Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkagavey Naan
Unakkagavey Naan
Unakkagavey Naan
Ebook161 pages1 hour

Unakkagavey Naan

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

இந்து-சரண் கல்லூரியில் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தார்கள். மூன்றாமாண்டு மஞ்சு என்னும் தோழி இவர்கள் நட்புக்குள்(வாழ்க்கையில்) நுழைகிறாள். இவளால் இவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? இவர்கள் நட்பு காதலாக மாறியதா? வாழ்க்கையில் இவர்கள் இணைந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580147308084
Unakkagavey Naan

Read more from Viji Muruganathan

Related to Unakkagavey Naan

Related ebooks

Reviews for Unakkagavey Naan

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkagavey Naan - Viji Muruganathan

    http://www.pustaka.co.in

    உனக்காகவே நான்

    Unakkagavey Naan

    Author :

    விஜி முருகநாதன்

    Viji Muruganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-muruganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 1

    நுழைவாயிலிருந்து நீளமான தார்ச்சாலையாக அரை கிலோமீட்டர் ஓடியது. கரை கட்டியதுபோல் இரண்டு பக்கமும் பச்சைப் பசேலென்ற புல்வெளிகள்… இடையிடையே தென்னை மரங்கள்... சிவப்பு வயலட் நிற குரோட்டன்ஸாக பூத்துக்குலுங்கியது... அதில் அவ்வப்போது கத்தும் குயில்கள்… ஓடிவந்து கீழே தன் குட்டிக் கைகளால் எதையாவது எடுத்துக் கொறித்துவிட்டு குடுகுடுவென்று ஓடும் அணில்கள். ஏதோ பிருந்தாவனத்திற்குள் வழிதவறி வந்துவிட்டமோ என்று இருந்தது.

    தார்சாலை முடியும் இடத்தில் தென்பட்டது. அந்த வெள்ளைவெளேர் கட்டிடம் முகப்பில் வட்டவடிவமாக வெட்டப்பட்ட புல்வெளியின் நடுவே மரத்தாலான பிள்ளையார் சிலை...

    எல்லாவற்றையும்விட அவள் மனதுக்கந்த பிள்ளையார் சிலையைப் பார்த்தவுடனேயே சந்தோஷம் தாங்கவில்லை இந்துவிற்கு.

    சின்னப்பிள்ளை போல் இது அத்தனையையும் குதூகலத்துடன் தன் பக்கத்தில் இருந்த ஜெயாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

    ம்மா... சூப்பரா இருக்கில்ல... பாரதியார் பாட்டுல வர்ற மாதிரி தென்னைமரம், குயிலோசை எல்லாம்... அன்று அவர்கள் அந்தக் கல்லூரிக்கு இண்டர்வியூக்காக வந்திருந்தார்கள்.

    அவள் குதூகலம் ஏதுவும் தன்னைத் தாக்கவில்லை என்பதுபோல் அமைதியான முகத்துடன் நிதானமாக அவள் கையைப்பற்றி அழுத்தியவள்... படி என்றாள் ஒற்றை வார்த்தையாக...

    அது ஒன்றும் அவளுக்குப் புதிதல்லவே அவளின் நான்கு வயதில் தந்தை நாராயணன் மாரடைப்பில் போய்விட்டார்...

    நல்லவேளையாக சொந்த வீடும், கிராமத்தில் குத்தகைக்கு விட்டிருந்த நிலமும் கைகொடுத்தது.

    பிளஸ்டூ படித்திருந்த ஜெயாவிற்கு அவர் பணிபுரிந்த மின்சார வாரியத்திலேயே வேலை கொடுக்கப்பட்டது... வேலை பார்த்துக்கொண்டே மேலே படித்தாள். மெல்ல ஒவ்வொரு உயரமாகக் கடந்து உயர்பதவியைத் தொட்டுவிட்டாள்... நான்கு வயதுக் கைக்குழந்தையுடன் எந்த உறவுமற்று தனிமையில் வாழ்க்கைப் படிகளை கடந்ததாலோ என்னவோ ஜெயா உள்ளுக்குள்ளேயே சுருங்கிப் போனாள்... நிதானமான அமைதியான போக்கே கம்பீரமாய் அடுத்தவரை இடைவெளியுடன் தள்ளி நிற்க வைத்தது.

    வளரவளர இந்து புரிந்து கொண்டாள். அவளை மாதிரியே கம்பீரமாக இருக்கக் கற்றுக் கொண்டாள். புத்தகங்களையே தன் தோழமையாக வைத்துக் கொண்டாள். அதுமட்டுமில்லாமல், தன்னாலான அளவிற்கு ஜெயாவின் மனஅமைதியைக் கெடுக்காமல் நடந்து கொண்டாள். நன்றாகப்படித்தாள். முதல் மாணவியாகத் தேறினாள்.

    பத்தாவது முடித்தவுடனேயே ஜெயா கேட்டாள்...

    என்ன ப்ளான் வச்சிருக்க...?

    ம்மா... எம்.பி.ஏ... எய்ம் என்றாள்.

    ஏன் பர்ஸ்ட் குரூப் எடுத்து எஞ்சினியரிங்... டாக்டருக்குப் படி என்று எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை.

    தேர்ட் குரூப் படித்தாள்... இதோ நகரின் தரம்வாய்ந்த பெரிய கல்லூரியின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறாள். வாயில் வரை காரில் வந்து இறக்கிவிட்டுப் போய்விட்டாள் ஜெயா.

    அடிவயிற்றில் மெல்லிய பயம் புல்லாங்குழல் வாசித்தாலும், அதையும் மீறி மனதிற்குள் சந்தோஷம் அலையடித்தது. அந்த சந்தோஷத்துடனேயே கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள்.

    முதல்நாள் என்பதால் சற்றுமுன்னதாகவே வந்துவிட்டாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்கள் மெதுவாக உள்நுழைந்து கொண்டிருந்தார்கள்.

    ஆழ்ந்து மூச்சை இழுத்தவள், மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். இண்டர்வியூக்காக வந்திருந்தபோது கல்லூரி நடந்து கொண்டிருந்தது. புல்வெளியில் கும்பலாகவும் தனித்தும் மாணவ மாணவிகள் படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள் - அத்தனையும் ரசித்துக் கொண்டே வந்தவள் கண்ணில்பட்டது அந்தப் பிள்ளையார்சிலை...

    பிள்ளையாரப்பா என்று தலையில் குட்டிக்கொண்டே மெல்ல வராண்டா படியேறியவள், யாரும் வராததால் அங்கேயே நின்றாள்.

    மெல்ல மெல்ல ஆண்களும் பெண்களுமாக சலசலக்கத் தொடங்கினார்கள். ஆனால் யாரும் அங்கே நிற்கவில்லை. திடீரென குழப்பமாக இருந்தது இந்துவிற்கு.

    அவளின் வகுப்பு எந்தப்பக்கம்...?

    அன்று அம்மாவுடன் வந்தபோது பி.பி.ஏ. வகுப்புகள் எந்தப்பக்கம் என்று தெரிந்துகொள்ளாமல் போய்விட்டாள்.

    எக்ஸ்கியூஸ் மீ குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

    அவன் நின்றுகொண்டு இருந்தான். பார்த்த நொடியில் மனதில் பதிந்து போனான். நான் நல்ல நண்பன். என்று சொல்லும் மென்மையான முகம். அதற்குப் பொருந்தாத கம்பீரமான உடல்கட்டு.

    அவனின் உடல்கட்டும் உயரமும் லெக்சராக இருப்பாரோ என்று எண்ண வைத்தது... ஸாரி என்று பரபரப்பாக தள்ளி நின்றாள்.

    அவளின் குழப்பமான முகத்தைக் கவனித்தவன்.

    எனி ஹெல்ப்

    எஸ்... க்ளாஸ் ரூம்ல்லாம்...? வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தினாள்.

    வாங்க... நான் அங்கதான் போறேன் என்று முன்னே நடந்தான்...

    கொஞ்சதூரம் போனதுமே பெயர் பலகை தெரிந்தது.

    திரும்பி... விச் கிளாஸ் என்றான்.

    பி.பி.ஏ

    இதுதான்

    மெதுவாக உள்ளேநுழைந்தவள் அப்போதுதான் கவனித்தாள்... அங்கே ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர் இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் குழம்பியவளுக்கு கிளாஸ்களுக்குச் செல்ல வேறுவழி இருக்கும் போலும்... கட்டாயம் வழிகாட்டி வைத்து இருப்பார்கள். இயற்கையை ரசித்துக்கொண்டே அவள்தான் தவறவிட்டிருக்கிறாள்.

    எக்ஸ் கியூஸ் மீ மீண்டும் அவன் குரல் அருகே கேட்டது.

    திரும்பியவள் முன் நீண்டது அவன் கை சரண்... பர்ஸ்ட் இயர் பி.பி.ஏ

    இவன் லெக்சரர் இல்லையா...? நினைத்துக் கொண்டே இந்து என்று நீட்டிய கையை மென்மையாகத் தீண்டினாள்.

    அன்று கொடுத்த அவள் கையை அவனும், அவன் கையை அவளும், மனதிற்குள் இறுகப்பிடித்துக் கொண்டார்கள்...

    வரும்போது பஸ்ஸில் வந்துவிட்டு... நாளையிலிருந்து வண்டியில் போய்க்கொள்ளலாம் என்றிருந்தாள் ஜெயா...

    மாலை வகுப்புகள் முடிந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தவளின் பக்கத்தில் வந்து நின்றது அந்தபைக்...

    இந்து எங்க போகணும்?... டிராப் பண்ணட்டுமா

    இல்லை சரண்... பஸ்ஸில போய்க்கிறேன்

    ஓ... கமான்யா... நானா சுமக்கிறேன்

    ஏறிக்கொண்டாள் இந்து... இவன் நல்லவனா...? கெட்டவனா...? என்று எந்தக் கேள்வியும் எழவில்லை. எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே நட்பு இருக்கும், வாழும்.

    வண்டியில் வரும்போதுதான் அவனைப்பற்றி சொன்னான்... சின்ன வயதிலேயே இழந்துவிட்ட அம்மா பற்றி, மிகப் பெரிய தொழிலதிபரான அப்பாபற்றி... வீட்டில் எல்லாமாக இருக்கும் விதவையான அத்தை பற்றி... அவனைப் போலவே அவளும் எல்லாம் சொன்னாள். அம்மா பற்றி... இறந்துபோன அப்பா பற்றி... தங்களுக்கென்று யாரும் இல்லாதது பற்றி...

    அன்று வீட்டின் முன்வந்து இறக்கிவிட்டான் இதுதான் வீடா

    ஆமாம்... உள்ளே வாயேன்

    இல்ல... இன்னொருநாள் வரேன்

    பை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெயா அன்று சீக்கிரமே வந்திருந்தாள். அணிந்திருந்த வயலட்டில் மஞ்சள் பூக்கள் பூத்திருந்த நைட்டி அவளுக்கு மிக அழகாக பொருந்திப்போவதை கவனித்துக்கொண்டே... ம்மா என்றாள் ஆச்சரியத்துடன்.

    இன்னக்கு ஆபீஸ் ஏரியாவுல ஊர்வலம். மாட்டிக்கக் கூடாதுன்னுட்டு சீக்கிரமே வந்துட்டேன்... எப்படி இருந்துச்சு ஃபர்ஸ்ட் டே க்ளாஸ்?

    பைன்மா... ரொம்ப பிரெண்டிலியாகப் பழகுறாங்க... இன்னும் புதுபுது பசங்கல்லாம் சேர்ந்துகிட்டு இருக்காங்க

    சொன்ன அவளையே புன்னகையுடன் பார்த்தவள் கேட்டாள். யார் இந்து அது...?

    ப்ரெண்ட்மா என்றாள் இந்து...

    அந்த பரெண்ட்மாவைக் கேட்ட ஜெயா ஆச்சரியப்பட்டுப் போனாள் அதை இந்து அழுத்தமாகக் கூடச் சொல்லவில்லை... ஒரு பூ மலர்வதுபோல் இயல்பாகச் சொன்னாள்.

    அதுவரை அவள் படித்த இத்தனை நாட்களில் ஒரு ஆணோ, பெண்ணோ, சிநேகிதர்கள் என்று அவர்கள் வீட்டுப் படியேறியதில்லை. எந்தப் பெயரும் இந்துவிடம் இருந்து என்னோட ப்ரண்ட் அறிமுகப்படுத்திக் கொண்டதும் இல்லை... கோஸ்ட்டி, சினிமா வெளியிடங்கள் என்று யார்கூடவும் போனவளும் இல்லை...

    ஒன்று பாடப்புத்தகம் கையில் இருக்கும் இல்லையென்றால் கதைப்புத்தகம் இருக்கும்... இல்லையென்றால் எதாவது மென்மையான சங்கீதம் மிதமான ஒலியளவில் ஓடிக்கொண்டிருக்கும்...

    அப்படிப்பட்டவள் இப்போது ப்ரெண்ட் என்று சொல்கிறாள் என்றால் எந்தளவிற்கு அவள் மனதின் உயரத்தில் நிறுத்தி இருக்க வேண்டும் என்பதை ஜெயா புரிந்து கொண்டாள்...

    அதுமட்டுமல்ல ஜாக்கிரதை என்று இந்துவிடம் சொல்லவில்லை. இதுவரை எப்போதும் அப்படி எந்த எச்சரிக்கையும் தாயாக செய்ததில்லை... காட்டுச் செடியைப் போல தன்னிச்சையாக வளரட்டும் என்றுதான் விட்டிருந்தாள்...

    அவளாகவே நல்லது கெட்டது தெரிந்து வளரட்டும் என்று விட்டிருந்தாள். ஆனால் இந்து அவளை எதுவும் கேட்டதில்லை... கேட்டு தொல்லைப்படுத்தியதில்லை... அவளுக்கென்று இருக்கும் ஒரே

    Enjoying the preview?
    Page 1 of 1