Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vainavam Thantha Bakthi Kathaigal
Vainavam Thantha Bakthi Kathaigal
Vainavam Thantha Bakthi Kathaigal
Ebook208 pages1 hour

Vainavam Thantha Bakthi Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வைணவ சமயத்தில் ஏராளமான பக்திக்கதைகள் உள்ளன. அவற்றில் பிரபலமாக விளங்கும் கதைகளை தேர்வு செய்து எளிய நடையில் உங்களுக்காக எழுதியுள்ளேன். இந்த பக்திக்கதைகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை. சுவாரசியமானவை. இப்புராணக் கதைகளை வாசித்து மகிழுங்கள். நாராயணனின் அருளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580138809742
Vainavam Thantha Bakthi Kathaigal

Read more from R.V.Pathy

Related to Vainavam Thantha Bakthi Kathaigal

Related ebooks

Reviews for Vainavam Thantha Bakthi Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vainavam Thantha Bakthi Kathaigal - R.V.Pathy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வைணவம் தந்த பக்திக் கதைகள்

    Vainavam Thantha Bakthi Kathaigal

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வைணவம் தந்த பக்திக் கதைகள்

    அதிசய மீன்

    நம்மாழ்வார்

    கூரேசர்

    எம்பார்

    கூரேசர் கேட்ட வரம்

    உறங்காப்புளி

    திருப்பாணாழ்வார்

    பிரகலாதன்

    சிறந்த பக்தன் யார்?

    அனந்தாழ்வார்

    இங்கே அல்லது அங்கே

    உறங்காவில்லி

    நம்பாடுவார்

    அத்துழாய்

    யாருக்கு மோட்சம் கிடைக்கும்?

    பெரியாழ்வார்

    மாயை

    நான் சுத்தமாகிறேன்

    பொன்னாச்சி

    கஜேந்திர மோட்சம்

    திருவரங்கத்தமுதனார்

    கறுப்பு நெல்

    ஆசையற்ற மனம்

    யதோத்காரி

    ஓட்டைக்குடம்

    கணிகண்ணன்

    திருப்பணி

    ஓம் நமோ நாராயணா

    பரசுராமர்

    இராமர் செய்த சிவபூஜை

    லவன் குசன்

    குசேலர் கதை

    வாமனர்

    சாப விமோசனம்

    வரதர் காப்பாற்றினார்

    வராகம்

    நரசிம்மர்

    திருக்கோவிலூர் வைபவம்

    கள்ளபிரான்

    குலசேகரன்

    தீண்டாத பாம்பு

    ஒரே ஒரு பருக்கை

    விப்ரநாராயணன்

    வீரச்சிறுவர்கள்

    சூடிக்கொடுத்த சுடர்கொடி

    தெண்டம் பவித்திரம்

    பிரம்மசூத்திர உரை

    கூர்ம அவதாரம்

    கம்சன்

    ஸ்யமந்தக மாலை

    கருடாழ்வார்

    திருமாலிருஞ்சோலை

    குலசேகரன் படி

    வைணவம் தந்த பக்திக் கதைகள்

    வாசகர்களுக்கு வணக்கம். வைணவ சமயத்தில் ஏராளமான பக்திக்கதைகள் உள்ளன. அவற்றில் பிரபலமாக விளங்கும் கதைகளை தேர்வு செய்து எளிய நடையில் உங்களுக்காக எழுதியுள்ளேன். இந்த பக்திக்கதைகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை. சுவாரசியமானவை. இப்புராணக் கதைகளை வாசித்து மகிழுங்கள். நாராயணனின் அருளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.

    இந்த மின்னூலை வெளியிடும் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி. பதி

    அதிசய மீன்

    வேதங்களைக் காப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும். ஒரு சமயம் உலகம் பெரும் பிரளயத்திற்கு ஆட்பட்டது. இதனால் நீரில் மூழ்கி உலகம் அழிந்தது. உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து போய்விட்டன. அவ்வுலகத்தில் சத்தியவிரதன் என்றொரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு தலைசிறந்த திருமால் பக்தன். திருமாலை வணங்கி மகிழவே பிறவி எடுத்ததாய் நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தவன். அவனிடத்தில் திருமால் மிகவும் பிரியம் வைத்திருந்தார். எனவே நடக்க இருக்கும் பிரளயத்திலிருந்து அவனை மட்டும் காத்து அருள விரும்பினார்.

    ஒருநாள் சத்தியவிரதன் வழக்கம்போல ஆற்றின் அருகே திருமால் வழிபாடு செய்து கொண்டிருந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமாக ஆற்று நீரை இரு கைகளாலும் அள்ளினான். எதேச்சையாக அவன் தன் கைகளில் தேங்கியிருந்த நீருக்குள் ஒரு மீன் இருப்பதைக் கண்டான். அம்மீன் மற்ற மீன்களைப் போல அல்லாமல் மிகவும் அழகு வாய்ந்ததாகவும் தெய்வத்தன்மை பொருந்தியதாகவும் இருப்பதாய் அவன் உணர்ந்தான்.

    சிலநொடிகளில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அம்மீன் அவன் கண்ணெதிரிலேயே வளர்ந்தது. இதைக் கண்ட சத்தியவிரதன் வியப்புடன் அம்மீனை கரையில் பூஜைக்காக வைத்திருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டான். அம்மீன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. உடனே சத்தியவிரதன் அம்மீனை வேறொரு பெரிய பாத்திரத்தில் இட்டான். அதற்குள்ளும் அம்மீன் வளர்ந்து கொண்டே இருந்தது.

    அந்த அதிசய மீனை அருகில் இருந்த ஒரு குளத்திற்கு எடுத்துச் சென்றான். மிகவிரைவிலேயே அந்த அதிசய மீன் குளத்தின் அளவிற்கு பெரியதாக வளர்ந்து விட்டது. தொடர்ந்து ஏரியிலும் அதனைத் தொடர்ந்து கடலிலும் அம்மீனை விட்டான் சத்தியவிரதன்.

    கடலுக்குள் சென்ற அம்மீன் ஒரு வட்டமடித்து அவன் எதிரே எழும்பி நின்று பேச ஆரம்பித்தது.

    வியப்பு தாளாத மன்னன் அம்மீன் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.

    சத்தியவிரதனே. இன்றிலிருந்து ஏழாவது நாள் இவ்வுலகில் மிகப்பெரிய பிரளயம் ஒன்று நிகழ்ந்து உலகம் அழியவிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து போகும். அச்சமயத்தில் ஒரு படகு வெள்ளத்தில் மிதந்து வரும். நீ அதில் ஏறி அமர்ந்து கொள். அப்போது புயல் ஒன்று தோன்றி உன் படகை அசைக்கும். அச்சமயத்தில் நீ ஒரு கயிற்றை என் தலைமீது உள்ள கொம்பில் மாட்டிவிடு. அதன் பின்னர் உனக்கு ஏற்படும் அனைத்து ஐயங்களையும் நான் போக்குவேன். அப்போது நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ளலாம்.

    அம்மீன் சொன்னது போலவே சரியாக ஏழாவது நாள் ஒரு மிகப்பெரிய பிரளயம் உண்டானது. நீரில் தனது படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது ஒரு புயல் தாக்கியது. உடனே அம்மீன் மிகப்பிரம்மாண்டமாய் அவன் முன்னே தோன்றியது. அது சொன்னது போலவே ஒரு கயிற்றால் அம்மீனின் தலையிலிருந்த கொம்புடன் படகை இணைத்தான். மீன் அப்படகை இழுத்துச் சென்றது. அப்போது சத்தியவிரதன் கேட்ட கேள்விகளுக்கான விடையை அம்மீன் சொல்ல ஆரம்பித்தது.

    பிரளயம் நடந்தபோது பிரம்மதேவன் தூங்கிவிட்டார். அப்போது ஹயக்கிரீவன் என்றொரு அசுர அரக்கன் பிரம்மதேவனிடமிருந்த வேதங்களை அபகரித்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டான். உறக்கம் கலைந்து எழுந்த பிரம்மதேவன் வேதங்கள் திருடு போய்விட்டதை உணர்ந்து பெரிதும் வருந்தினார். வேதங்களைத் தொலைத்த காரணத்தினால் அவர் சக்தியற்றவராகி படைப்புத் தொழிலைச் செய்யும் தகுதியையும் அவர் இழந்து விட்டார். பிரம்மதேவனுக்கு திருமால் நினைவிற்கு வர உடனே அவரிடம் சென்று வேதங்கள் திருடுபோன விஷயத்தைத் தெரிவித்தார்.

    வேதங்களைக் காக்க முடிவு செய்த திருமால் உடனே மச்ச அவதாரத்தை எடுத்தார். நீருக்குள் சென்று அவ்வரக்கனை அழித்து வேதங்களை மீட்டுக் கொண்டு வந்தார்.

    வேதங்களைக் காக்க திருமால் இவ்வாறு மச்ச அவதாரத்தை எடுத்தார்.

    நம்மாழ்வார்

    திருக்குருகூர் என்று அழைக்கப்படும் ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் வைணவக் குடும்பம் ஒன்று இருந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்தவர் பொற்காரியார். இவருக்கு காரியார் என்றொரு மகன் இருந்தார். திருவண்பரிசாரம் எனும் நாட்டைச் சேர்ந்த திருவாழ்மார்பர் என்பவரின் மகளான உடையநங்கையை காரியாருக்கு மணம் செய்து வைத்தார்கள். இருவரும் திருக்குருகூரிலே சிலகாலம் வாழ்ந்து பின்பு திருவண்பரிசாரத்தில் சிலகாலம் வாழ்ந்தனர். மீண்டும் திருக்குருகூருக்குத் திரும்ப முடிவு செய்து திருக்குருகூருக்குப் புறப்பட்டார்கள். வழியில் திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருந்த நம்பி எனும் பெருமாளை இருவரும் வணங்கி குழந்தைச் செல்வம் வேண்டினர். நம்பியும் தாமே குழந்தையாய் வந்து பிறப்பதாய் வாக்குறுதி தந்தார்.

    திருக்குருகூருக்குத் திரும்பிய உடையநங்கை உரிய காலத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்ததிலிருந்து அழவும் இல்லை. பாலை அருந்தவும் இல்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்தார்கள். பெருமாளின் அருளால் பிறந்த குழந்தை என்பதால் கவலைகளை ஒழித்து பிறந்த பனிரெண்டாம் நாள் தெய்வக்குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி மாறன் எனும் திருநாமமிட்டு அழைத்தார்கள். திருவரங்கன் இவரை அன்பின் மிகுதியால் நம்முடைய ஆழ்வார் என்று அழைத்த காரணத்தினால் இவர் நம்மாழ்வார் எனும் திருப்பெயரைப் பெற்றார்.

    நம்மாழ்வார் தமது பதினான்கு வயது வரை தவவாழ்க்கையை மேற்கொண்டு மௌனம் காத்தார். வெயில் மழை என மாறி மாறி இவரது பூ உடலை தாக்கின. இவரது உடலோ அனைத்தையும் தாங்கியது. ஒரு சமயம் இவரது உடலிலிருந்து பேரொளி உண்டானது.

    திருக்கோளுர் எனும் ஊரில் ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்த மதுரகவி பெருமாளிடத்திலே அளவு கடந்த பக்தி கொண்டவர். இவர் புண்ணிய யாத்திரையை மேற்கொண்டு மதுரை, காஞ்சி, அவந்தி, துவாரகை, காசி, மாயை, அயோத்தி எனும் ஏழு புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். இராமபிரான் அவதரித்த அயோத்தி நகரை அடைந்தார். சரயு நதியில் நீராடி இராமபிரான், சீதை முதலானோரை வழிபட்டார். பின்னர் சிலகாலம் அயோத்தியிலேயே தங்கி இருக்க விருப்பப்பட்டு அங்கேயே தங்கி இராமபிரானை வழிபட்ட வண்ணம் இருந்தார்.

    ஒருநாள் மதுரகவிக்கு தன்னுடைய ஊர் பெருமாள் நினைவிற்கு வந்தார். அவரை தரிசிக்க விரும்பி அவர் இருந்த தென் திசையை நோக்கி திரும்பினார். அப்போது அத்திசையில் ஒரு ஒளிப்பிழம்பைக் கண்டார். அந்த ஒளிப்பிழம்பு நாளுக்கு நாள் சுடர்விட்டு பிரகாசிக்க ஆரம்பித்தது. இந்த ஒளிப்பிழம்பு சாதாரண ஒளியல்ல என்பதை உணர்ந்த மதுரகவி உடனே தென் திசை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தார். செல்லும் வழிகளில் எழுந்தருளியிருந்த திருமால் திருத்தலங்களுக்குச் சென்று பெருமாளை தரிசித்தபடியே திருக்குருகூரை வந்தடைந்தார். அந்த ஊரில் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா என்று விசாரித்தார். சிலர் புளியமரத்தடிக்குச் செல்லுங்கள் என்று சொல்ல மதுரகவியாழ்வாரும் அந்த புளியமரத்தடிக்குச் சென்றார்.

    அங்கே சென்று பார்த்தபோது பதினாறு வயது நிரம்பிய நம்மாழ்வாரைக் கண்டார். அவர் அருகே நெருங்கி அழைத்தார். அவர் கண்களைத் திறந்து பார்க்கவில்லை. எனவே அவர்முன் ஒரு சிறுகல்லை தூக்கி எறிந்தார். கல் சத்தம் கேட்டதும் கண் விழித்தார் நம்மாழ்வார். சக்தி வாய்ந்த அவருடைய கண்களை நேருக்கு நேராய் பார்த்த மதுரகவியாழ்வார் இவரே தாம் தேடிக்கொண்டிருக்கும் ஞானகுரு என்பதை உணர்ந்து கொண்டார். அக்கணமே மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார்.

    செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்

    எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

    இதன் பொருள் உடலைச் சேர்ந்த உயிரானது எதை அனுபவித்துக் கொண்டு எங்கே இருக்கும்? என்பதாகும். பிறந்தது முதல் அந்த நிமிடம் வரை ஏதும் பேசாது இருந்த நம்மாழ்வார் முதன் முதலாய் மதுரகவியாழ்வாரின் கேள்விக்கு பதிலளித்து மௌனம் கலைத்து அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார். இதன் பொருள் என்னவென்றால் அந்த உடலைச் சார்ந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அந்த உடலிலேயே கிடக்கும் என்பதாகும்.

    நம்மாழ்வாரின் இந்த பதிலால் ஆனந்தம் அடைந்த மதுரகவியாழ்வார் அவர் பாதங்களில் சரணடைந்து அவரது சிஷ்யரானார். நம்மாழ்வாரும் அவரை தம் சிஷ்யராய் ஏற்றுக்கொண்டார்.

    ஆழ்வார்கள் அனைவருக்கும் நம்மாழ்வார் தலைவராய் போற்றப்படுகிறார். இதன் காரணமாக இவரை உயிராகவும் மற்ற ஆழ்வார்களை உறுப்புகளாகவும் கருதி மகிழ்வது வைணவ வழக்கம். பூதத்தாழ்வாரை தலையாகவும் பொய்கை ஆழ்வார் மற்றும் பேயாழ்வார்களை கண்களாகவும் பெரியாழ்வாரை முகமாகவும் திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்

    Enjoying the preview?
    Page 1 of 1