Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Zen Vazhi Thoguppu 2
Zen Vazhi Thoguppu 2
Zen Vazhi Thoguppu 2
Ebook174 pages2 hours

Zen Vazhi Thoguppu 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V. Padma has written many famous religious books.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114101798
Zen Vazhi Thoguppu 2

Related to Zen Vazhi Thoguppu 2

Related ebooks

Reviews for Zen Vazhi Thoguppu 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Zen Vazhi Thoguppu 2 - V. Padma

    http://www.pustaka.co.in

    ஜென் வழி தொகுப்பு 2

    Zen Vazhi Thoguppu 2

    Author:

    வி. பத்மா

    V. Padma

    For more books
    http://www.pustaka.co.in/home/author/v-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே

    1. தியாகங்கள்

    2. அலை

    3. உள்ளே தேடு

    4. ஒரே ஒரு பாட்டு

    5. இன்னும் ஒரு பசு

    6. சகதிப் பயணம்

    7. ஒரே விநாடி

    8. காலிப் படகு

    9. வரைபடம்

    10. கனவும் நிஜமும்

    11. நதிபோல ஓடிக்கொண்டிரு!

    12. சுமத்தல்

    13. தனித்துவம்

    14. இயல்பு

    15. பாக்கெட்டில் நூறு ரூபாய்

    16. எல்லாம் மாயை!

    17. மனிதப் பொதுச் சட்டம்

    18. நெருப்பு

    19. நிழலின் தலை

    20. கோபம் எங்கே?

    21. அனுபவி!

    22. பழையது

    23. எங்கே?

    24. மகிழ்ச்சி

    25. வாசல்

    26. என்னுடையது

    27. நீ நான் இல்லை

    28. நல்லது, கெட்டது!

    29. இந்த விநாடி

    30. சிரி!

    31. உப்பு

    32. வசைகள்

    33. ஓடு!

    34. வயது

    35. தெய்வம் தந்த பூ!

    36. சுமை

    37. இருமடங்கு

    38. இலக்கு

    39. மரம்போலும்!

    40. தவமும் வரமும்

    41. தகப்பன் சாமி!

    42. பூமி ஒரு வாடகை வீடு!

    43. வேர்

    44. எங்கே செல்வீர்கள்?

    45. சமம்!

    46. கவலை மூட்டைகள்

    47. ஆத்மார்த்தம்

    48. தோட்டத்தில் தியானம்

    49. இதுவா? அதுவா?

    50. எந்தப் பக்கம்?

    51. அதுமட்டும்!

    52. முட்டாள்

    53. அடிபணிதல்

    54. நானும் ஓர் கனவோ

    55. காலிக் குவளை

    56. சிறிது வெளிச்சம்

    57. சும்மா!

    58. தண்ணீர் மேகம்

    59. புன்னகை

    60. ஒரு காகிதம்

    61. பொம்மைகள்

    62. பாறாங்கல்

    63. உடனே செய்

    64. நான்!

    65. கடவுளின் குரல்

    66. உனக்குள் ஒரு ரத்தினம்

    67. கூல்!

    68. இதற்குமுன்னால்?

    69. எதைப் பேச?

    70. தேவை

    71. பிம்பம்

    72. சுத்தம்

    73. ஒரே உலகம்

    74. வித்தியாசம்

    75. மிச்சமிருக்கும் ஆயுதம்!

    76. கேள்

    77. குறையொன்றும் இல்லை

    78. மூன்றுமுறை மொழிபெயர்ப்பு

    79. உருட்டு

    80. நினைக்காதே

    81. மதியாதார் தலைவாசல்

    82. பாதை

    83. மாயா மாயா

    84. நீரானேன்!

    85. முடிச்சு

    86. மனசு எங்கே?

    87. நத்திங் எக்ஸ்ட்ரா

    88. புகழ் பரப்பல்

    89. கட்டுகள் வேண்டாம்

    90. நன்றி

    91. அனுபவி

    92. எதிர்நீச்சல்

    93. கோபத்தில் மூணு வகை

    94. விளக்கு

    95. தீர்ப்பை நிறுத்து

    96. பயணம்

    97. குரல்

    98. கல்

    99. சுத்தம்

    100. உள்ளே வெளியே

    1. தியாகங்கள்

    கோவிலில் பொங்கல் திருவிழா. நாடுமுழுவதிலும் இருந்து பல புகழ் பெற்ற பேச்சாளர்களை உரையாற்ற அழைத்திருந்தார்கள்.

    அவர்களில் ஒருவர், பிரபலமான ஜென் சிந்தனையாளர். அவர் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு 'தியாகம்'.

    'தியாகங்களில் பல வகைகள் இருக்கிறது' என்று பேச ஆரம்பித்தார் அவர். 'நேற்றைக்கு நான் இங்கே வந்து இறங்கியபோது மூன்று பேர் என்னை வரவேற்க வந்திருந்தார்கள். அவர்கள்தான் என்னை வசதியான வீடு ஒன்றில் தங்கச் செய்து, சாப்பாடு வரவழைத்து, இங்கே கோவில்வரை காரில் அழைத்துவந்தார்கள். அவர்கள் மூன்று பேரும் மூன்றுவிதமான தியாகிகள்.'

    'முதல் நபர், இளைஞர், தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்துவிட்டுக் குடும்பத்துக்காக உழைக்கிறார். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கைக்காகத் தன்னுடைய நேரத்தை, உழைப்பைக் கொடுக்கிறார்.'

    'இரண்டாவது நபர், இந்த ஊர் எம்.எல்.ஏ., அவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பதைக்கூட மறந்து ஊருக்காக உழைக்கிறார். சமூக சேவைகள், அவற்றுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பது, நிதி வாங்கி முறைப்படி செலவழிப்பது என்று பாடுபடுகிறார். ஊருக்காகக் குடும்பத்தைத் தியாகம் செய்தவர் இவர்.'

    'மூன்றாவது நபர், ராணுவத்தில் சேர்ந்து பல வருடங்கள் தேச சேவை செய்தவர். அவர் தன்னுடைய ஊரைத் தியாகம் செய்து நாட்டுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.'

    'ஆக, குடும்பத்துக்காகச் சுயத்தைத் தியாகம் செய்கிறவர்கள், ஊருக்காகக் குடும்பத்தைத் தியாகம் செய்கிறவர்கள், நாட்டுக்காக ஊரைத் தியாகம் செய்கிறவர்கள் என்று பல வகைகளை அடுக்கிச் சொல்லலாம். ஆனால் இவற்றையெல்லாம் உசத்தியாக ஜென் பௌத்தம் எதைச் சொல்கிறது தெரியுமா?'

    அவர் பேச்சை நிறுத்தி கூட்டத்தைப் பார்க்க, எல்லோரும் ஆவலாக அவர் முகத்தையே பார்த்தார்கள். சில விநாடிகள் கழித்து அவர் சொன்னார், 'ஞானத்தைத் தேடுவது. அந்த ஒன்றுக்காக நீங்கள் இந்த உலகத்தில் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.'

    ***

    2. அலை

    அந்தக் கால ஜப்பானில் ஒரு புகழ் பெற்ற பயில்வான் இருந்தான். அவன் பெயர் ஓநாமி.

    மல்யுத்தப் பயிற்சிகளின்போது ஓநாமியை யாராலும் அசைத்துக்கொள்ளமுடியாது. எத்தனை பேர் வந்தாலும் தூக்கி வீசி ஜெயித்துவிடுவான்.

    ஆனால், போட்டி என்று வந்துவிட்டால்மட்டும் ஓநாமிக்குத் தொடை நடுங்க ஆரம்பித்துவிடும். சாதாரண ஒல்லிக்குச்சிப் பையன்கள்கூட ஓநாமியைத் தோற்கடித்துவிடுவார்கள். இது ஏன் என்று புரியாமல் குழம்பினான் அவன்.

    நண்பர்கள் சொன்னார்கள். 'ஓநாமி, உனக்கு உடம்புல எந்தக் கோளாறும் இல்லை. மனசுலதான் ஏதோ பிரச்னை. என்ன செய்யப்போறே?'

    அப்போது அவர்கள் வாழ்ந்த ஊருக்கு ஹகுஜு என்ற ஜென் மாஸ்டர் வந்திருந்தார். அவரைச் சந்திக்கச் சென்றான் ஓநாமி. தன்னுடைய பிரச்னையைச் சொல்லி உதவி கேட்டான்.

    ஹகுஜு சிரித்தார். 'உன் பேர் என்ன?'

    'ஓநாமி!'

    'அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா?'

    'பெரிய அலைகள்ன்னு அர்த்தம்.'

    'ம்ஹூம், பிரம்மாண்ட அலைகள்ன்னு அர்த்தம்' என்றார் ஹகுஜு. 'அந்த அலைகள் பொங்கி வரும்போது நடுவில யார் இருந்தாலும் சரி, எத்தனை பெரிய கட்டடம் இருந்தாலும் சரி, உடைச்சு எறிஞ்சுட்டு முன்னாடி போகும். தெரியுமா?'

    'இன்னிக்கு ராத்திரி நீ அலைகளை மனசுல வெச்சுத் தியானம் செய். உன்னை நீயே அலையா நினைச்சுக்கோ. நீதான் அலை, அலைதான் நீ அப்டீங்கற எண்ணம் வர்றவரைக்கும் விடாதே, தியானம் செய். அப்புறம் உன்னை யாராலயும் ஜெயிக்கமுடியாது!'

    நம்பிக்கையோடு தியானத்தில் உட்கார்ந்தான் ஓநாமி. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனத்தில் அலைகள் ஆக்கிரமித்துக்கொண்டன. தன்னை ஒரு பிரம்மாண்டமான அலையாக, எதிர்ப்பவர்களைத் தவிடுபொடியாக்கக்கூடிய ஆவேச உருவமாக நினைத்துக்கொண்டான் அவன்.

    அதன்பிறகு, ஓநாமியை எந்தப் போட்டியிலும் யாராலும் ஜெயிக்கமுடியவில்லை!

    ***

    3. உள்ளே தேடு

    ஒரு பெரிய பணக்காரர். பிரம்மாண்டமான கோட்டைபோன்ற வீட்டில் சில நூறு வேலைக்காரர்களுடைய கவனிப்பில் ராஜாபோல வாழ்ந்தார். அழகான மனைவி. இரண்டு குழந்தைகள். குறையில்லாத வாழ்க்கை.

    ஆனால் ஏனோ, கொஞ்சநாளாக அவருக்கு மனத்தில் நிம்மதி இல்லை. ஞானத்தைத் தேடிப் பயணம் புறப்பட்டார்.

    சாதாரணமாக ஞானம் தேடிச் செல்கிறவர்கள் நடந்துபோவார்கள். இவர் பணக்காரராச்சே. பெரிய குதிரைவண்டியில் கிளம்பினார். ஒவ்வோர் ஊராகச் சென்று அங்குள்ள ஞானிகள், துறவிகள், ஆசிரியர்களைச் சந்தித்து அவர்கள் காலில் தங்கத்தையும் வைரத்தையும் கொட்டினார். தனக்கு ஞானம் பெற்றுத் தருமாறு வேண்டினார்.

    ஆனால் இவர்கள் யாராலும் அந்தப் பணக்காரருக்கு உதவ முடியவில்லை. காட்டின் உள்பகுதியில் வாழும் ஒரு ஜென் மாஸ்டரைக் கை காட்டினார்கள். 'அவராலதான் உன் பிரச்னையைத் தீர்க்கமுடியும்!'

    நம் ஆள் யோசித்தார். ஒரு மூட்டை நிறையப் பணத்தை எடுத்துக்கொண்டார். குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டார். காட்டுக்குள் சென்றார்.

    பல நாள் அலைச்சலுக்குப்பிறகு அவர் அந்த ஜென் துறவி வாழும் குகையைக் கண்டுபிடித்துவிட்டார். உள்ளே சென்று அவரை வணங்கி விஷயத்தைச் சொன்னார்.

    துறவி கேட்டார். 'நீ எப்படி இங்கே வந்தே?'

    'குதிரையில வந்தேன்!'

    Enjoying the preview?
    Page 1 of 1