Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

360° Kaadhal Kadhaigal
360° Kaadhal Kadhaigal
360° Kaadhal Kadhaigal
Ebook235 pages1 hour

360° Kaadhal Kadhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலைப் பற்றி எத்தனையோ பேர், எத்தனையெத்தனையோ வகைகளில் பேசியும், எழுதியும் விட்டார்கள். இன்னும் எழுதி வருகிறார்கள். ஆனாலும், காதல் கதைகளைப் படிப்பதில் யாருக்குமே அலுப்புத் தட்டுவதில்லை. காதல், காலத்துக்கேற்ப புதுப் புதுப் பரிணாமங்களை எடுத்து வருகிறது. ஜெயித்த காதல், தோற்ற காதல், லட்சியக் காதல், அலட்சியக் காதல், சொல்லாத காதல், செல்லாத காதல், டீன் ஏஜ் காதல், ஓல்ட் ஏஜ் காதல் என்று காதல்தான் எத்தனை எத்தனை வகை! காதலில் எது சரி, எது தவறு என்பதையெல்லாம் காதலர்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை, அவர்களைச் சுற்றியிருக்கிறவர்களும் தீர்மானிக்கிறார்கள். அதனாலேயே, காதல் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. 360 டிகிரி கோணத்தில் காதலைப் பற்றி எழுத பல விஷயங்கள் உள்ளன.

இங்கு நான் எழுதியிருக்கும் ஐந்து காதல் கதைகளுமே, ஐந்து வகையான பரிமாணங்களைக் கொண்டவை. அதிலும் சிறப்பாக `இந்தக்கால டீஜ் ஏஜ் காதலை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.' வாசகர்களாகிய நீங்களும் இந்த காதல் வகைகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580127308492
360° Kaadhal Kadhaigal

Read more from G. Meenakshi

Related to 360° Kaadhal Kadhaigal

Related ebooks

Reviews for 360° Kaadhal Kadhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    360° Kaadhal Kadhaigal - G. Meenakshi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    360° காதல் கதைகள்

    360° Kaadhal Kadhaigal

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதல் காற்றே, கரையாதே!

    காட்டுப்பூ

    லாக்டௌன் லவ்

    திசை மாறும் பூங்காற்று!

    வானவில் காதல்!

    முன்னுரை

    சிறுகதைகள் பல வடிவங்களில், பல களங்களில் வெளிவருகின்றன. ஒரு பக்கச் சிறுகதை, தபால் அட்டை சிறுகதை, குட்டிக் கதை, மூன்று, நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள் அடங்கிவிடும் சிறுகதை… இப்படி சிறுகதைகளின் தோற்றத்திலும் பல மாற்றங்கள் அரங்கேறியிருக்கின்றன.

    விரிவாகச் சொல்ல வேண்டிய விஷயத்தை, ஓரிரு பக்கங்களில் அடக்கிவிடுவது சிறப்பானதாக இருக்காது. அந்த வகையில், சிறுகதையைவிட சற்றே மிகுதியாய், குறுநாவல் மற்றும் நாவலைவிடச் சற்றே குறுகியதாய் இருக்கும் ஐந்து சிறுகதைத் தொடர்களைக் கொண்ட தொகுப்பு இது என்பது இந்த நூலின் சிறப்பு.

    காதலைப் பற்றி எத்தனையோ பேர், எத்தனையெத்தனையோ வகைகளில் பேசியும், எழுதியும் விட்டார்கள். இன்னும் எழுதி வருகிறார்கள். ஆனாலும், காதல் கதைகளைப் படிப்பதில் யாருக்குமே அலுப்புத் தட்டுவதில்லை. காதல், காலத்துக்கேற்ப புதுப் புதுப் பரிணாமங்களை எடுத்து வருகிறது. ஜெயித்த காதல், தோற்ற காதல், லட்சியக் காதல், அலட்சியக் காதல், சொல்லாத காதல், செல்லாத காதல், டீன் ஏஜ் காதல், ஓல்ட் ஏஜ் காதல் என்று காதல்தான் எத்தனை எத்தனை வகை! காதலில் எது சரி, எது தவறு என்பதையெல்லாம் காதலர்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை, அவர்களைச் சுற்றியிருக்கிறவர்களும் தீர்மானிக்கிறார்கள். அதனாலேயே, காதல் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. 360 டிகிரி கோணத்தில் காதலைப் பற்றி எழுத பல விஷயங்கள் உள்ளன. இங்கு நான் எழுதியிருக்கும் ஐந்து காதல் கதைகளுமே, ஐந்து வகையான பரிமாணங்களைக் கொண்டவை.

    இந்தக் கதைகள் `மங்கையர் மலர்’ இதழில் வெளியானபோது, பலதரப்பட்ட வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றன. `இந்தக்கால டீஜ் ஏஜ் காதலை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்’ என்றும், `காதலின் புனிதத்தைக் காக்கும் உயர்ந்த காவியத்தை சிறுகதையாகத் தந்திருக்கிறீர்கள்’ என்றும், `கடித வடிவில் காதல் கதையை சுவைபடத் தந்திருக்கிறீர்கள்’ என்றும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் பாராட்டுத் தெரிவித்த வாசகிகளுக்கு நன்றிகள் பல.

    உலகம் இருக்கும்வரை காதல் இருக்கும். காதல் இருக்கும்வரை காதல் கதைகளும் இருக்கும். சமூகத்தில் நடக்கும் மாற்றங்களும் காதல் கதைகளில் பிரதிபலிக்கும். காதலைப் பற்றிப் பேசுவதென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். `360 டிகிரி காதல் கதை’களில் சொல்லப்படாத காதல் கதைகளும் ஏராளமாகவே உள்ளன. நல்லதொரு தருணத்தில் அவைகளைப் பற்றியும் எழுதுவேன்.

    `மங்கையர் மலரில்’ இத்தொடரை எழுத என்னை ஊக்குவித்த, `கல்கி’ குழும நிர்வாக இயக்குநர் திருமதி லஷ்மி நடராஜன் அவர்களுக்கு, என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    ஜி.மீனாட்சி

    செல்பேசி எண்: 9600045293, 9994941195

    காதல் காற்றே, கரையாதே!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 1

    மொட்டை மாடியிலிருந்து பார்க்கையில், எதிரே கைக்கொட்டும் தூரத்தில் தங்கத் தாம்பாளமாய் மின்னியது வட்ட நிலா. கார்த்திகைப் பௌர்ணமி நிலவு. சிலுசிலுவென்ற மென் காற்று உடலைத் தழுவியது. தூரத்தில் எங்கோ சிறு புள்ளியாய் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடியே பறந்து செல்லும் விமானம், வட்ட நிலவைப் பார்த்து வெட்கப்பட்டு ஓடுவது போலிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்த தென்னந்தோப்பை ரசித்துக் கொண்டிருந்தபோதுதான், சட்டென்று கண்களில் பட்டது அந்தக் காட்சி.

    எதிரே தெரிந்த ஹவுஸ் ஓனர் வீட்டின் திண்ணைப் படிகளில், அகல் விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டிருந்த அந்த எழில் உருவம். இடையைத் தொடும் நீண்ட பின்னலில் அசைந்தாடிய மல்லிகைச் சரம். குதிகால்களை சற்றே உயர்த்தி மாடத்தில் விளக்குகளை வைக்கையில், சட்டெனத் தோன்றி மறைந்த கொலுசுகள். மனசு படபடக்க, அவள் சற்றே திரும்பமாட்டாளா என்று காத்திருந்தேன். என்னை அவள் ஏமாற்றவில்லை. அகல் விளக்குகள் அடங்கிய தாம்பாளத்தை இரு கைகளிலும் ஏந்தியபடியே அவள் வாசலை நோக்கி வந்தபோது, என் இதயம் எகிறி தொண்டைக் குழிக்குள் வந்துவிட்ட உணர்வு. வானத்து நிலவு இப்போது வாசலில்! மெல்லக் குனிந்து அகல் விளக்கை வாசலில் வைத்தபோது, காற்றில் அசைந்த ஜிமிக்கிகள் அவளது கன்னத்தைத் தொடத் துடித்தன. பிறை நெற்றியில் சிறு வட்டப் பொட்டு. கீழே குனிந்து கடமையே கண்ணாய் விளக்குகளை தரைக்கோலத்தில் வட்ட வடிவத்தில் வைத்து, நடுவில் குத்துவிளக்கை வைத்துக் கொண்டிருந்ததால், அவளது கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. எல்லா விளக்குகளையும் நேர்த்தியாய் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, அவளது பார்வை எதிர்பாராத விதமாய் என் மீது படர்ந்தது. என் இதயம் ஒரு கணம் அப்படியே நின்று பிறகு துடித்தது. கண்களா அவை? ஆயிரம் வெண்ணிலவுகளையும் ஒருசேர ஒளித்து வைத்த பெட்டகமாய் குளுகுளுத்த பார்வை. யார் இவள்? ஹவுஸ் ஓனர் மகளா? கோவை கல்லூரியில் படிப்பதாகக் கூறினாரே... அவளாகத்தான் இருக்க வேண்டும். கார்த்திகைக்கு ஊருக்கு வந்திருப்பாளே? என் எண்ண ஓட்டம் தடைப்பட்டது. நொடிப் பொழுதில் அவள் வீட்டிற்குள் சென்று மறைந்துவிட்டாள்.

    கதைகளில் வரும் தேவதையைப் போல, சட்டென மறைந்துவிட்டாளே என்று வருத்தமாக இருந்தது. இந்த கிராமத்து வீட்டில் இப்படியொரு பைங்கிளியைப் பார்ப்போமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

    என்ஜினீயரிங் முடித்த கையோடு வங்கித் தேர்வு எழுதி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன், சென்னையில் பயிற்சி. பிறகு வங்கியின் உடுமலைப்பேட்டை கிளை அதிகாரியாக போஸ்டிங் என்று என் வாழ்க்கையில் படிப்பு, வேலை என்று எல்லோமே திட்டமிட்ட ரீதியில் கட்டுக்கோப்பாக நடந்ததில், காதல் கீதல் என்று எந்த ஒரு சிந்தனைக்கும் இடமில்லாமல் போனதுதான் நிஜம். நான் வளர்ந்த விதம் அப்படி. சிறு வயதிலேயே அப்பா காலமானதால், அம்மாதான் என்னையும் அக்காவையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்துக்கொண்டு ஒற்றை மனுஷியாக எங்களை வளர்த்து ஆளாக்கினதில், அம்மாவின் உழைப்பும், அர்ப்பணிப்பும் அளப்பரியது. டிகிரி முடித்த கையோடு நல்ல பையனாகப் பார்த்து அக்காவுக்கு மணம் முடித்தார். குடும்பத்தின் நிலை அறிந்து நானும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதில், இதோ… இன்று உயர் பதவியில் கௌரவமாக தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.

    உடுமலைப்பேட்டையில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. மேன்ஸன் எதுவும் சரிப்பட்டு வராத நிலையில், தனியாக வீடு எடுத்துத் தங்கலாம் என்று வீடு தேடிக் கொண்டிருந்தபோதுதான், வங்கியின் நீண்டகால வாடிக்கையாளரான பழனிசாமியின் அறிமுகம் கிடைத்தது. புதிதாக வந்திருக்கும் இளைஞன் என்பதால் அவர் என்னைப் பற்றி விசாரிக்க, நான் வீடு தேடிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தேன்.

    தம்பி, பேசாம எங்க தோட்டத்து வீட்டுலயே வந்து தங்கிடுங்களேன். சும்மாத்தான் பூட்டிக் கிடக்குது. சுத்தமான காத்து. விசாலமான வீடு. நீங்களே சமைச்சுக்கலாம். ஊர்ல இருந்து யாராவது வந்தாலும் உங்களோடயே தங்கிக்கலாம். மூணு ரூமு, அட்டாச்ட் பாத்ரூம்னு நல்லா வசதியா கட்டியிருக்கேன். எதிர்த்தாப்பலயே என்னோட வீடு. டூ வீலர் வெச்சுக்கிட்டீங்கன்னா, இருபது நிமிஷத்துல பேங்குக்கு வந்துடலாம். என்ன சொல்றீங்க? என்று பழனிசாமி கேட்க, வீட்டைப் பார்த்துட்டு சொல்றேன் என்றேன்.

    அன்று மாலையே வீட்டைப் போய்ப் பார்த்தபோது, மனசுக்கு மிகவும் பிடித்துப் போனது.

    விசாலமான தோட்டத்துக்கு நடுவே கட்டப்பட்ட பெரிய வீடு. நான் எதிர்பார்த்ததை விடவும், நவீன மாடலில் மாடுலர் கிச்சன், கீசர், ஏசி, கார் பார்க்கிங் என்று எல்லா வசதிகளுடனும் இருந்தது. கிராமத்து வீட்டில் இத்தனை வசதிகளையும் செய்துவிட்டு, வெறுமனே பூட்டிப் போட்டிருக்கிறாரே என்று நினைத்தேன். என் நினைப்பைப் புரிந்து கொண்டவராய், நமக்குச் சொந்தக்காரங்க அதிகம் தம்பி. யாராவது வந்தா தங்கட்டுமேனு கட்டிப் போட்டேன். எங்கே… அவங்கவங்களுக்கு அவங்கவங்க பாடு. சொந்தக்காரங்க வந்தாலும், எங்ககூடவே தங்கிட்டு ரெண்டொரு நாள்ல கிளம்பிடறாங்க என்றார் பழனிசாமி.

    வாடகை எவ்வளவுங்க?

    தம்பி, இதை வாடகைக்கு விடறதுக்காகக் கட்டல. எம் பொண்ணு ஆசைப்பட்ட மாதிரி மாடர்னா கட்டியிருக்கேன். நீங்க விரும்பறதக் கொடுங்க என்றார். என்னுடன் பணியாற்றும் இதே ஊரைச் சேர்ந்த சீனியர் அசிஸ்டெண்ட் பரமசிவத்திடம் கலந்தாலோசித்துவிட்டு, ஐந்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாகக் கூறினேன். மறுவார்த்தை பேசாமல் ஒப்புக் கொண்டார் பழனிசாமி. அடுத்தநாளே என்னுடைய இரண்டு சூட்கேஸ்களையும், சில பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு இங்கு குடியேறிவிட்டேன்.

    பழனிசாமியும் அவரது மனைவியும் மட்டும்தான் எதிர்வீட்டில் இருக்கிறார்கள். பேருக்குத்தான் எதிர்வீடு. என் வீட்டுக்கும் அவரது வீட்டுக்கும் இடையே நூறு மீட்டர் இடைவெளி இருந்தது. சுற்றிலும் தோட்டம், தென்னை மரங்கள், மாமரங்கள், வாழை மரங்கள், பூச்செடிகள் என்று அசல் கிராமத்துச் சூழல். எனக்கு அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. அடிக்கடி பழனிசாமி வந்து என்னுடன் பேசிவிட்டுப் போவார். அவரது மனைவி சாந்தாம்மா, சில நேரங்களில் ஏதேனும் பலகாரங்களைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போவார்.

    பழனிசாமிக்கு விவசாயம்தான் குடும்பத் தொழில். இரண்டு பெண்கள். மூத்தவள் திருமணமாகி திண்டுக்கல்லில் வசிக்கிறாளாம். இரண்டாவது மகள் கோவை கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி எம்.எஸ்ஸி படிப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பெண்தான் இந்த தேவதையோ?

    இதுவரை எதற்கும் அசையாத மனசு, இன்று இந்த தேவதையின் அழகில் மயங்கிவிட்டதே! இதுதான் காதல் என்பதோ?

    இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். மனசுக்குள் அகல் விளக்கு வெளிச்சமாய் அவளது உருவம் ஒளிர்ந்தது.

    மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் கண் விழித்தேன். எழுந்தவுடன் புது வெளிச்சம் பரவியதுபோல், அவளது நினைப்பு. முன்பின் தெரியாத பெண்ணைப் பற்றி இதென்ன நினைப்பு என்று, அலைபாய்ந்த மனசை அடக்கிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தேன். வழக்கமாக காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். ஒன்பது மணிக்கு வங்கிக்குப் போவதற்கு முன், டி.வி. செய்திகளைப் பார்த்துவிட்டு, சில உடற்பயிற்சிகளைச் செய்வேன். பெரும்பாலும் நானே பிரேக்ஃபாஸ்ட் தயார் செய்துவிடுவேன். மதிய உணவாக, தயிர் சாதம், ரசம் சாதம் செய்து எடுத்துக்கொண்டு போவதுமுண்டு. இன்று பிரேக்ஃபாஸ்ட் செய்யக்கூட நேரமில்லை. அவசர அவசரமாகக் குளித்து ரெடியாகி, பைக்கில் வங்கியை நோக்கி விரைந்தேன். வங்கியில் அன்று கூட்டம் கொஞ்சம் அதிகம். பணப் பட்டுவாடா, டிடி, காசோலை என்று அன்றைய பொழுது கரைந்துபோனதில், எதிர்வீட்டு அகல் விளக்கை நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லாமல் போனது.

    மாலையில் வங்கி நேரம் முடிந்ததும், அன்றைய பேமென்ட்ஸ், கலெக்ஷன்களைக் கணக்குப் பார்த்து, லெட்ஜரில் உள்ள பதிவுகளுடன் டேலியாகிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்து, வவுச்சர்களை அடுக்கி கிளிப் போட்டு டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். வங்கிக்கு எதிரே இருந்த சரஸ்வதி பவனில் சூடாக ஒரு தேநீர் குடித்துவிட்டு, பைக்கைக் கிளப்பிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தேன். கார்த்திகை மாதம் என்பதால், ஏழு மணிக்குள் இருட்டிவிட்டது.

    ஹவுஸ் ஓனர் வீட்டு வழியாகத்தான் என் வீட்டிற்குப் போகவேண்டும். தூரத்திலிருந்து பார்த்தபோது, அவரது வீட்டு மதில் சுவரில் அகல்விளக்குகள் தங்கப் பட்டாம்பூச்சிகளாய் மின்னின. வீட்டை நெருங்கும்போதே என்னையறியாமலேயே நெஞ்சு படபடத்தது. தன்னிச்சையாக என் கைகள் வண்டியின் வேகத்தைக் குறைத்தன. நான் அவரது வீட்டை அடையவும், அகல் விளக்குகள் நிறைந்த தாம்பாளத்தை ஏந்தியபடி அந்த தேவதை வெளியே வரவும் சரியாக இருந்தது. அவளது கண்களும், என் கண்களும் நேருக்கு நேர் சந்தித்த அந்த விநாடி... என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற சிலிர்ப்பு. விளக்கொளியில் ரவி வர்மாவின் ஓவியம் போல மிளிர்ந்தது அவளது முகம். என்னை அந்த இடத்தில் எதிர்பார்க்காததால், திகைப்பும் ஆச்சர்யமுமாய் கண்கள் விரிய, அவள் நின்ற இடத்திலேயே சிலைபோல நின்றாள்.

    அந்த நேரம், உள்ளேயிருந்து சாந்தாம்மாவின் குரல் கேட்டது.

    காவ்யா, இந்தக் குத்துவிளக்கை எடுத்துட்டுப் போ!

    காதல் காற்றே கரையாதே!

    அத்தியாயம் 2

    காவ்யா…

    என்ன ஒரு பொருத்தமான பெயர். காவியமாய், கவிதையாய், ஓவியமாய்த் தோற்றமளித்த காவ்யா வீட்டிற்குள் போய்விட்டாள், எனக்குள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியபடி. நான் இப்போது என்ன செய்வது? ஒரு நிமிடம் எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றேன். திடீரென்று என்னை அந்த இடத்தில் பார்ப்பவர்கள் நான் யாருக்காகவோ காத்துக் கொண்டிருப்பதாகத்தான் நினைப்பார்கள். இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி நின்றவன், சட்டென்று சுதாரித்துக் கொண்டேன். வண்டியை கிளப்பிக்கொண்டு என் வீட்டிற்குப் போக வேண்டியதுதான். மெல்ல வேகத்தை அதிகரித்து அந்த இடத்தைவிட்டு நகர முற்படுகையில், வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் சாந்தாம்மா.

    "அடடே, அரவிந்தா? இன்னிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1