Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gunamathu Kaividel
Gunamathu Kaividel
Gunamathu Kaividel
Ebook93 pages35 minutes

Gunamathu Kaividel

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை சொல்வது என்பது ஓர் கலை.குழந்தைகளைக் கவரக் கூடிய ஓர் ஆயுதமே கதை எனக் கொள்ளலாம். மொழி என்ற தொடர்புச் சாதனம் என்று உருவானதோ அன்றே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. முன்பு அது வாய்மொழி இலக்கியமாக இருந்தது காலப் போக்கில் வளர்ந்து இன்று தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580168010426
Gunamathu Kaividel

Read more from Uma Aparna

Related to Gunamathu Kaividel

Related ebooks

Reviews for Gunamathu Kaividel

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gunamathu Kaividel - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குணமது கைவிடேல்

    (சிறுகதைகள்)

    Gunamathu Kaividel

    (Sirukadhaigal)

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    புதிய பாடம்

    மழை

    வாழ்க்கைத் தரம்

    முயற்சியே வெற்றி

    பட்டாம்பூச்சியாக மாறிய இளவரசி!

    வீடு திரும்புவோம்!

    கண்டதா கேட்டதா?

    அன்பு தன்னம்பிக்கையை வளர்க்கணும்

    குணமது கைவிடேல்

    அப்பா

    அபியும் மெடலும் குணமும்

    குணமே வரம்

    தெளிவும் நிறைவும்

    யாரையும் சிறுமைபடுத்தேல்

    அணிந்துரை

    கதை சொல்வது என்பது ஒர் கலை. குழந்தைகளைக் கவரக் கூடிய ஓர் ஆயுதமே கதை எனக் கொள்ளலாம்.

    மொழி என்ற தொடர்புச் சாதனம் என்று உருவானதோ அன்றே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும்.

    மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. முன்பு அது வாய்மொழி இலக்கியமாக இருந்தது காலப் போக்கில் வளர்ந்து இன்று தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

    குணமது கை விடேல் எனும் கதைத் தொகுப்பு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் தோழி உமா அபர்ணா மூலம் வந்து சேர்ந்தது.

    ஏழு மலர்கள் தொடுத்த மாலை. மணம் வீசி ஸப்தஸ்வரங்கள் போல் மனதை மீட்டுகின்றன.

    பழைய எழுத்தாளர்களுடன் அறிமுக எழுத்தாளர்களும் இணைந்தே பயணித்துள்ளனர்.

    முதல் கதை புதிய பாடம். அது சொல்லும் பாடம் என்ன?

    கூடுமானவரை உழைக்கும் ஏழை உழைப்பாளர்களிடம் கணக்கு பார்க்கக் கூடாது என்ற பாடத்தைச் சொல்கிறது.

    வாழ்க்கைத் தரம் என்ன என்பதைச் சிறு குடும்பம் மூலம் புரிய வைக்கிறார் வாழ்க்கைத் தரம் கதை எழுதிய ஆசிரியை.

    வெற்றி என்பது லேசில் கிட்டி விடாது. அது தொடர் முயற்சியால் கை கூடும் என்பதை விஞ்ஞானச் சான்றுகளை முயற்சியே வெற்றி எனும் கதை விளக்குகிறது.

    குழந்தைகளைக் கவரக் கூடிய கதையாகப் பட்டாம்பூச்சியாக மாறிய இளவரசி கதை இருக்கிறது. பழைய அம்புலிமாமா கதைகளைப் படித்த நிறைவு மனதும் எழுகிறது.

    தேர்ந்த உளவியல் நிபுணரைப் போலக் கதையை நகர்த்திச் செல்கிறார் தெளிவற்ற சமிக்ஞைகள் கதாசிரியை.

    குணமது கை விடேல் எனும் புத்தகத் தலைப்பிலே ஒரு கதையும் இதில் உள்ளது.

    தந்தையின் துணையின்றி வளரும் பெண் குழந்தை பிடிவாதம் கொண்டவளாக வளர்கிறாள். தாயின் உடல் நிலை பற்றி அறிய வந்ததும் தன் நற்குணங்களைக் கை விடாது தாயிடம் அன்பு செலுத்தும் இளம் தலைமுறையை படம் பிடித்துக் காட்டுகிறது.

    நற் குணமே வரம் என்பதை ஓர் ஏழைப் பெண் மூலம் குணமே வரம் கதை எடுத்துரைக்கிறது.

    சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய வகையில் நல்ல செய்திகளை இக் கதையில் தேர்ந்த நெசவாளி போல நெய்துள்ள சகோதரிகளுக்கும் நல்ல முறையில் பதிப்பிக்க உறுதுணையாய் இருந்த தோழி உமாவிற்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்தும்.

    அன்புடன்,

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    கல்யாணி தேவநாதன்

    கல்யாணி தேவநாதன் அழகிய பொம்மைகளை தெய்வீகத் தன்மையுடன் தத்ரூபமாகச் செய்யும் படைப்பாளி. இவருடைய அந்தச் சாதனை கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது. இவர் ஒரு நாடக கலைஞரும் கூட. சிறந்த பதிவுகளை இலக்கிய தளங்களில் படைத்துள்ளார். இந்தச் சிறுகதை தொகுப்பில் இரு கதைகள் எழுதியுள்ளார்.

    புதிய பாடம்

    ஆனந்தமாக ஆனது ஆனைமுகன் பூஜை. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பண்டிகை என்றால் இன்னும் குழந்தைபோல் குதூகலம். வழிபாடு முடிந்ததும் மனநிறைவு. அமைதியாக அமர்ந்தாள் கலா.

    தொலைபேசி அடித்தது. தேவயானிதான்.

    ஹலோ கலா! இன்னிக்கு மார்கெட் போவோமா?

    போகலாம். ஆனால் கணேஷ் பூஜை ஆன மூன்றாவது நாள். மார்கெட் கும்பல் எப்படி தெரியாதே!

    சரி, நாளைக்குக் காலையில் ஒன்பதரை மணிக்குக் கிளம்பி விடலாம் என்றாள் தேவயானி.

    மறுநாள். கிட்ட தட்ட முக்கால் மணிநேரம் ஆகியும் ஒரு ஆட்டோ கிடைக்கவே இல்லை.

    எல்லாம் புக் பண்ணியது. கலா புக் பண்ணிய ஓலாவும் வரவில்லை.

    அதோ ஒரு ஆட்டோ வருகிறது. கலா அதனைக் கூவி அழைத்தாள். மார்கெட் போகணும் என்றாள்.

    ஆட்டோகாரர் 250 ரூபாய் ஆகும் என்றார்.

    தேவயானி சரி வா கலா. போகலாம் என்று சொல்லிவிட்டாள்.

    போகிற வழியில் கலா 180 ரூபாய் புக் பண்ணினால் ஆகும். இவனுக்கு 250 ரூபாய். ரொம்ப அதிகம். வேற வழி இல்ல. ஆனால் அநியாயம் என்றாள்.

    தேவயானி கலா! கடவுள் யார் மூலம் யாருக்கு இன்று படியளக்கணும் என்பதை தீர்மானம் செய்வார். உன் பணத்திலிருந்து இந்த ஆட்டோக்காரர் குடும்பத்திற்கு இன்று இவ்வளவு போய் சேரவேண்டும். இந்த சமயத்தில் தான் அவருக்கு நாலு காசு பார்க்கலாம். கணேஷ் பூஜைக்கு பூ வாங்கியதாக நினைத்துக்கொள். மனம் சாந்தி அடையும் என்று அறிவார்ந்து உரைத்தாள்.

    கலா ஆமாம் இப்படி தான் நினைக்கணும் என்றாள் முழுமனமின்றி.

    கடை வந்தது. தேவயானி வழக்கமாக 20 வருடங்களாக வாங்கும் கடை.

    "கலா!

    Enjoying the preview?
    Page 1 of 1