணீ எடுத்துகிட்டு போய் தருவோம்.

    ஒரு நாள் வள்ளியம்மா அசதியா வரவேற்பு அறையில் உள்ள சோபால வாசல் கதவைச் சாத்தாம படுத்துத் தூங்கிட்டாங்க. நானும் லக்கியும் மாடில விளையாடிட்டு இருந்தோம்.

    அப்போ ஒரு திருடன் சட்டென உள்ளே நுழைஞ்சுட்டான்.

    எங்களுக்கு மோப்ப சக்தி அதிகமா? புது ஆள் வந்திருக்காங்க என்று தெரிஞ்சு போச்சு. அதனால போலீஸ்காரங்களுக்குக் கூட எங்களைப் பிடிக்கும்.

    டேய் லக்கி, வாடா. யாரோ நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு வந்துட்டாங்க. ஓடு ஓடு என்று நான் வள் வள் என்று குறைச்சுகிட்டு கீழ இறங்கி ஓட, என் பின்னால லக்கியும் ஓடி வந்தான்.

    நாங்க ஒருத்தரையும் கடிக்க மாட்டோம். ஆனா புடிச்சுப்போம். அந்தத் திருடன் ஓட ஆரம்பிச்சதும் லக்கி ரெண்டு காலையும் பிடிச்சுகிட்டான். நான் வள்ளிம்மா பக்கத்துல காவலாக நின்னேன்.

    அதற்குள் கதிர் அப்பாவும் வந்துட்டு போலீஸுக்கு போன் செஞ்சு அவங்க வந்து அந்தத் திருடனைப் பிடிச்சுகிட்டு போனாங்க. எங்க முதுகில தட்டிக் கொடுத்தாங்க.

    வள்ளிம்மாவும், கதிரப்பாவும் ஓடி வந்து எங்க ரெண்டு பேரையும் கட்டிப் பிடிச்சு மிக்கி, லக்கி, நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா வள்ளியும் தங்கச்சி பாப்பாவும் என்ன கதி ஆகி இருப்பாங்க ன்னு கதிரப்பா கண்களில் நீர் வழிய எங்களுக்கு முத்தம் தந்தார்.

    பைரவர் சாமி ஒரு காவல் தெய்வம். நாங்களும் காவல் காக்கிறதால காவல் தெய்வத்துக்கு வாகனமா இருக்கோம்.

    எத்தனையோ பேர் எங்களை நாயே. நாயேன்னு திட்டுவாங்க. திறந்த வீட்டில் நுழைஞ்ச நாய் மாதிரி, நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில வச்சாலும் வாலைக் குழைத்து ரோடுல இருக்கறதை தின்னும்... அப்படின்னு நிறைய வசவு வாங்குவோம். ஆனா நாங்க நன்றியுடன் இருப்போம். எங்களை வளர்த்தவங்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்.

    ***

    வள்ளியம்மா ன்னு கத்திக்கொண்டே வயத்தைப் புடிச்சுகிட்டு அழறாங்க. அப்பாவும் வெளியே போயிருக்காரு. அவங்க அழுதா எங்களுக்கு மனசே ஒடிஞ்சு போயிடும்.

    லக்கி, ஓடுடா, போடா. போய் அடுத்த வீட்டில இருப்பவங்களைக் கூட்டிட்டு வா. நான் அம்மாக்கு காவல் இருக்கேன் என்று பயத்துடன் அங்கும் இங்கும் ஓடினேன்.

    பக்கத்துல இருக்கறவங்க கதிரப்பாவுக்கு சொல்லிட்டு, ஹாஸ்பிடல் அழைச்சிகிட்டு போனாங்க. அங்கே ஒரு அழகான தங்கச்சி பாப்பா பிறந்து இருக்கா.

    ‘புதியதோர் உலகம் செய்வோம்.’

    கவி பாரதியார் பாடியதை அடிக்கடி கதிரப்பாவும் பாடுவாரு. இந்த புதிய உலகத்துக்கு வந்த புதிய வரவு எங்க

    Enjoying the preview?
    Page 1 of 1