Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Ullam Irupathu Ennidamey!
Un Ullam Irupathu Ennidamey!
Un Ullam Irupathu Ennidamey!
Ebook165 pages45 minutes

Un Ullam Irupathu Ennidamey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதாசிரியர் மகேஷ்வரனின் “உன் உள்ளம் இருப்பது என்னிடமே!” என்ற நாவல் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதைதானே என்ற நினைவுடன் படித்தால்கூட நிகழ்வுகள் கண்முன்னே நடப்பதுபோல் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது. வரதட்சணை என்னும் தீ ‘பெண்களை' மட்டுமே எரித்து ஒருபுறம் பெண்களை பயமுறுத்தினாலும் தீபிகா போன்ற பொறாமை பிடித்த பெண்கள் சமுதாயத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அசுவத் போன்ற இளைஞர்கள் தோன்றினால் வரதட்சணை என்னும் பேயைக் கூட விரட்டிவிடலாம். பொறாமை என்னும் பேய் எப்பொழுதுதான் இச்சமுதாயத்திலிருந்து விடைபெறப் போகிறதோ! இதற்கு காலமும் பெற்றோர்களும்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் நல்ல பிள்ளைகளை உருவாக்குவது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. மொத்தத்தில் இது ஒரு உயிரோட்டமான கதை...

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580128308604
Un Ullam Irupathu Ennidamey!

Read more from Maheshwaran

Related to Un Ullam Irupathu Ennidamey!

Related ebooks

Reviews for Un Ullam Irupathu Ennidamey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Ullam Irupathu Ennidamey! - Maheshwaran

    http://www.pustaka.co.in

    உன் உள்ளம் இருப்பது என்னிடமே!

    Un Ullam Irupathu Ennidamey!

    Author :

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    வாழ்த்துரை

    கதாசிரியர் மகேஷ்வரனின் உன் உள்ளம் இருப்பது என்னிடமே! என்ற நாவல் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதைதானே என்ற நினைவுடன் படித்தால்கூட நிகழ்வுகள் கண்முன்னே நடப்பதுபோல் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது. வரதட்சணை என்னும் தீ ‘பெண்களை' மட்டுமே எரித்து ஒருபுறம் பெண்களை பயமுறுத்தினாலும் தீபிகா போன்ற பொறாமை பிடித்த பெண்கள் சமுதாயத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அசுவத் போன்ற இளைஞர்கள் தோன்றினால் வரதட்சணை என்னும் பேயைக் கூட விரட்டிவிடலாம். பொறாமை என்னும் பேய் எப்பொழுதுதான் இச்சமுதாயத்திலிருந்து விடைபெறப் போகிறதோ! இதற்கு காலமும் பெற்றோர்களும்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் நல்ல பிள்ளைகளை உருவாக்குவது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.

    இளம் பெண்கள் கோயிலுக்கு தனியாகப் போகலாம்...

    மருத்துவமனைக்கு தனியாகப் போகலாம்...

    பேருந்து நிலையத்திற்கு தனியாகப் போகலாம்...

    கல்லூரிக்கு தனியாகப் போகலாம்...

    தங்குகிற ஓட்டலுக்கெல்லாம் தனியாக போகவே கூடாது என்னும் முத்தான கருத்துக்களை ஒவ்வொரு பெண்ணும் தனது சொத்தாக்கிக் கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் இது ஒரு உயிரோட்டமான கதை. இடையில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் இறுதியில் ஓடை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது போன்ற இன்னும் அதிக நாவல்களை எழுதி மேன்மேலும் புகழ் பெற வேண்டும். என்னுடைய வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு எப்பொழுதும் உண்டு.

    எடையூர்

    திருவாரூர் மாவட்டம்

    அன்புடன்

    திருமதி மல்லிகா நடராஜன்

    1

    பேரு அசுவத் என்றபடியே...

    பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு இருந்த வெண்கல அர்ச்சனைக் கூடையை குருக்களிடம் நீட்டினாள் பவானி.

    நட்சத்திரம்... ராசி... எல்லாம் சொல்லுங்கம்மா...

    அனுஷ நட்சத்திரம்.. விருச்சிகராசி

    பயபக்தியோடு, இரு கைகளையும் குவித்து கர்ப்பக் கிரஹத்தில் இருந்த சற்குணநாத சாமியைக் கும்பிட்டாள்.

    பவானிக்கு ஐம்பது வயது.

    தொழிலதிபர் வேணுகோபாலனின் மனைவி என்பதற்கு அடையாளமாய் காதுகளில் வைரத்தோடு மினுக்கியது. இரு கைகளிலும் முத்துக்கள் பதித்த கனமான தங்க வளையல்களை அணிந்திருந்தாள். கழுத்தில் தடிமனான தாலி சங்கிலி பளபளத்தது. அரக்கு சிவப்பில் விலை உயர்ந்த காட்டன் சேலையை உடுத்தியிருந்தாள்.

    முகத்தில் சாந்தம் வழிந்தது.

    கண்களில் கனவு பொங்கியது.

    உரத்த குரலில் மந்திரங்கள் உச்சரித்தபடியே, தேங்காயை உடைத்து... சாமிக்கு நெய்தீப ஆராதனைக் காட்டினார் குருக்கள்.

    சற்குணநாதசாமியே... எம்புள்ளைக்கு இன்னையிலேர்ந்து இருபத்தி எட்டாவது வயசு ஆரம்பம் ஆயிடுச்சு. சீக்கிரமா அவனுக்கொரு கல்யாணம் நடக்கணும்பா. அவன் விரும்பற மாதிரி அவனோட மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு நல்ல பெண்ணை கண்ணுல காட்டுப்பா...

    கண்களில் நீர்க்கசிய... மனமுருக வேண்டினாள்...

    நெய் தீப ஆராதனையை சாமிக்குக் காட்டிவிட்டு பவானிக்கு எதிரே கொண்டு வந்து நீட்டினார் குருக்கள்.

    இரு கைகளாலும் நெய்தீபத்தை ஒற்றி கண்களில் வைத்துக்கொண்டாள்.

    அப்போது அதிகாலை ஆறே முக்கால் மணி என்பதால் கூட்டம் இல்லை. அசுவத்துக்கு பிறந்தநாள் என்பதால் விடியற்காலமே எழுந்து விட்டாள் பவானி. வீட்டில் இரண்டு கார்கள் இருக்கிறது. டிரைவர் எட்டு மணிக்கு மேல்தான் வருவான். அதனால்தான் அவள் யாரையும் எதிர்பார்க்காமல், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், குளித்து முடித்ததுமே கிளம்பி நடந்தே வந்து விட்டாள்.

    எழுந்ததுமே முகம் அலம்பி பல்துலக்கி மிதமான சூட்டில் ஒரு குவளை பால் குடிப்பாள். ஐந்து நிமிடங்கள் கழித்து வழக்கமாய் போட்டுக்கொள்ளும் மாத்திரைகளை விழுங்கி விடுவாள். ஆனால் இன்று பாலையும் குடிக்கவில்லை. மாத்திரையையும் விழுங்கவில்லை. கோயிலுக்கு வருகிற அவசரத்தில் மறந்துவிட்டாள்.

    ஒவ்வொரு வருடமும் அசுவத் பிறந்தநாள் அன்று, சற்குணநாதசாமி கோயிலில் முதல் விளக்கு ஏற்றுபவள் அவளாகத்தான் இருக்கும். முதல் அர்ச்சனையும் அவளுடையதாகத்தான் இருக்கும்.

    மூத்தவன் பிரசாத்தைவிட இளையவன் அசுவத் மீதுதான் பவானிக்கு பாசம் அதிகம்.

    இந்தாங்கம்மா...

    பிரசாதம் இருந்த வெண்கல அர்ச்சனைக் கூடையை கொண்டு வந்து தந்தார் குருக்கள்.

    அர்ச்சனைக் கூடையை வாங்கிக் கொண்டு அவருடைய கையில் பத்து ரூபாய் தாளை திணித்தாள்.

    வெச்சுக்கங்க சாமி...

    பிறகு புஷ்பகலோகேஸ்வரி அம்மன் சந்நிதியை நோக்கி நடந்தாள்.

    அகலமான பிரகாரத்துடன் கூடிய மிக பிரமாண்டமான கோயில் அது. பிரஹாரத்தில் ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனியே மண்டபங்கள் இருந்தது.

    அசுவத் கழுத்துல சீக்கிரமா கல்யாண மாலை விழணும் தாயே...

    புஷ்பகலோகேஸ்வரி அம்மனை வேண்டிக்கொண்டு, கீழே விழுந்து கும்பிட்டாள்.

    மூத்தவன் பிரசாத்திற்கும் அசுவத்திற்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். பிரசாத் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்தமாய் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நடத்தி வருகிறான். கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

    அசுவத்திற்கு அடுத்தவள் அபர்ணா. தங்களுடைய அந்தஸ்திற்கு ஏற்ற இடத்தில் அவளுக்கும் கல்யாணமாகிவிட்டது. கணவன், குழந்தை என்று சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    இன்னும் அசுவத் மட்டும்தான் பாக்கி.

    பவானிக்கு உடம்பில் பிரஷர், சுகர் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள். நின்றால் நடந்தால் மூச்சு வாங்கும். வியர்த்துக்கொட்டும்.

    தனக்கு திடீரென்று ஏதேனும் ஆகிவிட்டால் என்ன பண்ணுவது என்ற பயம் அவளுக்குள் புகுந்திருந்தது. தான் கண்ணை மூடுவதற்குள் அசுவத்தை மாலையுங்கழுத்துமாய் பார்த்துவிட வேண்டும். அவனுக்கு பிறக்கப் போகிற குழந்தையை மார்பிலும், தோளிலும் போட்டு ஆசை தீர கொஞ்சிவிட வேண்டும் என்ற கவலைதான் இப்பொழுது பவானியை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

    பிரசாத்தின் மனைவி பூர்ணிமாவின் தங்கை ஓவியா டிகிரி முடித்தவள். அசுவத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று தவியாய் தவிக்கிறாள் 'அசுவத்திற்குத்தான் கழுத்தை நீட்டுவேன்' என்று பிடிவாதமாகவும், வைராக்கியமாகவும் இருக்கிறாள். 'அசுவத்தின் மனதை மாற்றி அவனுடைய மனதினுள் இடம் பிடித்தே தீருவேன்' என்ற கொள்கையோடு இங்கேயே வந்து தங்கி விட்டாள்.

    அசுவத்திற்கு ஓவியா மீது ஈர்ப்பு இல்லை.

    அவளைக் கண்டாலே எரிந்து விழுவான்.

    அசுவத்... உனக்கு ஓவியாவையே முடிச்சிடலாமா?... ஒருதடவை பவானியே அவனிடம் வாய்விட்டு கேட்டுவிட்டாள்.

    வேற பேச்சு பேசும்மா...

    ஏன் அசுவத்... ஓவியாவுக்கு என்ன கொறைச்சல்?

    ஓவியாக்கிட்டே கொறை எதுவும் இருக்கறதா நான் சொல்லலையே...

    பின்னே ஏன் வேணாம்ங்கறே?...

    எனக்கு பிடிக்கலை...! அவ்வளவுதான்...

    எந்தப் பொண்ணையாவது விரும்பறியா...? அதையாவது சொல்லு. அவ நல்ல பொண்ணா... ஏழையா இருந்தாலும் கௌரவமானக் குடும்பத்து பொண்ணா இருந்தா உங்கப்பாக்கிட்டே சொல்லி அவளையே கட்டி வெச்சிடுறேன்...

    விரும்பற அளவுக்கு நான் இன்னும் எந்தப் பொண்ணையும் சந்திக்கலை. அப்படி சந்திச்சு... விரும்ப ஆரம்பிச்சேன்னா... அந்த விஷயத்தை உன்கிட்டேதான்மா மொதல்ல சொல்லுவேன். அதுக்குப்பிறகு வேணா... டாடிகிட்டே எனக்காக சிபாரிசு பண்ணலாம்...

    சிரித்தபடியே தோள்களைக் குலுக்குவான் அசுவத்.

    அம்மாவுக்கும் பிள்ளைக்கும் பிரச்சனை வருவதே கல்யாணப் பேச்சை எடுக்கும் போதுதான். வலிய வீடு தேடி எத்தனையோ வரன்கள் வந்து விட்டது. எல்லாவற்றையும் நிராகரித்து விடுகிறான் அசுவத்.

    எம்.பி.ஏ. முடித்துவிட்டு வேணுகோபாலனுக்கு உதவியாய் பிசினஸைக் கவனித்துக் கொண்டிருக்கும் அசுவத்திற்கு பெண் தருவதற்கு பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் போட்டி போட்டார்கள், நேரிடையாக கேட்பதற்கு தயங்கியவர்களாய் தெரிந்தவர்கள் மூலமாக சொல்லி அனுப்பினார்கள்.

    எல்லோர்க்கும் அசுவத் சொல்லும் ஒரே பதில்...

    எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்... என்பதுதான்.

    பவானி அடிக்கடி கோயிலுக்கு வருவதே அசுவத்திற்காகத்தான்...!

    அம்மன் சந்நிதியில் வேண்டுதலை முடித்துவிட்டு கீழே இறங்கி பிரகாரத்தில் நடந்தாள் பவானி.

    பிரகாரத்தில் நூற்றியெட்டு கருங்கல் தூண்களுடன் ஒரு சிற்ப மண்டபம் இருக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1