Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Thiranthathu Kathavu
Mella Thiranthathu Kathavu
Mella Thiranthathu Kathavu
Ebook180 pages1 hour

Mella Thiranthathu Kathavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மெல்லத் திறந்தது கதவு என்னும் கதை நம்மிடம் இருக்கும் பலவற்றை மறந்துவிட்டு, மற்றவர்களைப் பார்த்து ஏங்குகிற நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகிறது. இன்று பல குடும்பங்கள் நிம்மதியில்லாமல் இருப்பதற்கு, அவர்கள் இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததைத் தேடி ஓடுவதே காரணம். மாயாவின் பாத்திரம் மூலம் அந்தத் தவறு அழகாக உணர்த்தப்பட்டிப்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580127310793
Mella Thiranthathu Kathavu

Read more from G. Meenakshi

Related to Mella Thiranthathu Kathavu

Related ebooks

Reviews for Mella Thiranthathu Kathavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mella Thiranthathu Kathavu - G. Meenakshi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மெல்லத் திறந்தது கதவு

    Mella Thiranthathu Kathavu

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. ஒரு பறவையைப் போல...

    2. வெள்ளிக்கிழமையும், லஞ்ச் பேக்கும்!

    3. காற்றில் கரைந்த கானம்

    4. தொலைதூரக் கனவுகள்

    5. கலெக்டர் வீட்டுக்கு எதிர்வீடு!

    6. நிறமற்ற வானவில்

    7. மெல்லத் திறந்தது கதவு!

    8. விரியும் சிறகுகள்

    9. அன்று விதைத்த விதை

    10. மன நாட்டிய மேடை!

    11. கூண்டுக்கிளி

    12. கொடித் தாத்தா

    13. டாமி’ஸ் டே அவுட்!

    14. ஜான் ரிச்சர்ட் என்றொரு பிக் பிரதர்!

    அணிந்துரை

    இலக்கியம் நம்மைக் குறித்த பல கேள்விகளை மௌனமாக எழுப்பி அவற்றை நோக்கிய தேடலை உசுப்புவதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவை சுயதரிசனமாகவும், மெய்ஞானக்கிளர்ச்சியாகவும் அமைந்து விடுகின்றன. சரியான மனநிலையில் வாசிக்கப்படுகிற சிறந்த இலக்கியம் நம் வாழ்வை ஒளிமயமாக மாற்றிவிடும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஏதேனும் ஓர் இலக்கியம் தட்டுப்படுமா என்கிற எண்ணத்தில் தொடர்ந்து நிகழ்வதே தரமான வாசிப்பு.

    இலக்கிய வடிவங்களில் கடினமானது சிறுகதை. சில பக்கங்களில் மிகப் பெரிய உண்மையை உணர்த்துவது பனித்துளியில் பாற்கடலை அடக்குவதைப்போல சிரமமான செயல். பெரிய எழுத்தாளர்கள்கூட சிறுகதையை எழுதுவதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதை அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். எழுதி முடித்த பிறகும் நாமே நிராகரிக்கிற பல சிறுகதை முயற்சிகள் உண்டு. வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து ஒரே ஒரு நல்ல சிறுகதையை எழுதிவிட்டால் கூட அது சாதனை. நல்ல சிறுகதை ஒன்றை எழுதுவதற்கே அத்தனை பிரயத்தனங்களும் எடுக்கப்படுகின்றன.

    மீனாட்சியின் இச்சிறுகதைத் தொகுப்பில் சிறுகதைக்கான அம்சங்களோடு பல கதைகள் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு கதையைப் படித்துவிட்டு அடுத்த கதைக்குச் செல்ல முடியாமல் அசைபோட வைக்கிற கதைகள் கொண்ட தொகுப்பாக இது மலர்ந்திருக்கிறது. கதையில் வருகிற மாந்தரோடு நம்மை ஏதேனும் ஒரு வகையில் தொடர்புபடுத்தி சிந்தனைச் சங்கிலிகளில் சிக்கிக் கொள்ளும்போது மட்டுமே இத்தகைய அனுபவம் வாய்க்கும்.

    மனித மனம் எப்போதும் இருப்பவற்றைப் புறக்கணித்துவிட்டு இல்லாததை எண்ணி ஏங்குகிற அடிப்பாகம் இல்லாத வாளி. அதனால் அது நிரம்புவதே இல்லை. நுகர்வு மனப்பான்மையும், கழுத்தை அறுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட செயற்கைப் போட்டிகளும் இருத்தலை புதைகுழியாக மாற்றி வருகின்றன. அவற்றில் சிக்கிக் கொள்பவர்கள் வெளிவரவே முடியாது என்று எண்ணி தாங்களாகவே கற்பனை செய்து கொண்ட பல பிரச்சனைகளில் மகிழ்ச்சியைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மெல்லத் திறந்தது கதவு என்னும் கதை நம்மிடம் இருக்கும் பலவற்றை மறந்துவிட்டு, மற்றவர்களைப் பார்த்து ஏங்குகிற நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகிறது. மீனாட்சியின் கதைகள் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்களைப் பற்றியே அக்கறையோடு பேசுகின்றன. இன்று பல குடும்பங்கள் நிம்மதியில்லாமல் இருப்பதற்கு, அவர்கள் இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததைத் தேடி ஓடுவதே காரணம். மாயாவின் பாத்திரம் மூலம் அந்தத் தவறு அழகாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

    வாழ்க்கையை அனுசரணையாகவே வாழ்ந்துவிட்டுப் போகிற பலர் இருக்கிறார்கள். பிடித்தமில்லாத துணையோடு ஒவ்வொரு நாளையும் பிறாண்டுகிற நினைவுகளோடு யுகத்தைப்போலக் கழித்துக்கொண்டு வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசமில்லாமல் சதைகளற்ற கூடுகளாய் சடங்குக்காகச் சிரித்துக்கொண்டும், ஒப்பனை செய்து கொண்டும் அவர்கள் ஒப்புக்கு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை சாரமற்றது என்பதை உரத்துச் சொல்வதற்குத் துணிவு வேண்டும். மீனாட்சியிடம் அந்தக் கலகக் குரல் நிறமற்ற வானவில் என்ற கதையில் வெளிப்படுகிறது. விருப்பமில்லாத கணவனோடு வாழ்வது கறுப்பு வெள்ளை வாழ்க்கை என்கிற எதார்த்தத்தை வெளிப்படுத்தும் அச்சிறுகதையில், ‘மூணாவது ஆளுக்கு முன்னாடி மனைவியை மதிக்கத் தெரியாதவனை எப்படி நம்புறது?’ என்கிற அற்புதமான வரி ஒரு நிமிடம் நம்மை உலுக்கி விடுகிறது.

    மக்கள் நிர்வாகத்தைப் பற்றிப் பல கற்பனையான காட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் ஒற்றை அனுபவம், அது அவர்கள் இதயத்தில் விதையாக விழக் காரணமாகி விடுகிறது. அரசு அலுவலகம் ஒன்றில் நிகழ்கிற அவமானம் ஒட்டுமொத்த நிர்வாகத்தைப் பற்றிய அபிப்பிராயத்தை உண்டாக்கி விடுகிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகம் கவனிக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதுமான அரசுப் பணியாக வெகுகாலம் இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுவதற்குச் சிறந்த வாய்ப்பை வழங்கக்கூடிய அதைப் பலர் சேவையாகக் கருதாமல் அந்தஸ்தாகக் கருதுவதே அதற்கான காரணம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பற்றி மக்களிடம் பொதுவாக இருக்கும் பிம்பங்களும் சில நேரங்களில் அவை பொய்த்துவிடுகிற நிஜங்களும் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிற கதை கலெக்டர் வீட்டுக்கு எதிர் வீடு.

    பணம் தருகிற வசதிகளும், எதையும் பணத்தின் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்கிற மனநிலையும் தூக்கலாக இருக்கும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக மயமும், தாராள மயமும் இதைத் தூக்கிப் பிடித்திருப்பதோடு, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியை விரிவுபடுத்திக்கொண்டே செல்கின்றன. நமக்கு இதுபோதும் என்கிற மனநிலை யாரிடமும் இப்போது இல்லை. அவர்கள் அனுபவிக்கும்போது நமக்கு ஏன் மறுக்கப்பட வேண்டும் என்கிற கேள்வி இளைஞர்களிடம் அதிகரித்திருக்கிறது. பணத்திற்காக மட்டும் அலைகிற சிலரையும், வெளிநாடுகளுக்குச் சென்று அவர்கள் படுகிற அவதியையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் கதை தொலைதூரக் கனவுகள். பணத்தைத் தாண்டியது மகிழ்ச்சி. அதைச் சொந்த மண்ணில் எளிதில் அடைய முடியும். நம் நாட்டில் நாம் எப்போதும் முதல்தரக் குடிமகன் என்பதை வலியுறுத்தும் தொலைதூரக் கனவுகள் கதை வெளிநாட்டு மோகத்தில் வாழும் பலருக்குத் தோழமையான அறிவுரை.

    குடும்பத்தின் கடமைகளே தனிப்பட்ட வேட்கையைக் காட்டிலும் முக்கியமானவை என்பதை ஒரு பறவையைப்போல என்கிற கதையில் பார்க்க முடிகிறது. நம் அனைவருக்குமே வானத்தில் பறந்து திரிந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. பெண்களின் திறமைகள் குடும்பச் சூழலின் காரணமாகக் குறுகிவிடுகின்றன. பெற்றோரின் கண்டிப்பும், சமூகம் குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சமும் பெண் குழந்தையை ஆணைப்போல சுதந்திரமாக இயங்க விடுவதில்லை. திருமணத்திற்குப் பிறகும் தாய் என்கிற பொறுப்பு அதிகம் கிளைகளை விரிக்க முடியாமல் துண்டித்து விடுகிறது. இவற்றை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து இக்கதை பேசுகிறது. எல்லாக் கனவுகளையும் அடைந்துவிட முடிவதில்லை. அவை நிறைவேறுகிற தருணம் வருகிறபோது பொறுப்புகள் கனவுகளை விட அழுத்தமானவையாகப் படுகின்றன. இன்று பல பெண்களின் நிலை அவர்களைப் பிடித்து இழுக்கும் கடமைகளின் பாரம்தான். அதை மென்மையாக மீனாட்சி இச்சிறுகதையில் சொல்லியிருக்கிறார்.

    நாமாக மற்றவர்களுக்கு மனமுவந்து எதை வேண்டுமானாலும் கொடுத்துவிடுவோம். ஆனால், காணாமல் போனால் மனம் பதை பதைக்கும். மூடி காணாமல் பேனாவை இழக்க நேரிடும்போதுகூட வருத்தம் ஒன்று மேலிடும். காலையில் எழுந்து அவசரமாக உணவு தயாரித்து லஞ்ச் பேக்கை எடுத்துச் செல்கிற ஒரு பெண்ணின் மனநிலையை வெள்ளிக்கிழமையும் லஞ்ச் பேக்கும் என்கிற கதை சொல்லிச் செல்கிறது. இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதை என்று இதைக் குறிப்பிடுவேன். நாம் ஏதாவது தொலைந்து போனால் அதைவிட முக்கியமான ஒன்று காணாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்லி நம்மைத் தேற்றிக்கொள்வோம். இந்த உளவியல் பார்வையை இக்கதையில் மிக ஆழமாக மீனாட்சி அலசியிருக்கிறார். தொலைந்துபோன லஞ்ச் பேக்கை யார் எடுத்திருப்பார்கள் என்று ஊகித்துப் பார்ப்பதும், அந்தச் சாப்பாட்டிற்கு என்ன நேர்ந்திருக்கும், ஒரு வேளை சாப்பிட்டிருப்பார்களோ என்று வருத்தப்படுவதும் அசல் அனுபவக் கீற்றுகளாகத் தெறித்து விழுகின்றன. கடைசியில் வருத்தத்தை மறைக்க ‘வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து சமைத்து எடுத்து வந்து ஏதோ ஒரு ஜீவனுக்குச் சாப்பாடுபோட்ட புண்ணியம் கிடைத்து விட்டுப் போகட்டும், இனி வருத்தப்பட்டு என்ன பயன்?’ என்ற வரிகளில் ஒரு வகையில் நாம் அனைவருமே பிரதிபலிக்கிறோம்.

    பாட்டை முழுவதுமாகப் பாடாததால் காசு வாங்காத யாசகி ஒருத்தியைப் பரிவோடு வார்த்தை ஓவியமாக, காற்றில் கரைந்த கானம் என்கிற சிறுகதையில் தீட்டியிருக்கிறார். அப்பெண் உயர்ந்த குடும்பத்தில் சீரிய குணங்களோடு பிறந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கின்ற மையப் பாத்திரம். அந்தப் பெண்ணின் வாழ்க்கையைத்தான் காற்றில் கரைந்த பாடலாக உருவகம் செய்கிறது. சில நேரங்களில் யாசகர்களிடம் இருக்கிற நேர்மையை வசதி படைத்தவர்களிடம் காணமுடிவதில்லை.

    திருமணமானதும் மனைவியின் இறகுகளை ஆளுமையின் பேரிலும், ஆக்கிரமிக்கும் அவாவிலும் கத்திரிக்கும் அறிவுஜீவிகளை மன நாட்டிய மேடை கதையில் சித்திரித்திருக்கிறார். மனிதர்கள் தங்கள் படைப்புகளை நேசிக்கும்போது வெளிக் காண்பிக்கிறார்கள். அழுக்குப் பக்கங்களை மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இரண்டு படைப்புகளுக்கு இடையே நடக்கும் பரிமாற்றமே காதலாக உருவாகிறது என்று டி.எஸ். எலியட், ‘காக்டெய்ல் பார்ட்டி’ என்கிற நாடகத்தில் தெளிவுபடுத்தியிருப்பார். இன்று நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இருக்கிற இடைவெளியில் எதிர்காலத் தம்பதிகள் பழகுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதால், திருமணத்திற்கு முன்பே பலருடைய சுயரூபம் வெளிப்பட்டுவிடுகிறது. காதல் வரக் காரணமாக இருந்த நடனத்தை அவள் மனைவியானதும் ஆடக் கூடாது எனக் கெடுவிதிக்கும் ரகுநந்தனின் முகம் படிப்படியாக மாறுவதைப் பக்குவமாக வடித்திருக்கிறார். கவர்ந்து இழுக்கும்வரை மாய முகமூடியை மாட்டியிருக்கும் பல ஆண்கள், நமக்குத்தான் என்று உறுதியானதும் நிஜ முகத்தை வெளிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் வைர வளையல்களைத் திருப்பித் தந்து விட்டு தீபிகா திரும்பிக்கூடப் பார்க்காமல் வருகிற உச்சபட்ச சம்பவம் அற்புதம்.

    மீனாட்சிக்கு சுற்றுலாத் துறையின் மீது கொஞ்சம் கூடுதலான விருப்பம்போல. இரண்டு கதைகளில் வரும் ஐ.ஏ.எஸ். அலுவலர்களும் சுற்றுலாத் துறையில் பணிபுரிவதைப்போல எழுதியிருக்கிறார். சகோதரி நிவேதிதாவின் பங்களிப்பைப் பற்றி அன்று விதைத்த விதை பேசுகிறது. கதைக்கான அம்சம் அதில் கொஞ்சம் குறைவு. குறிப்பிட்ட நேர்வுக்காகச் சிறுகதையைச் செப்பனிடும்போது சில விபத்துகள் நிகழ்ந்துவிடுவது உண்டு.

    விரியும் சிறகுகள் பெருந்தன்மையான மனிதனைப் பற்றிய கதை, கம்பீரமான மனிதனாக சங்கர் என்கிற ஆணை அவர் நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறார். கதையின் போக்கு வாசிப்பைத் துரிதப்படுத்தும் வகையில் சுவாரசியம் சேர்க்கிறது. கணவனின் மனநிலையை அறிந்து குழந்தையின் ஆசையையும் பூர்த்தி செய்யும் உத்தி உள்ள புத்திசாலியாக, பார்வதி என்கிற பாத்திரத்தை கூண்டுக்கிளி என்கிற சிறுகதையில் படைத்திருக்கிறார். கொடித் தாத்தா மனதை நெகிழவைக்கும் கதை. ஜான் ரிச்சர்ட் என்றொரு பிக் பிரதர், எழுத்தின் நோக்கத்தை மேன்மைப்படுத்தும் கதை.

    நல்ல சிறுகதைத் தொகுப்பு வாசித்ததும் நம்மை

    Enjoying the preview?
    Page 1 of 1