Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idho... En Idhayam
Idho... En Idhayam
Idho... En Idhayam
Ebook79 pages25 minutes

Idho... En Idhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128304626
Idho... En Idhayam

Read more from Maheshwaran

Related to Idho... En Idhayam

Related ebooks

Reviews for Idho... En Idhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idho... En Idhayam - Maheshwaran

    http://www.pustaka.co.in

    இதோ… என் இதயம்

    Idho... En Idhayam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஊட்டி மலைப்பாதையில், அந்த இளஞ்சிவப்பு வண்ண ஸ்கார்பியோ கார் சீரான வேகத்தோடு மேலே ஏறிக்கொண்டிருந்தது.

    என்னங்க... ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வினீத்தின் தோள் மீது இடித்தாள் வைரம்.

    ம்... வினீத்தின் கவனம் சாலையிலேயே இருந்தது...

    காரை அநியாயத்துக்கு மெதுவாக ஓட்டுறீங்களே...

    ரோஜா வண்ண ஈறுகள் தெரிய சிரித்தாள் வைரம்...

    நா இப்பத்தானே ஊட்டிக்கு முதல் தடவையா... வர்றேன்! மலைப்பாதையில... எப்போ... எங்கே... வளைவு வரும்... நெளிவு வரும்னு என்னால யூகம் பண்ணவே முடியலை... ஹாரன்கூட அடிக்காம... மேலே இருந்து திடீர் திடீர்னு டூரிஸ்ட் வாகனங்கள் வந்துகிட்டேயிருக்கு... அதனாலதான் காரை மெதுவா ஓட்டறேன்... அதான்... காருக்கும் நல்லது... நம்ம உயிருக்கும்… நல்லது... என்றபடியே... காரை மலைப்பாதையின் ஓரமாய்... ஓரங்கட்டி நிறுத்தினான்...

    ஏங்க நிறுத்திட்டிங்க…?

    கீழே இறங்கு வைரம்... இந்த இடம் ரொம்ப அழகா… இருக்கு... கொஞ்ச நேரம் நின்னு... இயற்கையை ரசிச்சுட்டுப் போகலாம்...

    அவனுடைய சொற்களுக்கு கட்டுப்பட்டவளாய்... காரின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினாள் வைரம்.

    கரும்பச்சை வண்ணத்தில் வெங்காயச்சருகு மாதிரியான சேலை கட்டியிருந்தாள் வைரம்… சந்தனத்தில் செய்த சிலைபோல இருந்தாள்... போதுமான உயரம்… நல்ல வாளிப்பான தேகம்... சுருள்சுருளாய் கேசம்... நெற்றியிலும் கதோரங்களிலும் வழிந்தது... காதுகளில், அவளுடைய வட்டமுகத்திற்குப் பொருத்தமாய் குடை ஜிமிக்கி அணிந்திருந்தாள்.

    மஞ்சள் பூசாமலே தங்கமாய் தகதகத்தது. அவள் முகம்...

    மூக்கில் அணிந்திருந்த ஒற்றைக்கல் வைரமூக்குத்தி... சூரியனின் வெளிச்சம் பட்டு... பளீர் பளீர் என மின்னியது.

    இருவருக்கும் கல்யாணமாகி பத்து நாட்கள்தான் ஆகிறது என்பதற்கு அடையாளமாய் அவளுடைய கழுத்தில் புது மஞ்சள் கயிறு தொங்கியது. தலைக்கேசத்தை தளரப்பின்னி... நெருக்கமாய் தொடுக்கப்பட்ட குண்டுமல்லிகைப் பூச்சரத்தை சூடியிருந்தாள்...

    வைரத்திற்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாய் தெரிந்தான் வினீத்.

    ஐந்தே முக்கால் அடி உயரம். மாநிறம்தான் என்றாலும் முகம் வசீகரமாய் இருந்தது… தினமும் உடற்பயிற்சி செய்பவன் போலும்... உடம்பைக் கட்டுக்கோப்பாய் வைத்திருந்தான்.

    ஜீன்ஸ் பேண்ட்டிலும், டீசர்ட்டிலும் வாட்ட சாட்டமான உடம்பு திணறியது. நெற்றியில் வழிந்த கேசத்தை விரல்களை சீப்பாக்கி கோதிக் கொண்டான்... ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கட்டில் இரண்டு கைகளையும் திணித்துக் கொண்டு தோள்களைக் குலுக்கியபடியே... மலைப்பாதையின் ஓரமாய் இருந்த... தடுப்பு சுவர்மீது போய் உட்கார்ந்தான்.

    வைரம்… இங்கே வா...

    ஆசையும் காதலுமாய் வினீத்தின் அருகில் போய் அமர்ந்தாள் வைரம்.

    நீயும் நானும்... கணவன் மனைவி... இன்னும் கொஞ்சம் நெருங்கி உட்காரலாமே...

    ப்ச... விடுங்க... எனக்கு வெட்கமா இருக்கு. யாராவது பார்க்கப்போறாங்க...

    இந்த மலைப்பாதை ஓரத்தில உன்னையும்... என்னையும் தவிர யாருமே இல்லை... அப்படியே இருந்தாலும்... எனக்குக் கவலையில்லை...

    சட்டென்று குனிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1