Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raathookkam Pochu!
Raathookkam Pochu!
Raathookkam Pochu!
Ebook85 pages28 minutes

Raathookkam Pochu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரதமரின் PA வான பிரம்மச்சாரியாக வாழும் நம்பியாருக்கு மைதிலியின் மீது ஏற்படும் காதல். ஏற்கனவே வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட மைதிலியை நம்பியாருக்கு மணமுடிக்க நினைக்கும் மைதிலியின் தந்தை. அதனால் ஏற்படும் குழப்பங்களும், திருப்பங்களுமே இக்கதையின் மையமாகும். மைதிலியின் வாழ்வில் அவள் ராத்தூக்கத்தை இழக்க நேரும் நிகழ்வுகளை தொடர்ந்து காண்போம்...

Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580100608138
Raathookkam Pochu!

Read more from Devibala

Related to Raathookkam Pochu!

Related ebooks

Reviews for Raathookkam Pochu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raathookkam Pochu! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராத்தூக்கம் போச்சு!

    Raathookkam Pochu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    சென்னையில்,

    ‘ராஜா அண்ணாமலைபுரத்தில், ஐயப்பன் கோயிலையொட்டி, சரக்கென ஒரு சாலை குறுக்கே வெட்டுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.'

    நூல் பிடித்ததுபோல, அதன் முதுகில் ஏறி, நேராக நீங்கள் சவாரி செய்தால், அந்த சாலை முடியுமிடம் மண் ரஸ்தா (மாயாவி காலத்து வார்த்தை) ஆரம்பமாகும்.

    விட்டு விட்டு வீடுகள்...

    அதோ நாலாவதாக சிகப்பு ஸ்நோசெம் அடித்த, வாசலில் பக்கத்துக்கு இரண்டாக குல்மொஹர் காவல் காக்கும், பச்சை கேட்டும், காக்கி கூர்க்காவுமாக ஒரு குட்டி பங்களா தெரிகிறதா கண்களுக்கு (தேவையா இத்தனை நீளமான வாக்கியம்)

    அதுதான் நீங்கள் போக வேண்டிய இடம்.

    வந்து விட்டீர்களா?

    ‘தூங்கும் கூர்க்காவை அலட்சியப்படுத்தி விட்டு, உள்ளே நுழைந்து விட்டீர்கள். நாய் பயம், நடுவயிற்றில் நிற்க, சிட் அவுட்டில் காலை வைத்து விட்டார்கள்.’

    ‘இதென்ன?’

    ‘ப்ஹோ’வென திறந்து கிடக்கிறது பங்களா? பட்டப்பகல் நேரத்தில் யாரும் காவல் இருப்பதில்லையா?

    ‘பரந்து விரிந்த ஹால்'

    ‘சாண்ட்லியர் தொங்கும், வேலைப்பாடுகள் வேய்ந்த கூரை...'

    ‘துணி போர்த்திய வீடியோ அயிட்டங்கள்.’

    (யோன் கதையை தொடங்க மாட்ட?)

    (இருங்கசார்... ஒரு அதிர்ச்சிக்கு உங்களை தயார் செய்ய வேண்டாமா?)

    லால், என்னிடம் ரகசியம் ஏதுமில்லை என்று சொல்ல...

    ‘படியேறி உச்சியை அடையும், உங்கள் கண்களில் திறந்த கதவோடு அந்த படுக்கையறைதான் முதலில் விழுகிறது.’

    ‘கட்டிலுக்கு வெளியே பைஜாமா அணிந்த இரண்டு கால்கள்!’

    சுறுசுறுப்பாகி விட்டீர்களா?

    ‘உள்ளே காலை வைத்து விட்டீர்கள்’

    பைஜாமாக் கால்களின், முழு உருவத்தையும் பார்க்கும் ஆசையை உங்களால் அடக்க முடியவில்லை.

    ‘இதோ நெருங்கி விட்டீர்கள்!’

    ‘உங்கள் பார்வை, கட்டிலின் மேல்!’

    ‘ஏன் சார் இப்படி வாயைத்திறக்கிறீர்கள்? அலறப் போகிறீர்களா?’

    ‘என்னது? டெட் பாடியா?’

    கட்டிலின் மேலா?

    ‘நடுத்தர வயது ஆண்பிள்ளையா? முகம் கூட நீலமாகி, வாயில் ரத்தமும், நுரையும் உறைந்து.’

    ‘ஓ... போதும், இதற்கு மேல் சொல்லாதீர்கள்!’

    2

    மாதவன் நம்பியாரை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம்பியார் என்று வெறுமனே சொன்னால், அது இவர்தான்.

    அவரைப் பற்றி சின்னதாக ஒரு அறிமுகம் முதலில்.

    இந்தியாவில் படித்தது போதாதென்று, அயல் நாட்டிலும் பல பட்டங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டு வந்த நம்பியாருக்கு இப்போது வயது முப்பத்திரண்டு.

    பிரதமருக்கு அந்தரங்க ஆலோசகராக இத்தனை சின்ன வயதில் யாராவது பதவி ஏற்றதுண்டா? (காதைக் கொடுங்கள்! உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் பிரதமர் எடுக்கும் பல முடிவுகள், நம்பியாருக்குச் சொந்தம் என்றொரு தகவல்)

    பதவி தவிர,

    பினாமி பெயரில் நாலைந்து கம்பெனிகளுக்கு சொந்தக்காரராகவும், ஏழெட்டில் ஷேரும் வைத்திருக்கும் நம்பியாருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

    (கல்யாணமாகவில்லை வார்த்தைதான் இந்த கதையின் முக்கிய வாக்கியம்)

    நம்பியார் ஓய்வாக, வேட்டியும், திறந்த மார்புமாக சாய்ந்து உட்கார்ந்து டெக்கில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    ‘ஆறுமாதத்துக்குப் பிறகு நம்பியார் ஓய்வெடுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1