Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannan Varuvan
Kannan Varuvan
Kannan Varuvan
Ebook428 pages6 hours

Kannan Varuvan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580100705202
Kannan Varuvan

Read more from Indira Soundarajan

Related to Kannan Varuvan

Related ebooks

Reviews for Kannan Varuvan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannan Varuvan - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கண்ணன் வருவான்

    Kannan Varuvan

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    1

    உயிர்களுக்கெல்லாம் கண்ணைப் போன்றவன் அவன். ஆகையினால் அவன் கண்ணன்! கரிய இரவில் சிறையில் கருப்பு நிறத்தில் பிறந்தவன் அதனால் அவன் கிருஷ்ணன்! கோமாதாவாகிய பசுக்களையும் அதன் கூட்டத்தையும் மேய்ப்பது என்னும் பெயரில் பரிபாலித்தவன் அதனால் அவன் கோவர்த்தன்! குழலூதி ஆடுமாடுகளை மட்டுமல்ல ஈ எறும்புகளையும் மயங்க வைத்தான் ஆகையால் அவன் கோபாலன்!

    இப்படிக் கண்ணனை நாம் பெயர்க் காரணங்களினாலே சிந்தித்துக் கொண்டே போகலாம். ருக்மணிப்ரியன், பாமாமணாளன், கிருஷ்ணார்ஜுனன், குசேலமித்ரன், மாயாஜாலன், விஸ்வரூபன் என்று அந்தப் பெயர் பட்டியலை நாம் நீட்டித்துக் கொண்டேயும் போகலாம். இத்தனை நாமங்களையுடைய கண்ணனை மகாபாரதத்தில் ஓர் இடத்தில் பிதாமகரான பீஷ்மர் வியக்கிறார்.

    அங்கே இருந்தே இந்தக் 'கண்ணன் வருவானை’யும் நான் தொடங்குகிறேன்!

    பாரதத்தின் முக்கியமான ஒரு கட்டம், பஞ்சபாண்டவர்கள் ராஜசூய யாகத்தை நிகழ்த்த விருந்த கட்டமாகும். பாண்டவர்களின் புதிய நகரான காண்டவப்ரதஸ்த்துக்கு வந்த நாரதரால் ஏற்பட்ட விளைவே ராஜசூய யாகமாகும்.

    நாரதர் காண்டவப்ரஸ்தத்தைக் கண்டு வியக்கிறார். இந்திரனின் அமராவதிப் பட்டினத்துக்கு ஈடாக இந்திரப்ரஸ்தமாகவே திகழ்வதாகக் கூறி மகிழ்ந்தார். அப்போது தர்மரும் மற்றுமுள்ள சகோதரர்கள் நால்வரும் நாரதரிடம் இந்திரப்ரஸ்தம் பற்றி விஸ்தாரமாகக் கேட்கின்றனர். நாரதரும் கூறத்தொடங்கினார்.

    இந்திரப்ரஸ்தம் என்னும் அமராவதி நகரம் பற்றி மட்டுமல்ல பிரம்மாவின் சத்யலோகம் எப்படியிருக்கும்? குபேரசபை, வருணசபை, எமசபை என்று நாரதர் அத்தனை சபைகளின் சிறப்புகளையும் விவரித்து முடித்தார். விண்ணகத்தில் அவையெல்லாம் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் சிறந்தது என்றால் மண்ணகத்தில் காண்டவப்ரஸ்தம் என்னும் உங்கள் சபைதான் மிகச்சிறந்தது என்று முடித்தார். பாண்டவர்கள் பூரித்துப் போகின்றனர்.

    இவ்வளவு தூரம் சபைகளைக் கூறிய நாரதர் அந்தச் சபைகளில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் விஸ்தாரமாகக் கூறினார். அதில் தான் இராஜசூய யாகத்திற்கான விதையும் விழத்தொடங்கியது. குறிப்பாக யமசபை பற்றிக் கூறிடும் போதுதான் அது விழுந்தது!

    இனி நாரதர் வாயாலேயே அதைக் கேட்போம். தர்மபுத்ரா! விண்ணகத்து யமசபை விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதாகும். நூறு யோஜனை நீள அகலமுடையது அது. எங்கும் எப்போதும் ஒளி மிகுந்திருக்கும். ஆனால் வெப்பமே இருக்காது. துயரம், மூப்பு, பசி, தாகம், வெறுப்பு, மனச்சோர்வு, களைப்பு, கெடுதல் என்று ஒன்றும் அந்தச் சபையில் இல்லை. இங்கே பிரம்மரிஷிகள் யமனை வணங்கியபடி உள்ளனர். இவர்களோடு யயாதி, நகுஷன், பூரு, மாந்தாதா, சோமகன், ந்ருகன், த்ருஸதஸ்பு என்னும் ராஜரிஷியும், நூற்றுக்கணக்கில் யமனுலகடைந்த அரசர்களும், ஜனமேஜயர்கள் எண்பது பேரும், பிரம்மதர்த்தர்கள், வீரிகள் நூறு நூறு பேரும், நூறு பீஷ்மர்கள் (வெல்ல முடியாதவர்கள்) நூறு பீமர்கள் (பலசாலிகள்) மற்றும் நூறு பலாசங்கலும் நாணல், தர்ப்பை ஆகியவை ஒரு நூறும் என்று அங்கிருப்பனவற்றை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லும் நாரதர் உன் பிதாவான பாண்டுவையும் நான் அங்கே பார்த்தேன் என்றார்.

    உடனே பாண்டவர்களிடம் சலனம் ஏற்படுகிறது. நாரதரே! எங்கள் தந்தை அமரலோகத்திலோ இல்லை புண்ய லோகத்திலோ இல்லையா? உயிர் பறிக்கும் கூற்றுவனாகிய யமசபையிலா இருக்கிறார்? என்று மிக வருத்தமாய்க் கேட்டான் பீமன். அதே சமயம் அர்ஜுனன் இடையிட்டு அவனும் பேசினான்.

    நாரதமுனிவரே! நீங்கள் இந்திரசபை பற்றிக் கூறிய பொழுது அங்கேயும் ரிஷிகள், யோகிகள், அரசர் பெருமக்கள் பற்றிக் கூறினீர்கள். அவர்களில் அரிச்சந்திர இராஜா இந்திர லோகத்தில் எந்த உத்பாதமும் இன்றி புண்யலோகத்து இன்பங்களுக்கும் மேலான இன்பங்கொண்டு இந்திரனுக்குச் சமமாக இந்திரசபையை அலங்கரித்து வருவதாகக் கூறினீர்கள். என் தந்தைக்குக் கிடைக்காத இடம் அரிச்சந்திரனுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது? என்று கேட்டான்.

    நாரதரும் அதற்குப் பதில் கூறத்தொடங்கினார். அர்ஜுனா! அரிச்சந்திரன் இஷ்வாகு குலத்தில் வந்தவன். விஸ்வாமித்திர முனிவரால் நிர்மாணிக்கப்பட்ட திரிசங்கு சொர்க்கத்துக்கு அதிபதியான திரிசங்கு என்பவரின் சத்புத்திரன் தான் அரிச்சந்திரன். உண்மையைத் தவிர வேறு ஒன்றைப் பேசாதவன். அதன் காரணமாகப் பல சோதனைகளை அனுபவித்தான். சத்ய தேவதை இவனாலேயே பெரும் பேறு பெற்றாள். அரிச்சந்திரனுக்கு இந்திரசபையில் இந்திரனுக்குச் சமமான ஆசனம் கிடைக்க இவை மட்டும் காரணமில்லை. அவன் இராஜசூய யாகம் நிகழ்த்தி உலகத்திற்கே சாம்ராட்டாகத் தன்னை முடிசூட்டிக் கொண்டான். இதுதான் பிரதான காரணம் என்றார்.

    நாரதர் இப்படிக் கூறியதுதான் பாண்டவர்களும் இராஜசூயயாகம் செய்யக் காரணமாகியது. 'துரியோதனனும், கௌரவர்களும் படாதபாடு படுத்தி விட்டனர். ஒன்றுக்கும் உதவாத களர் நிலமாக இருந்த காண்டவப்ரஸ்தத்தைக் கூட வேறு வழியின்றித்தான் ஒதுக்கினர். இன்று அதுதான் நாரதரால் அமராவதிக்கு நிகராக பாராட்டப்பட்டிருக்கிறது. அதை மேம்படுத்தியது பாண்டவர்களின் உழைப்பு! சரி! நகரை நிர்மாணித்து விட்டோம்! அந்த அரிச்சந்திரன் போல பூ உலகில் சாம்ராட்டாகத் திகழவும் அதே சமயம் யம சபையில் உள்ள பாண்டு இந்திரசபைக்குச் சென்று அங்கே இந்திரனுக்கு நிகராக அமரவும் உள்ள ஒரே வழி இராஜசூய யாகம் மட்டும் என்பதால் அதற்கு தயாராகின்றனர்.'

    பஞ்சபாண்டவர்கள் இராஜசூய யாகம் புரியத் தீர்மானம் செய்த உடனேயே அதற்கு ஆலோசனையும் வழிமுறைகளையும் கேட்க விரும்பியது, அவர்களின் அத்தனை வெற்றிக்குப் பின்னாலும் நின்றபடி இருந்த கண்ணனாகிய கிருஷ்ண பரமாத்மாவிடம் தான்!

    கிருஷ்ணனும் அதற்கென்றே காத்திருந்தது போல வந்தான். பாண்டவர்களின் விருப்பத்தையும் அறிந்தான். இராஜசூய யாகம் செய்ய எண்ணுபவர்களுக்குப் பூ உலகில் எதிர்ப்பென்பதே இருக்கக்கூடாது. அடுத்து அனைவரும் அந்த யாகத்தில் பங்கு கொண்டு யாகம் வெற்றிபெற ஒத்துழைப்பதோடு தங்கள் பங்காக பொன், பொருள் என்று எதையாவது தரவேண்டும்.

    அதை கிருஷ்ணன் நினைவுபடுத்திப் பாண்டவர்களை பூமியெங்கும் உள்ள அரசர்களையெல்லாம் சந்திக்க அனுப்பினான். எல்லாரும் சம்மதித்தனர். மறுப்பவர்களிடம் யுத்தம் ஏற்படும். யுத்தத்தில் அவர்களை வெல்ல வேண்டியது பாண்டவர் கடமை.

    பாண்டவர்களில் அர்ஜுனனின் வீரத்தையும், பீமனின் வீரத்தையும் அறியாத மன்னர்களில்லை. ஆகவே அவ்வளவு பேரும் யுத்தத்திற்கு அவசியமே இன்றிப் பணிந்தார்கள். பணிய மறுத்த சிலரும் பணிய வைக்கப்பட்டார்கள்.

    ஆனால் ஒருவன் மட்டும் மறுத்தான். அந்த ஒருவன் துரியோதனன் அல்ல. துரியோதனன் பாண்டவர்களின் புத்தெழுச்சியைப் பார்த்து திறந்த வாயை மூடமுடியாதவனாகத் தான் இருந்தான். அடுத்து அவர்களோடு யுத்தம் செய்யச் சரியான காரணமும் அவனிடம் இல்லை. அதே சமயம் இராஜசூய யாகம் எந்த நிலையிலும் முழு வெற்றியைப் பெற்று விடக்கூடாது என்றும் விரும்பினான்.

    துரியோதனனின் இந்த விருப்பத்திற்கு ஏற்ப இந்த யாகத்திற்கு எதிராக நின்றவன் தான் ஜராசந்தன். இவனொரு வினோதமான பிறப்பு. இவன் தாய் வயிற்றில் இவன் ஒரு பூரணமான மனிதப் பிறப்பாய் பிறக்கவில்லை. துண்டு துண்டுப் பிண்டங்களாய்த் தான் பிறந்தான். கோரமான சிரசு, உடல்பாகம் என்று பிறந்த இவனை இவன் தாயிடம் இருந்து பிரித்து நகரத்தின் ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டனர். அந்தப் பாகத்தில் 'ஜரை' என்னும் அரக்கி வசித்து வந்தாள். பிண்டத்தை எடுத்து உண்ண வந்தவள் அது பிஞ்சுப் பிண்டம் எனத்தெரியவும் மனம் கசிந்தாள்! அரக்கியிடமும் ஈரம். பின்னர் தன் மாயா மற்றும் ராட்சத சக்தியாலே அந்தப் பிண்டங்களை ஒன்றாக்கி உயிரையும் நிலைக்க வைத்தாள். அதனால் ஜராசந்தன் என்கிற காரணப் பெயரும் அவனுக்கு ஏற்பட்டது. பின் ஜராசந்தனின் தாயிடம் ஒப்படைத்தாள். பின்னாளில் இவனும் அரசனானான்.

    இவனை யாராலும் வெட்டிக் கொல்ல முடியாது. எவ்வளவு தான் கண்ட துண்டங்களாக வெட்டினாலும் இவன் உடல் ஒன்றாகி விடும். அதனால் இவன் அரக்க குணத்தோடு உலகத்தவரை எல்லாம் ஆட்டிப் படைக்க முனைந்து 84 நாட்டு அரசர்களையும் சிறை பிடித்தான். இன்னும் 16 பேரை சிறை பிடித்து அவர்களைக் கொன்று யாகம் வளர்த்தால் அது இராஜசூய யாகத்திற்கு இணையானதாக மட்டுமின்றி அதன் பயனாய் ஜராசந்தன் உலகில் அரசனாகி எவராலும் வெல்லப் படமுடியாதவனாகவும் ஆகிவிடும் ஆபத்தும் இருந்தது.

    துவாரகாதிபதி கிருஷ்ணனே கூட இவனுடைய வரசித்தியால் இவனைத் தந்திரமாக மட்டுமே வீழ்த்த முடியும் என்று உணர்ந்தவனாக மதுராவை விட்டு துவாரகைக்கு தன் இராஜ்ஜியத்தை மாற்றிக் கொண்டான்.

    அது மட்டும் காரணமல்ல. எதிர்காலத்தில் பாண்டவர்கள் இராஜசூய யாகம் செய்யும் போது அவர்களின் வீரத்தை உலகம் அறிந்து கொள்ள ஜராசந்தன் போல் ஒருவன் இருப்பது தான் சரி என்று கருதியதால் கிருஷ்ணன் ஜராசந்தனுக்கு அஞ்சியது போல நடித்தான்.

    அன்று கிருஷ்ணன் மனத்திற்குள் நிறைந்த அந்த இராஜசூய வேள்வி பற்றி இதோ பாண்டவர்களே பேசிவிட்டனர். கிருஷ்ணனும் இதுதான் தருணம் என்று ஜராசந்தனை நோக்கி பீமனை அழைத்துக் கொண்டு சென்றான். எதிர்பார்த்தது போலவே பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் யுத்தம் ஏற்பட்டது. இந்த யுகத்தில் கிருஷ்ணனின் தந்திரமே பீமனின் வெற்றிக்கு அடிகோலியது. ஜராசந்தனை இரு கூறாக கிழித்து எவ்வளவு முறை தூக்கிப் போட்டபோதும் அந்த கூறுபட்ட உடல்கள் ஒன்றாகி விட்டன. களத்தில் இருந்த கிருஷ்ணன் ஒரு துரும்பை எடுத்து இரண்டாக்கி அந்தத் துரும்புகள் இரண்டையும் மாற்றிப் போடவும் பீமனும் புரிந்து கொண்டு ஜராசந்தனின் இடப்பாக பிண்டத்தை வலப் பக்கமும், வலப்பாகத்துப் பிண்டத்தை இடப்பக்கமும் போட்டிட அந்தப் பிண்டங்களால் ஒன்று சேர முடியாது போய் உலகின் ஒரே எதிரியான ஜராசந்தனும் அழிந்தான்.

    இனி இராஜசூய யாகம் செய்ய யாதொரு தடையும் இல்லை. ஜராசந்தனையே ஒழிக்க முடிந்தவர்களுக்கு இந்த உலகத்தின் மற்ற அவ்வளவு பேருமே ஒன்றுமேயில்லை. எனவே மிகப் பணிவோடு யாகத்தில் பங்கு கொள்ள அவர்கள் வந்தனர். பொன், பொருள் என்று காணிக்கைகளையும் கொட்டிக் குவித்தனர்.

    துரியோதனனும் அவன் சகோதரர்களும் மனத்திற்குள் புழுங்கினாலும் சகித்துக் கொண்டு வேள்வியில் பங்கு கொண்டனர். இந்த நிலையில் தான் வேள்வியின் பிரதான தருணம் வந்தது. வேள்வியில் முதல் மரியாதையை யாருக்குத் தருவது என்பதுதான் அப்போது எழும்பிய கேள்வி.

    தர்மருக்கும் ஏனைய நால்வருக்கும் அவ்வேளையில் முதலில் மனத்துக்குள் எழும்பியது மகாத்மா கிருஷ்ண பரமாத்மா தான். கிருஷ்ணன் இல்லாவிட்டால் அவர்கள் ஏது? அவர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னாலும் அவனல்லவா இருந்து ஆட்டுவிக்கிறான்? எனவே தர்மர், கிருஷ்ணர் பெயரை முன்மொழிந்தார். அதை அங்கு திரண்டிருந்த அவ்வளவு அரசர் பெருமக்களும் வரவேற்று மகிழ்ந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் அதை ஏற்கவில்லை. அவன்தான் சிசுபாலன்! சேதி நாட்டு அரசன்தான் சிசுபாலன்!

    இவன் பிறப்பும் வினோதமானது. பிறக்கும் போது கோரமாக நெற்றிக்கண், மூன்று கைகள், கழுதைக் குரல் என்று பிறந்தவன். எந்த ஒருவன் மடியில் இவன் விடப்படும்போது இவையெல்லாம் நீங்குகிறதோ அந்த ஒருவனே இவனுக்குக் காலன் என்று அசரீரி சொன்னது. அதற்கேற்ப சிசுபாலன் தாய் அவன் கோர விமோசனத்திற்காக தன் அரண்மனைக்கு வருவோர் மடியிலெல்லாம் சிசுபாலனை விட்டாள்.

    அவள் யாரோ அல்ல, யாதவ குலத்தைச் சேர்ந்த அவள் கண்ணனுக்குச் சகோதரி முறை! சகோதரியைப் பார்க்க கண்ணனும் பலராமரும் வந்த சமயம் கண்ணன் மடியில் சிசுபாலனை விடவும் சிசுபாலனின் கோரம் அகன்றது. அவன் தாய்க்கும் கண்ணனே சிசுபாலன் வரையில் காலன் என்பதும் தெரிந்துவிட்டது. எனவே அவள் அப்போதே கண்ணனிடம் தன் மகனை நீ அவன் என்ன செய்தாலும் பதிலுக்கு எதுவும் செய்து விடக்கூடாது என்று வரம் போலக்கேட்டாள். கண்ணனும் சம்மதித்தான்.

    சகோதரி! உன் பாச உணர்வு புரிகிறது. உன் மகனுக்கு நான்தான் காலன் என்பது விதியானால் அதை யாரால் மாற்ற முடியும்? ஆனாலும் உனக்காக நான் அவன் எவ்வளவுதான் என் பொருட்டு தவறாக நடந்தாலும் பொறுத்துக் கொள்வேன். ஒரு முறைக்கு நூறு முறை கூட பொறுத்துக் கொள்கிறேன். போதுமா? என்று கேட்க அவளும் இது போதும் எனக்கு என்றாளாம்.

    அதன் பிறகு சிசுபாலனுக்கு கண்ணனே தன் காலன் எனத் தெரிய வரவும் ஒரு வெறுப்பு வந்துவிட்டது. கண்ணன் தன் போல ஒரு நாட்டு மன்னன். அவ்வளவுதான். அவன் எனக்குக் காலனல்ல. நான்தான் அவனுக்கு காலன் என்று கூறத் தொடங்கிவிட்டான்.

    இப்படித்தான் சிசுபாலனுக்கு கண்ணன் மேல் பகை உருவானது. மாமன் கம்சனால் அது அதிகமும் ஆகியது. இதோ இராஜசூய யாகத்தின் போது அது வெடித்தே விட்டது.

    கண்ணனாகிய கிருஷ்ணனை சிசுபாலன் வார்த்தைகளால் வதைத்தெடுத்துப் பேசி அவனுக்கு முதல் மரியாதை கூடாது என்ற போது அவனை அடக்கியவராக பிதாமகர் பீஷ்மர் பேசினார். கண்ணனே சகலமரியாதைக்கும் உரியவன். அவன் யாரோ அல்லன். அவன் பெருமை, அவன் பிரதாபம், அவன் கீர்த்தி வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. துவாரகாதி பதியாக அவன் இருப்பது ஒரு வேடம். மற்றபடி அவனே பரமாத்மா! என்று வியக்கத் தொடங்கி கண்ணனைப் பற்றி மிக விஸ்தாரமாகக் கூறத் தயாரானார். அவர் கூறப்போவதை நாமும் கேட்போம். அப்போதுதான் கண்ணப்பிரதாபம் நமக்குள்ளும் நிரம்பும். நாமும் பக்தியோடு அவனை அழைக்க அவனும் வருவான்!

    2

    பிதாமகர் பீஷ்மர் சிசுபாலனால் உந்தப்பட்டு ஸ்ரீகிருஷ்ணன் பெருமைகளைக் கூறத் தயாரானார். கிருஷ்ணன் குறித்து விஸ்தாரமாக அறிந்து கொள்ளும் ஆர்வம் பாண்டவர்களிடமும் இருந்தது. குறிப்பாக தர்மரும், அர்ஜுனரும் கிருஷ்ணனின் ஆதி அந்தத்தை அறிந்து கொள்ளத் தயாராயினர்.

    எப்படி?

    சிசுபாலன் எதிர்ப்பும் காழ்ப்பும் கிருஷ்ணப் பிரதாபம் மற்றவர்கள் அறிய ஒரு காரணமாக ஆகிவிட்டது. அதிலும் பீஷ்மரின் திருவாயாலே அதைக் கேட்பது என்பது மிக உன்னதமான ஒன்றாகும்.

    பீஷ்மர் தோல்வியே காணாதவர். சத்தியம் தவறாதவர், விரும்பும்போது மரணமடையும் வரத்தைப் பெற்றவர். அதனால் யமனையே வென்று விட்டவர். இப்படிப்பட்டவர் கூறப்போகும் கிருஷ்ணப் பிரதாபம் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்தே தொடங்குகிறது. அதனால் அந்தப் பரந்தாமனின் அவதாரங்கள் அவ்வளவையும் காரண காரியத்தோடு விளக்குவதாகவும் இருந்தது. அதனால் நாம் இனி அறியப் போவது யார் இந்த கிருஷ்ணன் என்பதற்கான பதிலை மட்டுமல்ல, ஆதி கேசவனாகிய அந்த வைகுண்ட நாதனையும் சேர்த்தே அறிந்து கொள்ளப் போகிறோம்.

    "ராஜனே! யுதிஷ்டிரா! வில்லாளியான விஜயனே! நான் இப்போது கூறப்போவதைக் கவனமாகக் கேளுங்கள். நம் யாருக்கும் புலப்படாதவன் அந்தப் பரந்தாமன். அவனது புலப்படும் வடிவமே கிருஷ்ணன்.

    புலப்படாதவன் என்று நான் கூறியதன் பின்புலம் அறிவினால் மட்டும் அறியக்கூடியதன்று. அறிவை ஆணவ வசப்படாமல் வைத்திருந்து அதை ஞானத்தால் பழுக்க வைத்து கதிரவனுக்கு இணையான மனோ ஒளியைப் பெற்ற நிலையில் மட்டுமே அந்தப் புலப்படாதவன் தன்மையை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

    அந்தப் பரந்தாமனே பிரம்மனைப் படைத்தவர்... அதனால் பிரம்மனுக்கே தாய் தந்தை என்றானவர். அவர் அசைவுகள் அற்றவர். அளவுகளும் அற்றவர். எப்போதும் இருப்பவர். இந்த எப்போதும் என்னும் பதத்தில் நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் நம் மனோசக்தியால் நாம் ஓரளவு எண்ணிக் கொள்ள இயலும். கடந்த காலம் என்ற ஒன்றின் நீட்சியை மட்டும் எவ்வளவு முயன்றாலும் கணக்கில் கொண்டுவர முடியாது.

    அந்த ஆதிகேசவனுக்கு ஆயிரம் தலைகள்! ஆயிரம் வாய்கள்! ஈராயிரம் விழிகள்! ஈராயிரம் கரங்கள்! ஈராயிரம் கால்கள்! ஆயிரம் கிரீடங்கள்! அதனால் ஆயிரம் நாமங்கள்!

    எல்லைகளே இல்லாதவருக்கு ஆயிரம் என்கிற கணக்கு கூட ஓர் அடையாளத்துக்குத்தான்.

    இவரே மூலப் பிரகிருதியைக் கடந்திருந்தவர். இவரே ஐம்பூதங்களைப் படைத்தவர். அதில் நான்காம் பூதமாகிய ஜலத்தை அணைத்து படுத்து நாரணன் என்றானார். பிறகே நாபிக்கமலத்தில் நான்முகனைப் படைத்து பின் நான்முகன் மூலமாக மற்ற லோகங்களை எல்லாம் படைத்தார்.

    அப்படி படைக்கப்பட்ட லோகங்களில் பிரளயமும் வந்தது. அந்தப் பிரளயத்தில் அவ்வளவும் அழிந்து அவர் மட்டுமே இறுதியில் மிச்சமாக நின்றார்.

    பின் மீண்டும் படைப்பு தொடங்கப்பட்டது. முனிகள், ரிஷிகள், தேவர்கள், தாவரங்கள், நீர்வாழ், நிலம்வாழ், வான்வாழ் உயிரினங்கள் என்று வரிசையாகத் தோன்றின. இதைச் சற்று மாற்றி மேலுலகம் அந்த நாரணனின் தலை, ஆகாயமே நாபி, பூமியே கால்கள், அசுவினி தேவர்களே செவிகள், சந்திர, சூரியர் இரு விழிகள். இந்திரனும் அக்னியுமே திருமுகம் மற்றுமுள்ள தேவர்கள் உடம்பின் மற்ற பாகங்கள் என்றும் கூறலாம்.

    ஒரு நூலிழையில் கோக்கப்பட்ட மணிகள் போல மற்ற அவ்வளவும் அதில் இப்போதுள்ள நீங்களும், நானும், நாமும் கூடக் கோக்கப்பட்டிருக்கிறோம்.

    அவராலேயே சப்தரிஷிகள் முதல் சப்த லோகங்கள் வரை உருவாயின. அவற்றில் கல்பகோடி ஆண்டுகள் கடந்து போயும் விட்டன.

    எப்போதும் உள்ளவரும், எல்லாப் பிராணிகளிடமும் அந்தர்யாமித்து இருப்பவரும் ஆன அந்த நாரணனின் திருவிளையாடல் நினைக்க நினைக்க நமக்குத் தித்திப்பைத் தரவல்லது.

    சர்வத்தையும் படைத்த அவராலேயே எதிர்ப்பதமானவையும் படைக்கப்பட்டன. எதிர்ப்பதமானவை இருந்தாலே உட் பதமானவை அர்த்தம் கொள்ளமுடியும். எங்கும் எப்போதும் வெளிச்சத்தில் இருப்பவனுக்கு இருள் என்பது எப்படி அறியப்படாததோ அப்படியே இருளில் இருப்பவனுக்கு வெளிச்சமும் அறியப்படாத ஒன்றாகும். இரண்டுமே ஒன்றின் இருவிதத் தோற்றம் என்பதை உணர்வதே ஞானம். இந்த ஞானத்தை அடையத் தேவை காலம். இந்தக் காலத்தில் ஞானம் பெற விழையும் செயல்பாடே வாழ்வெனப் படுகிறது.

    தம் வாழ்வில் ஒன்றே இரண்டாகக் காட்சி தருகிறது என்பதை எவர் தயவும் துணையும் இன்றிப் புரிந்து கொள்ளுதலே ஞானம் என்பதாகும்.

    அழகிய மலர் அழகாகவே நீடிப்பதில்லை. அது வாடிவதங்கி மண்ணாகி விடுகிறது. இதை சுழற்சி என்றும் கூறலாம். மலருக்கான உண்மை அனைத்துக்கும் பொருந்தும். அழகே அரூபமானது. அரூபமானதே சுழற்சியில் அழகாய்த் தோன்றியது. இந்த த்வைத நிலை இல்லாவிடில் இயக்கம் இல்லை; ருசி இல்லை. இந்த ருசிதான் நவரசமாகத் திகழ்கிறது. துக்கம், சந்தோஷம், சாந்தம், மௌனம், ஹாஸ்யம், வீரம், பயம், காமம், தூக்கம் என்று விரிவாகிறது."

    பிதாமகர் பீஷ்மர் ஸ்ரீமன் நாராயணனின் சிருஷ்டியை விஸ்தாரமாகக் கூறத்தொடங்கி மனித வாழ்வு மற்றும் அதன் நவரச நிலைப்பாடுகளிடம் வந்து நின்றார். அந்த வியாக்யானம் பாண்டவர்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் ஒரு ஞானபாடமாக அமைந்து விட்டது.

    பிதாமகரே! நாமெல்லாரும் அந்தப் பரந்தாமனின் படைப்பு மட்டுமல்லர் அவனுடைய அங்கத்தின் ஒரு பாகம் என்பது வரை கூறிய தாங்கள், எதனால் எல்லாமே இருபாலாக அதாவது இன்பம் என்றால் துன்பம், கசப்பு என்றால் இனிப்பு, தூக்கம் என்றால் விழிப்பு என்று இருக்கிறது என்பதை சற்று விளக்கமாகக் கூறுவதோடு, அந்த நாரணன் எதன் பொருட்டு கிருஷ்ணனாக நம்முன் நடமாடித் திரிகிறான் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று மிக ஞானபூர்வமாக ஒரு கேள்வியைக் கேட்டான் சகாதேவன், நகுலன் அதை வழி மொழிந்தான்.

    பீஷ்மர் தொடர்ந்தார்.

    சகாதேவா! நல்ல கேள்வியைத் தான் நீ கேட்டிருக்கிறாய் முதலில் பஞ்ச பூதத்தைப் படைத்து பின் பிரம்மனைப் படைத்து அதற்கும் பிறகு சர்வலோகங்களையும் படைத்த அந்த நாரணமூர்த்தியின் காதுக் குரும்பைகள் தான் அரக்கமாக மாறின. அந்த அரக்கர்களே மதுகைடபர்கள் என்னும் இருவராவர். விஷ்ணு இவர்களை எதிர்த்துப் பலகாலம் போரிட்டுப் பின் தந்திரத்தால்தான் இவர்களை அழித்தார். இங்கே எல்லாருக்குமே ஒரு கேள்வி எழலாம். விஷ்ணுபதியின் குரும்பைகள் ஏன் அசுரமாக வேண்டும்? பின் ஏன் அவரோடு போரிட வேண்டும்? குரும்பையே தோன்றாதபடி நாரணர் திகழ முடியாதா? அல்லது தோன்றிய குரும்பையைத் தேவத் தன்மை கொண்டதாய்ப் படைத்திருக்கக் கூடாதா? என்று கேட்கலாம்.

    எதிரானவை தோன்றினாலே இயக்கம் தோன்ற முடியும். உங்களையே பார்த்து ஒன்று கேட்கிறேன். முடிந்தால் ஞானத்தோடு பதில் கூறுங்கள் பார்ப்போம் என்ற பீஷ்மர் பீமனைப் பார்த்து அதைக் கேட்கத் தொடங்கினார்.

    பீமா! உனக்கு நான் ஒரு மந்திரக்கோல் தருகிறேன். அதைக் கொண்டு நீ எதை வேண்டுமானாலும் பெறலாம். அதாவது கோடானு கோடி பொன்னிலே இருந்து மாடமாளிகை கூட கோபுரம் வரை. உனக்கு ஒரே ஒரு நிபந்தனைதான். எக்காரணம் கொண்டும் இந்த மந்திரக் கோலை நீ பிறருக்காகப் பயன்படுத்தக் கூடாது. இதைப் பற்றி நீ எவரிட கூறவும் கூடாது என்றால் உனக்கு எப்படி இருக்கும்?

    பீஷ்மர் கேட்டுவிட்டார். பீமன் தாடையைத் தடவிய படியே யோசித்து விட்டு,

    பிதாமகரே! அப்படி ஒரு மந்திரக்கோலே எனக்கு வேண்டாம் என்பேன். அதனால் நான் எத்தனை இன்பம் கண்டாலும் பயனில்லை. எவர் தொடர்பும் இன்றி நான் மட்டும் இன்பமாக எவ்வளவு காலம் வாழ்ந்து விடமுடியும்? பசிக்காகச் சாப்பிட்டு, உறக்கம் வந்தால் உறங்கி பின் மலக்கழிவுகளை வெளியேற்றி விட்டு திரும்பத் திரும்ப அதையே செய்வது என்பது எந்திரத்தனமல்லவா? இதில் உடல் வேண்டுமானால் இன்புறலாம். ஆனால் உள்ளம் இருண்டல்லவா போகும்? உள்ளம் இருளக் கூடாதென்றால் உறவுகள் வேண்டும். உற்றார் வேண்டும். நாலு பேர் என்றால் யார் என்றே தெரியாமல் மிருகங்கள் போல வாழ்வதா வாழ்வு?

    பீமன் அழகாய் பதிலிறுத்தான். பீஷ்மரும் அதைக் கேட்டுப் பூரித்தார்.

    சரியாகச் சொன்னாய் வாயு மைந்தா! இப்போது கூட எல்லாரும் சாந்தமாக இந்த ராஜசூயத்தில் பங்கு கொண்டிருந்தால் நான் அந்த ஆதிகேசவனிடம் தொடங்கி கிருஷ்ண பிரதாபத்தைக் கூற முன்வந்திருப்பேனா? ஆங்காரமுள்ள சிசுபாலன் என்று ஒருவன் இருக்கப் போய்த்தானே இதெல்லாமே நடக்கிறது? இதெல்லாம் சுற்றம் என்று ஒன்று இருக்கப் போய்த்தானே ஏற்பட்டது?

    "அப்படியானால் தவறானவைக்குக் கூட ஒரு சரியான காரணம் இருக்கிறது என்கிறீர்களா?'' அர்ஜுனன்தான் இப்படிக் கேட்டான்.

    அருமையான கேள்வி. காரணம் இன்றி எதுவுமே இல்லை. நான் மீண்டும் மதுகைடபர்களிடம் வருகிறேன். மதுகைடபர்கள் நாராயணரிடம் தோன்றியவர்களே! அவர்களை அவரும் வெற்றி கொண்டார் என்பதை அந்த நாராயணர் தன்னைத் தானே வெற்றி கொண்டார் என்றும் கூறலாமல்லவா?

    அதிலென்ன சந்தேகம்? அவருள்ளிருந்து வந்தவர்கள் வேறு அவர் வேறல்லவே?

    அருமையான பதில். இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். நாமெல்லாரும் கூட அவருடைய அங்கங்கள் தான் என்றேனல்லவா?

    ஆம்

    அப்படி என்றால் இன்று உங்களுக்கு எதிரானவர்களும் கூட அவருடைய அங்கம்தானே?

    ஆம் ஆம் ஆம் பாண்டவர்கள் உற்சாகமாய்க் கூறினர்.

    அப்படி என்றால் உங்கள் எதிரிகளை நீங்கள் நாராயணர் போலவே வெற்றி கொள்ள முனைவதில் தவறில்லையே?

    நிச்சயமாக இல்லை. மதுகைடப வதம் என்பது யார் தேவர் யார் அசுரர் என்பதற்கு விடை தந்ததோடு யுத்தம் தவறில்லை என்பதற்கும் விடையாகி விட்டது. ஆனால் நீங்கள் கிருஷ்ண பரமாத்மா குறித்து ஏதும் கூறவில்லையே பிதாமகரே! தர்மன் அழகாய்க் கேட்டு நிறுத்தினான்.

    படிப்படியாக நான் வந்து கொண்டிருக்கிறேன் தர்மா! மதுகைடப வதத்தைத் தொடர்ந்து பூமியில் மீண்டும் சிருஷ்டி தொடங்கியது. இந்த மதுவும் கைடபர்களும் அழிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடற் கொழுப்பெல்லாம் நீரில் மிதந்து பூமியையே மூடிக்கொண்டது. அதைக்கொண்டு நீர்வாழ் உயிர்களைப் படைத்த அந்த மூர்த்தி அந்நிலையில் இந்த பூமியை மேதினி" என்றாக்கினார்.

    மேதினியில் மானுடப் பிறவியும் உருவானது. மானுடப் பிறப்பில் தேவர்கள் அசுரர்கள் என்ற இரு தன்மையாளர்களும் ஒரு சேரத் தோன்றினர். இதில் அசுரர்கள் செயல் என்பது தேவர்களுக்கு எதிரானது. தேவர்கள் செயல் என்பது அசுரர்களை அழிப்பது. மொத்தத்தில் ஓர் இயக்க கதி உருவாகிவிட்டது. இந்நிலை தோன்றுமுன் இந்த பூமி எப்படி இருந்தது தெரியுமா? பீஷ்மரின் கேள்விக்கு ஒருவருக்கும் விடை தெரியவில்லை.

    அர்ஜுனன் மட்டும் தயக்கத்துடன் "அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1