Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatham Part 2
Mahabharatham Part 2
Mahabharatham Part 2
Ebook537 pages7 hours

Mahabharatham Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடிக்கிறது. இப்போரில் நடந்த நிகழ்வுகளை இந்திரா சௌந்தர்ராஜனின் அழகிய எழுத்துநடையில்....

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580100707801
Mahabharatham Part 2

Read more from Indira Soundarajan

Related to Mahabharatham Part 2

Related ebooks

Reviews for Mahabharatham Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatham Part 2 - Indira Soundarajan

    https://www.pustaka.co.in

    மகாபாரதம் – பாகம் - 2

    Mahabharatham Part - 2

    Author:

    இந்திரா சௌந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/Indira Soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. விராட பருவம்

    2. விராட தேசத்தில் பாண்டவர்கள்!

    3. கீசக வதம்

    4. விராடப்போர்

    5. விராடப் போரில் துரியோதனன்!

    6. பாண்டவர்களுக்கு விராட மன்னனின் பரிசு!

    7. அபிமன்யுவின் திருமணம்!

    8. துரியோதனனிடம் பிராமணர் தூது!

    9. துவாரகை வரவு

    10. கிருஷ்ணா... நீயே ஓர் ஆயுதம்! உனக்கெதற்கு மற்றோர் ஆயுதம்?

    11. சல்லியன்

    12. ஸ்ரீகிருஷ்ண தூது

    13. தர்மப்பழுது இல்லாத இடம்!

    14. கண்வ மகரிஷியின் சாபம்...!

    15. ஸ்ரீ கிருஷ்ணனைக் கைது செய்திட பெரிய சிறை ஏது?

    16. விஸ்வரூப தரிசனம்!

    17. கண்ணன் - கர்ணன் சந்திப்பு

    18. கிருஷ்ணன் சொன்ன கர்ணன் ரகசியம்!

    19. கண்ணனும் கர்ணனும்

    20. கர்ணன் - குந்தி சந்திப்பு!

    21. தாய்க்கே தானம் தந்த பிள்ளை...!

    22. ஸ்ரீகிருஷ்ணன் - விதுரர் சந்திப்பின் விளைவு...!

    23. கிருஷ்ண தந்திரம்

    24. போருக்கு ஆயத்தம்

    25. போர்க்களத்தில்...

    26. போர்க்கள நிலை

    27. பீஷ்மர் மீது சக்ராயுதம் ஏவ முனைந்த பரந்தாமன்!

    28. பீஷ்மரை வெல்ல அவரிடமே உபாயம் கேட்ட...

    29. அ(ன்)ம்புப் படுக்கை

    30. துரோணர் தலைமையில் போர்க்களம்!

    31. போர்க்களத்தில் பகதத்தன்...

    32. அபிமன்யுவை அழிக்க இத்தனை பெரியோர்களா?

    33. அர்ஜூனனின் சத்தியம்!

    34. அர்ஜூனனின் மயக்கம்!

    35. அர்ச்சுனன் ஞானி ஆனது...!

    36. ஸ்ரீ கிருஷ்ண வியாக்யானம்

    37. 14-வது நாள் யுத்தம்...

    38. ஜெயத்ரதன் வதம்...

    39. இரவுப் போர்க்களம்

    40. துரோணர் மாண்ட விதம்!

    41. அஸ்திரங்களின் தனித்தன்மை!

    42. கிருஷ்ணார்ஜூன ரதம்...

    43. கர்ணன் துரியோதனின் இறுதிப் பேச்சு!

    44. தப்பியது குறி, சிரித்தது சிரம்

    45. கர்ணனை இழந்த துரியோதனன்!

    46. மடுக்கரை மர்மம்

    47. கிருஷ்ண தந்திரமும் காந்தாரியின் கோபமும்

    48. காந்தாரி சாபமும், அஸ்வத்தாமன் சதியும்

    49. அஸ்வத்தாமனின் இறுதி அஸ்திரம்

    50. ஸ்ரீ கிருஷ்ணர் இட்ட சாபம்

    51. கிருஷ்ணன் பற்றற்ற... பற்றாளன்!

    52. காந்தாரி சபதம்

    53. ஆட்சியாளர்களுக்கு பீஷ்மர் உபதேசம்!

    54. நிறைவுப் பகுதி

    1. விராட பருவம்

    மகாபாரதத்தின் ஒரு முக்கிய பருவம் இது!

    கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று பன்னிரண்டு வருட காலம் வனவாசம் மேற்கொண்டு, அதிலும் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, அதே வேளையில் மிகச் சிறந்த பக்குவ நிலை பெற்றதெல்லாமும் இந்த பன்னிரண்டு வருட வன வாழ்க்கையில் தான்.

    காண்டவ ப்ரஸ்தத்தில் ராஜாக்களாக வாழ்ந்திருந்தால் நிச்சயம் இந்த பக்குவத்துக்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாய் அர்ச்சுனன் இந்திரலோகம் சென்று ஐந்து வருட காலம் அங்கே தங்கியிருந்து 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது.

    அனுமனை பீமன் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றிருக்க முடியாது. தர்மனின் நடுநிலையான குணமும் நியாயமும் நச்சு பொய்கை சம்பவம் மூலம் வெளியே தெரிய வராமலே போயிருக்கும்.

    திரௌபதியும் ஆதித்தனை வேண்டி அட்சய பாத்திரத்தைப் பெற்றிருக்க மாட்டாள். அதை மையமாய் வைத்து நடந்த சோதனையில் ஸ்ரீ கிருஷ்ணனின் கருணையும் கிட்டியிருக்காது.

    நகுல சகாதேவர்கள் இருவரும் வனவாசத்தில் புனித நீராடல்களை நிகழ்த்தியிருக்க மாட்டார்கள். காலத்தின் சக்தி தெரிய வந்திருக்காது.

    அவ்வளவு ஏன்?

    நள தமயந்தி புராணம் முதல் கௌசிக முனிவரின் தன்மை தொட்டு தருமவியாதன் எனும் புலால் வியாபாரி வரை பாண்டவர்கள் பல சங்கதிகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

    இவை எல்லாமே வனவாசத்தால் நேரிட்ட நன்மைகள்தான். வனவாசத்தின் முடிவில் 13-வது வருடம் முழுவதும் அக்ஞாத வாசம் எனும் பிறரால் கண்டறியப்படமுடியாத தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும் என்பது வனவாச விதி!

    அந்த விதியின்படி அவர்கள் இப்போது அக்ஞாத வாசம் வாழ்ந்தாக வேண்டும்.

    சொல்லப்போனால் இந்த அக்ஞாதவாசம் தான் மகாபாரதத்தில் தனிச்சிறப்பு கொண்ட ஒரு பகுதியாகும். பாண்டவர்கள் அவ்வளவு பேரும் துரியோதனனின் எதிரியான விராட நாட்டு மன்னன் விராடனிடம் சென்று சேர்ந்து தங்கள் அக்ஞாத வாசத்தை அங்கே கழிக்க முடிவு செய்கின்றனர். வேறு எங்கே சென்று தலைமறைவாக திகழ்ந்தாலும் துரியோதனன் கண்டுபிடித்து விடுவான். அவன் அப்படி கண்டுபிடித்து விட்டால் பாண்டவர்கள் வனவாசத்தில் தோற்றவர்கள் ஆகி திரும்ப வனவாசம் மேற் கொள்ளும் ஆபத்தெல்லாமும் உண்டு.

    விராடன் தான் துரியோதனின் பெரும் எதிரி. அம்மட்டில் எதிரியின் எதிரி நமக்கு நண்பன் எனும் அடிப்படையில் மச்ச நாட்டில் விராடன் அவையில் ஒளிவதே புத்திசாலித்தனமான ஒன்றாக பாண்டவர்களுக்கு தோன்றியது.

    குறிப்பாக, தர்மனுக்கு தோன்றியது. ஏனென்றால் பாண்டவர்கள் மேலும் குறிப்பாய் தர்மன் மேல் விராடன் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். துரியோதனன் பாண்டவர்களை சூதில் வென்று அனுப்பியதை அறிந்து வருத்தத்திலும் இருந்தான்.

    பாண்டவர்கள் நேராகச் சென்று விராட மன்னனிடம் தஞ்சம் புகுந்தாலே போதும். பாண்டவர்களுக்காக விராடன் துரியோதனன் மீது போர் புரியக் கூட தயங்க மாட்டான். அப்படி ஒரு மதிப்பும் ஈடுபாடும் விராடனுக்கு பாண்டவர்கள் மேல் இருந்தது. ஆனால், வனவாச விதிப்படி எவர் தயவையும் நேரடியாகப் பெற்று வாழவோ அல்லது விதிகளை மீறி தன்னிச்சையாக சரச போகமாக செயல்படுவதோ பெரும்பிழையாகும். தர்மன் எப்போதும் விதிகளுக்கு மாறாக நடக்க விரும்பாதவன் எனவே அக்ஞாத வாசத்தை அவன் தனக்கே உண்டான அற வழியில் மேற்கொள்ள தீர்மானித்தான்.

    திரௌபதி உள்ளிட்ட தன் சகோதரர்களிடம் விராட நாடும் விராடனுமே நாம் அக்ஞாதவாசம் வாழ்ந்திட மிக தோதானவர்கள் என்று கூறவும் பீமன் முதல் சகலரும் அதை மறுபேச்சின்றி ஆமோதித்தனர்.

    அதனைத் தொடர்ந்து யார் யாருக்கு என்ன வேடம் என்பது முதல் விராடனின் அவையில் எப்படி செயலாற்றுவது என்றும் திட்டமிடத் தொடங்கினார்.

    தர்மன் தன்னை முதலில் எப்படி மாற்றிக் கொள்வது என்பது பற்றி சிந்தித்து நான் விராடன் அவையில் கங்கன் எனும் பெயரில் விராடனின் கேளிக்கை அவையின் தலைவனாக என்னை பணித்துக் கொண்டு அவனோடு நான் தினமும் பரமபதம் முதல் பல்லாங்குழி வரை விளையாடுவேன். அவசியம் நேரும் பட்சத்தில் காய்களை உருட்டி சூதாடவும் செய்வேன் என்றான்.

    அண்ணா எடுத்த எடுப்பில் கேளிக்கை அவை தலைவனாக விராடன் உங்களை எப்படி சேர்த்துக் கொள்வான். நாம் இப்போது அகதிகள் போலல்லவா உள்ளோம் என்று கேட்டான் அர்ச்சுனன்.

    சரியாகக் கேட்டாய் அர்ச்சுனா! நாம் நம் உண்மைப் பெயரை கூறினாலே போதும். உதாரணமாக நான் தர்மன் என்னையே நான் தர்மனின் நண்பன் என்றும் வாழ்க்கைப் பாட்டை விராட மண்ணில் கழிக்க விரும்புவதாகவும் கூறினாலே போதும். நம்மை மிக மதிப்பவன் விராட மன்னன் என்றான் தர்மன்.

    இதன்படியே அடுத்து பீமனும் நான் பீமனின் தோழன், தர்மனின் அன்புக்கு பாத்திரமானவன் என்று கூறிக்கொண்டு விராடனின் சமையல்காரனாகி எனக்கே உரித்தான சமையல் கலையைக் காட்டி விராடனைக் கட்டிப் போட்டுவிடுவேன். சமையல் காரனுக்குண்டான தோற்றத்தோடு நான் வல்லவன் எனும் பெயரில் செல்கிறேன் என்றான் பீமன்.

    அர்ஜுனா நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்ட தர்மனை அர்ஜுனன் சற்று சிந்தனையோடு பார்த்தான்.

    என்ன யோசனை... உனக்கேற்ற பணி எது என்பது குறித்து யோசிக்கிறாயா...? நீ விராடனின் படை வீரர்களுக்கு வில் பயிற்சி, வாள் பயிற்சி அளிக்கலாமே...

    அதுவும் சரிதான். ஆனால் என் திறமையை வைத்தே என்னை துரியோதனன் கண்டுபிடித்து விடுவானே?

    என்றால் உனக்கு சம்பந்தமேயில்லாதபடி நீ உருமாறிட வேண்டும்...

    நான் மட்டுமல்ல. எல்லோருமே நம்மை அப்படி மாற்றிக் கொள்ள வேண்டும். 12 வருட வனவாசத்தில் நம்மை அழிக்க பல்வேறு உபாயங்களைக் கையாண்டு பார்த்து அதில் தோற்று விட்ட துரியோதனன் நம்மை எப்போதும் வனவாசிகளாகவே வைத்திருக்க விரும்புகிறான். அதற்காக அவன் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது இந்த அக்ஞாத வாசத்தைத்தான்...

    என்றால் நம் தோற்றம் பேச்சு செயல் என்று சகலத்திலும் நாம் இன்னொரு பிறப்பையே எடுத்தாக வேண்டுமல்லவா?

    நிச்சயமாக... அதுவே நமக்கு பாதுகாப்பு. அதுவே நமக்கு எதிர்காலம். அம்மட்டில் நான் என்னை ஆணுமற்ற பெண்ணுமற்ற அரவாணியாக ஆக்கிக் கொள்வதே உசிதம்

    அர்ஜுனா... என்ன பேச்சு இது? நீ பேரழகன் - பெருங்கலைஞன். இந்திர தேவன்... மானுடன் எவர்க்கும் வாய்த்திடாத தேவலோக வாழ்க்கை வாழ்ந்தவன்... உன்னை மாவீரனாக்கிக் கொள்ளாமல் இது என்ன வினோத எண்ணம்?

    இது வினோதம் தான். ஆனால் இதுவே எனக்கு பாதுகாப்பு. இந்திர லோகத்தில் என் அன்னையையொத்த ஊர்வசியால் நான் அரவாணியாகிடும் ஒரு சாபம் என் கணக்கில் இன்னமும் பற்றில் தான் உள்ளது. அதை நான் விரும்பும் சமயம் அனுபவித்துக் கொள்ள இந்திரன் எனக்கு வசதி செய்து கொடுத்துள்ளார்…

    என்றால் உனது வேடம் அரவாணியா?

    ஆம்… அந்த வேடத்திற்கு ஏற்ப என் பெயரையும் பிருகன்னளை என்று மாற்றிக் கொள்ள உள்ளேன். அரவாணியர்க்கே உரித்தான ஆடல் பாடல் கலையினை அரசகுமாரத்திகளுக்கு கற்பித்து அப்படியே அந்தப்புரத்திலேயே இருந்து விடுவதுதான் எனக்கு ஏற்புடையது...

    ஒரு வகையில் இதுவும் நல்ல யோசனையே... நகுலா சகாதேவா... உங்கள் மாற்றம் எப்படிப்பட்டது?

    அண்ணா... நான் தர்மகிரந்தி எனும் பெயருடன் குதிரைப் படை கண்காணிப்பாளனாகி குதிரைகளின் நலன் பேணி அவைகளின் அன்புக்கு பாத்திரமாகிடச் சித்தம்...

    நல்ல முடிவு... உனக்கேற்ற பணிதான்! உன் பெயரும் ஷத்திரிய படை வீரர்களுக்கு பொருத்தமானதாகவே உள்ளது...

    அதுமட்டுமல்ல... இந்த ஓராண்டில் நான் பெற்றிடும் பயிற்சி வரும் நாளில் துரியோதனனை எதிர்க்க நேரிடும் பட்சத்தில் யுத்தத்திலும் எனக்கு கைகொடுக்கும்...

    சகாதேவா... நீ என்ன செய்யப் போகிறாய்...?

    அண்ணா... நகுலனுக்கு குதிரைகள்... எனக்கு பசுக்கள்...! ஒரு மன்னன் பெரிதும் போஷிக்க விரும்புவது பசுக்களைத்தானே? பசுக்கள் எவ்வளவு உள்ளது என்பதை வைத்துத்தானே ஒரு மன்னனின் செல்வாக்கும் முடிவு செய்யப்படுகிறது...?

    பசுக்கள் பரமாத்மாவிற்கு இணையானவை. கவனமாய் போஷிக்க வேண்டும். காலஞானியான உனக்கு அவைகளின் சேவை பெரும் புண்ணியத்தையும் சேர்த்திடும்...

    அதனாலேயே தந்திரிபாலன் என்னும் பெயரில் நான் விராட நாட்டு பசுக்களின் போஷகனாக தீர்மானித்து விட்டேன். அதற்கேற்ப உடையணிந்து கையிலும் கோலைப் பிடித்துக் கொண்டு எனக்கு மிக உகந்த நேரம் பார்த்து சென்று மன்னரைச் சந்தித்தால் என் காரியம் ஜெயமாவது நிச்சயம்.

    நீ செல்லும் நேரம் பார்த்து நாங்களும் வருகிறோம். நாம் அவ்வளவு பேருமே பாண்டவர்களை தேடிக் கொண்டு வந்த பாண்டவ தோழர்கள் என்போம். நாம் அக்ஞாத வாசம் மேற்கொள்ள இருப்பது விராடனுக்கும் தெரிந்திருக்கும். எனவே நம்மை ஒருக்கால் அவன் உணர்ந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டான்...

    அண்ணா... விராடனை நாம் தர்மசங்கடப்படுத்த வேண்டாம். தனித்தனியாக உகந்த வேளை பார்த்துச் சென்று சேர்வோம். விராடனைப் பார்த்துத்தான் பணியில் இணைய வேண்டும் என்றில்லை. அமைச்சர்கள், தளபதிகள், நிர்வாக அதிகாரிகள் மூலமாகவும் நாம் பணியில் சேரலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் நாம் அரசாங்க வரி மனையின் மண்டபத்தில் காத்திருந்தாலே போதும். நாம் அரசாங்கப் பணிக்காக காத்திருப்பது செய்தியாக சென்று சேர்ந்துவிடும். நமக்கு சில சோதனைகள் நிகழக்கூடும். அவைகளை வெற்றி கொள்வோம்...

    எல்லாம் சரி... நாம் ஐவரும் கங்கன், வல்லவன், பிருகன்னளை, தர்மகிரந்தி, தந்திரிபாலன் என்று நமக்கு நாமே வழியைப் பார்த்துக் கொண்டு விட்டோம். நம்மையே நம்பி நமக்காகவே வாழ்ந்தபடி இருக்கும் நம் அருமைப் பத்தினி திரௌபதிக்கு என்ன வழி?

    தர்மன் திரௌபதியை நெருங்கி மௌனமாய் நிற்கும் அவள் கரத்தைப் பற்றியபடியே கேட்டான்.

    ப்ரபோ... நீங்கள் ஆளுக்கொரு வேடம் போட முடிவெடுத்து அதற்கேற்ப உங்களை தயார் படுத்திக் கொள்ளும் போதே நானும் எனக்கேற்ற பணியை தேர்வு செய்து கொண்டு விட்டேன். விராடன் மகள் தொட்டு அவர் குடும்பத்து பெண்டிருக்கு நானே இனி அலங்காரி. என் பெயரும் சைரந்திரி. அவர்களின் கூந்தலை வாரிவிட்டு, பூச்சூட்டி திலகமிட்டு அவர்களையெல்லாம் ரூபவதிகளாக்குவதே, இனி என் கடன்...

    "சரியாக சொன்னாய்... இப்பணி நம் கடனே! நாம் என்னதான் சந்திர குலத் தோன்றல்களாய் பஞ்ச பூதாதியர்களின் பிள்ளைகளாய், பரமாத்மாவான கண்ணனுக்கே தோழர்களாய் திகழ்ந்த போதிலும் கௌரவர்களுக்கு நாம் பகையாகிப் போனது வினைவழிச் செயல்பாடே... அதன் தொடர்ச்சியால் தான் வனவாசிகளானோம். நாடோடிகள் போல் திரிந்தோம். இப்போது அடிமட்டப் பணியாளர்களாகவும் காலம் ஆக்கப் போகிறது.

    வாழ்வின் இன்ப துன்பங்களை சகல முனைகளிலும் நாம் பார்த்து வருகிறோம். நம் வரையில் பெரிதென்றும் சிறிதென்றும் எதுவுமில்லை. அரிதென்றும் உயரியதென்றும் கூட எதுவுமில்லை. எல்லாமே மாறுவதுதான் வாழ்வு. சுருக்கமாய் சொன்னால் மாற்றங்களே வாழ்வாகிறது. வாழ்வதே மாற்றங்களால் தான்.

    அந்த மாற்றங்கள் சில சமயம் நம் விருப்பத்திற்குரியதாக உள்ளது. பல சமயம் எதிராக உள்ளது. எப்படி இருந்தாலும் நாம் வாழ்ந்து பார்த்தாக வேண்டும். நம் உடம்பின் உயிரணுவானது தாயின் கருப்பையில் இயங்கத் தொடங்கி வளர்ந்து செழித்து நடுநாள் உடம்பைவிட்டு பிரியவும் போகிறது. அதுவரை நாம் வாழ்ந்துதான் தீரவேண்டும்..." - என்று தர்மன் தத்துவமாய் தங்கள் நிலைப்பாட்டை கூறிடவும் அதைக் கேட்டபடியே வந்தார் தௌமிய மகரிஷி.

    அவர்களும் தௌமியரை பணிந்து வணங்கினார். பின்னர் "முனிவரே... சரியான சமயத்தில் தான் வந்துள்ளீர்கள். எங்கள் வனவாழ்வு முடியப் போகிறது. இன்னும் பதினோரு தினங்களில் நாங்கள் அக்ஞாத வாழ்வுக்கு எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    எவராலும் கண்டறியப்பட முடியாதபடி உருமாறி அதே சமயம் அந்த வேடத்திற்கேற்ப வாழ்ந்தாக வேண்டும். அதன் பொருட்டு விராட மன்னன் அவையில் சூதாடி, நாட்டியக்காரன், சமையல்காரன், குதிரைக்காரன், பசுக்களின் போஷகன், அலங்காரி எனும் ஆறுவித செயல்பாடுகளுக்கு ஆட்பட இருக்கிறோம். அதில் நாங்கள் வெற்றிகரமாய் செயல்பட உங்கள் ஆசிகள் வேண்டும்..." என்று அவரை மீண்டும் பணிந்தான் தர்மன்.

    மற்றவர்களும் பணிந்திட தௌமியரும் அவர்களை ஆசீர்வதித்தவராக விராடன் அவையில் நீங்கள் சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் - உங்களால் அக்ஞாதவாசத்தை பிசிறுகள் இன்றி முடிக்க முடியும் என்றார் தௌமியர். பின் அவரே கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் கூறத் தயாரானார்!

    2. விராட தேசத்தில் பாண்டவர்கள்!

    தௌமிய முனிவர் பாண்டவர்களுக்கு அறிவுரை கூறினார் எனும் போதே பாண்டவர்களுக்கு அறிவுரை தேவையா? அவர்களால் சரியாக நடந்து கொள்ள முடியாதா போன்ற கேள்விகள் எழலாம்.

    தௌமியரின் அறிவுரை பாண்டவர்களை சாக்கிட்டு மானுடர்கள் அவ்வளவு பேருக்கும் அருளப்பட்டதாக கொள்ள வேண்டும். இந்த அறிவுரைகள் சாதாரண அறிவுரைகள் அல்ல... மிக நுட்பமான அறிவுரைகளாகும்.

    இதை மிகக்கூர்ந்து கவனித்தாலே புரிந்து கொள்ள முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த அறிவுரைகள் அத்தனை பெரிதாய் தெரியாது. அவ்வளவு ஏன்? அறிவுரை போலவே கூட தெரியாது.

    முதல் அறிவுரை அரசனின் அனுமதி கிடைத்த பிறகே அவனை சந்திக்க உள்ளே செல்ல வேண்டும் என்பது ஆகும். ஒருவர் விரும்பாத நிலையில் யாரும் சம்பந்தப்பட்டவரை சந்திக்கப் போவதில்லை. எனவே இதில் பெரிதாய் என்ன நடந்துவிடப் போகிறது என்று கேட்கத் தோன்றலாம்.

    ஆனால் பல சாம்ராஜ்யங்கள் இதனால் யுத்தத்தை சந்தித்து வீழ்ந்துள்ளன. இதனாலா என்று நம் புருவம் வளையலாம். ஆனால், ஓர் அரசனை விறுவிறுவென்று சந்திக்கச் சென்றபோது அவன் தன்னை மறந்து ஏகாந்த நிலையில் இருக்க அந்தக் கோலத்தில் அவனைப் பார்த்து விடவும் அவன் பதைத்துப் போனான். அதன் காரணமாய் உருவான கோபம் யுத்தத்தில் முடிந்து அந்த யுத்தத்தில் நாடும் பறிபோயிற்று.

    எனவே, அரசன் என்று வந்துவிட்டால் அவன் அனுமதி பெற்றே சந்திக்க வேண்டும். அதேபோல் அந்த அரசன் விரும்பிடும் எந்த ஒரு பொருள் மீதும் நாம் ஆசை படக்கூடாது. அப்படி நாம் ஆசைப் பட்டால் அவனுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடும். முக்கியமாக அவன் கேட்காத நிலையில் எதையும் சொல்லவும் கூடாது. சில சமயங்களில் நாட்டு நலன் கருதி சொல்லித்தான் தீரவேண்டும் என்றால் அதை சொல்ல அனுமதி கேட்க வேண்டும். அனுமதி பெற்று பின் சொல்ல வேண்டும்.

    அடுத்து மிகச் சிறிய ஒரு காரியத்தைக் கூட அரசனின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும். அரசனின் அந்தப்புரத்தில் திரைச் சீலைகளை மாற்ற வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால் அதைக் கூட அரசனிடம் கூறி அவன் சரி என்ற பிறகே மாற்ற வேண்டும்.

    இவ்வளவு முன் ஜாக்கிரதை எதற்கு? அவனும் நம்மைப் போல மனிதன் தானே என்று தோன்றலாம். இருக்கலாம்... ஆனாலும் அரசன் என்பவன் பல கோடி பேரில் ஒருவன். எனவே அவன் எரியும் நெருப்புக்கு சமமானவன். இதை மறந்து விடக் கூடாது.

    நெருப்பானது தன்னைத் தீண்டுபவர்களிடம் தராதரம் பார்க்காது.

    ஓர் அரசனும் அப்படியே நடந்து கொள்வான். தன் வரையில் வரம்பு மீறுபவர்கள் மனைவியாய், மகளாய், மகனாய் என்று எந்த உறவோடு இருந்தாலும் சகிக்க மாட்டான்.

    அதேபோல ஓர் அரசன் முன்னால் கை கட்டிக் கொண்டு அநாவசியமாக நிற்கக் கூடாது. பேச வேண்டியதை பேசிவிட்டால் கிளம்பி விட வேண்டும்.

    அரசனின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் கால நேரம் பார்க்கக்கூடாது? நள்ளிரவில் கட்டளையிட்டாலும் அதை செய்து முடிக்க வேண்டும்.

    அரசனைச் சார்ந்த அமைச்சர்களிடமும். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அரசனைச் சார்ந்த அமைச்சர்கள், தளபதிகள் குறித்து அரசனிடம் கோள் சொல்லுதல் கூடாது.

    அரசனால் ஏற்படும் மகிழ்வு துக்கம் இரண்டையும் சமமாக கருதிட வேண்டும். இதுவே அரசனிடம் பணி புரியும்போது மிக முக்கியமாகும். இதில் நாம் சமநிலை தவறினால் மிக வருந்த வேண்டியவர்களாகி விடுவோம்.

    அதே போல் அரசன் நம்மோடு பேசிய விஷயங்களை அப்படியே பிறரிடம் பேசுதல் கூடாது. குறிப்பாய் அந்தரங்கமாக பேசியதை பேசவே கூடாது. அதைவிட முக்கியம், அரசனின் அந்தப்புர பெண்களின் தொடர்பு... அவர்களோடு பழகுதல் கூடவே கூடாது.

    எந்த நிலையிலும் அரசனின் நடை உடை பாவனைகளை பிறர் அறிய செய்து காட்டுவதும் கூடாது. இதை மட்டும் அரசன் அறிந்தால் அவன் மிக வேகமாக பணி நீக்கம் செய்து நாடு கடத்தவும் கூட உத்தரவிட்டு விடுவான்.

    அரசனின் உறவினர்களோடும் கவனமாகப் பழக வேண்டும். இவர்கள் எவரிடமும் நெருங்கிப் பழகுதல் கூடவே கூடாது. அரசனின் நெருக்கமான உரையாடல்களையும் தவிர்த்துவிட வேண்டும்.

    மேற்சொன்ன அறிவுரைப்படி நடந்து கொண்டால் உங்கள் அக்ஞாத வாச காலம் அற்புதமான காலமாக அமைந்து நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று தெளமிய முனிவர் பாண்டவர்களை வாழ்த்தி அருளினார்.

    பாண்டவர்களும் தங்கள் அக்ஞாத வாசம் எனும் தலை மறைவு காலம் நோக்கி ‘காம்யகம்’ என்ற அந்த வனத்தில் இருந்து விராட நாடு நோக்கி செல்லத் தொடங்கினர். எச்சரிக்கையாக தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தின் கீழ் பிறருக்குத் தெரியாதபடி குழி தோண்டி பெட்டி ஒன்றில் வைத்து புதைத்து வைத்துவிட்டே புறப்பட்டனர்.

    தர்மன் தன்னை ஒரு பிராமணன் போல வேடமிட்டுக் கொண்டான். பஞ்சகச்சம், மார்பில் அங்கவஸ்திரம், கழுத்தில் துளசி மாலை, மார்பில் பூநூல், சிரசில் மரவுரி, நெற்றியில் கோபி சந்தனம், காலில் கட்டைச் செருப்பு என்று அருமையான யாத்ரிக பிராம்மணனின் தோற்றம்.

    தர்மனை விராட மன்னன் வரவேற்று விசாரித்தான்.

    பிராம்மணரே தாங்கள் யார்

    அரசே என் பெயர் கெங்கன். நானொரு பிராம்மணன். சொக்கட்டான் ஆடுவதில் மிக விருப்பம் உடையவன். அதனாலேயே வறியவனும் ஆனவன்! என்றான் தர்மன்.

    விராட மன்னனிடம் வியப்பு!

    நான் பஞ்ச பாண்டவர்களின் மூத்தவனான தர்மனுக்கு மிக வேண்டப்பட்டவன். எனக்கு ஓர் ஆண்டு சற்று போதாத காலம். அதனால் பாதுகாப்பாய் உங்கள் நிழலில் இருக்க விரும்புகிறேன். தாங்கள் மறுப்பேதும் கூறாமல் ஆமோதிக்க வேண்டும் என்றான்.

    தர்மனைப் பார்த்த விராடனுக்குள்ளேயும் ஒரு பரிதாப உணர்வு, அப்படியே ஆகட்டும் என்றான் உடனே! இப்படித்தான் அவன் கூறுவான் என்று முன்பே கூறியிருந்தான் கால ஞானியான சகாதேவன். அது அப்படியே பலித்துவிட்டது!

    தர்மனுக்கும் விராடனிடம் ‘தனாதிகாரி’ எனும் பணி உத்தரவும் கிடைத்துவிட்டது.

    அடுத்து சகாதேவன் சொன்ன நேரத்தில் விராட மன்னன் முன்னால் மத்து, அகப்பை, கரண்டி என்று சமையல்காரன் வேடத்தில் வந்து நின்றவன் பீமன்!

    அரசனும் அவனிடம் பேசத் தொடங்கினான்.

    யார் நீ?

    அரசே நான் ஒரு சமையல்காரன். விருந்துச் சமையலில் கை தேர்ந்தவன். என் பெயர் வல்லவன். பெயருக்கேற்ப அற்புதமாக சமைப்பேன்... உண்டு பார்த்துவிட்டுக் கூட தாங்கள் என்னை உங்களின் அந்தரங்க சமையல்காரனாக ஆக்கிக் கொள்ளலாம் என்றான்.

    இதற்கு முன் யாரிடமாவது. பணியாற்றிய அனுபவம் உண்டா? விராடனின் அக்கேள்வியை பீமன் துளியும் எதிர்பார்க்கவில்லை. இருந்து சமாளித்தான். காண்டவப்ரஸ்தத்தில் தர்மரின் அவையில் பஞ்சபாண்டவர்களுக்கே நான்தான் சமையல்காரன் என்றான்.

    விராடன் முகத்தில் புன்னகை அரும்பியது. பாண்டவர்களிடமே பணியாற்றியவன் என்றால் நீ நிச்சயம் கைதேர்ந்தவனாகதான் இருக்க வேண்டும். எனவே, நீ இப்போதே பணியில் சேரலாம் என்றான்.

    அடுத்து அர்ச்சுனன் பிருகன்னளையாக விராடனின் மனைவியும் அரசியுமான ராணிக்கு அந்தரங்கத் தோழியாகவும், நாட்டியம் கற்றுத் தரும் நடன மாதுவாகவும் வந்து இணைந்து கொள்ள, தர்மக்கிரந்தி, தந்திரிபாலன் எனும் பெயரில் நகுலனும் சகாதேவனும் வந்து இணைந்து கொள்ள திரௌபதி மட்டும் வருவதற்கு சற்று தாமதம் ஆகத் தொடங்கியது.

    அவள் அழுக்கடைந்த புடவையோடு ஏறத்தாழ ஒரு பரதேசிப் பெண்போல கூந்தல் அலைபாய அவள் விராட நாட்டுக்குள் குறிப்பாக ராணியின் ரதம் செல்லும் ரதவீதிக்குள் நுழைந்திருந்தாள்.

    இதுவும் காலஞானி சகாதேவன் கணக்குப் படியேதான்... திரௌபதியின் கணிப்பு வீண்போகவில்லை விராட மன்னனின் மனைவியும் அரசியுமான சுதேட்டினை என்பவள் திரௌபதியைப் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். பார்க்க கம்பீரமாக காட்சி தரும் இந்தப் பெண்ணுக்கா இப்படி ஒரு நைந்த நிலை... என்று தோற்றத்தை வைத்தே முடிவு செய்தவள் தன் ரதத்தை நிறுத்தி திரௌபதியிடம் சென்று அவளை தன்னோடு அழைத்துக் கொண்டாள்.

    பெண்ணே இனி நீயே என் அந்தரங்க சேவகி. எனக்கான பணிப்பெண்ணும் கூட. உன் அலங்காரத் திறமையை என்னிடம் காட்டு என்று கூறி அழைத்துச் சென்று விட்டாள்.

    வழியில் பரிதாபமாய் தென்பட்ட ஒருவர்பால் இரக்கம் ஏற்படுவது சகஜம். அது இப்படி அருகிலேயே வைத்துக் கொள்ளுமளவு செல்லுமா என்றால் அந்த சந்திப்பில் திரௌபதியும் தன்னை சைத்ரி என்று சொல்லிக் கொண்டு தான் திரௌபதிக்கும், கிருஷ்ணனின் பத்தினியர்களான பாமாவுக்கும், ருக்மிணிக்குமே சிகையலங்காரம் செய்தவள் என்று கூறியது அவளை அரசியிடம் இலகுவாக சேர்த்துவிட்டது?

    இருப்பினும் திரௌபதியின் அழகு அரசிக்கு உறுத்தலாக இருந்தது. விராட மன்னனேகூட அந்தப்புரம் வரும் சமயம் திரௌதியைக் கண்டு மயங்கலாம். அதனால் தன் வாழ்விலும் புயல் வீசலாம் என்று எண்ணியவளை திரௌபதி மிக அழகாக சமாளித்தாள்.

    அரசி... என்னை எவரும் மயக்க முடியாது. என்னிடம் எவராவது தப்பான எண்ணத்தோடு வந்தால் அவர்களுக்கு உலக்கை அடி கிடைக்கும். என்னை எப்போதும் ஐந்து கந்தர்வர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்றாள். அதன்பிறகே சுதேட்டினை சம்மதித்தாள்.

    மொத்தத்தில் பஞ்சபாண்டவர்களின் அக்ஞாத வாசம் அவர்கள் திட்டமிட்டபடியே விராட மன்னன் அவையில் அமைந்துவிட்டது.

    இதே வேகத்தில் பத்து மாத காலம் எந்தவித சிக்கலுமின்றி கழிந்துவிட்டது. பாவம் துரியோதனன்... இவர்களை அவன் பூவுலகில் தேடாத இடமில்லை.

    இன்னும் இரண்டு மாதங்கள்தான்!

    இந்த இரண்டு மாதங்களை பாண்டவர்கள் கழித்துவிட்டால் அக்ஞாதவாசமும் முடிந்துவிடும். ஆனால் சோதனைகளில்லாமல் சாதனைகள் ஏது?

    பாண்டவர்களில் தர்ம, பீம, அர்ச்சுன, நகுல சகாதேவனுக்கு வராத ஒரு சோதனை திரௌபதிக்கு மட்டும் அவள் வசிக்கும் அந்தப்புரத்தில் விராட மன்னனின் மைத்துனனும் அவன் மனைவி சுதேட்டினைபின் சகோதரனுமான கீசகன் என்பவன் மூலம் ஏற்படத் தொடங்கியது.

    கீசகன் தான் விராட நாட்டின் சேனாதிபதி தன் சகோதரியைக் காண அந்தப்புரத்துக்கு வந்த இடத்தில் திரௌபதியைக் கண்டான். அவளின் கட்டுக் குலையாத கம்பீர தோற்றம் மாறுவேடத்திலும் கீசகனை வெறி கொள்ள வைத்தது. திரௌபதியிடம் தன்னை மணந்து கொள்ளும்படி விண்ணப்பமும் செய்தான். அவளுக்காக தான் மணந்திருக்கும் பத்தினியர்கள் அவ்வளவு பேரையும் அடித்துத் துரத்தவும் தயார் என்று கீசகன் சொன்னதுதான் பெரிய கொடுமை!

    ஆனால் திரௌபதி அவனுக்கு புத்திதான் சொன்னாள்.

    சேனாதிபதியாரே...! நான் தாழ்ந்த குலத்தவள். இழிவான வேலைகள் செய்பவள். என்னை தாங்கள் மனதால் கூட நினைக்கக் கூடாதே என்றாள். கீசகன் கேட்பதாக இல்லை.

    தன்னை ஐந்து கந்தர்வர்கள் ஒவ்வொரு நொடியும் பாதுகாப்பதாகக் கூறியும் கேட்கவில்லை.

    இதற்கு மேலும் இவனோடு பேசுவது வீண் என்று அரசியிடம் கீசகனின் அற்ப ஆசையை எடுத்துக் கூறி விட்டாள். கீசகன் சகோதரியான சுதேட்டினை கீசகனுக்கு புத்தி கூறிப் பார்த்தாள். அவன் கேட்பதாய் தெரியவில்லை. சரி... இனி உன் இஷ்டம் என்று விட்டுவிட்டாள்.

    இறுதியில் கீசகனும் திரௌபதியை அனுபவிக்க மது போதையோடு தயாராகி விட்டான். திரௌபதி அவனிடம் இருந்து தப்பித்து மன்னன் விராடனிடம் சென்று அவனிடம் முறையிட்டாள். ஆனால், விராடனாலும் கீசகனை கட்டுப்படுத்த முடியவில்லை. விராடன் அருகில் இருந்துவரும் தர்மன் இதைப் பார்த்து மிக்க வேதனை கொண்டான்.

    திரௌபதிக்கு அந்த நொடி பீமன்தான் தன்னை கீசகன் போன்ற புஜபலம் மிக்கவர்களிடம் இருந்து காப்பாற்றக்கூடியவன் என்பது தெரியவும் நேராக மடப்பள்ளி நோக்கி ஓடி பீமனிடம் நடந்ததை எல்லாம் கூறி கண்ணீர் விட்டாள்.

    பீமனும் கீசகனை வதம்புரிய அந்த நொடியே தயார் ஆகிவிட்டான். பின் அதற்கு தோதாக திரௌபதியிடம் எப்படியாவது கீசகனை இந்த மடப்பள்ளிக்கு மட்டும் வரும்படி செய்... மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

    3. கீசக வதம்

    பீமன் சொன்னதைக் கேட்ட திரௌபதி இந்த மடப்பள்ளி அவனுக்கு தோதான இடமல்ல... பாரதத்தில் இருக்கும் நாட்டியசாலைதான் சரியான இடம் என்றாள். அப்படியே கீசகனும் உம்மைப் போலவே புஜபலம் மிகுந்தவன். எனவே உங்களுக்குள் மல்யுத்தப் போர் நிகழத் தொடங்கினால் அதற்கு நாட்டிய சாலைதான் சரியான இடம். பகல் பொழுதில் அங்கே அர்ஜுனர் பிருகன்னளையாக விராட மன்னனின் மகளான உத்தரைக்கு நடனம் சொல்லித் தருகிறார். அதை நான் காண நேர்ந்தது உத்தரைக்கு நான்தான் சிகை அலங்காரமும் செய்து விட்டேன். எனவே, அந்த நாட்டியசாலையே இந்த இரவுப் பொழுதில் போரிட சரியான இடமாகும் என்றாள் திரௌபதி.

    இன்று இரவு அவனை நான் வதைப்பது உறுதி. ஆனால் அது நம்மை இங்கிருந்து வெளியேறுப் படியாகவோ இல்லை நாம் தான் பாண்டவர்கள் என்று விராட மன்னன் உணரும்படியாகிவிட்டால் என்ன செய்வது? என்று திருப்பிக் கேட்டான் பீமன்.

    நம்மை விராடன் அடையாளம் காணவும் கூடாது. அதேசமயம் கீசகன் உயிர் வாழவும் கூடாது. அவன் வரையில் விராடனும், விராடன் மனைவி சுதேட்டினையும் கூட என் மட்டில் குற்றவாளிகளே! நமக்கு அடைக்கலம் தந்திருப்பதால் நான் பொறுப்பை காக்கிறேன். கீசகனின் காம வெறியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரச குலத்தைச் சேர்ந்தவன் என்றால் வேலைக்கார பெண்களிடம் விருப்பம் ஏற்பட்டால் அந்த பெண்கள் அதற்கு பணிந்து இரையாகித்தான் தீரவேண்டும் என்பதுபோல் பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை?

    திரௌபதி பொங்கி வெடித்தாள். "மனம் வெதும்பாதே திரௌபதி... உன் ஆற்றாமை எனக்கு புரிகிறது. அதேசமயம் நமக்கு நேரிடும் இந்த சோதனைகள் வரும் காலத்தவர்க்கெல்லாம் ஒரு பாடம்.

    துரியோதனின் மண்ணாசையால் நாம் வனவாசிகளானோம். கீசகனின் பெண்ணாசையினால் இப்போது மனம் வெதும்பிக் கிடக்கிறோம்.

    உருவத்தால் மனிதர்களாக இருந்தாலும் உள்ளத்துக்குள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விலங்கு இருக்கவே செய்கிறது. அது படுத்தும் பாடுதான் இதெல்லாம்..."

    பீமன் மனம் வெதும்பி தத்துவத்தால் பேசினான்.

    "தீயில் தோன்றிய எனக்கே இந்தபாடு என்றால், கர்மத்தால் பெண் பிறப்பெடுப்பவர் நிலையை என்னால் எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. அந்த கீசகனின் வதம் காமாந்தகர்களுக்கும் காலத்துக்குமான ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நான் சபித்தாலே கூட போதும் அவன் எரிந்து சாம்பலாகிவிடுவான். ஆனால் என் ஆத்மசக்தியை ஒரு காமுகன் பொருட்டு நான் இழக்க விரும்பவில்லை. அர்ஜுனரிடம் கூறினால் ஒரு அம்பில் அவன் கதையை முடித்து விடுவார். ஆனால், காமாந்தகனான அவன் உடம்பில் உயிர் விரைந்து பிரிந்து விடக் கூடாது.

    அவனது சதையின் ஒவ்வொரு திசுவிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் காமத்தை உமது கையாலே பிசைந்து நசுக்கிக் கொன்று அவனை உருத் தெரியாத பிண்டமாக்க வேண்டும். இதுதான் என் வேண்டுகோள்!"

    திரௌபதியின் வேண்டுகோளை ஏற்று இரவுப் பொழுதுக்காக காத்திருக்கத் தொடங்கினான் பீமன். திரௌபதி திரும்பிச் சென்றாள் அவளது இருப்பிடத்துக்கு சென்றபோது மது மயக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தான் கீசகன்.

    திரௌபதிக்கு பகீரென்றது!

    அனல் விழிகளோடு உற்றுப்பார்த்தாள்

    எங்கே போய்விட்டாய் சைரந்திரி

    ஏன் மௌனமாக இருக்கிறாய். இப்படி என் மடிமீது வந்து அமரு...

    …..

    ஏன் எதுவும் பேசாமல் முறைக்கிறாய்? நான் அரச குலத்தவன். நீயொரு சேடிப் பெண். என் மடி மீது அமர்வது உனக்கு பெரும் விரோசனமாகும்...

    அவனது காமப் புலம்பல் திரௌபதியின் காதுகளில் நாராசமாகவே ஒலித்தது. கொப்பளிப்பான திராவகம் அதற்கு பதிலாக காதில் புகலாம் என்றும் தோன்றியது. மௌனமாக நின்றவள் கைகளை எழுந்து வந்து பிடிக்க முனைந்தான் கீசகன் அப்போது அவன் இடையாடை நழுவி உள்ளாடை மட்டும் தெரிந்தது. திரௌபதி கண்களை மூடிக்கொண்டு திரும்பிக் கொண்டாள்.

    அதே வேகத்தில் இன்று நள்ளிரவின்போது நாட்டிய சாலைக்கு வாருங்கள். இப்போது இங்கே எதுவும் பேச வேண்டாம்... இது என் மேல் ஆணை என்றாள்.

    அதைக் கேட்ட கீசகன் சற்று கோபவயப் பட்டாலும் இரவு வரச் சொன்னதன் பொருட்டு சற்று அமைதியானான். நான் கட்டளையிட்டு பிறர் அதைக் கேட்டுத்தான் எனக்கு பழக்கம். இப்போது முதல் தடவையாக உன் கட்டளைக்கு நான் அடிபணிகிறேன். இன்று இரவு என்னை ஏமாற்றி விடாதே... என்றான். ஒப்புக்கொள்வதில் கூட அவனிடம் ஒரு வித அகங்காரம் வெளிப்பட்டது.

    திரௌபதி பல்லைக் கடித்துக் கொண்டாள்.

    பின் அவளை தர்மரும் சந்தித்தார். அர்ஜுனன், சகாதேவன், நகுலன் என்று நால்வரும் தனித்தனியே சந்தித்துப் பேசி ஆறுதல் கூறிட பீமன் கீசகனை எதிர்கொள்ள இருப்பதையும் நம் மாறுவேடத்துக்கு அதனால் ஒரு அபத்தம் வராது என்றும் என்னை கந்தர்வர்கள் ஐந்து பேர் காவல் காக்கிறார்கள் என்று ராணியிடம் நான் பலமுறை கூறியுள்ளேன். எனவே கீசகனுக்கு எது நடந்தாலும் அது கந்தர்வர்கள் மேல் விழும் பழியாகிவிடும் என்றாள்.

    அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1